இதென்ன சிபஎபா?

இதென்ன சிபஎபா?

நான் படிச்சு, ரசிச்சு, புடிச்சிருந்தா. அதாங்க சிபஎபா -சிறந்தப் பதிவு என் பார்வையில்

அதெப்படி சிறந்த? அளவுகோல் உண்டா?

அதெல்லாம் இல்லீங்க. படிச்சது புடிச்சிருந்தா போதும். அதுக்காக மத்ததெல்லாம் புடிக்காத பதிவுகள்னு எல்லாம் இல்லே. புடிச்சதுல சிறந்ததுன்னு வெச்சுக்குங்களேன்.


வாரா வாரம் வருமா?


வரலாம்,சில வாரம் வேலை அதிகமிருந்தா வராமலும் போகலாம். இப்போதைக்கு இந்த வேலையில் பதிவுலகத்துக்கு அதிகமா வேலை பாருன்னு சொல்லிட்டாங்க.


எந்தப் பதிவெல்லாம் படிச்சு தேர்ந்தெடுக்கப்படுது?

தமிழ்மணம், தமிழிஷ், சங்கமம் மற்றும் என்னோட Google Reader மூலமா வரும் பதிவுகளை மட்டுமே படிக்கிறேன். அதுல வரும் பதிவுகள் அனைத்தையும் முடியாட்டாலும், கண் பார்வைக்கு வரும் எல்லாப் பதிவுகளையும் படிச்சுதான் தேர்ந்தெடுக்கப்படுது. சொந்த அனுபவங்கள், கதை, கவிதை, தொழில்நுட்பம் ஆகிய இடுகைகளுக்கு முன்னுரிமை உண்டு.


ஏன் இந்த வேலை?


சங்கமம்’ல அழியாத கோலங்கள்னு ஒரு பிரிவு உண்டு. அங்கே இதுவரைக்கும் (2004- to till date) நல்ல பதிவுகள்னு நினைச்சு சேர்த்து வெச்சிட்டு வந்திருந்தோம். பதிவு போட வேற மேட்டர் இல்லைன்னதும் , இதையும் ஒரு பதிவாப் போடலாம்னு ஒரு எண்ணம். கணக்குக்கு கணக்கும் ஆச்சு, சேர்ப்புக்கு சேர்ப்பும் ஆச்சு.

அப்புறம்?

நீங்க URLஐ மடல் போட்டாக்கூட படிப்பேன், நல்லா இருந்தா வரும். செவ்வாய் கிழமை அன்னிக்கு வரலாம். எல்லாம் ஆணிகளைப் பொறுத்தே.

Comments

 1. //சங்கமம்’ல அழியாத கோலங்கள்னு ஒரு பிரிவு உண்டு. அங்கே இதுவரைக்கும் (2004- to till date) நல்ல பதிவுகள்னு நினைச்சு சேர்த்து வெச்சிட்டு வந்திருந்தோம்//

  இப்பவும் அந்த பக்கம் போறப்ப எல்லாம் கண்ணில் படும் பழைய பதிவுகள் நேரத்தை சுவாரஸ்யமாக்கும் :)

  முயற்சி சிறக்கட்டும் :)

  ReplyDelete
 2. //இப்போதைக்கு இந்த வேலையில் பதிவுலகத்துக்கு அதிகமா வேலை பாருன்னு சொல்லிட்டாங்க.//

  சொல்லவே இல்ல... :)

  டாப் டென் போடுவீங்களா>??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 3. மொதல்ல சிபஎபா’வுக்கு பதிலா டாப்10தான் தலைப்பா போடலாம்னு இருந்தேன். சுரேஸ் மாதிரி கால் மேல கால் போட்டுகிட்டு டாப்10 சொன்னா நல்லா இருக்காது. அதுவுமில்லாம வரிவிலக்கு வேற வேணுமில்லீங்களா? அதான் டமிலுக்கு மாத்திட்டேன்.

  ReplyDelete
 4. Ila,

  vrs vaangitingala? Youth blogger illaiya?! :)

  ReplyDelete
 5. வவ்வாலு, வேணாம். அழுதுருவேன்.

  ReplyDelete
 6. ஆஹா.. நீங்க ஜட்ஜா இப்போ?? :)

  ReplyDelete

Post a Comment

Popular Posts