OPMLம் ஈரவெங்காயமும்

Tamil OPEN OPML குழு - என்ன செஞ்சது? ஒன்னும் கிழிக்கவில்லை. எல்லாப் பதிவுகளையும் முக்கி முக்கித் தேடி எல்லாத்தையும் ஒட்டவெச்சு ஒரு OPMLஆ குடுத்தோம். சிலர் மூக்கைச் சுத்தி சாப்பிடுவாங்க இல்லே, அதுமாதிரிதான் இதுவும்.

நான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...

http://www.google.com/blogsearch_feeds?as_q=.&lr=lang_ta&safe=active&q=.&ie=utf-8&output=rss

அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.

கூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..

Comments

  1. //அடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். //

    வெயிட்டிங்!

    ReplyDelete
  2. உரிச்சுப் பார்த்துரணுமா?

    ReplyDelete
  3. நான் தற்செயலா ஓரிரண்டு பதிவுகள் பின்னூட்டத்தோடு என் ரீடர்ல போட்டுகிட்டேன்.

    உங்க அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன். பின்னூட்டங்களோடு படிப்பது ஜாலி. இப்ப என்னடான்னா, தமிழ்மணம் அழகுபடுத்தலோடு (எனக்குப் பிடிச்சிருக்குப்பா புது ஸ்டைலு!) மக்கள் ரீடர்ல ஷார்ட் ஃபார்ம்க்கு போயிட்டாங்க. கடியாயிடுச்சு! இதுக்கு ஒரு வழியும் இல்லியா:‍-(

    ReplyDelete
  4. ரொம்ப டாங்ஸ்பா,
    தெரியாமா உள்ள வந்திட்டேன், ஏதொ டெக்னிக்கல் பதிவு போல.. என்னான்னு பிரியல , ஆனா நான் வந்ததுக்கு ஒரு ஆஜர் போட்டுட்டு போறேன் பா.

    ReplyDelete
  5. //வெயிட்டிங்!//
    சீக்கிரமே (நமக்கு நாளைக்கும் நேரம் கிடச்சா) பதிவா போட்டுறலாங்க.

    ..//துளசி கோபால் said...
    உரிச்சுப் பார்த்துரணுமா?
    //

    கண்ணு எரியும் பரவாயில்லீங்களா?(காதை ஏற்கனவே அடைச்சாச்சே)

    ReplyDelete
  6. பிரச்சனை இல்லை. கூலிங் க்ளாஸ் போட்டுக்குவேன்:-))))

    ReplyDelete
  7. //நான் தற்செயலா ஓரிரண்டு பதிவுகள் பின்னூட்டத்தோடு என் ரீடர்ல போட்டுகிட்டேன்.//
    @கெக்கேபிக்குணி- அதையே தாங்க நானும் சொல்லப்போறேன்.

    ReplyDelete
  8. //டெக்னிக்கல் பதிவு போல.. என்னான்னு பிரியல //

    :)

    ReplyDelete
  9. //கூலிங் க்ளாஸ் போட்டுக்குவேன்//
    காதுக்கும் ஒரு கவரிங்க கிளாஸ் இருந்தா நல்லா இருக்குமே..

    ReplyDelete
  10. அதுக்கு ஏன் ஈரவெங்காயம் எண்டு தலைப்பு????

    ReplyDelete
  11. நன்றிகள். பயனுள்ள பதிவு.

    இத ஒழுங்கா தொழில்நுட்ப பதிவுல சேத்திருக்கலாம்ல்ல/.?

    ReplyDelete

Post a Comment

Popular Posts