நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு

நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு. போன வருடம் குளிர்காலத்தில் நடைபெற்ற சந்திப்பு மீண்டும் இந்த வருட வெயில் காலம் முடியறதுக்கு முன்னே முடிச்சுடலாம்னு நெனச்சோம். நாம நெனைக்கிறதெல்லாம் நடக்குதுங்களா? அதுவுமில்லாம பதிவர்களெல்லாம் ட்விட்டர்களாக மாறிப் போயிட்டாங்க. எதுவோ ஒன்னு,..

வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
எங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.

எத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே

Comments

 1. பதிவர்கள் மட்டுமா? படிக்கிறவர்களும் வரலாமா?

  ReplyDelete
 2. படிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு

  ReplyDelete
 3. நாங்க வர்றது எடிசன்ல என்ன படம் ஓடுதுங்கிறத பொறுத்து தான்

  ReplyDelete
 4. சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. // ILA said...

  படிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு//

  நான் படிச்சுட்டேன். பேர் போட்டுருக்கேன் கீழ..

  -சென்ஷி

  ReplyDelete
 6. மருது.. நினைத்தாலே இனிக்கும் இருக்கும்.. வர்றீங்களா? நல்ல படம்தான் சேட்டன் ஊர்ல, இங்கே எப்படி எடுத்திருக்காங்களோ?

  ReplyDelete
 7. ஒழுங்கா எனக்கு விசா குடுத்துருந்தானுங்கன்னா (இல்லாட்டி ஒழுங்கா நான் அப்ளை செய்து இருந்தால்) நானும் வந்துருப்பேன். பச் :(

  ReplyDelete
 8. விட்டுத்தள்ளுங்க அண்ணாச்சி, நீங்க வரும் போது பெரிசா கொண்டாடிலாம். வந்தா எங்க வீட்லதான் ஜகா.. சரீங்களா?

  ReplyDelete
 9. நான் ரெடியா இருக்கேன். டிக்கெட் ப்ளீஸ்..!

  ReplyDelete
 10. சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. டிக்கெட் எடுத்து அனுப்பினா நானும் வருவேன்!
  இல்லைனா போண்டாவ மட்டும் கூரியர்ல அனுப்புங்க!

  ReplyDelete
 12. //இனியா//
  வாங்க, வாங்க

  ReplyDelete
 13. இளா,
  டிக்கெட் எடுத்து அனுப்பு மாம்ஸ் வந்துடறேன்..

  ReplyDelete
 14. //வந்தா எங்க வீட்லதான் ஜகா..//

  வந்தா என் வீட்டில் ஜாகை எனச் சொல்லாமல் இப்படி ஜகா வாங்கும் உம் நுகபிநி!!!

  ஐயா அப்துல்லா, இவரை மட்டும் நம்பி வந்துடாதீங்க!! :)

  ReplyDelete
 15. நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. தேதி சரியில்லப்பு.

  அந்த வாரத்துலே அமெரிக்காவுக்குள்ள வந்தா ஜட்டியொட இல்ல உக்கார வெப்பான்.,

  நாட்டாமை தேதிய மாத்தி வெய்யி.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. நன்பர்களே நான் கலந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். எத்துனை மணிக்கு எவ்வளவுநேரம் நடைபெறும் என்று சொல்லுங்களேன்.
  நன்றி
  விஜயன்.
  (vijayantv@gmail.com)

  ReplyDelete
 19. மாப்பு சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடக்க வாழ்த்துக்கள்...

  அப்படியே.. நமக்கும் ஒரு டிக்கெட்டும், விசாவும் கொடுத்தால்... போண்டா இல்லாமல் சந்திப்பு நடத்துவது எப்படின்னு ஒரு செமினார் எடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். :)))

  ReplyDelete
 20. விஜயன் - எடிசன்ல எந்த இடம்னு இன்னும் முடிவாகலைங்க. கண்டிப்பா இன்னொரு பதிவு போட்டு இடத்தைச் சொல்லிடறேங்க,

  ReplyDelete
 21. Anka Irhundhu Saravana Pavan Kooda pakkam than..

  ReplyDelete
 22. நன்றி, நாங்களும் நினைச்சது ரூஸ்வெல்ட் தான். Indoor கெடைச்சா சந்தோசப்படலாம், மழை வந்துட்டா என்ன பண்றதுன்னுதன் பதிலே

  ReplyDelete
 23. சார்... நானும் வரலாமா... போன முறைகூட வந்திருந்தேன் ஞாபகமிருக்கா?

  -ஜெய்

  ReplyDelete
 24. maza vara chance kammi than, aana solla mudiyadhu..

  http://www.weather.com/weather/weekend/08837?from=36hr_topnav_undeclared

  namma irukkira edathkku maza varathu konjam kastam than... avlo nallavunka..

  ReplyDelete
 25. அன்புள்ள ஐயா வணக்கம்
  நான் வரும் 2011 சூன் 17-19 இல் பென்சில்வேனியாவில் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டுக்கு வருகின்றேன்.
  அப்படியே சில நாள் நியுயார்க், நியூசெர்சியைச் சுற்றிப் பார்க்கின்றேன். நியூசெர்சி பற்றி வலையில் வலைபோட்டதும் தங்கள் பக்கம் கிடைத்தது. நியூசெர்சியில் வலைப்பதிவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்தால் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன்.
  என் மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்
  muelangovan@gmail.com

  என் வலைப்பூ பார்க்கவும்
  http://muelangovan.blogspot.com/

  அன்புள்ள
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி,இந்தியா

  ReplyDelete

Post a Comment

Popular Posts