முதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்

படம் எல்லாமே எடுத்தாச்சு. ஒரு பாட்டு மட்டும் எடுத்தா போதும் படம் முடிஞ்சிரும். கதாநாயகனுக்கோ முதுகுல பிரச்சினை. மருத்துவமனையில கதாநாயகனுக்கு சிகிச்சை. 2 வாரம் தரையில படாம தோல்வாருல கட்டி பறக்குறமாதிரி கதாநாயகனை தொங்க விட்டிருந்தாங்க. நாயகனுக்கோ உயிர் போற மாதிரி வலி. ஆயிரம் வலி இருந்தாலும் மனசுல வெச்சுகிட்டு அப்பா அம்மாகிட்ட நல்லா இருக்குன்னு சொல்லிட்டு சமாளிச்சுட்டு இருக்காரு. அம்மாவோ, வர்ற அழுகைய பல்ல கடிச்சிகிட்டு பையன் கிட்டே தைரியமா பேசிட்டு வெளியே வந்து கதறி அழுறவங்க.

ஆக தயாரிப்பாளருக்கு கையறுநிலை. தாயாரிப்பாளர் ரொம்ப நாசுக்கா, நாயகன்கிட்ட ”மீட்டர் வட்டி கிமீ ஆவுது, அதனால .. இந்தப் படம் வராட்டா தெருவுக்கு வந்துவேன்”னு சொல்லிட்டு போயிட்டாரு. மருத்துவரோ 3 மாசம் கதாநாயகனை நடமாட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. நாயகன், யோசிச்சாரு..ஒரு வாரம் கழிச்சு பாட்ட எடுக்கலாம்னு சொல்லியனுப்ப சொல்லிட்டாரு.

மருத்துவர், அம்மா, அப்பா யார் சொல்லியும் கேட்கல. பாட்டு எடுத்தாங்க. அது கதாநாயகனோட சிறந்த ஆட்டத்துல ஒன்னா அமைஞ்சது, படம் வெளியே வந்தும் சரியாப் போகலை. ஆனா மேலும் கடன் ஆகாம தப்பிச்சாரு தயாரிப்பாளர். படம் ரொம்பச்சுமாராத்தான் போச்சு. பெரிய லாபம் மட்டுமில்லே, கடனுமில்லாம தப்பிச்சுட்டாரு. கடுமையான முதுகுவலியோட ஆடுன, அந்தப்பாட்ட பார்த்து ரசிங்க.

Comments

 1. ohhh.. இங்க கார்க்கியோட :-)))) என்ன அர்த்தம் :-)

  ReplyDelete
 2. கார்க்கிகிட்ட எதாவது வேலையாக வேண்டியிருக்கா உங்களுக்கு!

  ReplyDelete
 3. சிர்ப்பான் போட்ட அத்தனை பேருக்கும் நன்றி!

  கார்க்கி என்ன விஜய் ரசிகர் மன்ற மொத்த கொள்முதல் வியாபாரியா என்ன? அவர் மட்டும்தான் விஜய் பத்தின பதிவு போடனுமா?

  ReplyDelete
 4. இந்தப் படம் அவங்களோட சொந்தத் தயாரிப்புதானே?

  அப்புறமென்ன கையறுநிலை?

  ReplyDelete
 5. இந்தப் படம் அவங்களோட சொந்தத் தயாரிப்புதானே?

  அப்புறமென்ன கையறுநிலை?

  ReplyDelete
 6. இளா
  விஜய்யின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது.
  இதே கடமை உணர்ச்சியோட அவர் கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கிட்டா நல்லா இருக்கும்...
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 7. லக்கி, லேபிலையும் கொஞ்சம் பாருங்க.:)

  ReplyDelete

Post a Comment

Popular Posts