சித்தர்களும் இரண்டும், நீங்க சொல்ற பதிலும்

பொது அறிவு கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க. இந்த மாதிரி பொது அறிவு கேள்வி கேட்கிறது, 3 பேரு. அது நானும், ஓமப்பொடியாரும் கைப்புள்ளையும். ஏன்னா எங்களுக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத்தெரியும். :)

எங்கேயோ எப்பயோ படிச்ச ஞாபகங்க. அதுக்கு அர்த்தமும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ அதைச் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். வ.வா. ச போட்டிக்குச் சரியான நேரத்துல கேட்டுட்டா ஒரு பரபரப்பு வருமே.

இந்த மாதிரி சரியா பின்பற்றினா வாழ்நாள் கூடும்னு சொல்லி இருக்காங்க சித்தர்கள்(?!)
இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க.
 • தினம் இரண்டு
 • வாரம் இரண்டு
 • மாதம் இரண்டு
 • வருடம் இரண்டு

இப்ப இந்த "இரண்டு"களுக்கு என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க, பார்ப்போம்.

வ.வா.ச'வின் - இரண்டு போட்டிக்கு அல்ல..

Comments

 1. தினம் இரண்டு-----வேளை உணவு
  வாரம் இரண்டு---- எண்ணெய்க் குளியல்
  மாதம் இரண்டு----- அடல்ட்ஸ் ஒன்லி
  வருடம் இரண்டு ---- ஊருக்குப் போய்வர்றது:-))))

  ReplyDelete
 2. டீச்சர்,
  நீங்க சொல்றது சரியா கூட இருக்கலாம். நான் படிச்சது வேற மாதிரி இருந்துச்சே.. பார்ப்போம் மக்கள் என்ன சொல்றாங்கன்னு

  ReplyDelete
 3. குன்சா அடிக்கிறேன்..

  தினமும் இரண்டு முறை - கக்கா போகனும்
  வாரம் இரண்டு முறை - எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கனும்
  மாதம் இரண்டு முறை - வயிற்றை கழுவனும்
  வருடம் இரண்டு முறை - மொட்டை அடிச்சிக்கனும்..

  ReplyDelete
 4. தினம் இரண்டு - உணவு
  வாரம் இரண்டு - ச்சீ.. கல்யாணம் ஆனவன்ங்க மேட்டர்
  மாதம் இரண்டு - தீபாவளிக்கு மட்டுமல்ல எண்ணைக் குளியல்
  வருடம் இரண்டு - ஊர்சுற்றுவதா ? சும்மா பூச் சுற்றாதிங்க !

  ReplyDelete
 5. TBCD- ஒன்னு சரின்னு நினைக்கிறேன்
  கோவி- அதே ஒன்னுதாங்க.

  என்னைய எல்லாரும் குழப்பறாங்களே :(

  ReplyDelete
 6. வ.வா.ச போட்டிக்கு ரைமிங்கா இருக்கட்டுமேன்னுதான் இரண்டுன்னு போட்டு இருக்கேன், உண்மையா

  "நாள் இருமுறை,
  வாரம் இருமுறை,
  மாதம் இருமுறை,
  வருடம் இருமுறை "

  என்பதே சரியான வாசகம்.

  ReplyDelete
 7. TBCD: //வருடம் இரண்டு முறை - மொட்டை அடிச்சிக்கனும்..//
  ஹிஹி யாருக்குன்னு சொல்லவே இல்லியே :))

  ReplyDelete
 8. நாள் இருமுறை, -to toilet
  வாரம் இருமுறை - oil bathing
  மாதம் இருமுறை - intercourse
  வருடம் இருமுறை - fasting

  sorry for the cut paste and english fonts.

  ReplyDelete
 9. நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு
  இரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை
  எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம்
  இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு -
  வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும்
  குறிப்பதாகும்.

  ReplyDelete
 10. VSK- நீங்களே சொன்னா அப்பீல் ஏதுண்ணே..

  பெரிசு,- கடேசி மட்டும் ஒருதடவை பார்த்துக்குங்க.

  ReplyDelete
 11. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

  ....
  ....
  ....

  ReplyDelete
 12. இளா,
  நாள் இரண்டு-மலம்
  வாரம் இரண்டு-சவரம்
  மாதம் இரண்டு-புணர்வு
  வருடம் இரண்டு-பேதி மருந்து.

  ReplyDelete
 13. சீனா, நீங்க எழுதி இருக்கிற ஒன்று சரியே.

  ReplyDelete
 14. தினம் இரண்டு - ஆய் போகனும்
  வாரம் இரண்டு - குறைந்த பட்சமா குளிக்கனும்
  மாதம் இரண்டு - உடலுறவு
  வருடம் இரண்டு - பேதி மாத்திரை சாப்பிடனும்

  ReplyDelete
 15. அறிவன் - வாரத்தைத் தவிர மீதி எல்லாம் சரியாச்சொல்லி இருக்கீங்க.

  அமரபாரதி - வாரத்தைத் தவிர மீதி எல்லாம் சரியாச்சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 16. நடுராத்திரி அரைத் தூக்கத்திலிருக்கும்போது ஞாபகம் வந்துச்சு.

  கடைசி ரெண்டு அதான் வருசம் ரெண்டு, பேதி மருந்து.

  ReplyDelete
 17. thinam rendu- sami kumbadarathu
  varam rendu- ennai kuzhiyal
  madham rendu-padam pakurathu(escaped the adults only bit)
  varudam rendu- pandigai -deepavali,pongal

  enna sariya?

  ReplyDelete

Post a Comment

Popular Posts