வசீகராவும், கேம்ரியும்

....இருக்கவே இருக்கு பத்து ஏக்கர் நிலம்,டிராக்டர் உழுது பொழைச்சுக்குவேன்.

உங்கப்பா கஷ்டப்பட்டு படிக்க வெச்சது ஊர்ல விவசாயம் பார்க்கத்தானா?

So, என்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதுக்காக அமெரிக்கா போய் பணம் அனுப்பிச்சா, கணக்கு சரியாய்போயிருமா? இது என்ன பிஸினெஸ்ஸா? சொல்லுங்க. சரி அங்க போய் பணம் சம்பாரிச்சு ஒரு கார் வாங்கறேன்னு வைங்க. அந்த சந்தோசத்தை எங்கப்பாகிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்? என்ன கார் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்து அனுப்பத்தான் முடியும். ஆனா இதுவே எங்க ஊர்ல வேலை பார்த்தேன்னு வைங்களேன், அம்சமா ஒரு பஜாஜ் ஸ்கூட்டரை வாங்கி, மஜாவா மணிய வெச்சு சுத்த முடியும். அதுல ஒரு சந்தோசம் இருக்கு.....

மேல இருக்கிற வசனம் வசீகரா படத்துல வர்றதுங்க. சில நேரங்கள்ல இந்த மாதிரி வசனங்கள், வாழ்க்கை பூரா மனசுல நின்னுக்கும். இனிமேதான் அப்பாவுக்கு படம் எடுத்து அனுப்பனும். என்னத்தைச் சொல்ல..

Comments

 1. படிக்கும்போதே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. எங்கேயோ சுட்டுட்டார்ன்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. ;-)

  ReplyDelete
 2. //எங்கேயோ சுட்டுட்டார்ன்னு நெனச்சேன்.//
  காசு குடுத்துதாங்க வாங்கினேன்.

  ReplyDelete
 3. வாங்கி முடிச்சாச்சா? வாழ்த்துகள்! எப்போ எங்க ஊருக்கு உங்க காரில் வந்து ட்ரீட் தரப் போறீங்க!! :))

  ReplyDelete
 4. எல்லாம் தெரிந்தும்,ஏன் எல்லோருக்கும் மனதுக்கு பிடித்ததை செய்ய முடிவதில்லை?

  ReplyDelete
 5. எனக்கு கூட இந்த வசனம் அடிக்கடி நினைப்பு வருதுங்க.
  நமக்கும் விவசாயம் பார்க்க நிலம் கொஞ்சம் கிடக்கு. ஆனா நான் இயற்கை விவசாயம் தான் செய்யனும்னு ஆர்வமா இருக்கேன். முதல்ல கொஞ்சம் கஷ்டப்படனும், ஏற்கனவே இருக்க இரசாயனத்தையெல்லாம் நிலத்துல கொட்டி அத பாழாக்கியாச்சு. அதான் கொஞ்சம் காசு சேர்த்துகிட்டு சீக்கிரம் போயிடுவேன். என்னத்த இருந்தும் பெத்தவங்க கூட இருக்க முடியல்லயே.என்னத்த சம்பாதிச்சு என்ன ஆகப் போகுது .

  ReplyDelete
 6. //எப்போ எங்க ஊருக்கு உங்க காரில் வந்து ட்ரீட் தரப் போறீங்க!! :))/
  இந்த உள்குத்துக்கெல்லாம் கொறைச்சலே இல்லீங்க.

  ReplyDelete
 7. //எல்லாம் தெரிந்தும்,ஏன் எல்லோருக்கும் மனதுக்கு பிடித்ததை செய்ய முடிவதில்லை?//
  @பாபு - > Survivalனு பொய் சொல்லிட்டுத்தானே இருக்கோம். அதைதான் இங்கேயும் சொல்ல வேண்டியதா இருக்கு..

  ReplyDelete
 8. கேம்ரி.. ம்ம் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. உங்க காரோட படத்த போடுங்க பாஸு

  ReplyDelete
 10. மாமு அதென்ன கேம்ரியோ கேசரியோ. அதுல ஒண்ணு வாங்கி இங்க அனுப்புங்க. ஓட்ட சாண்ட்ரோவோட மாரடிக்க முடியல.

  அதுவுமில்லாம, மாமு கேம்ரில போறப்ப மாப்பு ஓட்ட வண்டில போனா நாலு பய நாலு விதமா நாக்குல பல்ல போட்டு பேச மாட்டானா?

  என்ன நாஞ்சொல்றது?

  ReplyDelete
 11. //உங்க காரோட படத்த போடுங்க பாஸு//
  போட்டுறலாங்க பாஸூ

  ReplyDelete
 12. //ஓட்ட சாண்ட்ரோவோட மாரடிக்க முடியல.//
  santraவோ கேசரியோ, வண்டிய ஓட்டனும். பழசாயிரும்னு வூட்டுல பூட்டி நிப்பாட்டி வெச்சுக்கிட்டிருந்தா?

  ReplyDelete
 13. //super lux Wandinga//
  அட நீங்க வேற, நம்ம ’லெவலுக்கு’ இதுதாங்க சிக்குச்சு.. அதைப் போயி சொகுசுன்னுகிட்டு. ஆல்டோ மாதிரி சொகுசு வந்தாவேப் போதுங்க..

  ReplyDelete
 14. //இனிமேதான் அப்பாவுக்கு படம் எடுத்து அனுப்பனும். என்னத்தைச் சொல்ல..//

  அப்போ நீங்க கார் வாங்கிடிங்க

  ReplyDelete
 15. //அப்போ நீங்க கார் வாங்கிடிங்க//
  ஆமா ஆமா

  ReplyDelete
 16. மாப்பி நீயாரு உன் ரேஞ்சு என்னா.. உன்னைய நம்பி இங்க எம்மாம் பெரிய கம்பெனி இருக்கு.. ஒரு பென்ஸு காரு, ஒரு ferrari அப்படின்னு வாங்க என்னாது இது.. ஒரு வேளை உன்னோட பையன் ஓட்டி பழக இந்த கார் வாங்குனியோ?

  ReplyDelete
 17. இது மண்ணென்னையில் ஓடுமா ?

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்!! வசனம் நல்லாருக்கு!!

  ReplyDelete
 19. //உன்னோட பையன் ஓட்டி பழக இந்த கார் வாங்குனியோ?//
  மாப்பு உன்னிய மாதிரி Spyder வாங்கற ஆளா நானு?

  //இது மண்ணென்னையில் ஓடுமா ?//
  வெல வாசி ஏறுற நெலமைய பார்த்தா குருடாயிலதான் ஓட்டனும்.

  ReplyDelete
 20. //ஒரு பென்ஸு காரு,//
  ஒரு வேகத்துல படிக்கும்போது வேற மாதிரி படிச்சுட்டேன்.Good Old Days சந்தோஷ்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts