நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு- Update

நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு.போன பதிவுல பின்னூட்டம் போட்ட அத்தனை பேருக்கும் நன்றி. வரலாமான்னு எல்லாம் கேட்காதீங்க. உங்க காசுல பிரியாணியும், குவாட்டரும் குடுத்தாவது மக்களை கூட்டியாங்க.

முந்தின பதிவை மீள் பதிவு போட்டது சரித்திரத்துல நாமதான் மொதல்னு வரலாறு, புவியியல், எல்லாம் சொல்லட்டும்.

வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM (காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்

அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.(
இரண்டு முக்கிய அறிவிப்புகள் உண்டு)
சரி அப்புறம்:
சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்:
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.
எங்கே: எடிசன், ரூஸ்வெல்ட் கவுண்டி பூங்கா..


வருண பகவான் இன்னிக்கு கண்டிப்பா மழை வரும்னு சொல்றாருங்க. கடைசி நேரத்துல இடம் மாத்த வேண்டியதாப் போயிருச்சு. சிரமத்திற்கு மன்னிக்கவும். புது இடம்
Palace of Jaipur
2991 Hamilton Blvd
South Plainfield, NJ 07080-2517
(908) 226-9991

Comments

 1. //சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.//

  உங்க காசா சொந்தக் காசா? உங்க காசுன்னா சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து வருமில்ல! :)

  ReplyDelete
 2. நமக்குன்னு சொந்தமா எதுவுமே இல்லாத போது காசு மட்டும் எங்கேங்க இருந்து வரும். எல்லாம் அவன் பார்த்துக்குவான். இலவசம்னு பேர் வெச்சி யாராவது வருவாங்க. அவுங்க வாங்கி குடுப்பாங்க். நாங்க சாப்பிடுவோம்

  ReplyDelete
 3. பார்க்கில அனுமதி வாங்கியாச்சா? இலவசம் வந்தா சாப்பாடு இலவசம்னு சொன்னாங்களே.

  ReplyDelete
 4. இலா!

  இலவச கொத்தனார் இலவசமா வேலைதாங்க செய்வார். ஒரு வேளை நாம பில்லுக்கு பணம் குடுக்க முடியலைன்னு வையுங்க, இலவசமாவே மாவாட்டி குடுத்துடுவாருங்க! அதுல அவருக்கு நெறய்ய்ய்ய்ய்ய அனுபவம்

  ReplyDelete
 5. //பார்க்கில அனுமதி வாங்கியாச்சா?//
  இதை வேற வாங்கனுங்களா. சும்மாதானே பேசப் போறோம், இருந்தும் வாங்கனுங்களா?

  ReplyDelete
 6. புதிய செய்திகளை வாசிக்கவும் புதிய பாடல்களையும் தரவிறக்கம் செய்யவும்
  www.tamljournal.com

  ReplyDelete
 7. இளா,

  ஒரு சீட் எனக்கு.......

  ~ ஸ்ரீனிவாசன்

  ReplyDelete
 8. அப்புறம் கேக்க மறந்து போச்சு. ரூஸ்வெல்ட் பார்க்ல எங்க?

  ReplyDelete
 9. அச்சச்சோ! போண்டா போச்சே!!!

  ஆஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் சம் அதர் ப்ரோக்ராம்...

  இல்லேன் ஐயா... :-((

  ReplyDelete
 10. சாமி சோறு போடுதுன்னு சொன்னதுமே கலந்துக்க ரொம்ப் ரொம்ப ஆஜையாத்தான் இருக்கு! பட் டிஸ்டன்ஸ் தூரமாச்சே ;)

  ஸோ

  நானும் ச்சின்னபையனாட்டாம் இல்லேன் ஐயா! :))

  ReplyDelete
 11. ச்சின்னப் பையன் சார், உங்களையும் நம்பித்தானே ஆரம்பிச்சோம்.. ஜிபேசியிலும் வர்றது இல்லே. ஆணியா இல்லே மூத்தப்பதிவராகிட்டீங்களா?

  ReplyDelete
 12. //. ரூஸ்வெல்ட் பார்க்ல எங்க?// எங்கேயாவது.. சும்மா பேசிகிட்டு ஒரு குழு இருக்கும் பாருங்க. அவுங்கதான் நாம

  ReplyDelete
 13. //உங்க காசா சொந்தக் காசா?//
  சொந்தமா இலவசக்கொத்தனாரு பாசமா குடுக்குற காசுலதாங்க

  ReplyDelete
 14. //ILA said...
  ச்சின்னப் பையன் சார், உங்களையும் நம்பித்தானே ஆரம்பிச்சோம்.. ஜிபேசியிலும் வர்றது இல்லே. ஆணியா இல்லே மூத்தப்பதிவராகிட்டீங்களா?
  //

  :-)))))))

  ReplyDelete
 15. ஐயா மக்களே எல்லாரும் 10:30 மணிக்கு ஆஜராகிடுங்க

  ReplyDelete
 16. :)
  யோவ், மழைக்காச்சும் ஒதுங்குவீங்க-ன்னு பார்த்தா...இப்போ அது கூட இல்லீயா? ஸ்ட்ரேய்ட்டா போண்டா தானா? என்ன கொடுமை சரவண (பவா) :)

  ReplyDelete

Post a Comment

Popular Posts