குருவிகள்: 6 வார்த்தைகளில் கதை/கவிதை

முன்னாள் பதிவர்கள்(ஆமாங்க ட்விட்டர்ல இருக்கிற எல்லா மக்களும் பதிவுகளுக்கு டாடா சொல்லிடறாங்க. ஆனா எல்லாப் பதிவுகளையும் படிப்பாங்க.முக்கியமான விசயம், மூத்தப்பதிவர்களுக்கே உரித்தான ஸ்டைல்ல பின்னூட்டம் போட மாட்டாங்க. என்ன ட்விட்டர்? ஊர்ல திண்ணை இருக்கும் பார்த்திருக்கீங்களா?. எல்லா ஊர்ப்பெருசுகளும் வேலை வெட்டி இல்லாம வெத்தலை பாக்கு போட்டுகிட்டு ஊரைப் பத்தி பொரனி(எந்த ன?) பேசுவாங்களே அந்த மாதிரி ஒரு திண்ணைதான் இந்த ட்விட்டர்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி லிங்கன் ஒரு மேட்டரைச் சொன்னாரு. அதாவது 6 வார்த்தைகளில் கதை எழுதனும். அது கவிதை/ஹைக்கூவா மாறிடுச்சுங்க. சுவாரஸியமா போகுது ட்விட்டர் இப்போ. வெட்டியா பொழுதப் போக்கினாலும்..6 வார்த்தை கவிதைகள்ல கலக்கிட்டாங்க. இப்ப், பதிவுகளை விட ட்விட்டர் செம ஜோராப்போவுதுங்க. 6 வரிகள்ல கவிதை எழுதலாம் 6 வார்த்தைகள்ல?

6 வார்த்தைல கவிதை/கதை/ஹைக்கூ

இளா: தெருவில் பிச்சைக்காரன், ஒரு ரூபாய் கூடவா இல்லை?

ajinomotto : பேரன் பேத்தி கண்ட உனக்கு சின்ன வயசு ஜோடியை மனசு தேடினால் நீ சூப்பர் ஸ்டார்...

gchandra : நீ இப்போ என்ன செய்யறே?, டிவிட்டரில் நான்.

ajinomotto : சினிமா வாய்ப்பு.சோப்பு.உழைப்பு.3 ஹிட்டு.பஞ்சு டயலாக்கு.நாளைய தமிழக முதல்வர்

பெனாத்தலார் : கடன்காரன் தொல்லை; கவலை இல்லை! மந்திரி பிள்ளை!

பெனாத்தலார் : தலால்தெருவின் பிச்சைக்காரன் காரை வெறிக்கிறான். நாளைக்கு நீ

இலவசக் கொத்தனர் : இணையம் இல்லை. விண்டோஸ் திறந்தேன். உலகம் அழகு!

பெனாத்தலார் : அவனைக் காப்பியடித்து கதை படைத்தேனாம். அவனுமா படித்தான் ஆங்கிலம்?...

இளா : பதவியேற்றபின் நடிக்க வேண்டியிருக்கு, நடிகனாவே இருந்திருக்கலாமே!...

பெனாத்தலார் : அட்டுபிகர். அழகாய்த் தெரிந்தாள். ரெண்டுநாள் ரயிலில் இலுப்பைப்பூ!...

இளா : இருட்டு, தெரியவில்லை அடுத்த வீட்டு ஃபிகர்.

இலவசக் கொத்தனர் : பாழாப்போன பத்மஸ்ரீ. பாவம் விவேக். சிரிக்கிறாரு வடிவேலு!...

இளா : தமிழில் கவிதை எழுதப் பழகனும், வரி இல்லாவிடினும்.

இலவசக் கொத்தனர் : தொலைபேசி, செல்பேசி, இணையம் இருந்தாலும் கம்யூனிகேஷன் கேப்!...


இலவசக் கொத்தனர் : பையனோடு நட்சத்திரம் பார்த்து நாளானது. நன்றி ஆற்காட்டார்!..

இளா : இப்போது டிவிட்டரிலும் குட்டிக் கதைகள்!


gchandra : யாருக்கும் வேலை இல்லை, டிவிட்டரில் குட்டி கதைகள்

இளா : பினாத்தல் இலவசம்- டிவிட்டரில்

பெனாத்தலார் : கும்மிருட்டு, புதிதாய்த் தெரியுது பக்கத்துவீடு. தாங்க்ஸ் ஆற்காட்டார்!..


இளா : மின்சாரம் இல்லா உலகம், பளிச்சென்று உறவுகள்

gchandra : குருவி பறந்துபோச்சு. வில்லு உடைஞ்சுபோச்சு. வேட்டைக்காரன் ஐயோ பாவம் !!...

இலவசக் கொத்தனர் : ஆறு வார்த்தைக் கதையா? காதலியின் கண்ணுக்குள் பாரு!

Comments

 1. பதினாறில் சாவு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

  (5 வார்த்தைகளில் கதை )

  ReplyDelete
 2. ஐயா, சீக்கிரமே ட்விட்டர் பக்கம் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 3. நம்முடைய காலத்தால் அழியாத காதல் கதை மிஸ்ஸிங்

  “ஏய் சீ போ.. சரி வா தா”

  ReplyDelete
 4. “ஏய் சீ போ../

  இது சரியா இருக்கு
  // சரி வா தா”//
  செட் ஆவலையே. செகண்ட் ஆஃப் சரியா இல்லாத படம் மாதிரி சொதப்பல்

  ReplyDelete
 5. இவங்க பொழப்பு எப்படியும் ஒடிக்கிட்டு தான் இருக்குடோய்!

  ReplyDelete

Post a Comment

Popular Posts