Thursday, April 23, 2009

அமெரிக்கா-1

அமெரிக்கா, பலருக்கு கனவு, சிலருக்கு வெறி. கொல்டி மக்களுக்கோ வாழ்க்கை. இங்கே வந்து 2 வருசம் தான் ஆவுதுங்க.. இந்த ரெண்டும் வருசத்துல என்னத்த தெரிஞ்சிக்கிட்டேனோ அதச் சொல்றேங்க. ஊடால ஊடால நம்ம நாட்டையும் ஒப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கலாங்க. என்னத்த சொல்ல. மொதல்ல இந்த நாட்டுக்கு வந்தவுடனே எதையுமே வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும், இந்த ஊர்ல 2 டாலர்னா நம்ம ஊர்ல 100 ரூபாய், இது நூறு ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு தோணும். ஆனாலும் வாங்காம இருக்க முடியாதுங்களே. இப்படி பணத்தை இந்திய ரூபாய்க்கு கணக்குப் போடறது ஒன்னு இல்லைன்னு ரெண்டு வருசம் இருக்கும். அப்புறம் மாறிபோயிரும்.

பழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே
மாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.

அட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.

இப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.

சரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.

கொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா?”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க? இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா?

Wednesday, April 1, 2009

ஒரு வெளம்பரந்தான்

விளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா? போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.


இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?

நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்