Tuesday, December 23, 2008

இஞ்சினியர் மாமா

ஏழாவது படிக்கும் போது, எதிர்காலத்துல பொறியியல் படிக்கிறதுதான் என்னோட டார்கெட். அந்தச் சமயத்துல எங்க ஊர்ல பொறியியல் படிச்சவங்க 3 இல்லைன்னா 4 பேர்தான் இருப்பாங்க. மீதி எல்லாம் Diploma இல்லாட்டி Bsc/Msc தாங்க. பொறியியல் படிச்சவங்கள்ல மூத்தவரு எங்க இஞ்சினியர் மாமா. அரசு வேலை, கார், புல்லட்ன்னு இருக்கிறவரைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படி இருக்கனும்னுதான் தோணும். அப்படியே எனக்கு தோணிப்போச்சு.

அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.

வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.

போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.

ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.

மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!

Sunday, December 14, 2008

அமெரிக்காவின் நிலைமை?


போன வருசம் Statue Of Liberty போயிருந்த போது எடுத்தது. இதுதான் இன்னிக்கு அமெரிக்காவின் நிலைமைன்னு போனவருசமே நமக்கு தெரிஞ்சிருக்குப் பாருங்களேன்.


என்னை அமெரிக்கா வெளியே போகச் சொன்னா .. மேலே இருக்கிற படம்தான் பதிலு.மேலேன்னா மொத மேலே.

ஆக மொத்தம் ரெண்டு படங்கள்ல ரெண்டு விசயமாச்சுங்களா?

Wednesday, December 3, 2008

BlogOgraphy:கோவி.கண்ணன்

கோவி.கண்ணனை(கோவி)யுடன் பதிவுகள் மூலமாக 2006ல் ஏதோ ஒரு தேதியில் தனி அரட்டையில் பழக்கமாச்சுங்க. முதல் அறிமுகத்துல ரெண்டு பேருக்குமே ஒரு ஆச்சர்யம். ரெண்டு பேரும் ஒரே தொழில்ங்கிறதும், ஒரே காலத்துல அவர் வேலை பார்த்த இடங்களில் இருந்திருக்கேங்கிறதும். நான் அவரை பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வந்த போது, அவர் என்னை ஏற்கனவே பார்த்திருப்பதாவும், நல்லாத் தெரியும்னும் சொன்னாரு. அத்தோட நிப்பாட்டிருந்த இந்தப் பிரச்சினையே இல்லே. அவரோடப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வெச்சுட்டு, ஞாபகம் இருக்கான்னு கேட்டாரு, தெரியலைன்னதும், "யோசனை பண்ணிச் சொல்லுங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ஒரு நாள் முழுக்க அரை மணி நேரத்துக்கு ஒரு முறை படத்தை பார்க்கிறதும், ஞாபகம் வருதான்னு யோசிக்கிறதாவுமே இருந்தேன். அடுத்த நாள் அவரை அரட்டையில புடிச்சப்போதாங்க சொன்னாரு, அவர் என்னைப் பார்த்தது இல்லேன்னும், சும்மானாச்சு படத்தை அனுப்பினேன்னாரும். அப்போதான் இந்த மனுசனோட குசும்பு தெரிஞ்சுதுங்க. அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!

அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வழக்கம் போலதாங்க இருந்துச்சு. ஒரு சார்பில்லாம, மொக்கைகளும், கும்மியும் கொண்டாட்டமுமா. நட்சத்திர வாரத்துக்கு அவர் எழுதுன கதை, அவரோட பதிவுகள்ல சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். தன்னோட எழுத்துக்கள்ல பெரிசாவோ, சிறிசாவோ, ஏன் அழுத்தமோ இல்லாம இருந்தப் பதிவுகள் U டர்ன் அடிச்சது 2008 பிப்ரவரிலதான்.

அதாவது கருத்துக்களை 'காலங்கள்'ல அள்ளி வீசிட்டு இருந்தவருக்கு அது சோதனை காலம். கருத்து கந்தசாமின்னு பேர் வந்ததும் அப்போதான்.


போலியின் ஒரு அங்கமாவே எண்ணி, கோவிய ஒரு கும்பல்சில நண்பர்கள் தாக்கு தாக்குன்னு தாக்க, கோவி ஓடியோ ஒழியவோ இல்லே. ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு. அதுவரைக்கும் மொக்கை, நகைச்சுவை, வெளையாட்டு, கவிதைன்னு பதிவுகள் வந்துட்டு இருந்துச்சு. அப்போ இருந்து கருத்து, கருத்து, கருத்துதான். அநேகமா கோவி இமேஜ் இனி டேமேஜ், அப்படிங்கிற நிலைமைல டாப் கியருல மேல வந்துட்டு இருந்தாரு கோவி. யாருமே எதிர் பார்க்காத ஒரு முயற்சி, வாழ்க்கையில கடை பிடிக்க வேண்டிய முயற்சி அது.

வாரணம் ஆயிரம்ல அப்பா சூர்யா சொல்லுவாரே, எட்ஜ் வாங்கினேன்னு சொல்லி கடுப்பாயி 6 விக்கெட் எடுத்த கதை. அந்தக் காட்சி பார்க்கும் போது கோவிதான் மனசுல வந்தாரு. இது எனக்கும் ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டேன். கருத்துக்களை வீச ஆரம்பிச்சப்போ நான் தனி மடல்ல பதிவுகளின் தாக்கம் குறையுதுன்னு சொன்னேன். அப்புறம் அவர் பதிவுகளை படிப்பதை நிறுத்திக்கிட்டேன். மே மாதத்துல இருந்துதான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பின்னூட்டினதே இல்லே. ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு. நடுநடுவே பதிவர் சந்திப்புகளும். கருத்து ஆரம்பிக்கும் வேகம் குறைஞ்சு கடேசியா உங்க இஷ்டம்னு முடிக்கிற அவர் தோரணை எனக்குப் பிடிக்கலை.

'என் வீட்டு பூசையறையில பெரியாரில்லை, பிள்ளையார்தான்'னு எதுக்கோ சொன்ன வார்த்தை இன்னும் மனசுல இருக்கு.

"வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறாரு, அதான் அவருக்கு ஒரு சோதனையை குடுத்துச்சு"

இப்போ அவர் பதிவுகள் சூடாகாம இருந்ததே இல்லே. தூள் கிளப்பிட்டு இருக்காரு, எந்த அளவுக்குத் தெரியுங்களா?? தமிழ்ப்பதிவுலகுல சிங்கைன்னா கோவிங்கிற அளவுக்கு.

Update: மக்களே மன்னிக்கவும், போலி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து பின்னூட்டங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம். போலி பத்தின உங்க கருத்துக்களை சொல்ல வேணாமே.
அடுத்த BlogOgraphy: LuckyLook

Tuesday, December 2, 2008

NJ Bloggers Meet-2008

டிஸ்கி: தமிழ்மணத்திற்காக வெச்ச தலைப்பு : லக்கியும் செந்தழலும்தான் காரணமா?

வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணினது இதுதானுங் மொதோ முறை. இதுக்கு முன்னாடி ஒரு போனைப் போட்டு இங்கே வந்துருங்க, சாப்பாடு ரெடி அப்படின்னு சொன்னாப் போதும். ஆனா இந்த முறை பல முகங்களை பார்த்ததே இல்லே. அதனாலயே கொஞ்சம் நெருடல்.

முதல்ல நன்றியுரை:
'தமிழோவியம்' கணேஷ் சந்திரா, சத்யராஜ் குமார், ஜெய். இந்த மூணு பேருக்குமே எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அப்புறம் சஹானாவும் அவுங்க அம்மாவுக்கும். என்ன பேசினாலும் கேட்டுகிட்டு பொறுமையா இருந்தாங்க. (ச்சின்னப்பையன், உங்க வீட்டுல புதுசா பூரிக்கட்டை வாங்கியிருக்கீங்களாமே. உண்மையா?)

ஏற்கனவே படம், பதிவெல்லாம் எல்லாம் போட்டுட்டாங்க. இனிமே நான் என்னத்த எழுதறது? .

 • பாபாவின் அரசியல் அன்னிக்கும் அரங்கேறுச்சு, அவர் வரலை. கார் படிக்கட்டுல இடிச்சுக்கிட்டாரோ தெரியலை.
 • சங்கத்து சிங்கம் கப்பி வழக்கம்போல பொய் பேசி ஏமாத்துனாரு, அவரும் வரலை.
 • இனியா, அமரபாரதி ரெண்டு பேரும் வரலை, ஏன்னும் தெரிஞ்சிக்க முடியல. தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இப்பாலோ.... ஆனா தொடர்பே இல்லே :(
 • மும்பை, ஈழம்-உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தலாம்னு மோகன் சொன்ன போது ஒரு மாதிரியா.(Uncomfortable) இருந்துச்சு. ஆனா அது எவ்வளவு பெரிய விசயம்னு இப்போதான் தோணுது. HatsOff Mohan.
 • பொதுவா இருக்கிற பதிவர் சந்திப்பு மாதிரி இல்லீங்க இது. அதாவது ரொம்ப மொக்கை கம்மியா இருந்தது. பல விஷயங்களை ஆராய ஆட்களும் இருந்தாங்க. மூத்தப் பதிவர்கள்தான் ஆராய்வாங்களோ?. இதுல நான் மூத்தப் பதிவர் இல்லே முத்தப் பதிவர்தான் அடம்புடிச்சாரு கேஆர்எஸ். தொலஞ்சு போவட்டும்.
 • குழுப்பதிவுகள் வெற்றியடையாம போனதுக்கான காரணம் (Stop - இங்கே செவுப்புச்சட்டை மக்கள் நல்லா கவனிங்க), முதலாளித்துவம் இல்லாதததுதான் சொல்லிட்டாங்க.அதாவது ownership,. அதாவது ஒரு காரணத்துக்காக ஆரம்பிச்சு வேகமா மக்கள் ஒன்னு சேர்ந்து, பிறகு அவுங்க அவுங்க பதிவுலயே எழுதிக்கலாம்னு போயிடறதாலயும், தன்னோட பதிவுக்கு lime light தேவைங்கிறதுக்கும், admins எல்லாம் சீக்கிரமே ஆர்வம் இழந்திடறதும் காரணம். உண்மைதாங்க 2006ல எத்தனை குழுப்பதிவுகள் ஆரம்பிச்சாங்க. அதுல எத்தனை இப்போ செயல்ல இருக்கு?
 • சேவைகள் பதிவுகள் மூலமா செய்யலாமேன்னு மொக்கைச்சாமி கேட்க, ஒரு குழுவா இருந்து செய்ய பதிவுகள் தேவை இல்லை, குழுதான் தேவை. அதுக்கு மக்களே போதும்னு சொல்ல எல்லாரும் கப்சிப். அதுவுமில்லாம எதிர்வினைகள்தாங்க பதிவுகள்ல நல்ல விஷயம் செய்ய விடாம தடுக்குதுன்னும் காரணம் சொன்னாங்க. (பேரை மாத்துங்க மொக்கைச்சாமி ஐயா, பழைய போலி பேருதான் மொக்கைச்சாமி. உங்கப் பேரைக் கேட்டாவே ச்சும்மா உதறுதுல்ல)
 • செந்தழல், லக்கி entry க்கு அப்புறம்தான் நேரடித்தாக்குதல் அதிகமாச்சுன்னு சொல்ல அறையில் ஒரே நிசப்தம். இன்னும் காண்டு கஜேந்திரன் வந்திட்டுதான் இருக்குன்னு மனசுல நெனச்சுக்கிட்டு நானும் மண்டையா ஆட்டிக்கிட்டேன். ஆனா லக்கியோட பார்வையும் Graphம் இதை கண்டிப்பா மாத்திப்போட்டுரும். ஆனா இன்னிக்கு ரவியும், லக்கியும் வேற பாதையில ஜரூர போய்ட்டு இருக்காங்க, மத்தவங்க? ரவி கிட்டேயாவது தாக்குறதுக்கு சமமமா ஹாஸ்யப்பதிவுகள் வந்துச்சு. ஆனா இப்போ அப்படியா இருக்கு? நேரடித்தாக்குதல் பதிவு போடுறவங்களுக்கு- மக்களை நேராப் பார்த்தா எப்படி பேசமுடியும்னு யோசனை பண்ணி பதிவு போடுங்க.
 • மொக்கைக்கான காரணம், பலதும் அலசுனாங்க, காயப்போட்டாங்க. கடைசியில சுலுவா முடிச்சாரு கொத்ஸ். அதாவது செய்திய copy-paste பண்றதுதான் காரணம்னு சொன்னாரு. நானோ அதை விமர்சனம் பண்றதுதான் மொக்கைக்கு காரணம்னு சொன்னேன். செய்திய எல்லாரும் விமர்சனம் பண்ணப்போகவே மொக்கையாகிருதுங்களே. (பஞ்ச் பாலா செளக்கியங்களா கொத்ஸ்). போலியப் பத்தி பல புது மக்களுக்குத் தெரியவே இல்லே. எ.கொ.இ.ச. மொக்கைக்கு கொத்ஸ் சொன்ன உதாரணம், பதிவ படிச்சதும் பதிவு போட்டவனோட செவுனிய காட்டி அப்பலாம்னு தோணிச்சுதுன்னா அது மொக்கைப் பதிவு. அதுக்கு கணேசின் பெருத்த ஆதரவு வேற. மொக்க பதிவுக்கு மட்டுமா அப்பலாம்னு தோணுது?
 • ’பதிவை எழுதினதுக்கு உடனே வெளியிட்டா அதனோட தரம் இல்லே, ரெண்டு மூணு நாள் கழிச்சு நீங்களே ஒரு முறை நிதானமா படிச்சு, திருத்தி வெளியிடுங்க, அப்போ அந்தப் பதிவு கண்டிப்பா நல்லா வரும்’னு சொன்னாரு ஜெய். இப்படி பண்ணினா, நானெல்லாம் பதிவே போடமுடியாது. ஆனாலும் நல்ல யோசனைதான். இந்தப் பதிவும் அந்த முறையிலே போட்டு இருக்கேன், வித்தியாசம் தெரியுது.இனிமேலும் பின்பற்ற போறேன்.
 • மருதநாயகத்த காய்ச்ச பல வருசம் காத்திருந்தது, அன்னிக்குத்தான் நிறைவேறுச்சு. பல சமயம் அவரோட பதிவுகளை வாரினேன். நல்ல பதிவுகள் போட்டா படிக்க மாட்டேங்குறாங்க, அதனாலயே மொக்கை பதிவுகள் போடுறேன்'னு வாக்குமூலம் வேற குடுத்தாரு.
 • ச்சின்னப்பையன் பேர்க்காரணமே கலாய்ச்ச மாதிரி ஆகிருச்சு. 'இச்'சின்னப்பையனா எல்லார் கண்ணுக்கும் தெரிஞ்சாரு. மனுசன் பதிவுலதான் அடிச்சு ஆடுறாரு, நேருல.. சத்தமே இல்லே. (இனிப்பு நல்லா இருந்துச்சுங்க Mrs. இச்சின்னப்பையன்)
 • தன்னோட பதிவுகள விமர்சனம் பண்ணுங்கன்னு மோகன் அடம் பிடிக்க, பொதுவுல நிறை/குறை சொன்னா அவரோட எழுத்தோட வீரியத்தையும், வேகத்தையும் குறைக்கும்னு மனசுல நினைச்சுகிட்டு, அவரோட பதிவுகளைப் படிச்சதே இல்லைன்னு 'டகால்டியா' உண்மையச் சொன்னேன். இனிமே இப்படி பொதுவுல கேக்காதீங்க. தவறுகளை மட்டுமே பார்க்கும் சமூகம் இது. கசக்கும் உமிழ்நீர் சுரப்பதில் தவறில்லை, ஆனா அது மருந்தாகவும் இருக்கலாம்.
 • நசரேயன், சத்தமே இல்லாம சிரிச்சுகிட்டே போனாரு, ஒன்னும் விசேசம் இல்லே.
 • ஜெய்-யார்யா இது? ராயர் கிளப்ல இருந்து இன்னி வரைக்கும் இருக்கிற மேட்டரை உள்ளங்கையில் வெச்சுகிட்டு இருக்காரு. எழுதறது இல்லே, படிக்கிறதோட சரின்னாரு.. இவர்தான் அன்னிக்கு ஆட்ட நாயகன். ஏகப்பட்ட சிக்ஸர் அடிச்சாரு(இட்லி வடையா இருப்பாரோ?)
 • ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார்-நன்றி நசரேயன். இவரோட உற்சாகத்துக்கு, பலே பேஷ் நன்றி (இப்படித்தான் பேசனும்னு கொத்ஸ் முன்னாடியே சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாருங்கிறது நுண்ணரசியல்)
 • எல்லா இடத்துலேயும் சந்திப்பு முடிஞ்சு வெளியே வந்து ஒரு சந்திப்பு நடக்கும். அதாவது தம்மரே தம், இங்கே தம்தான் இல்லே. கூட்டமா இருந்ததைப் பார்த்து ஒரு மாமா காருல வந்துட்டு, நோட்டம் விட்டாரு பின்னாடி தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சும்மாவே திரும்பிப் போனாரு.

ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான படம் சொல்ற டைரக்டருங்க மாதிரி நானும் சொல்லிக்கிறேன், இதுவும் ஒரு வித்தியாசமான சந்திப்புதான்.

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்