மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?

ஒருத்தர் நல்ல பேரு எடுக்கிறதுக்காக நல்ல உழைப்பாங்க. ஆனா நம்ம நடிகர் நடிகைகளுக்கு அந்தப் பேர்தான் ஆரம்பமே. ஒரு நல்ல பேர் கிடைச்சுட்டா உடனே போட்டுருவாங்க, அட படத்தோட டைட்டில்லதாங்க. அப்புறம் புரட்சி வாழக்காய், இளைய சாம்பிராணின்னு எல்லாம் போ(ட்)டுவாங்க. பாரதிராஜா "ர"வுலதான் நடிகைகளுக்கு அதிகமா பேர் வெப்பாராம்.

ரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.

ஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

உதாரணம்:
சரவணன்=சூர்யா

சிவாஜி ராவ்= ரஜினி காந்த்


 1. மேரி=?
 2. ரேவதி
 3. சுகாசினி
 4. ரிஷி பாலா
 5. டயானா மரியம்
 6. பைரவி
 7. ரங்கராஜ்
 8. வெங்கட் பிரபு
 9. மூர்த்தி
 10. ஸ்வேதா கொன்னூர்
 11. உமா சங்கரி
 12. நக்மா கான்
 13. நக்கத்
 14. ஜோசப்
 15. கருணாநிதி

Comments

 1. ரம்பா ரம்பான்னுட்டு எதுக்கு அவுங்களை (லிஸ்ட்டில்) விட்டுட்டீங்க?

  விஜயலக்ஷ்மின்னா கோச்சுக்குவாங்களா?

  1. ரேகா

  மற்றவங்க வந்து சொல்லட்டுமுன்னு மதிப்பா வழிவிட்டுருக்கேன்:-)

  ReplyDelete
 2. 1. மேரி - அசின்
  2. ரேவதி - சந்தியா
  3. சுகாசினி - சினேகா
  4. ரிஷி பாலா - சிம்ரன்
  5. டயானா மரியம் - நயந்தாரா
  6. பைரவி - நமிதா
  7. ரங்கராஜ் - மணிவண்ணன் / சத்யராஜ்
  8. வெங்கட் பிரபு - தனுஷ்
  9. மூர்த்தி - பார்த்தீபன்
  10. ஸ்வேதா கொன்னூர் - மாளவிகா
  11. உமா சங்கரி - பூஜா
  12. நக்மா கான் - மும்தாஜ்
  13. நக்கத் - குஷ்பூ
  14. ஜோசப் - விஜய்
  15. கருணாநிதி - அகத்தியன்

  ReplyDelete
 3. எல்லாம் இங்கே இருந்து சுட்டது..

  http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-01/08-04-06-tamil-actress.html

  இவ்வளவு சுலபமா காப்பியடிக்க விட்டுட்டீங்களே விவ்ஸ்.. :-))))

  ReplyDelete
 4. ஐய்யயோ- பதிவின் தலைப்பைப் பார்த்து ஏற்பட்ட ரியாக்சனுங்க :-)

  ReplyDelete
 5. நண்பி,
  நீங்க ஆடுறது போங்காட்டம். ஒத்துக்க முடியாது

  ReplyDelete
 6. நீங்க வெண்ணிற ஆடை மூர்த்தியை தான சொல்றிங்க...:P

  அப்டியே அன்ந்த லிஸ்ட்ல பொடியன் = என்று சேர்த்து என் பதிவுக்கு ஒரு லின்க்கும் குடுத்திருக்கலாம். எல்லாம் ஒரு விளம்பரம் தான். :)

  ReplyDelete
 7. நீங்க மட்டும் கஷ்டப்பட்டு குவீஸ் செஞ்சுட்டீங்களாக்கும்..

  நாங்கல்லாம் காப்பி அடிக்கிறதுக்கு க்ளாஸ் வைக்கிற அளவுக்கு கில்லாடி.. ஹீஹீஹீ..

  ReplyDelete
 8. மேரி= அசின்
  ரேவதி= சந்தியா
  சுகாசினி= சினேகா
  ரிஷி பாலா= எங்கள் தலைவி சிம்ரன்
  டயானா மரியம்= நயன் தாரா
  பைரவி= நமிதா
  ரங்கராஜ்= சத்யராஜ்
  வெங்கட் பிரபு= தனஷ்
  மூர்த்தி= பார்த்திபன்
  ஸ்வேதா கொன்னூர்= மாளவிகா
  உமா சங்கரி= பூஜா
  நக்மா கான்= மும்தாஸ்
  நக்கத்= குஷ்பூ
  ஜோசப்= இளைய தளபதி விஜய்
  கருணாநிதி= அகத்தியன்

  ReplyDelete
 9. மேரி - மீரா ஜாஸ்மின்
  சுகாசினி - சினேகா
  டயானா - நயந்தாரா

  மிச்சத்துக்கெல்லாம் கூகுளை கேட்டுட்டு வர்றேன்

  ReplyDelete
 10. //துளசி கோபால் said...
  ரம்பா ரம்பான்னுட்டு எதுக்கு அவுங்களை (லிஸ்ட்டில்) விட்டுட்டீங்க?

  விஜயலக்ஷ்மின்னா கோச்சுக்குவாங்களா?

  1. ரேகா

  மற்றவங்க வந்து சொல்லட்டுமுன்னு மதிப்பா வழிவிட்டுருக்கேன்:-)
  //

  ரீப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  மற்ற கேள்விகளை எனக்கு பின் வரும் சமூகம் சொல்லும் :))))

  ReplyDelete
 11. ரீச்சர், ஒன்னுதான் சொல்லி இருக்கீங்க. அதுவும் தப்பேய்ய்

  உஷாக்கா, சும்மா லுலுவாய்க்குதானே.

  பொடியரே, உங்களுக்கு இனிமேலுமா வெளம்பரம் வேணுமுங்க? பெனாத்தலுக்கு உப்புமா கிண்ட சொல்லித்தர மாதிரி ஆகிறாது?

  @anu,
  அங்கே வந்து வெக்கிறேன் கச்சேரிய..

  ReplyDelete
 12. //நாங்கல்லாம் காப்பி அடிக்கிறதுக்கு க்ளாஸ் வைக்கிற அளவுக்கு கில்லாடி..//

  காப்பி அடிச்சதை காப்பி அடிக்கறதுல நாங்க கில்லாடி..ஹி ஹி

  ReplyDelete
 13. அதிகமா தெரியலை.

  ரேவதி - நடிகையின் நிஜப்பெயர் ஆஷா கேளுண்ணி தெரியும்.

  சுகாசினி - சிநேகாஅ
  நக்கத் - மும்தாஜ் (?)
  ரிஷி பாலா - சிம்ரன்
  ஜோசப் - விஜய்

  அவ்வளவுதான் :-)

  ReplyDelete
 14. Mango!
  இது எல்லாம் போங்கு. ஒத்துகிற முடியாது...

  கப்பி- 1-மட்டும் தப்புங்க

  ReplyDelete
 15. விவ்ஸ்...அந்த லின்க் எனக்கும் கிடைச்சிருச்சு :))

  ReplyDelete
 16. இந்தளவுக்கு நடிகைங்க, நடிகர்ங்க வாழ்க்கைய உன்னிப்பா பாத்து சரியா சொல்ற அந்த பெருந்தகை யாருன்னு நானும் பாக்கணும்னு ரொம்ப ஆவலா இருக்குங்க இளா!

  விடைய அமுக்கி வெளிய போடுங்க.

  ReplyDelete
 17. தப்பாவாச் சொல்லிட்டேன்....oops....

  1. தீபா

  ReplyDelete
 18. என்னது அநியாயமா இருக்கு? நான் சொன்னது அனைத்துமே correct thaan. எனக்கு கண்டிப்பா பரிசு வேணும்!!

  ReplyDelete
 19. கருணாநிதி = கலைஞர் :-)))

  மூர்த்தி = பார்த்திபன் - சரியா?

  டயானா மரியம் = நயன் தாரா

  நக்கத் = குஷ்பு

  ReplyDelete
 20. 5. டயானா மரியம் - Nayanthara
  8. வெங்கட் பிரபு - Dhanush

  ReplyDelete
 21. லக்கி எல்லாமேச் சரிங்க.

  ReplyDelete
 22. வெங்கடேஸ், இரண்டுமே சரிங்க.

  லக்கி, ஏதோ ஒரு வேகத்துல தலைவர் பேரை போட்டு இருக்கிறதை சரின்னு சொல்லிட்டேன். தலைவர் பேர் போட்டதுக்கப்புறம் தப்புன்னு சொல்ல மனசு வரலே, அதனால தப்பான சரியான பதிலுங்க அது..

  ReplyDelete
 23. 2. ஆஷா கேளுண்ணி
  11. உமா(சுமித்ரா பொண்ணு தானே)
  12. மும்தாஜ்
  13. குஷ்பூ
  14. விஜய்

  ReplyDelete
 24. சின்ன அம்மணி,
  ஆஷா கேளுன்னி,, உமாவைத்தவிர மீதி எல்லாம் சரிங்க.

  ReplyDelete
 25. 1
  2
  3சுகாசினி - சினேகா
  5
  6
  7
  8
  9 மூர்த்தி - பார்த்திபன்
  10
  11
  12
  13 நக்கத் - குஷ்பூ
  14
  15


  என்ன தலிவா கரிட்டா சொல்லிட்டேனா!

  ReplyDelete
 26. ஏற்கெனவே போட்ட மாதிரி ஞாபகம். வரலையோ?

  ரேவதி - தெரியலை. ஆனா நடிகை ரேவதியோட நிஜப் பெயரு ஆஷா கேளுண்ணின்னு தெரியும். :-)
  சுகாசினி - சினேகா
  ரிஷி பாலா - சிம்ரன்
  டயானா மரியம் - நயன்தாரா
  மூர்த்தி - பார்த்திபன்
  நக்கத் - குஷ்பு (முன்னாடி மும்தாஜ்னு போட்டேன்னு நினைக்கிறேன். டங் ஸ்லிப்பாயிடுச்சி :-))
  ஜோசப் - விஜய்

  ReplyDelete
 27. 5. டயானா மரியம் - நயன் தாரா

  8. வெங்கட் பிரபு - தனுஷ். அதே போல் இந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கிறால்
  9. மூர்த்தி ?? வென்னிற ஆடை


  12. நக்மா கான் - மும்தாஜ் (அது நான் அல்ல என்று நக்மா பேட்டி கொடுத்தாரே)
  13. நக்கத் - குஷ்பு
  14. ஜோசப் - விஜய் (பழைய எஸ்.ஏ.எஸ் படங்களில் டைடிலில் தயாரிப்பாளராக இவர் பெயர் வரும்)
  15. கருணாநிதி- ?? இந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கிறால்

  ReplyDelete

Post a Comment

Popular Posts