ஆடி-1

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. பிரிச்சு வெக்கிறது தான் வெக்கிறீங்க கல்யாணம் ஆகி கொழந்த குட்டிங்க இருக்கிறவங்களா பார்த்து பிரிச்சி வெக்கிறது. அப்படி பிரிச்சு வெச்சுட்டா இந்தக் கருமம் புடிச்ச தள்ளுபடி இருக்காதுல்ல. அது என்னய்யா புதுசா கண்ணாலம் ஆனவங்களை மட்டும் பிரிக்கிறது? அது பாவமில்லையா?

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம்.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு இருக்கிற தேங்காயால அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க..

ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே போட்ட பதிவுதானுங்க... [நன்றி]

Comments

 1. நம்ம இப்படி வெட்டிக்கதை பேசியும் பழம்பேரும பேசியுமே காலத்த ஒட்டிட்டோம். அதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கை ஆகிடுமா?..

  btw, im big fan of your this blog - vivasayee, not only by reading also trying to implement some of things.

  ReplyDelete
 2. பொன்னர் சங்கர் கதையில் கூட ஆடிமாதம் தான் படுகளம் நடந்ததாக கூறுவார்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. //இன்னைக்கு ஆடி-1.
  //

  ஆடிக்கு ஒரு பதிவு எழுதிவிட்டீர்கள், அடுத்த பதிவு எப்போ ?

  யாரும் சொல்லாதா சமையல் குறிப்புதான். நினைவு வருகிறது, நாங்களும் செய்து இருக்கோம்.

  ReplyDelete
 4. //ஆடிக்கு ஒரு பதிவு எழுதிவிட்டீர்கள்//
  ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்னு எங்கூர்ல சொல்லுவாங்களே, அது மாதிரி அமாவாசைக்கு எழுதிருவேனுங்க..

  ReplyDelete
 5. எச்சில் ஊருது இளா. பழைய ஞாபகம்லாம் வந்துடுச்சு. வீட்ல கேஸ் அடுப்புல சுட்டா என்னாகும்ன்னு டெஸ்ட் பண்ணி பாக்கனும்

  ReplyDelete
 6. //நம்ம இப்படி வெட்டிக்கதை பேசியும் பழம்பேரும பேசியுமே காலத்த ஒட்டிட்டோம். அதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கை ஆகிடுமா?.. //

  இப்படி பழங்கதை பேசுறதுல நெறைய சந்தோசமுங்க. அசை போடுறதும் சுகந்தானுங்களே..

  //not only by reading also trying to implement some of things//

  வாழ்த்துக்கள் & தலை வணங்குகிறேன் ஐயா..

  ReplyDelete
 7. இளா! உங்க பதிவை படிச்சிட்டு பழைய நினைவுகளிலிருந்து மீள கொஞ்ச நேரம் ஆனது.அந்த சுட்ட தேங்காயை போலவே சுவையான பதிவு.

  ReplyDelete
 8. தேங்கா சுடுறது ரொம்ப நல்லாருக்கும். சோளம் கம்பெல்லாம் போட மாட்டோம். வெல்லம், பொரிகடலை முக்கியமாப் போடுவோம். சுட்ட தேங்காய்ச் சுவையே சுவை. அடுத்த வாட்டி ஒங்களப் பாக்குறப்போ தேங்கா சுட்டுக் குடுங்க. :)

  ReplyDelete
 9. சமையல் குறிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி....
  யாரும் சொல்லாதா சமையல் குறிப்பு...
  வீட்ல கேஸ் அடுப்புல சுட்டா என்னாகும்ன்னு டெஸ்ட் பண்ணி பாக்கனும்....
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அவ்வ்வ்வ்வ்வ்

  நகர வளர்புகள் சார்பா இதுக்கு ஒரு கண்டனம் வைச்சிக்கிறேன்...

  (நாங்கள் பெறாத இன்பம் பெறக்கூடாது இவ்வையகம் )

  ReplyDelete
 11. நாங்களும் இதையெல்லாம் செஞ்சுருக்கோம் அண்ணே.
  நாங்க சோளம், கம்புக்கு பதிலா பொட்டுக்கடலை, அவல் எல்லாம் போடுவோம். அதோட சுவையே தனி.
  ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...

  ReplyDelete
 12. ஹி..ஹி..

  மலரும் நினைவுகள கிளறீட்டீங்க..

  ReplyDelete
 13. கார்த்திகை வந்தா கூம்பு பத்தியும் எழுதீறுங்க ப்ளீஸ்..

  ReplyDelete
 14. ஆடி பதினெட்டு வாழ்த்துக்கள் இளா..

  ReplyDelete

Post a Comment

Popular Posts