Wednesday, October 29, 2008

சொன்னதைச் செய்த பாஜக

நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் முற்றிலும் திறந்துவிடப்பட்டு விட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

பஞ்ச் பாலா: நியாயஸ்தனுங்கதான், மழை மட்டும் பேஞ்சுட்டா.


டெல்லி: சர்வதேச அளவிலான 'பொருளாதார சுனாமியால்' பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களி்ல் 25 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக் கூடும் என இந்திய தொழில்-வர்த்தக சபையான அஸோசாம் தெரிவித்துள்ளது.

இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.

பஞ்ச் பாலா: பதிவர்கள் சாக்கிரதை இருந்துக்குங்கோ, நாமதான் waste land of India.


திண்டிவனம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரிகள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சேரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச் பாலா: அப்படியே தமிழ்நாட்டிலேயும்னு மனசுல வெச்சுக்கோங்க. வைகோ, கம்யூ, அப்படின்னு செட்டாவே மாறிடலாம்.

சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

பஞ்ச் பாலா: எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்.

என்னை கைது செய்ய தயக்கம் வேண்டாம் : திருமாவளவன்

பஞ்ச் பாலா: அதெல்லாம் அம்மா ஏதாவது சொல்லனும். அப்போதான் உளவுத்துறைக்குத் தெரியும்.

கருணாநிதி பதவி விலக தந்தி அனுப்பவும்: ஜெ.

பஞ்ச் பாலா: நானும் ரெளடி நானும் ரெளடி- வடிவேலு.
அடியே!
என்னை அடிக்கடி பார்,
தமிழகத்தின் மின்சாரப்
பஞ்சம் தீரட்டும்!
இளா

Tuesday, October 28, 2008

நிறம் மாறும் தீபாவ'லி'

நமக்கு தீபாவளி 27ந்தேதின்னா சிலருக்கு 28ம் தேதியாம், சிலருக்கு 29ம்தேதி. குஜராத்திகளோட வருசப் பிறப்பு 29 தேதியாம் அத்தோட தீவாவளியையும் சேர்த்து கொண்டாடுக்குவாங்களாம். நரகாசுரனை கூட மனுசன் நேரம், காலம் பார்த்துதான் சாவார் போல இருக்குங்க.


தீவாவளி கொண்டாட்டம் எல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்லேன்னு நினைக்கும் போது.. தூ என்ன Onsite வாழ்க்கை இதுன்னு தோணுது. எவ்ளோ நாள்தான் முகமூடிய மாட்டுகிட்டு அலையப்போறேம்னு இருக்கு

Sunday, October 26, 2008

தங்கைக்கோர் வாழ்த்து!


Wednesday, October 22, 2008

ஏகன் - விமர்சனம்

இராணுவத்துல இருக்கிற ஒரு அதிகாரி ஏகன். அவருக்கு அவருடைய மேலதிகாரி ராகவன் மேல மரியாதை கலந்த மதிப்புமட்டுமில்லாம் பாசமும் அதிகம். அவருடைய மேலதிகாரிொரு தகவல் வருது, அதுல அவருடைய மகன் மற்றும் மனைவியை தீவிரவாதிங்க கொலை செய்ய திட்டமிட்டுருக்காங்கன்னு தெரியவருது. அதனால அவருடைய சீடன் ஏகனை மகன் மற்றும் மனைவியை காக்க அனுப்புறார்.
அவருடைய மகன் லக்கி அந்தக் கல்லூரியின் HotGuy. எல்லாப் பொண்ணுங்களும் அவருக்கு பின்னாடியே சுத்த இவர் மட்டும் பூஜாவோட காதலுல சுத்துறாரு. ஏகன் ஒரு கல்லூரி மாணவரா சேர்ந்து அந்தக்கல்லூரிக்கு போயி லக்கிய அவருக்கு தெரியாமையே பின் தொடர்ந்து காக்குறாரு. ஒரு சமயத்துல ஏகனுக்கு அந்தக்கல்லூரியின் வேதியியல் விரிவுரையாளரோட chemistry வொர்கவுட் ஆகிருது. இந்த சமயத்துல ஏகனும், லக்கியோட வீட்டுல தங்கி அவங்க அம்மாவுக்கு ஒரு மகனாவே பாசத்துக்கு கட்டுப்பட்டுடறாரு.
இந்தச் சமயத்துல லக்கிக்கு, ஏகன் பின் தொடர்ந்து வர்றது தெரிஞ்சு போகவே ஏகன் மேல லக்கிக்கு வெறுப்பு வந்துருது. நடுவே நடுவே லக்கிமேல தீவிரவாதிங்க தாக்க முயற்சி பண்ண ஏகன் காப்பாத்துறாரு. ஒரு கட்டத்துல ஒட்டுமொத்த கல்லூரியையும் தீவிரவாதிங்க சுத்தி வளைச்சு, லக்கியோட உயிரைப் பணயாமாக் கேட்க ஏகன் எப்படி லக்கியையும் காப்பாத்தி, அவரோட பாசத்தையும் சம்பாதிச்சு, கடமையை ஆத்துறாருங்கிறது Climax.
பின்குறிப்பு: இது Main Hoon na கதை. ஏகன்=இராம்ன்னு மாத்துனதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. இந்தியில கொடுமையா இருந்துச்சு. தமிழ்ல எப்படி எடுத்திருப்பாங்கன்னு தெரியலை.

Sunday, October 19, 2008

* Thanks

காவேரித் தெருவுல இருக்கிறதே 4 கடைங்கதான், மீதி இருக்கிறது ரெண்டு பக்கமும் 3 அடுக்குமாடி வீடுங்க. ஒரு டாஸ்மாக், அண்ணாச்சி மளிகை, வேலு பான்கடை அப்புறம் ராஜூ மெக்கானிக் கடை. எல்லாமே சின்ன சின்னதான கடைங்க. அப்புறம் பூ விக்கிற மாரியம்மா. ஒரு பரபரப்புமில்லாத தெரு. வேலைக்குப் போவாங்க வருவாங்க, வீடல் அடைஞ்சுக்குவாங்க. தெருவுல நடமாட்டமும் கம்மி.

அப்போதான் அந்தத் தெருவுக்கு வந்தான் கிரிதரன்,ரொம்ப புத்திசாலி, நல்லா பாடுவான், உலக அறிவு அதிகம், நிறைய பேசுவான்.. என்ன ஒன்னுன்னா, எல்லாரும் அவனைப் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. ராத்திரியானா ராஜூ கடைக்கு முன்னால படுத்துக்குவான். பாதுக்காப்புதானேன்னு ராஜூம் ஒன்னும் சொல்லலை.

ஒரு நாள் சாயங்காலம், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” ராஜூ கடைக்கு முன்னாடி இருந்த திண்டுல உக்காந்துகிட்டு பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பிச்சான் கிரி. ஆனா யாருமே அவனையோ, அவன் பாட்டையோ கண்டுக்கலை. எல்லோரும் ஒரு முறை வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தாங்க. அவ்ளோதான். எல்லாப் பைத்தியக்காரனுக்கு கிடைக்கிற மரியாதைதான் அவனுக்கும் கிடைச்சது. அடுத்த நாள் கதை சொல்ல ஆரம்பிச்சான் கிரி. அண்ணாச்சியின் 7 வயசுப்பையன் மட்டும் ஐஸ் சூப்பிக்கிட்டே கதை கேட்க ஆரம்பிச்சான்.

அடுத்த நாள் அண்ணாச்சிப் பையன் இன்னும் 3 பேர சேர்த்து கூட்டிட்டு வந்தான். ஆனா அன்னிக்கு பக்திச் சொல்ற்பொழிவு, ஆனா அந்தப் பசங்களுக்குத் தகுந்த மாதிரி கதைச் சொன்னான் கிரி.இப்படியே ஒரு வாரம் போச்சுது நல்ல குரல், நல்லசங்கீத ஞானம், மக்களுக்குத்தகுந்தப்படி பாடுறதனால சிலபேரு வீட்டுல இருந்தே கேட்க ஆரம்பிச்சாங்க. கடைக்கு வந்துப்போற மக்கள் நின்னு கேட்க ஆரம்பிச்சாங்க.அப்புறமா அவன் எப்ப பாடுவான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க அந்தத்தெரு மக்கள். இதனால அவனுக்கு சரியான சாப்பாடு, துணி எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சது. தீவிரவாதியா இருப்பான்னு சில பேரு சொல்லிகிட்டாங்க. ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் அவன் கவலைப்படவே இல்லை. ஆனாலும் அவன் தனிப்பட்ட விசயத்தைப்பத்திமட்டும் யாருக்கும் தெரியலை. கேட்க துணிச்சலும் இல்லே. பாட்டோ, பேச்சோ அத்தோட சரி. அப்புறம் யார்கிட்டேவும் பேசமாட்டான். சோறு போட்டா நல்லா தின்பான். வாழ்க்கை நல்லா ஓட ஆரம்பிச்சது. காசு
குடுத்தா திருப்பி அவுங்க மேலேயே எறிஞ்சுருவான். இப்படியே ஒரு வருசம் ஓடிப்போயிருச்சு. சாயங்காலம் ஆஞ்சு மணிக்கு காவேரித்தெருவுல கூட்டம் சேர ஆரம்பிச்சுரும். ராஜூ பஜ்ஜி கடையும் சேர்த்து போட்டாரு

ஒரு நாள் திடீர்ன்னு காணாம போயிட்டான் கிரிதரன்.. ஒரு வாரத்துக்கு மக்களுக்கு என்னமோ மாதிரியிருந்துச்சு. வாரம், மாசத்துல மக்கள் மறந்துட்டாங்க. ஆனாலும் அஞ்சு மணியானா அந்தத் திண்டை கண்டிப்பா ஒரு முறையாவது ஒருத்தராவது ஏக்கத்தோட பார்க்காம போக மாட்டாங்க.வருசம் பல ஆச்சு, திண்டு மட்டும் காலியாவே இருந்துச்சு.

லக்கி மாதிரி நல்லா எழுதிட்டு ஒருவித வெறுப்புல பதிவுலகத்தை விட்டு போறவங்களுக்காக, வாசகன் பார்வையில் இந்தப்பதிவை சமர்பிக்கிறேன்.

Friday, October 17, 2008

* Junior விவசாயி

அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"

மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு

துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"

"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.

செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.

மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு

சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்

அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.

நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு

செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"

சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!

மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"

Thursday, October 16, 2008

* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி?

கொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.

இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச் உணர்வு கிடைக்கும்.

சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)

  • பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
  • ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
  • இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
  • அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
  • Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
  • இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
  • கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
இது எல்லாம் நான் அங்கன இருக்கும் போது இருந்துச்சு. Technology has improved very much இல்லீங்களா. உங்களுக்கு இது மாதிரி் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.

Wednesday, October 15, 2008

* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் ஞாபகத்துக்கு இல்லீங்க. ஊருல திரை கட்டி விசேசத்துக்கு படம் போடுவாங்க. அது சுதந்திரதினம், எம்ஜிஆரு பொறந்த நாளு, மாரியாயி நோன்பி, கருப்பண்ண பொங்கல்னு. மொத படம் பழசாவும், ரெண்டாவது படம் புதுசாவும் இருக்கும். ஆனா நான் பார்த்த மொதோ படம் "நினைத்ததை முடிப்பவன்"னு அம்மா சொன்னாங்க.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம், குரோம்பேட்டை ராகேஷ்ல கூட்டாளிங்களோட ஒரு தடவை, அம்மணியோட ஈரோட்டுல ஒரு தடவை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பந்தயம்தான். அதெல்லாம் தெனம் ஒரு படம் பார்க்குறோம். Tube Tamil, Tamil Wire, TamilOன்னு வாரம் ரெண்டாவது பார்க்குறோம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்குற ஆள் நானு. அண்ணாமலை, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், அப்படின்னு பெரிய பட்டியல் போடலாம்.உன்னால் முடியும் தம்பி என்னிக்குமே புடிச்ச படம், அது மாதிரி ஏதாவது செய்யனும் நினைச்ச படம். கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சண்டியர், என்ன கருமத்துக்கு தலைப்பை மாத்தச் சொன்னாங்களோ தெரியல.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அதே தொழிலா இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல. ஆனா தசாதவதாரம் ஆரம்பக் காட்சிகளின் சொதப்பல் மாதிரி நெறைய குறைய மட்டும் கண்டுபிடிக்க முடியுது. காரணம் அதேத் தொழிலுல 3 ஆண்டு அனுபவம்.
PC SreeRaam, மணி ரதனம், விட்டலாச்சாரியார், மாயாவி வெங்கி இவுங்க எல்லாம் என்னை பாதிச்சவங்க. ஏன் ஜீன்ஸ் படம்,, எப்பா எப்பா, சங்கர் மாதிரி தொழில்நுட்பத்துக்கு மெனக்கெடுற ஆட்கள் ரொம்ப கம்மி(காப்பி அடிக்கிறதை அவர் தவிர்க்கலாம்)

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நெறைய, எல்லாம் Onlineலதான்.வேற என்ன இருக்கு. சினிமா எக்ஸ்பிரஸ் மாதிரி சினிமாவுக்குன்னே வர பொஸ்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இல்லீங்க. எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில், சினிமாப் பொன்னையா, வாரமலர் துணுக்கு மூட்டை, ஜூவி மியாவ் மாதிரிதான்.

7.தமிழ்ச்சினிமா இசை?
உயிர்நாடி. பதில் 9 வது கேள்வில பாருங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இரானி, ஸ்பெயின் மாதிரியான தரமான படங்கள் மட்டும்தான் பார்ப்பேன்னு புருடா விடத்தயாரா இல்லே. தமிழ், Subtitleவெச்சா ஆங்கிலம், ஹிந்தி பார்க்குறது உண்டு, Dil Chata Hai, முங்காரு மலே(கன்னடம்), மணி சித்திரதாழ், ..etc

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். ஆனா எந்த நடிகரும் அரசியலுக்கு போவ கூடாது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நல்லா இருப்பாங்க/இருப்பேன். வேற வேலை பார்க்கலாம், பதிவுகள் பாதியா கம்மியாயிரும். பால் மீதி ஆவும், சீரியல் அதிகமாகும், குத்தாட்டம் ஆட்டம் நெறைய நடக்கும்.

பொதுவா சங்கிலித் தொடருக்குன்னா வர மாட்டேன். கொத்தனாரே என்னமோ கேட்க நானும் ஆமாஞ்சாமின்னு சொல்ல.. இப்படி ஆகிப்போச்சு வாழ்க்கை. நானும் 5 பேரைக் கூப்பிடனுமாமே. அதான் சினிமாக்காரங்களையே கூப்பிடுவோம், வந்து எழுதலை....நடக்கிறதே வேற

1. மு.கருணாநிதி
2. ஜெ. ஜெயலலிதா
3. ரஜினி
4. கமல்
5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
6. சிரஞ்சீவி காரு.

Tuesday, October 14, 2008

* இதாருங்க?

இப்போ இதாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம். இவர் ஒரு பிராப..அய்யோ அய்யோ பிரபல பதிவர்ன்னு சொல்ல வந்தேனுங்..

போனதடவை கொஞ்சம் சுலபமா குடுத்துட்டேன். இந்த முறை கொஞ்சமாச்சும் கஷ்டப்படவேணாங்களா. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ”தளபதி ரஜினி ரேஞ்சுல என்னை ஒரு போட்டோ புடி இளா”ன்னு இந்தப் பதிவர் ரப்சல் தாங்காம எடுத்த படம் இது.
எலிக்குட்டியை இந்த படத்து மேல உருட்டவும், அப்போதான் புதிர் வரும்..(Roll the mouse over puzzle)

Monday, October 13, 2008

* செந்தழல் ரவி - BlogOgraphy

பொதுவா பதிவர்களைப் பத்தி எழுதறதை தவிர்த்துட்டே வந்திருக்கேன். காரணம், தேவையில்லாத சச்சரவு வரும்னுதான். தலையில மண்ண வாரிப் போட்டுப்பாங்களான்னுதான். பதிவர் வட்டத்தைப் பத்தி எழுதினா குழுமடல் மாதிரியும் ஆகிருங்கிறது என்னோட எண்ணம். பதிவுலகத்தை திருப்பி போட்டவங்க (இதென்ன தோசையா?) சிலரைப் பத்தி, இல்லைன்னா பதிவுலகமே திரும்பி பார்த்தவங்கங்களைப் எழுதனும்னு நெனைச்சுட்டு இருந்தேன். அதுக்கு காலம் நேரம் எல்லாம் சரியா வரனும்தானே. அது என்ன BlogOgraphy? BioGraphy மாதிரிதான்.

மொதல்ல எழுதனும்னு நினைச்சது செந்தழல் ரவியப் பத்தி.

முன்குறிப்பு: Comments moderated.

நான் தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தக் காலத்துல ரொம்ப நாகரிகமா கருத்துக்களை மறுத்தாங்க(போலி மட்டும் கெட்ட வார்த்தையிலதான் திட்டுவாரு). ஏதோ ஒரு பதிவுல எங்கே பார்த்தாலும் "I beg a pardon to offfend your post" அப்படின்னு பார்த்திருக்கேன். இந்தமாதிரி நாகரிகமான ஒரு கட்டமைப்பை உடைச்சதுல செந்தழல் ரவிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கு. அந்தக் காலத்துல தான் செந்தழல் ரவி பதிவுலகத்து வந்தாரு. வந்தவுடனே டமால் டுமீல்னு பதிவுகள் வரும். செம கடுப்புல எல்லாரும் பார்த்துட்டு இருந்தோம். இதுல இரவுக்கழுக்குன்னு ஒரு கேங் வேற தரத்துக்கு கீழே போச்சு.(நம்பி ஏமாத்துனா தரத்துக்கு கீழேங்கிறது என்னோட வாதம்). பொன்ஸ் பத்தி எழுதின பதிவுதான் எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு ரவி மேல செம கோவம் வர வெச்ச பதிவு. ஆம்புளைகளோட பதிவுகளையே கிண்டல் அடிக்க யோசிக்கிற நேரத்துல ஒரு பொண்ணைப் பத்தி(Personalஆ) எழுதுனப் பதிவைப் பார்த்து கோவம் வராதுங்களா?


ரவிய நான் மாமா, மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்ச காலத்துலதான் ரவி போலி கேங்ல இருக்காருன்னு கேள்விப்பட்டேன். அந்தச் சமயத்துல தான் ரவி தேடுJobs ஆரம்பிச்சாரு. அதுவரைக்கு வில்லனா இருந்த ரவி கதாநாயகனா எல்லா பத்திரிக்கையிலும் வலம் வந்தாரு. அப்பதான் நானும் மோஹன்தாஸும் ரவிய நாய் கடிச்சதைப் பதிவப் போட போலி எங்களுக்கு நேரடியாவே நாய் பட்டம் குடுத்து பாராட்டினதும் இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத தம்பட்டம்.

ரவி ’U’ அடிச்சது, போலிகளோட நடந்த சண்டைதான். அதான் தமிழ்ப் பதிவுலகத்தோட வரலாறு பக்கமாச்சு. அப்புறம் கர்நாடகா பிரச்சினை வந்ததும், ரவிக்கு போலிகளால தொந்தரவு வந்ததும், செல்லாவும் ரவியும் போலிய பத்தி போலீஸ்ல புகார் தந்ததும் ரகசியமாவே இருந்ததுச்சு. பூனைக்கு மணிய கட்டிய பெருமை இவுங்களையேச் சாரும். இன்னிக்கும் பல பேரோட பின்னூட்டப் பொட்டி திறந்தாப்ல இருக்குன்னா அதுக்கு ரவியும் ஒரு காரணம்.

வீராச்சாமி படத்துக்கு படம் பார்க்காமையே அவர் எழுதுன விமர்சனம் என்னோட favourite. அதுக்கு முன்னாடி சில நல்ல பதிவுகள் வந்ததும் உண்டு. கோழி திருடன், தேங்காய் பொறுக்கி எல்லாம் டாப் டக்கர்.

இன்னும் செந்தழல் ரவி பதிவுலகத்தின் நாகரிகத்தை கண்டுக்கவே இல்லீங்கிறது வருத்தம்தான்(அப்படின்னு ஒன்னு இருக்கா?). இன்னும் அவர் பிராமிணர்களை வசை பாடுறதும், அவர் பதிவுகள்ல அடுத்தவங்க போட்ட பிடிக்காத பின்னூட்டத்துக்கு அனானியா அவரே பின்னூட்டமா திட்டுறதும் எனக்குப் பிடிக்காத செயல்.

(தொடரும்)

அடுத்தப் பதிவர் - கருத்து கந்தசாமி

* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”

“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997ல டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிர நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்கு போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சத்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டு போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுதிட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியில).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது
ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டா போதும், வர போற ஒன்னையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்க கவனிங்க” சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழேதான் நிப்பாடினாங்க.

கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரும், 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு நட்சத்திர பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

* திரட்டியை COPY அடிப்பது எப்படி?

பதிவ திருடினாங்க, பொறுத்துக்கிட்டோம்.
கவிதைய திருடினாங்க ஒத்துகிட்டோம்.
கதைய பதிவுலிருந்து திருடி, தனிமடலா தன் பேருல அனுப்பிச்சாங்க, சிரிச்சிகிட்டோம்.

திரட்டியையுமா? என்னமோ போங்க, தமிழை வாழ வெக்க இவ்வளவு சிரமப்படுறீங்கன்னு தெரியுது. வாழ்க தமிழ்!

நகல்:அசல்:
Tamil BLOGKUT-சங்கமம்

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்