ஐயோ ’அதைக்’ காணோமே

அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு ஒரு வருடமாக காதல். அவகிட்ட காதலைச் சொல்லலாம்னு முடிவு பண்ணினான். சரி எத்தனை வருசம்தான் காத்துட்டு இருப்பான் அவனும். சரியா ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தான், இடம், ஒரு அழகிய கடற்கரை, அதுவும் பசும்புல் போர்த்திய ஒரு இடத்துக்கு அப்புறம் உள்ள கடற்கரை. கற்பனை பண்ணிப்பாருங்க, ரெண்டு மைலுக்கு அடர்ந்த காட்டுல வண்டியோட்டிட்டுப் போறோம், மனிதர்களின் நடமாட்டமே அங்கே இல்லை. காட்டோட முடிவுல சின்ன மேடு, அப்புறம் அரை மையிலுக்கு பச்சைப் பசும் புல்வெளி, அப்புறம் கடல். அதுவும், அலை கொஞ்சம் கூட இல்லே,தண்ணியோ தெள்ளத் தெளிவா கண்ணாடி மாதிரி இருக்கு. மக்கள் நடமாட்டமோ, ரொம்ப ரொம்ப கம்மி. இந்த மாதிரி இடத்தைத்தான் அவன் முடிவு பண்ணி கூட்டிட்டு வந்தான்.

அந்தப் பெண்ணுக்கோ அந்தக் கடற்கரையை பார்த்தவுடனே சந்தோசம்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம். ”டேய், இப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லே. இயற்கைதான் எவ்வளவு அழகு. எனக்கு இயற்கை புடிக்கும்னு தெரிஞ்சே என்னை சரியான இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேடா.நன்றிடா!” என்றபடியே அவன் நெத்தியில முத்தம் குடுத்துட்டு கடலை நோக்கிப் போனாள். வழக்கம் போல கடல்ல குளிக்கிறதும், பின்னாடி வந்து சூரிய வெளிச்சத்துல காயுறதுமாவே பகல் நேரத்தை செலவு பண்ணினாங்க, சாயங்காலம் ஆச்சு. இருட்டினா கடற்கரைய பூட்டிருவாங்க. அதனால காதலை சட்டுபுட்டுன்னு சொல்லிடலாம்னு நினைக்கும் போதே அவ எந்திரிச்சு கடற்கரையில நடக்க ஆரம்பிச்சா. இவனும் அவளுக்குத் தெரியாம மோதிரத்தை பொட்டியில இருந்து எடுத்தான். அவளுக்காகவே ஆசை ஆசையா அவனும் அவனோட அம்மாவும் கடை, கடையா ஏறி இறங்கி வாங்கின மோதிரமது. 18 கேரட் தங்கம், உச்சியில விலை உசத்தியான வைரம். சூரிய வெளிச்சத்துல பளிர்னு மின்னுச்சு. ஆமாங்க, அதனோட வெலை .... பின்குறிப்புல இருக்கும், ஹல்லோ அப்புறமா பாருங்க. மோதிரத்தை பத்திரமா கையில எடுத்துகிட்டு அவ பின்னாடியே நடந்தான், கையை இருக்கமா மூடிகிட்டான்.ஒரு ஆச்சர்யத்தை குடுக்குனமில்லை, அதான்.

ரெண்டு பேரு தோளுக்குத் தோளா கொஞ்சம் தூரம் நடந்தாங்க. சடார்னு அவளுக்கு முன்னாடி முட்டிப்போட்டு உக்காந்து ”நான் உன்னைக் காதலிக்கிறேன், என்னைக் கண்ணாலம் பண்ணிப்பியா?”ன்னு கேட்டு மோதிரத்.. ஆ மோதிரத்தைக் காணோம். அவளுக்கோ அவன் காதலைச் சொன்னவுடன் என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறா, ஆனா அவன் மோதிரத்தை தேடுறான். சரின்னு அவன் மோதிரத்தை தேடுறதை பார்த்துட்டு இவளும் தேட ஆரம்பிச்சா. சுமார் ரெண்டு மணி நேரமா தேடுறாங்க, கிடைக்கவே இல்லை, இதைக் கேள்விப்பட்ட மத்த மக்களும் அவங்களோட சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டாங்க. அங்கே இருந்த காவலர்களும் சேர்ந்து தேட.. ஒரு கூட்டமாவே, தேடோ தேடுன்னு தேடுறாங்க. ஹ்ம்ம்ஹ்ம்ம் கிடைக்கவேயில்ல. இருட்ட ஆரம்பிச்சதும், மக்கள் மன்னிச்சுக்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இருட்ட ஆரம்பிக்க, இனிமே தேடுறதுல புண்ணியமில்லைன்னு, அவனும் அவளும் கிளம்பிட்டாங்க.

பின் குறிப்பு:
1. வீட்டுக்குப் போற வழியில அவனோட காதலை ஏத்துக்கிட்டு கண்ணாலத்துக்கு சரி சொல்லிருச்சு அம்மணி
2. மோதிரத்துக்கு காப்பீடு பண்ணிருந்தாங்க அவனோட அம்மா.
3. அந்த மோதிரம் இன்னும் அந்தக் கடற்கரையில இருக்கலாம்.
4. அந்த மோதிரத்தோட விலை ரொம்ப கம்மிங்க. $9000 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்புல 4லட்சத்துக்கு பக்கம்.

நல்லா சொல்றாங்கடா காதலை!

செய்தித்தாள்ல வந்த சேதி, நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கேன்.
மூலம்:http://www.thebostonchannel.com/news/24597272/detail.html

Comments

 1. 9000 dollar equals around Rupees four lakhs, not 41 lakhs.

  ReplyDelete
 2. //Rupees four lakhs//
  அட ஆமாங்க இளையவன், மாத்திட்டேங்க. நன்றி!

  ReplyDelete
 3. காஸ்ட்லி காதல்

  ReplyDelete
 4. "ஐயோ ’அதைக்’ காணோமே"

  இது தான் இது ஒண்ணு தான், ஏங்க இப்படி எடக்கு முடக்கா தலைப்பு வச்சி ஊர ஏமாத்றீங்க : D, நல்ல முடிவு.....

  ReplyDelete

Post a Comment

Popular Posts