அலைபேசியும் முதலிரவும்


என்னுடைய அலைபேசியில்
சிணுங்குவதைப் போலிருந்தது ரிங்டோன்,
முதலிரவில் அலைபேசி சிணுங்கியபடியே இருக்க,

சிணுங்க வேண்டியவள்
வெறுத்து, அயர்ந்து தூங்கினாள்
அலைபேசியையும், அவளையும்
ஒருங்கே அணைத்தேன்
விடியும் வரை
அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்
தூங்கி வடிந்தது அலைபேசி!

-----------------------------------------------------------------------------------
”அலைபேசியும் நானும் ஒன்றா?”
எப்படி என்றாள்
இரண்டையுமே இரவில் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது
இல்லையெனில்,
அலைபேசி Battery out,
உனக்கு மூட் அவுட்.
’போடா இடியட்’ என்றாள்.------------------------------------------------------------------------
என்ன கோபமோ தெரியவில்லை,
திட்டியபடியே சாப்பாடு பரிமாறினாள்,
திட்டியபடியே தொலைகாட்சியினை அணைத்தாள்,
திட்டியபடியே படுக்கையை சரிசெய்தாள், பிறகு
என்னைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள்!
-----------------------------------------------------------------------
தினமும் திட்டிகொண்டே இருப்பவளுக்கு
'ஒரு விடுமுறை தாயேன்' என்றேன் - சண்டை
முற்றியதும் தாய் போகிறேன் என்றாள்
அவள் பேருந்தில் அமர்ந்தவுடன்,
அவளுக்கு நேரெதிர் திசையை நோக்கியபடி கீழே நான்.
குண்டுமணியாய் கண்ணீர் திரண்டிருந்தது,
திரும்ப அழைத்து வந்துவிட்டேன் வீட்டிற்கு,
தொலைக்காட்சியை உயிர்பித்தேன்,
”எந்நேரமும் அதேதான், நான் ஒருத்தி இங்கே....”
மறுபடியுமா?
--------------------------------------------------------------------------------------

முதலிரவில்,
அரசியல் தெரியுமா? எனக் கேட்டாள்
மேலவையில் ஆரம்பிப்போமா என்றேன்,
அவளுக்குத்தான்
என்னுடைய அரசியல் புரியவில்லை!

Comments

 1. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com

  ReplyDelete
 2. அவளுக்குத்தான் புரியவில்லை என் அரசியல்

  அருமை எதாற்த்தமான வார்த்தைகள்
  வாழ்க்கையை வாழ்ந்துபார்த்தாத்தான் தெரியிம் நண்பரே...........


  இங்கே செந்தில்குமார்.அ.வெ

  ReplyDelete
 3. //என்ன கோபமோ தெரியவில்லை,
  திட்டியபடியே சாப்பாடு பரிமாறினாள்,
  திட்டியபடியே தொலைகாட்சியினை அணைத்தாள்,
  திட்டியபடியே படுக்கையை சரிசெய்தாள், பிறகு
  என்னைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள்!//

  அடடா,தாம்பத்தியத்தின் அழக தெளிவா சொல்லிடீங்க.செம கவிதை.... :)

  //அவளுக்குத்தான்
  என்னுடைய அரசியல் புரியவில்லை!//

  குறும்பு நிறைந்த வரிகள்...

  ReplyDelete
 4. //என்ன கோபமோ தெரியவில்லை,
  திட்டியபடியே சாப்பாடு பரிமாறினாள்,
  திட்டியபடியே தொலைகாட்சியினை அணைத்தாள்,
  திட்டியபடியே படுக்கையை சரிசெய்தாள், பிறகு
  என்னைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள்!//

  அடடா,தாம்பத்தியத்தின் அழக தெளிவா சொல்லிடீங்க.செம கவிதை.... :)

  //அவளுக்குத்தான்
  என்னுடைய அரசியல் புரியவில்லை!//

  குறும்பு நிறைந்த வரிகள்...

  ReplyDelete
 5. தலைவன் ஐயா, உங்க கடமை உணர்ச்சிக்கு நன்றி.
  செந்தில்குமார்--> வொய் பிளட், சேம் பிளட்?

  ReplyDelete
 6. மிக அழகான ரொமான்ஸ் கவிதைகள்...

  ReplyDelete
 7. நன்றி ->பிரேமா மகள்

  ReplyDelete
 8. யோவ் விவசாயி.. ஏன்யா இப்படி எல்லாம் கவிதைய போட்டு எங்கள மாதிரி ஆட்கள எல்லாம் கடுப்பேத்துற..ஒரு 25 வயசு புள்ள இத படிக்கும் போது நான் கொஞ்சுறதுக்கும் என்னை கொஞ்சுறதுக்கும் இன்னும் ஒரு பொண்ணு வரலயேனு கவலைதான் அதிகமாகுது.. அகவாழ்க்ககையின் அழகு இந்த புதுக்கவிதையில்.

  ReplyDelete
 9. யோவ் விவசாயி.. ஏன்யா இப்படி எல்லாம் கவிதைய போட்டு எங்கள மாதிரி ஆட்கள எல்லாம் கடுப்பேத்துற..ஒரு 25 வயசு புள்ள இத படிக்கும் போது நான் கொஞ்சுறதுக்கும் என்னை கொஞ்சுறதுக்கும் இன்னும் ஒரு பொண்ணு வரலயேனு கவலைதான் அதிகமாகுது.. அகவாழ்க்ககையின் அழகு இந்த புதுக்கவிதையில்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts