மகசூல்-ஜூன் 2

 • தனி நாடு கேட்டும், மாநில வெறிய்யேத்துற கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மக்கள் சுத்தி சுத்தி ஆப்பு அடிக்கிறாங்க. காட்டாளும், தெலுங்கானாவுமே இதுக்கு சாட்சி. தனிமாநிலம் கேட்கிறவங்க சாக்கிரதையா இருந்துக்குங்கப்பு, மக்கள் விவராமாயிட்டாங்க.
 • Tubetamil.com கலக்கல்ஸ். உடனுக்குடன் மேட்டர் கிடைக்குது.
 • மலேசியா பொன்னி அரிசுக்கு உரிமை கேட்டிருக்காங்க. நாம இப்படியே இருந்துருவோமா? அரசாங்கம் முன்னெச்சரிக்கையா ஏதும் செய்யாதா?
 • ஓபாமா வந்தாச்சு, பார்ப்போம். மொக்கையனும், புஷ்ஷும் போட்டுத்தாக்குறாங்க. ஆனாலும் மாமி அடங்க மாட்டேங்குறாங்களே..
 • சிம்பு பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாராம். ஒன்னுக்கு போற மாதிரி படம் போட்டுறாதய்யா சாமி.
 • ஜீன் 13ம் தசாவதாரம். புதரகத்துல படம் பார்த்துரலாம்னு இருந்தேன். முடியாது போல இருக்கு. இந்தியாவுல அடுத்த ஒரு மாசத்துக்கு சீட்டு வேற கிடைக்காதே :(
 • அடுத்த ஞாயித்துக்கிழமை பெங்களூருல இருப்பேன், பொட்டி, பெட்டி, புட்டின்னு கட்டுறதுகு பல வேலை இருக்கு. பதிவுலகம் கொஞ்சம் நாள் நல்லா இருக்கும் போலத் தெரியுது.
 • பதிவுலகத்துல பேர் எல்லாம் பயங்கர குழப்பமா இருக்கு. 2 குசும்பன், 2 பாபா(பாஸ்டன் பாலா, பால பாரதி), நெறைய சரவணன்.
 • பாபா பண்ணினதே சென்னை கிங்ஸ் தோத்துப் போனதுக்கு காரணம். அட அடிக்க வராதீங்க. பா-அகலப் பந்து போட்ட பாலாச்சீயும், இன்னொரு பா-பார்த்தீவ் பட்டேல் விட்ட ஒரு ஓட்டமும், விட்ட ரன் அவுட்டும். ஆமா ஒரு ஓவருக்கு 8 ரன் அடிக்க முடியாதா? அப்படின்னு கேட்டா, டெண்டுல்கர் பண்ணலியா நான் கேட்பேன்.
 • "கழிவறையில் பீச்சி அடிக்கப்படும் தாய் பால்", இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்ட போது நாம எங்கே போய்ட்டு இருக்கோம்னு கவலை வருது.
 • செல்வராகவனும், யுவனும் மறுபடியும் சேர்ந்துட்டாங்களாம். ஷங்கரின் தயாரிப்பில் கார்த்திக்ராஜாவுக்கு இசை அமைக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, ராசி எப்படியோ?

Comments

 1. அவியல் சூப்பர்.

  இந்தியா போறீங்களா? இனிய பயணமாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அவியல்2- அட்டகாசம் ;)

  ReplyDelete
 3. \\இந்தியாவுல அடுத்த ஒரு மாசத்துக்கு சீட்டு வேற கிடைக்காதே \\
  அதெல்லாம் தாராளமா கிடைக்கும்

  ReplyDelete
 4. நேத்தைய ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்லேயே பாபாவாலே தோல்விதான் சூப்பர்னு தனிப்பட்டு சொல்லலாம்னு நெனச்சேன், இங்கே வாய்ப்பு கொடுத்துட்டீங்க..

  சரி விடுங்க.. அருமையான மேட்ச், கடைசி பால் வரைக்கும் போனாலே ரெண்டு பக்கமும்தானே வாய்ப்பு? (மேற்படி டெண்டுல்கர் ஓவர்லே ஒரு வைட் குடுக்கல, இங்க கொடுத்தாங்க) ராஜஸ்தான் லீக்லே கலக்கினாங்க, டிஸர்வ் பண்ணாங்க, ஜெயிச்சாங்க!

  ReplyDelete
 5. எல்லோரும் லீவுக்கு வாரீகளோ? தாய்ப்பால் விவகாரம் புரிகிறது

  ReplyDelete

Post a Comment

Popular Posts