சொன்னதைச் செய்த பாஜக

நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் முற்றிலும் திறந்துவிடப்பட்டு விட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

பஞ்ச் பாலா: நியாயஸ்தனுங்கதான், மழை மட்டும் பேஞ்சுட்டா.


டெல்லி: சர்வதேச அளவிலான 'பொருளாதார சுனாமியால்' பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களி்ல் 25 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக் கூடும் என இந்திய தொழில்-வர்த்தக சபையான அஸோசாம் தெரிவித்துள்ளது.

இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.

பஞ்ச் பாலா: பதிவர்கள் சாக்கிரதை இருந்துக்குங்கோ, நாமதான் waste land of India.


திண்டிவனம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரிகள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சேரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்ச் பாலா: அப்படியே தமிழ்நாட்டிலேயும்னு மனசுல வெச்சுக்கோங்க. வைகோ, கம்யூ, அப்படின்னு செட்டாவே மாறிடலாம்.

சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

பஞ்ச் பாலா: எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்.

என்னை கைது செய்ய தயக்கம் வேண்டாம் : திருமாவளவன்

பஞ்ச் பாலா: அதெல்லாம் அம்மா ஏதாவது சொல்லனும். அப்போதான் உளவுத்துறைக்குத் தெரியும்.

கருணாநிதி பதவி விலக தந்தி அனுப்பவும்: ஜெ.

பஞ்ச் பாலா: நானும் ரெளடி நானும் ரெளடி- வடிவேலு.
அடியே!
என்னை அடிக்கடி பார்,
தமிழகத்தின் மின்சாரப்
பஞ்சம் தீரட்டும்!
இளா

Comments

 1. //பஞ்ச் பாலா: எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்//

  ஹாஹாஹா... சூப்பர் பஞ்ச் இதுதான்.... வாய்விட்டு சிரிச்சிட்டிருக்கேன்.... :-)))

  ReplyDelete
 2. //அடியே!
  என்னை அடிக்கடி பார்,
  தமிழகத்தின் மின்சாரப்
  பஞ்சம் தீரட்டும்!//

  அப்போ தொட முடியாது போலிருக்கே!!!!! :-(((

  ReplyDelete
 3. சூப்பர்.. சூப்பர்.. பஞ்ச்

  ReplyDelete
 4. //பதிவர்கள் சாக்கிரதை இருந்துக்குங்கோ, நாமதான் waste land of India.//

  எப்படி இப்படி உண்மையெல்லாம் வெளியெ சொல்லிகிட்டு

  ReplyDelete
 5. //என்னை கைது செய்ய தயக்கம் வேண்டாம் : திருமாவளவன்//

  பாத்துகோங்க நானும் ரவுடி தான்!
  ஜெயிலுக்கு போறென்.
  ஜெயிலுக்கு போறென்..
  ஜெயிலுக்கு போறென்...

  ReplyDelete
 6. எல்லாமே சூப்பர் பஞ்ச்

  ReplyDelete
 7. //எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்//

  :))))))))))

  அடிச்சு நவத்துரீங்க!

  சூப்பருப்பூ!!!!

  ReplyDelete
 8. குசும்பு விவசாயியா இருப்பார் போல

  ReplyDelete
 9. எல்லாமே கலக்கல்னாலும், மொதோ பஞ்சும், கடைசி பஞ்சும் கலக்கலோ கலக்கல் :):):)

  ReplyDelete
 10. ச்சின்னப்பையன், நசரேயன், வாலு->நன்றி

  ReplyDelete
 11. வாங்க ராப், வருங்கால முதல்வர் அவர்களே..சுரேகா

  ReplyDelete
 12. //பஞ்ச் பாலா//

  எச்சுச் மீ பார்மர் சாப்.. இது எங்க ஊர் ஹலோ FMல 5 மணிக்கு மேல அட்டகாசம் பண்ற ஃபிகர் தனக்கு தானே வச்சிக்கிட்டு இருக்கும் பேர். :))

  ReplyDelete
 13. ////அடியே!
  என்னை அடிக்கடி பார்,
  தமிழகத்தின் மின்சாரப்
  பஞ்சம் தீரட்டும்!////

  போக்கிரி படம் வடிவேலு நிலைமை ஆகாம இருந்தா சரி.. கண்ட எடத்துல வயர் சொருகி ஆளுக்கு 50 மெகாவாட் கரண்டு எடுத்துடுவோம் சாமி.. :))

  ReplyDelete

Post a Comment

Popular Posts