Wednesday, August 23, 2006

வலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து


விகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் சுஜாதா வலைப்பதிவுகளை பற்றி கூறியதை படமாக இணைத்துள்ளேன். அதையே தட்டச்சும் செய்துள்ளேன்.

"இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கிபி. 2014 ஆக்ஸ்ட்டில்கூட யாரோ ஒடு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம்தான் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்து கல்வெட்டுகளூகு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயதில் நாங்கள் எல்லாரும் நாடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறுவடிவம்தான். "இதோ பார் என் கவிதை" இதோ பார் என் கருத்து" "இதோ பார் உலகுக்கு என் உபதேசம்" அன் நானும் இருக்கிறென் நண்டுவளையில் என்று. .ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து எதோ ஒரு திசையி. குரல் குடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்கள் என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்"

இதில் அவர் கூறிய "பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்? பதிலை நீங்களே சொல்லுங்கள்.

25 comments:

 1. கருத்து : சுஜாதா ஒரு அறிவுஜீவி என்பதிலும் நல்ல எழுத்தாளர் என்பதிலும் சந்தேகம் இல்லை.

  ஆனால் அவர் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மிகச் சரி என்றோ... ஒட்டு மொத்த எழுத்தாளர்களின் கருத்து என்றொ ஏற்றுக் கொள்ள முடியாது.

  அவர் பார்வையில் அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே !

  ReplyDelete
 2. ///
  இதில் அவர் கூறிய "பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்? பதிலை நீங்களே சொல்லுங்கள்.
  ///

  ஐயா சென்ற தேன்கூடுப் போட்டி நடந்த சமயம் உங்களுடைய பதிவை விளம்பரம் செய்யும் விதமாக ஒரே பதிவு இரண்டு மூன்று நாட்களாக தமிழ்மணத்தையே சுற்றி வந்ததே அது விளம்பரம் படுத்திக் கொள்ளத்தான் இல்லையா? விளம்பரம் எதற்காக அங்கீகாரத்திற்காக இல்லையா? அது போல பதிவிடும் அனைவருக்குமே தன் எழுத்துக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற ஆசையில் பின்னூட்டங்களை எதிர் பார்க்கத் தான் செய்கிறார்கள். இது உண்மை.

  ReplyDelete
 3. அவர் சொல்வது சரியோ தவறொ தெரியாது..ஆனால் இப்போது நீங்கல் இந்த பதிவு இட்டது எல்லாருடைய(அதிக)
  பின்னூட்டதை எதிர்பார்த்து தான் என்பது தான் சரி.!!

  மேலும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் சொன்னது போல ஈகோ சமாச்சாரங்கள் நிறைய நடக்கின்றன நம் வலைபதிவுகளி..
  லிவிங் ஸ்மைலை எல்லாரும் தனி பதிவு போட்டு தூற்றுவதும்..ஒருவர் அதை விளம்பரத்த்ற்க்காக தான் என வெளிப்படையாக
  சொல்வதும், ஒன்றுமே இல்லாத பதிவுகளுக்கு 100 பின்னூட்டங்கல் இடுவது, அனானிகளை அனுமதித்து அவர்கள் சண்டை போடுவதை
  வேடிக்கை பார்ப்பதும் என்னை போன்ற வலைபதிவாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும்,வருத்தத்தயும் தருகிறது..என்னையும் அதை போல செய்யவும்
  தூண்டுகிறது..

  இந்த பதிவிலும் இனி எல்லாரும் அதை தான் செய்யப் போகிறார்கள்..சுஜாதாவை என்னவெலாம் சொல்லி தூற்ற்ப் போகிறார்களோ.

  ReplyDelete
 4. ஆகா, கார்த்திக் சொல்றதுபோல, சுஜாதாவை தாக்கி நிறைய பின்னூட்டங்கள் வந்துள்ளன. சுஜாதாவை தாக்கி பின்னூட்டங்கள் வந்தால் மட்டுறுத்தப்படும்.

  ReplyDelete
 5. சுஜாதாவின் கருத்து மிகவும் பொதுமைப் படுத்தப்பட்டது. கையெழுத்துப் பிரதிக்கும் அச்சுப்பிரதிக்கும் புகழளவில் கால அளவில்தானே வேறுபாடு. அப்படியானால் அவரும் ஆண்டுகாலப் புகழுக்குத்தான் எழுதுகிறார்.

  பிளாக் என்பது எல்லாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. பத்திரிகைகள் அப்படியல்ல. பத்திரிகை ஊடகங்கள் வளர்ந்த எழுத்தாளரின் பின்னால் பெரும்பாலும் ஓடும். அப்படிப் பட்ட வளர்ந்த எழுத்தாளர் இப்படிப் பேசுவது மிகத் தவறு. பதினைந்து நிமிடப் புகழ் என்று கையெழுத்துப் பத்திரிகைகளையும் வலைப்பூக்களையும் சொல்வது ஏற்கத்தகாது.

  அதே நேரத்தில் அவர் சொன்னதில் ஓரளவு உண்மையும் உள்ளது. அடுத்தவர் நம்மைத் திரும்பிப் பார்க்க எதையாவது எழுத வேண்டும் என்பதும் நடக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 6. இதில் அவர் கூறிய "பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே. இதற்காகவா நாம் வலைப்பதிக்கிறோம்? பதிலை நீங்களே சொல்லுங்கள்.

  பின்னூட்டங்களை நான் எதிர்பார்க்கிறேன். எழுதத்தூண்டுவதில் அதன் பங்கு பெரும்பான்மை. இதற்காகத்தான் நான் வலைப்பதிகிறேன் என்று சொல்லுவதில் எனக்கு கூச்சமில்லை.

  அது தவிர்த்து வலைப்பதிவு ஒரு நல்ல பயிற்சி. இரா. முருகனே வலைப்பதிகிறார். மாலனும்.

  பத்திரிக்கைகளுக்கு இருப்பதைவிட விஷயம் தெரிந்த வாசகர்கள் இங்கு அதிகம். 15 நிமிடப் புகழ் மட்டுமல்ல, அசிங்கங்களும் அவமானங்களும் உண்டு. ஒழுங்காக எழுதினாலே "ம்யூஸிற்கு சில கேள்விகள்" என்று பதிபவர்கள் மத்தியில் வாய்க்கு வந்ததை உளறினால் பின்னி பிரம்பெடுத்துவிடுவார்கள். ஜாதி வெறியின் அடிப்படையிலான குழு மனப்பான்மைகள் இருந்தாலும், அது தாண்டிய வலைப்பதிவர்களும் உண்டு. "வெர்பல் டயோரியா" என்பது எனக்கு தோன்றிய வார்த்தை என்று எழுதினால், டோண்டு ஸார் அது ஏற்கனவே உள்ள பதம்தான் என்று சுட்டிக்கட்டுவார். திருத்திக்கொண்டேன். கற்றலுக்கு என் போன்ற ஸாமன்யர்களுக்கு வலைப்பதிவு ஒரு எளிய வழி. (ஆனால் எப்போது பார்த்தாலும் வலைப்பதிவு பற்றிய சிந்தனை, வலைப்பதிவிற்கு அடிமையாவது இதனால் ஏற்படும் பலகீனங்கள்.)

  எழுத்தால் ஜீவித்திருப்பவனுக்கு எதில் எழுதினால் என்ன?

  ReplyDelete
 7. //"பதினைந்து நிமிஷப் புகழுக்கு காத்திருப்பதுதான்" என்பது இப்போது நாம் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டங்களே//
  பதினைந்து நிமிடப் புகழ் என்பது வெறும் பின்னூட்டங்கள் மட்டும் தான் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.. பின்னூட்டங்களை மட்டும் குறிவைத்து எழுதப்படும் பதிவுகள் (பதிவில் ஒன்றும் விஷயம் இல்லாமல்) நாளாக ஆகக் குறைந்து வருவதாகத் தான் தோன்றுகிறது. இல்லையேல், அப்படி எழுதப்படும் பதிவுகளுக்கு இப்போது அனானி பின்னூட்டங்கள் தான் அதிகம் உள்ளன.

  மற்றபடி, நம் கருத்துகளைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியத்தானே வலைப் பதிவில் எழுதுகிறோம்? அது பின்னூட்டமாய் வந்தால் என்ன, தனி மடலாய் வந்தால் என்ன?! "மற்றவர் கருத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை; எனக்காக மட்டுமே எழுதுகிறேன்" என்றால், வீட்டுக்குள்ளேயே எழுதி வைத்துக் கொள்ளலாமே, பத்திரிக்கையிலும் எழுத வேண்டாம்.

  நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே பிறர் அங்கீகாரத்தையும் பொறுத்ததே. அந்தப் பிறர் சிலருக்கு ஒரே ஆளாக இருக்கலாம், சிலருக்கு ஒரு சில நண்பர்களாக இருக்கலாம்.. வலைஞர்களுக்கு தமிழ்மணம், தேன்கூடு போன்ற சமுதாயத்தில் இருக்கும் பிற வலைஞர்கள். எனவே தான் நம் பதிவுகளை இங்கே இணைத்திருக்கிறோம். புதுப் புது பதிவுகளையும் இணைக்கிறோம்.

  சரி, இளா, சுஜாதாவின் கருத்தை எழுதி இருக்கீங்க, பதிவிலிருந்து உங்க கருத்து என்ன என்பது தெரியவில்லையே..

  ReplyDelete
 8. சுஜாதா கூறுவது சரிதான்!

  ReplyDelete
 9. இளா,
  எழுதுகிறவர்களுக்கு, வேறு என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்/?
  எல்லோராலும் ஒரு உலகம் புகழும் எழுத்தாளராக ஆக முடியுமா/

  வலை எனக்கும் எழுத முடியும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

  அதைச் சில பேராவது படித்துப் பதில் சொல்வார்கள் என்று தெரிகிறது.
  அதனால் நண்பர்களே வலையில் பதியுங்கள் .

  ReplyDelete
 10. அவரோட கதைகளுக்கும் மற்ற எழுத்துக்களுக்கும் எழுதுவது விமரிசனம் என்றால் பின்னூட்டங்களும் ஒரு வகையில் நம் எழுத்துக்குக் கிடைக்கும் விமரிசனம்தான். என்ன, நாம் ஒரு குடும்பமாகப் பழகுகிறோம். அதனால் சற்று உரிமை அதிகம் எடுத்துக் கொள்கிறோம்.மற்றபடி பின்னூட்டங்களும் ஒரு வகையான விமரிசனம்தான்.

  ReplyDelete
 11. ச்சீ. யாராவது பின்னூட்டங்களை எதிர்பார்த்து எழுதுவாங்களா? நம்ம மனசுல இருக்கறதை இறக்கி வைக்கத்தானே எழுதறோம். அத அடுத்தவங்க படிக்கலைன்னா என்ன? பின்னூட்டம் போடலைன்னா என்ன?

  இப்படி சொல்லறவங்க எல்லாரும் இந்த பழம் புளிக்கும் கேஸ்தான்.

  ReplyDelete
 12. சுஜாதா 'பொதுவாக' ப்ளாக் பற்றி சொல்கிறார் என்றே நினைக்கிறேன் தமிழ் ப்ளாக் பற்றி அவர் சொல்லவரவில்லை எனப் படுகிறது.

  அப்படி இருக்கும் பட்சத்தில் இதில் உண்மை உள்ளது ஆனால் இதுவே முழு உண்மையும் அல்ல. இன்றைக்கு உலகளவில் ப்ளாகர்கள்பலர் பிரபலாமாயுள்ளனர். பத்திரிகைகள் ப்ளாகர்களை பத்தி எழுதச் சொல்லி அழைக்கின்றன..

  ப்ளாகர்கள் முற்றிலும் பாட்டிலில் செய்தி அனுப்புபவர்கள் அல்ல. It has become another face of media.

  நானும் தமிழ் பதிவுகளைப் பற்றி சொல்லவில்லை :)

  ReplyDelete
 13. அவர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் என் எழுத்துகள் சல்லி காசு பெறாது என்பது என் அபிப்ராயம் ஆனால் அதை படித்து என்னை திட்டுவதைப் பார்த்ததும் ஆஹா நானும் ஒரு எழுத்தாளன் என ஒரு கர்வம் வந்துவிட்டது.

  மேலும் ஒன்று: என்னுடன் படித்த கல்லூரி நண்பர் கல்லூரியில் சின்ன அளவில் நட்த்திய நிகழ்ச்சியை 22 வருடங்களுக்கு பின் இன்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொண்டு உலக புகழையும் நல்ல வசதியையும் அடைந்துள்ளார்.

  அதே போல் இன்று சின்ன விஷயங்களை எழுதும் வலைப்பதிபவர் பிற்காலத்தில் மிக பெரிய எழுத்தாளர் ஆக வாய்புள்ளது.

  ஆகையால் வலைப்பதிவாளர்களே சளைக்காமல் பதியுங்கள்

  ReplyDelete
 14. சுஜாதாவின் வார்த்தையில்...

  இன்னும் யாருமேவா வந்து ஜல்லியடிக்கவில்லை

  ReplyDelete
 15. கீதா சாம்பசிவம் said...
  //அவரோட கதைகளுக்கும் மற்ற எழுத்துக்களுக்கும் எழுதுவது விமரிசனம் என்றால் பின்னூட்டங்களும் ஒரு வகையில் நம் எழுத்துக்குக் கிடைக்கும் விமரிசனம்தான். என்ன, நாம் ஒரு குடும்பமாகப் பழகுகிறோம். அதனால் சற்று உரிமை அதிகம் எடுத்துக் கொள்கிறோம்.மற்றபடி பின்னூட்டங்களும் ஒரு வகையான விமரிசனம்தான். //

  கீதா! சொல்வதை நானும் வழிமொழிகின்றேன்.

  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 16. இளா,
  எப்படியோ உங்க பதிவுக்கு பின்னூட்டம் அம்முது :) நான் பின்னூட்டங்களுக்காகவும் தான் எழுதறேன் என்பது உண்மை தான் !!!
  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 17. ரொம்பப் பழைய விஷயத்தை தோண்டி எடுத்துருகீங்க?

  'சும்மா இருப்பதே சுகம்'

  கொத்ஸ்,
  இந்தப் பழம் ரொம்பப் புளிக்குதேப்பா:-))))

  ReplyDelete
 18. அட அவர் சொன்ன நல்ல விசயத்தைப் பாருங்கப்பா....

  ReplyDelete
 19. //இன்னும் யாருமேவா வந்து ஜல்லியடிக்கவில்லை//
  நிறைய பேர் வந்து ஜல்லிஅடிச்சுட்டாங்க, பல நல்ல(?1) விஷயங்களை(?1) ரொம்ப இதமான(?!) வார்த்தையால கூட சொல்லிட்டாங்க. நாந்தான் வெளியிடவில்லை

  ReplyDelete
 20. கண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

  ReplyDelete
 21. ம்ம்ம்ம்ம்.....பிளாகில் என்ன புகழ் கிடைக்கப் போகிறது..? வலைப்பதிவின் reach அவ்வளவு தூரம்? ஏதோ எழுதுகிறேன்... சில comments வருகிறது...அதில் பிரசுரிக்கத்தகுந்தவையை வெளியிடுகிறேன், அல்லாதவற்றை delete செய்து விடுகிறேன். commentசே வராத பட்சத்தில் அவற்றைக் கேட்டு வாங்கிப் பதிவு செய்யவா முடியும்..?

  ReplyDelete
 22. சுஜாதா வலைபதிய வரட்டும் அவருக்கும் நூறு இருநூறுன்னு அ.மு.க. தொண்டர்களிடம் சொல்லி அள்ளித் தெளிச்சி அசத்திடலாம்

  ReplyDelete
 23. //சரி, இளா, சுஜாதாவின் கருத்தை எழுதி இருக்கீங்க, பதிவிலிருந்து உங்க கருத்து என்ன என்பது தெரியவில்லையே..//
  என்னுடைய கருத்து ஒன்றுதாங்க பொன்ஸ். ஏற்கனவே சொன்ன மாதிரி "கண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை".
  பின்னூட்டத்துக்காக எல்லாம் நான் எழுதறது இல்லீங்க. என்னுடைய ஆங்கில பதிவைப்பார்த்தீங்கன்னா புரியும்.

  ReplyDelete
 24. //'சும்மா இருப்பதே சுகம்'//
  டீச்சர் அவரோட கருத்தை மட்டும்தான் நான் சொன்னேன். அதுகூட தப்புன்னு மக்கள் சொல்லும்போது, நீங்க சொன்னது சத்திய வார்த்தைங்க.

  ReplyDelete

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்