சிபஎபா July 26

அப்பா நன்றாக யோசியுங்கள் by ujiladevi
என்னான்னு சொல்றதுங்க, இதுதான் நியாயம்னு மகன்கள் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு, ஒரு குடும்பத்தோட கெளரவம், எதிர்காலம் மருமகள் கையில்தானே இருக்கு. பசங்க பாவமில்லையா?


00000000000000000000


கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..! by உண்மைத் தமிழன் (15270788164745573644)

அப்பா மலைக்க வைக்குது இந்தத் தொகுப்பு, உண்மையாவே உதா அண்ணாச்சியின் ஒரு வரி கூட விடாம படிச்ச பதிவு, இதெல்லாம் தேவையான்னு கேட்க கூடாது ஆமா..

00000000000000000000


போன வாரம் ஒரே கும்மாங்குத்து வாரம். ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க. நான் அவுங்களை குத்துவேன், இவுஙகளை குத்துவேன்னு ஒரே வன்முறை. சே ஒரு விவஸ்தை இல்லாம குத்துனாங்க, குத்து வாங்கினாங்க. பரிசல்காரன், கார்க்கி எதிர்வினையாம், அதுவும் அவருக்கு கண்ணாலம் ஆவலன்னு ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது, பாவம், ”கார்க்கி அம்மாகிட்ட இந்த வருத்தத்தையும் சொல்லுங்கப்பா” ,விக்னேஷ்வரி அம்மணியும் கோதாவுல இறங்கிட்டாங்க... கேபிள், நாஞ்சில், அக்பர்
வடகரை வேலன், அபிஅப்பா.

00000000000000000000


எது தந்தாய் என் வாழ்வே by செல்வநாயகி

ஜாதி, கடல்கடந்தும் ஒரு தலைமுறை கடந்தும் மறக்க முடியாம போனதுதான், இன்னொரு காத்திருப்போம், தொலயுமா இந்தச் சனி? நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடறது மாதிரிநட்டா சாதி அழிய வழி இருக்கும் போல.

00000000000000000000


வானமே எல்லை? Starjan ( ஸ்டார்ஜன் )

விவசாயம் பட்டுப்போச்சு, மழை இல்லை, வேலை இல்லை.. என்ன பண்ண? நகரமயமாக்கல்னால என்னென்ன கொடுமையோ.. இப்படி எல்லாருமே போயிட்டா கிராமமும்?சோத்துக்கு என்ன வழி?

00000000000000000000சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை by கலையரசன்
கலையரசனின் அருமையான ஆரம்பம், வழக்கம்போல அமெரிக்க அதிகாரம்,, சிவப்பு ட்விஸ்ட்னு ஆரம்பிச்சுடாதீங்க. இப்படியே இருந்தா இது ஒரு பெரிய தொடருக்கும் வரலாற்றுப்பதிவுக்குமான விதைன்னே சொல்லலாம்.

00000000000000000000


மூளைக்கு வேலை டாப் 10+6.5 by IdlyVadai
மூளையை கழட்டுவாங்களாம், ஸ்கேன் பண்ணுவாங்களாம், என்ன முடிவுன்னு பார்ப்பாங்களாம், இந்த வாரத்து சிறந்த நகைச்சுவைப் பதிவு இதுதானுங்க.

00000000000000000000


செழியனின் விகடன் சிறுகதை by சுரேஷ் கண்ணன்

ஆனந்தவிகடனில் இந்தக் கதையப் படித்த பின் ஒரு 4 மணிநேரம் எதுவுமே செய்யவோ, பேசவோ தோணவில்லை. காரணம் இந்த மார்க் மாதிரி ஒரு 100 பேரை பார்த்திருப்பேன், அவர்களோடு வாழ்ந்திருப்பேன். அவர்களின் கஷ்டமும், அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் .. சொல்லி மாளாது. சுரேஸ்கண்ணன்- இது இரண்டாவது முறையாக நான்நினைத்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். என்னமோ இதைப் படிச்ச பின்னாடி இன்னமும் மனசு கனத்துப் போவுது.

சிபஎபா’ன்னா?
இந்த வாரம் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-

காசி- வலையுரையாடல் மறைந்த அண்ணல் சிந்தாநதி எழுதியது

Comments

 1. எனது பதிவினை தேர்வு செய்து பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் இளா..!

  ReplyDelete
 2. ஒவ்வொரு வாரமும் ரிசல்ட் பார்க்கிற மாதிரி என் பதிவும் வந்திருக்கான்னு பார்க்க வைக்கறீங்க..ஹிஹிஹி

  நன்றி சார்

  ReplyDelete
 3. அருமையான இடுகைகளை தேர்ந்து எடுத்து தொகுத்து வழங்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. எனது இடுகையையும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. மற்ர இடுகைகளின் தேர்வும் மிக அருமை இளா சார்.

  ReplyDelete
 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  எனது பதிவினை தேர்வு செய்து பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் இளா..!//
  வாங்க அண்ணாச்சி, உங்க பதிவுகள்ல மட்டும் பின்னூட்டங்க செஞ்சுரி அடிக்குதே, அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரக்கூடாதுங்களா?

  ReplyDelete
 6. ரொம்ப நன்றி இளா அண்ணே.. அருமையான இடுகைகளில் என்னுடைய இடுகையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ரொம்ப நன்றி..

  ReplyDelete
 7. எனது பதிவினை தேர்வு செய்து பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
  கடவுள் உங்களுக்கு நல்லது செய்யட்டும் மேலும் எப்படி பட்ட தகவல் தந்தால் நன்றாக இருக்கும்
  கருத்து சொல்லவும்

  http://ujiladevi.blogspot.com

  ReplyDelete
 8. கார்க்கி :
  ஒவ்வொரு வாரமும் ரிசல்ட் பார்க்கிற மாதிரி என் பதிவும் வந்திருக்கான்னு பார்க்க வைக்கறீங்க..ஹிஹிஹி//

  நான் சும்மாதான்பா வந்தேன். :-)

  ReplyDelete
 9. மிக்க நன்றி இளா!எனது அந்த பதிவு கவனிக்கப்படவேயில்லை என நினைத்தேன். அதையும் கண்டு இதிலே குறிப்பிட்டமைக்கு என் நன்றிகள் இளா!

  ReplyDelete

Post a Comment

Popular Posts