Wednesday, September 30, 2009

முதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்

படம் எல்லாமே எடுத்தாச்சு. ஒரு பாட்டு மட்டும் எடுத்தா போதும் படம் முடிஞ்சிரும். கதாநாயகனுக்கோ முதுகுல பிரச்சினை. மருத்துவமனையில கதாநாயகனுக்கு சிகிச்சை. 2 வாரம் தரையில படாம தோல்வாருல கட்டி பறக்குறமாதிரி கதாநாயகனை தொங்க விட்டிருந்தாங்க. நாயகனுக்கோ உயிர் போற மாதிரி வலி. ஆயிரம் வலி இருந்தாலும் மனசுல வெச்சுகிட்டு அப்பா அம்மாகிட்ட நல்லா இருக்குன்னு சொல்லிட்டு சமாளிச்சுட்டு இருக்காரு. அம்மாவோ, வர்ற அழுகைய பல்ல கடிச்சிகிட்டு பையன் கிட்டே தைரியமா பேசிட்டு வெளியே வந்து கதறி அழுறவங்க.

ஆக தயாரிப்பாளருக்கு கையறுநிலை. தாயாரிப்பாளர் ரொம்ப நாசுக்கா, நாயகன்கிட்ட ”மீட்டர் வட்டி கிமீ ஆவுது, அதனால .. இந்தப் படம் வராட்டா தெருவுக்கு வந்துவேன்”னு சொல்லிட்டு போயிட்டாரு. மருத்துவரோ 3 மாசம் கதாநாயகனை நடமாட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. நாயகன், யோசிச்சாரு..ஒரு வாரம் கழிச்சு பாட்ட எடுக்கலாம்னு சொல்லியனுப்ப சொல்லிட்டாரு.

மருத்துவர், அம்மா, அப்பா யார் சொல்லியும் கேட்கல. பாட்டு எடுத்தாங்க. அது கதாநாயகனோட சிறந்த ஆட்டத்துல ஒன்னா அமைஞ்சது, படம் வெளியே வந்தும் சரியாப் போகலை. ஆனா மேலும் கடன் ஆகாம தப்பிச்சாரு தயாரிப்பாளர். படம் ரொம்பச்சுமாராத்தான் போச்சு. பெரிய லாபம் மட்டுமில்லே, கடனுமில்லாம தப்பிச்சுட்டாரு. கடுமையான முதுகுவலியோட ஆடுன, அந்தப்பாட்ட பார்த்து ரசிங்க.

Wednesday, September 23, 2009

Vettaikaran Songs Review

வெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே இருக்கு, அதுலயும் கேட்கற மாதிரியே இல்லே. விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கரும்புள்ளி. நினைத்தாலே இனிக்கும் அப்புறம் இப்படியா ஒரு ஆல்பம்.. .. அடப்போங்கய்யா..

குத்துப்பாடல்களை மட்டும்

1) நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட

பாடியவர்: சங்கர் மகாதேவன்

ஏத்த இறக்கத்தோட பாடி இருக்காரு, பாவம். இது ஒரு குத்துப்பாடல்-தத்துவப்பாடல்

’ஆலமரத்து பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ ’வீண்பேச்சு பேசாதே’ கனவு ஜெயிக்க வேணுமின்னா கண்ண மூடி தூங்காதே’

ஒன்னும் விசேசமில்லே.- கடுப்பு எண்-1

2) கரிகாலன் காலப் போல

பாடியவர்கள்:சுசித்ரா, சங்கீத், ராஜேஸ்வரன்

குத்துப்பாடல்- ஒன்னும் விசேசமில்ல-கடுப்பு எண்-2.

3) ஒரு சின்ன தாமரை

பாடியவர்கள்: கிருஷ், சுசித்ரா.

மனசுக்கு இதம், பாடல் வரிகள் செம விளையாட்டு. இதமான ஒரு பாடல்னு சொல்ல முடியாது. ஆனா ஒரே நல்ல பாட்டு.

4) என் உச்சி மண்டை சுர்ருங்குது

பாடியவர்கள்: கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர்.

பாறை படத்துல கூட இப்படு ஒரு பாட்டு இருக்குன்னு ஞாபகம்-குத்துப்பாடல்-கடுப்பு எண்-3

5)புலி உறுமுது

பாடியவர்: அனந்து, மகேஷ் விநாயக்ராம்.

ஓப்பனிங் பாட்டு, திருப்பாச்சியில வர்ற மாதிரி ஒரு உறுமி சத்தம்-கடுப்பு எண்-4

4 பாட்டில கண்டிப்பா ஒரு ஆங்கில பிட்டு- ஹிப் ஹாப் உண்டு.. கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.
Monday, September 21, 2009

உ.போ.ஒருவன் கமல் முஸ்லிமா?

இந்துத்துவா, பூஷ்வா, கோவா, ரவான்னு நிறைய கேள்வி கேட்டுட்டாங்க. என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு **** பதில் கடைசி வரியில்..

அப்புறம் கமலுக்கு இந்துத்துவான்னு பேரு வெச்சிருக்காங்க. பிராமிணனா பொறந்ததால தமிழ்நாட்டுல குத்து குத்துனு குத்துவாங்க. முஸ்லிமா மாறினதால அமெரிக்காவுல குத்துறாங்க. பாவம்யா.. அதுக்காக விட்டுரலாமா?

இதோ கமல் எத்தனை எத்தனை **துவாக்களுக்கு ஆதரவுன்னு சொல்ல இன்னும் பல புள்ளி விவரம்.

ஆரிய அடிவருடியாக கமல்:
நடாஷா என்ற ஆரிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடனை நடிக்க வைத்திருப்பதால்.

முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிரியாக:
ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வதும், முஸ்லிமான கமல், நோன்பு சமயத்தில் சாப்பிடுவதும், காப்பி குடிப்பதும்.

 • கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசருக்கு இந்தப்படத்தில் வாய்ப்பளிக்காதது.
 • முஸ்லிமான மம்மூட்டியை நடிக்க அழைக்காமல் சேட்டன் மோகன்லாலை நடிக்க வைத்திருப்பது.
 • பெரியாரின் சீடரான கமல் கருப்பு வண்ணமில்லாம உடைய அணிந்து பெரியாரின் கொள்கைகளை கேள்விக்குறியாக்கிருக்கிறார்.

அன்னிய மோகம் கொண்ட கமல்:
தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? அதுவுமில்லாமல் அன்னிய மோகத்தால் சாண்ட்விட்ச் சாப்பிடுவது. ஜீன்ஸ் போட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆதரவாக இருப்பதும், இந்திய கலாச்சாரத்தினை காலால் போட்டு மிதித்திருப்பதும்.

BJPக்கு ஆதரவாளர்:
காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. பிளவு பட்டிருக்கும் கட்சிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இந்துக்களின் அடக்குமுறைக்கு கொட்டை தாங்கி இருப்பது:

மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அதிகாரிகள் அனைவரும் அடங்கி இருப்பது. அதே போல் வெடிகுண்டு வைத்திருக்கும் பையில் மட்டும் வெங்கடா ஜலபதி படம் போட்டிருப்பது.


இந்திய இறையாண்மைக்கு எதிராக கமல்:
1. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland'னு இருக்கு... அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா?
2. இந்தியாவில் தயாராகும் Nokiaவை உபயோகிக்காமல், Samsung கைபேசிகளை மட்டுமே உபயோகப் படுத்துவதால் கிழக்கு நாடுகளின் அடிவருடியாக தன்னை காட்டி இருக்கிறார்.

அசைவர்களுக்கு எதிரானவர் கமல்:
மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை... பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா?
அதே போல் அவர் ஏன் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ வாங்கவில்லை.

 • போஸ்டரில் சிகப்பு வண்ணத்தில் ஒரு வட்டம் போட்டு அதற்குள் தான் இருப்பதை காட்டி கம்யூனிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.
 • எடுத்த துப்பாக்கியை சுடாமல் வைக்கும் கமல் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளகூட தைரியமில்லாமல். வருஙகால சந்ததியினருக்கு வீரத்தை அடியோடு கிள்ளிப்போட்டிருக்கிறார்.
 • தக்காளி மட்டுமே வாங்குமாறு காட்டி, பூசணிக்காய் பயிரிடும் விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்.
 • பிளாஸ்கில் காப்பி குடித்து Canned foodகளுக்கு ஆதரவாய் இருப்பது, Reliance Fresh எதிராய் கொடி பிடித்திருப்பதும், அதே சமயம் reliance சிம் உபயோகப்படுத்தி airtel, hutchநிறுவனத்தை மான பங்கம் படுத்தியுள்ளார்
 • படிக்கவே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இருக்க லேப்டாப்பை தீயிட்டு கொளுத்தி அடித்தள மக்களின் வயித்தெரிச்சலைக் கிளப்பி, கமல் மேல் தட்டு மக்களின் பிரதிநிதியாக வலுப்பெற்றிருக்கிறார்.
 • கண்ணாடி அணிந்து வந்து கண்ணாடி அணியாதவர்கள் எல்லாம் பாம் வைக்காதவர்கள் என்று சொல்லி கண்ணாடி அணியாதவர்களை கோபமுறச்செய்துள்ளார்.
 • பிளாஸ்டி பை கொண்டு வந்து Anti-plastic சங்கத்தினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.
 • நடந்தே வந்து போய், மாருதி நிறுவனத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்.
 • லட்சியங்களுக்கு உயிரை எடுக்கவும் கொடுக்கவும் முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என முஸ்லிம் மதத்தினரை சொல்லும் கமல், காசுக்காக இந்துக்கள் எந்தவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என சந்தானபாரதி பாத்திரத்தில் காட்டியிருப்பது.
 • தானும் பாடி, தன் ஒரு பெண்ணை இசையமைக்கச் சொல்லி, இன்னொரு பெண்ணையும் பாட வைத்து, கெளதம்யியை பேச/பாட வைத்து ஒரு குடும்பத்தில் அனைவரும் இந்தப்படத்தில் பங்கேற்க வைத்து, கலைஞருக்கு ஜால்ரா தட்டி தான் ஒரு தி.மு.க என காட்டியிருப்பது..
 • போகா சேனல் காட்டாமல் வேறு ஏதோ ஒரு சேனலுக்கு போன் செய்து குழந்தைகளுக்கு எதிராக செய்திருப்பது..

இந்துத்துவா, பூஷ்வா, கோவா, ரவான்னு நிறைய கேள்வி கேட்டுட்டாங்க. என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம். முதல் முறை அவர் மனைவியிடம் பேசுகையில் மனைவி சொல்வார் "இன்ஷாஹ் அல்லாஹ் சொன்னீங்களா” என்று. வேணுமின்னா இரா. முருகனை கேட்டுச் சொல்லலாமா?

நன்றி: Twitters

Updated: சின்ன அம்மணியின் பின்னூட்டத்திற்கு பின் :
//காமன்மேன் முஸ்லிமா இருக்கக்கூடாதா,தீவிரவாதியாத்தான் இருக்கணுமா//
முதலில் ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத்தெரிந்திருக்கும் உங்கள் தட்டையான எண்ணத்தை எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை என்ன சொல்வது. படத்தில் கமல் ஒரு இடத்தில் முஸ்லிமென காட்டி இருக்கிறார், ஆனால் எந்த இடத்திலும் அவர் இந்துவாக காட்டவே இல்லை. அப்புறம் எப்படிங்க நீங்க இந்துத்துவான்னு சொல்றீங்க. காரணம் உங்களுக்கு தனிமனிதனின் ஜாதிதான் தெரியும். இதுக்கு பேருதான் பகுத்தறிவா? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.

கடைசியாக விவசாயி டச், பொண்டாட்டி கையால் புருசன்மார்கள் அடிவாங்குவது சகஜம். அதைப் புகாராய் கொடுத்தால் எந்தக் காவலரும் மதிப்பதில்லை. இப்படி கல்யாணமான ஆண் சமுதாயத்தின் மானத்தை பொதுவில் வைத்து கப்பலேத்தி, திருமணமான ஆண்களின் ரகசியத்தை உடைத்ததை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன். இது ஆண்சமுதாயத்துக்கு கமல் செய்த துரோகம்.

Friday, September 18, 2009

Unnai Pol Oruvan Review

ஒரு பெரிய படம் குடுத்தா அடுத்ததா ஒரு நகைச்சுவைப்படம் தருவது கமலின் வாடிக்கை. இந்த முறை வித்தியாசம். தசாவதாரத்திற்குப் பின் மீண்டும் ஒரு பெரிய படம். ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதைய தன் பக்கத்துக்கு இழுத்து வந்திருக்கிறார் கமல். படத்தில் மொத்தமே 5 கதாப்பாத்திரங்கள். காவல்துறை என்கவுண்டர் காலத்தில் வந்திருக்கும் ஒரு தீவிரவாத என்கவுண்டர்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் முறியடிக்கப்படவேண்டும் என்பதைச் சொல்லும் படம். தீர்ப்புகளும் நொடிப்பொழுதில் கிடைக்க வேண்டுமென நினைக்கும் ஒரு சாதாரண பிரஜை ஆசையின் பிரதி.

கதை, Speed 1 கதைதான். காலை 9 மணி ஆரம்பித்து மாலை 6.10 முடியும் படம். நாட்டில் நடந்த பெரிய வன்முறைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளுக்காக, நகரத்தில் பல குண்டு வைத்து மிரட்டி நால்வரையும் மீட்கும் கதைதான். உச்சமே அந்த நாலவரின் கதி என்னவாகிறது என்பது. ஒரு வரி கதை. கமல், 5 நாட்களில் நடித்து முடித்ததாக சொல்லப்படுகிறது, இருக்கலாம். கமல், மோகன்லால், இரு அசத்தும் காவல்துறையினர், லஷ்மி, ஒரு நிருபர் பல கணினிகள்/கைபேசிகள்.படமே ஒரு தெரு, ஒரு அறை, ஒரு மொட்டை மாடி என முடிந்துவிடுகிறது.

கமலுக்கு ஏற்ற வேடம், நம்மவரில் பார்ததது போலவே. சண்டை இல்லை, குத்து வசனம், பாடல்கள் இல்லை. ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடித்துக்கொண்டு கைபேசியில் பேசும் வேடம். சின்ன கதாபாத்திரம். மோகன்லாலுக்கு கைபேசியில் பேசுவது மட்டுமே வேடம். மோகலால குடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். உங்களுக்கு இராணுவ பதவி தப்பே இல்லை. இறுதிவரை அசத்துவது இரண்டு காவல்துறை அதிகாரிகள். கமலுக்கு மட்டும் எங்கே இருந்து இப்படி கிடைக்கிறார்களோ? தமிழுக்கு இரண்டு கதாநாயகர்கள் தயார்.

படத்தில் லஷ்மிக்கு அடுத்தப்படியாக ஒரு நிருபர், படத்தில் ஒருவர் மட்டுமே புகைப்பிடிக்கிறார். அதுவும் இந்தப் பெண் நிருபரே. Basis Instict ல் பார்த்த அதே ‘தம்’ சீன். சந்தான பாரதிக்கு அதே மை.ம.காம.ராஜன்’ல இருந்தே வேடம். ”மைக்கேலு, போலிஸுல சரண்டர் ஆகிரலாம்பா” .. அதே டெம்போ. ஒன்னும் வித்தியாசம் இல்லை.

மற்ற படங்களின் டைட்டில் போட்டு முடிக்கும் வேகத்தில் முடிந்துவிடுகிறது முதல் பாதி. என்ன வேகம்? என்ன வேகம். வெகுநாட்களுக்குப்பிறகு தமிழில் இப்படி ஒரு திரைக்கதை. அசத்தல் வேகம். ஆரிஃப் கானாக வரும் காவலரின் ஒரு விசாரணை, அடிக்காமல், வசனம் அதிகம் பேசாமல், தன் கம்பீரத்தைக் காட்டியே உண்மை வாங்கும் பாங்கு அருமையோ அருமை. வசனகர்த்தாவுக்கு இந்த இடத்தில் ஷொட்டு. வசனகர்த்தா பொட்டி தட்டுறவர், இரா.முருகன். தேவையான இடத்திற்கு தேவையான வசனம்.”எனக்கும் இடது, வலது இரு கையில் எழுதும் பழக்கம் உண்டு. இடதும் பிடிக்கும், வலதும் பிடிக்கும். இது எழுதுவதில் மட்டும்தான்” ”a stupid common man from republic" இப்படி பல இடங்களில் மிளிர்கிறார் இராமுருகன். பளிச். இயக்குனரும் பொட்டிதட்டுறவர் போல. அதென்னமோ மென்பொருள்ல இருக்கிறவங்கன்னா கண்ணாடி போட்டுத்தான் ஆவனுமா?

ஒரு தலைமை செயலர் எப்படி இருப்பார் என்பதற்கு லஷ்மி கதாப்பாத்திரம் ஒரு சான்று, முதல்வராக கலைஞர் குரல்(போல்). த. செயலர்னா இப்படித்தான் பொறுப்பு இருந்தும் எடுத்துக்கொள்ள முடியாத நிலைமை. எடுத்துக்காட்டிய விதம் அருமை. படித்த ஜாலராக்கள்.

இசை, ஆரம்பம் மும்பை படத்தில் ARR செய்த வேலை, கடைசிவரை இசை இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு நேர்த்தியான இசை. தந்தைக்கு தப்பாமல் பிறந்திருக்கு பெண். படத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவு, அசத்தல், அருமை, பலே, பேஷ். அட்டகாசம்.. இன்னபிற.. எடிட்டிங்- என்ன சொல்ல.. படத்தில் சொல்லாமல் சொல்லும் விசயங்கள பல, பாமரனுக்குப் புரியுமா எனபதுதான் கேள்வியே. உதாரணம் கமல் வைத்திருக்கும் துப்பாக்கி, எந்தவிதமான வசனமும் இல்லாமல்,தான் சாகத்தயார் என்பதைச் சொல்லுவது, கடைசியில் அதே துப்பாக்கி்யை உறையில் வைப்பதும்- இப்படி பல விசயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவில்லை. அதாவது இறுதியில் குறைந்திருக்கிறது. தெரிந்த அதே கோத்ரா, best backery, குஜராத் உள்விவகாரம், இப்படி தெரிந்த விசயங்களை நியாயப்படுத்துவது, கமலை காப்பாற்றும் “எங்கேயோ போயிட்டிங்க” சிவாஜியும், Ethical Hackreஆக வரும் ஆனந்த் (சதிலீலாவதியில் கமலுக்கு மகனாக நடித்த சிறுவன், இப்போ வாலிபர் )கதாபாத்திரம்அடிக்கும் பல்டியும் படத்தின் சறுக்கல். ஒரு சோப்ளாங்கி இளைஞன் பெரிய Hackerஆக காட்டுவது தமிழுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். The Core, Fast And furious படங்களில் பார்தததுதானே. கதாபாத்திரத்தில் இந்த வேடம் மட்டுமே நெருடல். அவ்வளவுப் பெரிய கட்டிடத்திற்கு ஒரு காவலர் கூட இல்லாதததும், இரண்டு பேர் த. செயலர் முன்னாடியே அடிக்கும் பல்டி, இப்படி சில நெருடல்கள் இருந்தாலும், மற்ற காட்சிகளுக்காக மன்னிக்கலாம்.கடைசிவரை கமலின் பெயரையும்,மதத்தையும் சொல்லாமல் சொல்லியிருப்பதும் புதுமை.


ஒரு நல்ல படத்திற்கு தேவை நல்ல திரைக்கதை, அதற்கான பாத்திரங்கள். இரண்டுமே இந்தப்படத்தில் சரிவர அமைந்திருக்கிறது. நல்ல கதாப்பாத்திரங்களும், அதற்கான நடிகர்களின் தேர்வும், அசத்தலோ அசத்தல். எங்கு பார்த்தாலும் அழகு. எல்லை தாண்டாத நடிப்பு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, நறுக்வசனம், இரைச்சலில்லாத இசை இறுதி வரை ஆயிரம் குதிரை வேகத்தில் செல்லும் காட்சிகள் கொண்ட'A" Class படம் உன்னைப்போல் ஒருவன்.

Tuesday, September 15, 2009

பதிவுலகின் எமன்கள்

பதிவுலகின் எமன்கள், அதாவது ஒரு வருசம் பட்டாசு கெளப்பி பதிவெழுதுவோம். திடீர்னு ஒரு நிகழ்வு, எல்லாத்தையும் மறந்துட்டு மூத்தப்பதிவராகிடுவோம். என்ன காரணம்னு யோசிச்சதனால வந்ததுதான் இந்தப் பதிவு.

கல்யாணம்/காதல்:
பட்டைய கெளப்புன பதிவர்ங்க பல பேரு கல்யாணத்துக்கு பின்னாடி எஸ்ஸாகிருவாங்க. ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு வந்துருவாங்கன்னு நினைச்சா .. வரவே மாட்டாங்க. எப்பவாவது எங்கேயாவது ஒத்த வரியில் பின்னூட்டம் போடுவாங்க. அப்பப் படிச்சுகிட்டுதான் இருக்காங்க. அப்ப ஏன் எழுதறது இல்லே?
உதாரணம் - மங்களூர் சிவா, கவிதாயினி காயத்ரி

வேலை:
வேலை இல்லாமதான் பதிவெழுதறத ஆரம்பிப்போம், அப்புறம் அதே ஆணி அதிகாமயிருச்சுன்னா எழுத மாட்டோம். எழுத மேட்டர் இருக்கும், நேரம் கூட இருக்கும், ஆனா டச் விட்டுப்போயிருச்சுன்னு எழுத மாட்டாங்க.
உதாரணம்- ஜி.ரா.

வேற மோகம்.
கெளம்பிடாதீங்க. இது வேற மாதிரி. ட்விட்டரு, குழுமம் மாதிரிங்க. ட்விட்டருக்குள்ள போயிட்டா பதிவெல்லாம் படிப்பாங்க. ஆனா பின்னூட்டம் எல்லாம் ட்விட்டருல விழும். எதாவது எழுதனும்னு நினைச்சா கூட அங்கேயே எழுதிருவாங்க. இங்க வரவேண்டிய அவசியமே இருக்காது.
உதா: பெரிய கும்பலே இருக்கு.

இடம்மாற்றம்.
அதே வேலை, அதே கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம், அப்பா அம்மா குடும்பம்னு ஆகியிருக்கலாம், நண்பர்கள் குழு செட் ஆகியிருக்கலாம், இப்படி.
உதாரணம்: கப்பி, கைப்பு.


இடம்மாற்றம்-2
ஆகா, இதுல பார்ட்2 வான்னு கேட்டீங்க. ஆமாம் இன்னும் கூட வரலாம். வேலை மாறி போறீங்க. ஏற்கனவே இருந்த அலுவலகத்துல எல்லாத்தையும் தொறந்து விட்டுருப்பாங்க(Internet Connectionஐ சொன்னேங்க, வீண் கற்பனை வேணாம்). புது அலுவலகத்துல புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி Internetஐபொத்தி வெச்சிருப்பாங்க. நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.
உதாரணம்: இளவஞ்சி

புது உறவு
கல்யாணம் ஆனா கூட பதிவு போடுறவங்க உண்டு, குழந்தை பொறந்துட்டா பார்த்துக்க போயிருவாங்க, புதுசா வந்த நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்கன்னு எழுதாம விட்டவங்களும். அவ்ளோதான். இது திரும்ப வராத கேசுங்க.
உதாரணம்- வெட்டிப் பயல்.


Special case:
போலி,புலி,காலி,டவுசர் கழட்டப்பட்டது, துண்ட உருவுனது, மூக்கச் சிந்தினது, கொட்டாயி உட்டது, உருண்டு பொரண்டது நிறைய இருக்கு, அதாவது பதிவுலகமே காரணம். இப்போதைக்கு ஒரு கோடு போட்டு உட்டுருவோம். வேணாம்.

Writer’s Block:
முன்னாடி ஒரு எழவுமே எழுதி இருக்கமாட்டாங்க, திடீர்னு ஒரு 6 மாசம் எழுதமாட்டாங்க. காரணம் ஏன்னு கேட்டா Writer’s Blockம்பாங்க. இதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது. எத்தனை தனிமடல் வருது அதை தமிழாக்கம் பண்ணினாவே ஒரு நாளைக்கு 2 பதிவு போட்டுறலாம். இதுவும் சோம்பேறிகளின் காரணம்.

வேற எதுனாச்சும் உங்களுக்குத் தோணினாலும் பின்னூட்டத்துல போட்டுருங்க.

Tuesday, September 8, 2009

நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு- Update

நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு.போன பதிவுல பின்னூட்டம் போட்ட அத்தனை பேருக்கும் நன்றி. வரலாமான்னு எல்லாம் கேட்காதீங்க. உங்க காசுல பிரியாணியும், குவாட்டரும் குடுத்தாவது மக்களை கூட்டியாங்க.

முந்தின பதிவை மீள் பதிவு போட்டது சரித்திரத்துல நாமதான் மொதல்னு வரலாறு, புவியியல், எல்லாம் சொல்லட்டும்.

வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM (காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்

அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.(
இரண்டு முக்கிய அறிவிப்புகள் உண்டு)
சரி அப்புறம்:
சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்:
போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.
எங்கே: எடிசன், ரூஸ்வெல்ட் கவுண்டி பூங்கா..


வருண பகவான் இன்னிக்கு கண்டிப்பா மழை வரும்னு சொல்றாருங்க. கடைசி நேரத்துல இடம் மாத்த வேண்டியதாப் போயிருச்சு. சிரமத்திற்கு மன்னிக்கவும். புது இடம்
Palace of Jaipur
2991 Hamilton Blvd
South Plainfield, NJ 07080-2517
(908) 226-9991

Thursday, September 3, 2009

நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு

நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு. போன வருடம் குளிர்காலத்தில் நடைபெற்ற சந்திப்பு மீண்டும் இந்த வருட வெயில் காலம் முடியறதுக்கு முன்னே முடிச்சுடலாம்னு நெனச்சோம். நாம நெனைக்கிறதெல்லாம் நடக்குதுங்களா? அதுவுமில்லாம பதிவர்களெல்லாம் ட்விட்டர்களாக மாறிப் போயிட்டாங்க. எதுவோ ஒன்னு,..

வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
எங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.

எத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்