மெளனமாய்.. காதல்

ஒரு இருக்கைத் தள்ளி காதலி,
இரண்டு நாளாய் ஊடல்,
இடையில் மெளனமாய்
அமர்ந்திருந்தது காதல்!


-----------------------------------------------


பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்கு
நான் வைத்தப் பெயர்
’காதலி’- இப்படி
எனக்கும் அவள் பெயர் வைத்திருப்பாளோ?

------------------------------------------------

இந்தியாவுல எல்லா நதிகளுக்கும் பெண்கள் பேருதான் வெச்சிருக்காங்க. காவேரி, கங்கா, யாமுனா.. அதனாலதான் தண்ணி வத்தி வத்தி போயிருதாம். புதரகத்துல ஆம்பிளைங்க பேரு வெச்சிருக்காங்களாம். ஹட்சன், சார்லஸ் அப்படின்னு. அதான் ஆம்பிளைங்க மாதிரியே தண்ணி லெவல் குறையாம ஓடிட்டு இருக்காம்.

00000000000000000000000000000000000000000000

தாலிகட்டும் நேரம்,
மணவறையில் மணமகளாய் என் காதலி,
கனத்த மனம் கழண்டு விழும்முன் கிளம்பினேன்,
என்னைப் பார்த்தபடி தோழியிடம்
ஏதோ கிசுகிசுத்தாள்,
கதவருகே வருகையில் தோழி ஓடி வந்து சொன்னாள்
“சாப்பிட்டுப் போகச் சொல்றா”

-------------------------------------------------


மடியை முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது கன்றுக் குட்டி
வேடிக்கை காட்டி குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டினாள் அம்மா!


000000000000000000000000000000000000000000000000

மனதில் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு ஒரு பிரபல பதிவரிடம் ”மேட்டர் தெரியுமா?” என்று ஆரம்பித்தேன். “மேட்டர் எனக்கு 15 வயசுல இருந்தே தெரியும். தெரியாமலா ரெண்டை பெத்து இருக்கோம்?” அப்படின்னு கேட்டார். கேட்க வந்த விசயம் மறந்தே போயிருச்சு.
00000000000000000000000000000000000000000000000

Comments

 1. ஆஹா... ஹட்சன் மேட்டர் சூப்பரு

  ReplyDelete
 2. கவிதை சூப்பரு...

  சரி.. கல்யாணம் முடிஞ்சு சாப்பிட்டு வந்தீங்களா இல்லையா?

  ReplyDelete
 3. கார்த்தி, எட்வின், TVR ஐயா, புலி-- நன்றி!~

  ReplyDelete
 4. ஹா..ஹா... ரசித்தேன்...

  ReplyDelete

Post a Comment

Popular Posts