vettaikaran song டேய் சொன்னா கோவம் வருதா.. அப்போ டோய் சொல்லுவேன்

சினிமாவுல பழிவாங்குறதுன்னு ஒன்னு இருக்குங்க. எம்ஜிஆருக்கு சி.எல்.ஆனந்தன் வந்தவுடனே பயம் வந்துச்சு. காரணம் அவரைப் போலவே செவப்பாவும், கவர்ச்சியாவும் ஆனந்தனும் இருந்தது. வந்ததும் ஒரு வேகத்துல பொசுக்குன்னு எம்ஜிஆர் எடத்தைப் புடிச்சிருவேன்னு சொல்லிப்புட்டாருங்க. விட்டாரா புரட்சித்தலைவரு? கூப்பிட்டாரு எல்லாத்தையும், ரகசியமா. ஆனந்தனை வெச்சி படம் எடுக்க கூடாதுன்னாரு. ஆனந்தன் காலி.

ரஜினிய, ஆச்சியும் மன்சூர் அலிகானும் தேர்தல் சம்யத்துல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுனாங்க. காத்திருந்தாரு ரஜினி. ஆச்சிக்கு அருணாசலத்துலயும், மன்சூருக்கு படையப்பாவுலயும் வேசம் குடுத்தாரு. எப்படி? திட்டின வாயாலயே பாராட்டுற மாதிரி.சந்தோசமா?

மேட்டர் இப்போ என்னான்னா? எம்ஜிஆரு, ரஜினி வரிசையில விஜய் இருக்காரு. அவரும் ஒருதடவை "டேய்ய்ய்ய்ய்ய்"ன்னு ஒரு வேகத்துல கத்திட்டாப்ல. சரி, நாமளும் இவரு சினிமாவுல மன்னாப்பு கேட்பாருன்னு பார்த்தா.. இருங்க..இருங்க..

இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..

எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.
Comments

 1. ..விஜய் இன்னும் நடிக்குராரா....நான் கூட வரிசையா நாலு படம் கவுந்ததும் பீல்டு விட்டு போயிட்டார்நுல்ல நினச்சேன்

  ReplyDelete
 2. இரண்டாவது வீடியோவில் ஒலிக்கும் பாடல் மலேசியாவில் வெளியான ஆல்பத்தில் இடம்பெற்ற பாடலாயிற்றே. இப்பாடலைப் பாடியவர் திலீப் எனும் மலேசியர்.

  ReplyDelete
 3. //இப்பாடலைப் பாடியவர் திலீப் எனும் மலேசியர்//
  நன்றிங்க சதீசு. டக்ளஸ் பயபுள்ளை பொய் சொல்லிப்புட்டான் பாருங்க.

  ReplyDelete
 4. //..விஜய் இன்னும் நடிக்குராரா....நான் கூட வரிசையா நாலு படம் கவுந்ததும் பீல்டு விட்டு போயிட்டார்நுல்ல //

  மூனு ப்டம்தானே கவுந்துச்சு. போக்கீரி சூப்ப்ர் டூப்பர் ஹிட்..

  2000 வருஷம் தலைவருக்கு நாலு ஃப்ளாப்.. மகா ப்ளாப்.. கன்னுக்குள் நிலவி, மின்சார கண்ணா, என்ரென்றும் காதல், நெஞ்சினிலே.. அவுட்டுடா விஜய்ன்னாங்க.. குச்கி, பிரியமானவளே, பிரண்ட்ஸ் பிரிச்சு மேய்ஞ்சாரு..

  மறுபடியும் பகவதி,வசீகரா, புதிய கீதைன்னு போனவரு திருமலை, கில்லி,திருப்பாச்சின்னு ஹாட் ட்ரிக் அடிச்சாரு.. இதெல்லாம் விஜய்க்கு சாதரனங்க.. வருவாரு பாருங்க..

  இந்த படங்கள் உங்களுக்கு பிடிக்கலைன்னாலும் ஹிட்டு..

  எத்தனையோ பேரு இப்படி படம் தோற்காறங்க. மசாலா பட்ம நடிக்கறாங்க. ஆனா இவர மட்டும் ஏன் அதிகம் கிண்டல் பண்றாஙக் தெரியுமா? ஜெயிச்ச்வன என்ற பொறாமைல..

  இப்படித்தான் வில்லு பாட்டும் வெளியிட்டாங்க. கடைசில அது ஒன்னு கூட அந்த அப்ட பாடல் கிடையாது.. அப்படியே லீக் ஆனாலும் பாட்ட மாத்திடுவாங்க..

  ReplyDelete
 5. நம்மள காப்பாத்த யாருமே இல்லையா?

  ReplyDelete
 6. இந்தப் பின்னூட்டம் உங்களுக்கில்ல இளா. கார்க்கிக்கு..

  கார்க்கி..

  உன் பின்னூட்டத்துல எத்தனை எழுத்துப் பிழை பார்த்தியா.. உடனே உணர்ச்சிவசப்பட்டு அவசர அவசரமா அடிச்சது அதிலிருந்தே தெரியுது.

  ஃப்ரீயா விடு சகா! வேட்டைக்காரன் ஹரிதாஸ் சாதனையை முறியடிக்கும்!

  :-))))

  @ இளா

  அந்த இண்ட்ரோ சாங்குக்கு என்னங்க குறைச்சல்? அக்மார்க் விஜய் சாங்க்!

  ReplyDelete
 7. //அந்த இண்ட்ரோ சாங்குக்கு என்னங்க குறைச்சல்? அக்மார்க் விஜய் சாங்க்!//
  இதுல ஒன்னும் குறைச்சல் இல்லீங்க. இந்த அக்மார்க் சீயக்காய்தூளைத்தான் யாருமே புடிக்கலைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்னாத்துக்கு மறுபடியேம் அதே மாவை அரைக்கிறாங்க? நான் ஒரு லவ்டுடே மாதிரி எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 8. audio release of Vijay’s much expected Vettaikaran Songs is getting nearer

  vettaikaran songs

  ReplyDelete

Post a Comment

Popular Posts