ஒரு வெளம்பரந்தான்

விளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா? போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.


இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?

நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.

Comments

 1. Not sure though. can you tell me on what basis?

  ReplyDelete
 2. Bank of India விளம்பரம் (உண்டி தூக்கி செல்லும் சிறுவன்) வாசனையும் அடிக்குது. நீங்க சொன்ன ஏசி விளம்பரமும் தெரியுது!

  ReplyDelete
 3. //இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?
  //

  நாங்க செய்யாத வரை காப்பின்னு சொல்லுவோம்! :)

  ReplyDelete
 4. இளா,
  இந்த அளவுக்கா அமெரிக்கா காரனுக்கு கிரியேட்டிவிட்டி குறைஞ்சுப் போச்சு? நம்ம வோல்டாஸ் கம்பெனி விளம்பரத்தைப் பாத்துட்டு GE கம்பெனிக்கே விளம்பரம் போடுறாங்கன்னா அது பெரிய்ய்ய விஷயம் தான்..

  இந்தியா .. எங்கியோ... போயிட்டிருக்கு...!!

  சீமாச்சு

  ReplyDelete
 5. \\இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?\\

  இதெல்லாம் சொல்ல தெரியல அண்ணாச்சி....நமக்கும் உங்களை போல விளம்பரங்களை விரும்பி பார்க்கும் குணம்..அதனால பதிவுக்கு ஒரு நன்றி ;)

  ReplyDelete
 6. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல.
  ///////

  ஆமா அம்மா 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்தது எல்லாம் இப்போ இருக்காதுல்ல

  ReplyDelete
 7. நான் இந்த ரெண்டுமே பார்த்து ரசிச்சுருக்கேன்

  இன்னொருக்க பார்க்குறதுக்கு நல்ல தான் இருக்கு

  ReplyDelete
 8. இலவசக்கொத்தனார் said...
  //இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?
  //////////////


  Copy?

  ReplyDelete
 9. முதல் விளம்பரம் இப்போதைக்கு இல்லை என்று வருகிறது.இரண்டாவது விளம்பரம் அருமையாக இருக்கு.

  ReplyDelete
 10. நம்மூர்ப் பழமைக பேசுனதை வெச்சு சொல்றாரு போல இருக்குங்க.

  அந்த ரெண்டாவது நல்லா இருக்குங்.

  ReplyDelete
 11. ரெண்டுமே அருமை...

  அந்த ரெண்டாவது விளம்பரத்துல அந்த சின்ன பொண்ணு ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன்.... சிம்ப்ளி சூப்பர்ப் :-)

  கொத்ஸ்,
  கலக்கல் :-)

  ReplyDelete
 12. http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

  ReplyDelete
 13. அந்தக் காலத்தில் கண்ணந்தேவன் டீ விள்மபரம் வருமே............

  ReplyDelete

Post a Comment

Popular Posts