பெயரிலிக்கு ஒரு யோசனை

தமிழ்மணம் நிர்வாக குழுவிலிருக்கிற பெயரிலி(எ) இரமணீதரன் அவர்களே, உங்களுக்குமா தமிழ்மணம் பத்தி தெரியலீங்க? உங்களுக்குத் தெரியாத தொழில் நுட்பமா?

உங்களோட பேரு -/பெயரிலினு வெச்சு இருக்கீங்க. இதனால உங்க மறுமொழிகளை தமிழ்மணத்துல படிக்க முடியுங்களா?

மேலும் இந்தத் தொடுப்பைப் பாருங்க( ம திரட்டில வரும் ))

http://tamilmanam.net/comments/-/பெயரிலி. இது வேலை செய்யாதுங்களே... யோசனைய சொல்ற அளவுக்கோ சண்டை போடுற அளவுக்கு நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லீங்க அப்படின்னு இங்கே நாம் சொல்லிக்கிறோமுங்க.


அட இப்படி மொக்க போடவா பெரியவங்க பேர இழுக்கனும்.... இருங்க..

ஒரு யோசனை சொல்றேங்க. ஒரு பந்தை எடுத்துக்குங்க, ஒரு செவுத்த பார்த்து வீசுங்க. பந்து திரும்பி உங்களுக்கே வந்துரும். மறுபடியும் வீசுங்க. திரும்ப உங்களுக்கே வரும். வீசிட்டே இருங்க வந்துட்டே இருக்கும். இதனால செவுரு என்ன ஒடைஞ்சா போயிருங்க?ஏதோ ஒன்னை முடிவு பண்ணியாச்சு, அதை செஞ்சாச்சு அப்புறம் எதுக்குங்க எல்லாரும் எல்லாத்துக்கும் வெளக்கஞ்சொல்றீங்க? இப்படி வெளக்கம் சொல்லிச் சொல்லியே தமிழ்மணம் முழும் வெளக்கமாவும், குத்தஞ்சொல்றதாவும் இருக்கு.

இந்தப் புண்நவீனத்துவியாதிங்க இருக்காங்களே அவுங்களுக்கு காமம், கருமாந்திரம், மூத்திரம் ...இப்படி வார்த்தைங்க போட்டுதான் எழுத வருமா?. நல்லதா எழுதினா நாறிப்போயிருவாங்களா? இல்லே புண்நவீனத்துவம் பழசாகிருமா?

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. "பெயரிலியை மொத்துவது" தற்போதைய புது சுடர் விளையாட்டு போல. சுடர் இப்போது தங்கள் கையில். அடுத்து சுடரை உங்கள் கையிலிருந்து எவர் பிடுங்கிக் கொண்டு ஒடப்போகிராரோ? நெனச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்குது.

  ReplyDelete
 3. //"பெயரிலியை மொத்துவது"//
  @சுந்தரமூர்த்தி-->பின்னே மொத்தாம விடுவாங்களா. பிரச்சினை என்னன்னு தெரியாம முழிக்கும்போது, வெவரம் தெரிஞ்சிக்க அவரோட பின்னூட்டங்களை தமிழ்மணம் மூலமா படிக்கலாம்னா அவர் பேருக்கு முன்னாடி இருக்கிற இந்த ரெண்டு குறிகளும் "/-" படிக்க விடாம செய்ய்துங்களே. தமிழ்மணத்தின் மேலாதிக்க வசதியை உபயோகப்படுத்தாம செய்யறவரை மொத்தாம.... இன்னோன்னையும் கவனிச்சீங்களா? இங்கேயும் "குறி"கள்தானுங்க பிரச்சினை..:)) .

  சுடர் நம்ம கையில அணைஞ்சிருங்க.. என்ன நாம் தூங்கப்போர நேரம் வந்திருச்சு.. அதான் கவலை...

  ReplyDelete
 4. //இந்தப் புண்நவீனத்துவியாதிங்க இருக்காங்களே அவுங்களுக்கு காமம், கருமாந்திரம், மூத்திரம் ...இப்படி வார்த்தைங்க போட்டுதான் எழுத வருமா?. நல்லதா எழுதினா நாறிப்போயிருவாங்களா? இல்லே புண்நவீனத்துவம் பழசாகிருமா? //

  Well said !

  ReplyDelete

Post a Comment

Popular Posts