மகசூல்-ஜூலை 22

 • இவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள் இருக்கிற ஊருலதான் நாம் பொறந்து வளர்ந்தோமா? இதுக்கு சூதாட்டமே பரவாயில்லை. ஓட்டுப்போட காசு, வராம இருக்க காசு, ஏமாத்த காசு. சே.


 • தமிழ்ப்பதிவுகள் எல்லாம் அரசியல் பேசாம காலம் தள்ள, டுவிட்டரில் Commentary அருமை. ஒரு பாராளுமன்றதுக்குள்ள உக்காந்து இருந்த திருப்தி.
 • விலைவாசி இப்படி ஏறிக்கிடக்க இந்த ஆட்சி கவுந்திருந்தாவே பரவாயில்ல.

 • Pan அட்டை தொலைஞ்சு போயிருச்சு. என்ன பண்ண? புதரகத்துல இருந்து வாங்கலாம்னா பழைய அட்டை எண்ணும் மறந்து போச்சு.

 • சத்யம் பாட்டுக்கள மொத தடவை கேட்கும் போது நல்லாதான் இருந்துச்சு. ஆனாலும் சக்கர கட்டி திரும்ப கேட்கத்தோணுது. சத்யம் அடடா பாட்டுக்கும் சக்கரகட்டி டேக்ஸி பாட்டுக்கும் நெறைய சம்பந்தம் போல இருக்கே.

 • குசேலன் பாட்டுங்க ஏன் இப்படி இருக்கு? படத்துல நல்லா எடுத்திருப்பாங்களோ?

 • ஆயுதம் செய்வோம் பார்த்தேன். முன்னா பாய் மூணாவது பகுதியோ?

 • வல்லமை தாராயோவுக்கும் மெளன ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?

 • காவல் நிலையம் போக வேண்டிய கட்டாயம் வந்திருச்சு. தொலைச்சதை காவல் நிலையத்துல தேட வேண்டியதா இருக்குங்க.

 • வெயில் இங்கே தாளிச்சு எடுக்குதுங்க. என்ன கொடுமைங்க இது. நான் புதரகத்துலதான் இருக்கேனா?

 • கண்ணாடி போட்டு பழகியாச்சு. (வேற என்ன பண்ண?)

Comments

 1. //தொலைச்சதை காவல் நிலையத்துல தேட வேண்டியதா இருக்குங்க.
  //

  ஓ. காவல் நிலையம் போனதுக்கு இப்படிக்கூட ஒரு காரணம் சொல்லலாமோ!!!! ஓஓஓ...:-))

  ReplyDelete
 2. //காவல் நிலையம் போக வேண்டிய கட்டாயம் வந்திருச்சு.//

  இளா... நீங்களாப் போனீங்களா.. அவங்க வந்து அழைச்சிக்கிட்டுப் போனாங்களா?
  :))

  இது என்ன புதுப் பாணியா எழுதியிருக்கீங்க.. ட்விட்டர்ல செய்தி படிச்ச மூடுல எழுதினீங்களோ?

  ReplyDelete
 3. அப்படி என்னத்த தொலைச்ச? அங்கவும் டீ, காபி, ஒரு குயர் பேப்பர் எல்லாம் வாங்கிக் குடுக்க வேண்டியது இருந்ததா? :P

  ReplyDelete
 4. / ட்விட்டர்ல செய்தி படிச்ச மூடுல எழுதினீங்களோ?//
  அண்ணே, இப்படித்தான் பல மாசம் ஓட்டிட்டு இருக்கோம்.

  //அவங்க வந்து அழைச்சிக்கிட்டுப் போனாங்களா?//
  அழைத்துச்செல்லவில்லை, இழுத்துச்சென்றார்கள் அப்படின்னு வசனம் பேசலாம். ஆனா அப்படி இல்லீங்கண்ணா.

  ReplyDelete
 5. உங்க மகசூல் நல்லாயிருந்ததுங்க! எல்லாத்தையும் ஒண்ணு, ரெண்டு வரிக்குள்ளயே சொல்லிடறீங்க. புது பாணி இது! ரொம்ப ரொம்பப் புடிச்சதுங்க!

  ReplyDelete
 6. ஆமாமாம். தொலைச்சதைத் தொலைச்ச இடத்தில்தான் தேடணுமாம்.

  அதான் தேடப்போனீங்களா? :-)

  அது என்ன கண்ணாடி?

  ReplyDelete
 7. //அது என்ன கண்ணாடி?//
  கண் கண்ணாடிதாங்க.

  ReplyDelete

Post a Comment

Popular Posts