ட்விட்டர் நிச்சயம் NOபால்தான்

என் பர்ஸ் கர்நாடகா காவிரி போல என்றாள் தோழி. எப்பவாவது தான் திறக்கும் அதுலயும் ஒன்னும் வராதே என்ற அர்த்ததில்.

----OOOO----

வாரம் ஒரு முறைதான் குளிப்பியா என்றேன் தோழியிடம். ஆம் என்கிறாள். இப்படித்தான் சனிக்கிழமை என்ற பெயர் வந்திருக்குமோ?


----OOOO----என்னை தொழிலதிபரே என்று கிண்டல் செய்வது தோழியின் வழக்கம். அவள் விட்ட மிஸ்ட் காலுக்கெல்லாம் நான் திருப்பி அழைக்க, நானெப்படி தொழிலதிபர் ஆவது, ஏர்டெல் முதலாளிதான் தொழிலதிபர் ஆகியிருக்காரு.

----OOOO----வீட்டுக்கு வந்த தோழியிடம் ”இவன் எதுவுமே வச்சிக்க மாட்டான்” என்றார் அம்மா. “இல்லை. ஆண்ட்டி.அவன் மாறிட்டான்” என்ற தோழி காதில் சொன்னாள் ”அதான் கடன் நிறைய வெச்சிருக்கியே, காச எட்றா பேமானி”


----OOOO----


தோழியின் அப்பா உஷாரானவர். வீட்டு ஹாலில் “இங்கே நிறைய செலவு வெக்கப்படும் இதுக்கு இந்த வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்.


----OOOO----


ட்விட்டர் நிச்சயம் நோபால்தான். இல்லையென்றால் ஒரு டிவிட் தப்பா போட்டாலே ஒரு நாடே செவுலு மேலவுட்டு கும்முறாங்களே. உண்மைதானோ???


----OOOO----ஒரு நல்ல பழமொழி சொல்லுடா என்றாள் தோழி. “அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு” என்றேன். நீ தின்னே என் சொத்து அழியுது, இதுல உன் வீட்டாரும் சேர்ந்து இல்லே அழிக்கிறாங்க.


----OOOO----ஒன்றே குளம். அதுல நீ எப்ப விழுவே

காதலும் கடனும் பிறர் தர வாரா

----OOOO----டுவிஸ்கி: இந்தப் பதிவு கார்க்கி பதிவுக்கு எதிர்வினை இல்லீன்னு சொன்னா நம்பவா போறீங்க. இனிமே தோழி பதிவுக்கு எல்லாம் எதிராளி பதிவு வரும்னு எச்சரிக்கிறேன்.

Comments

 1. ரசிக்கும்படியான எதிர்வினை இளா!

  ReplyDelete
 2. என்னோட ஆதரவு உ ங்களுக்கு தான்..

  ReplyDelete
 3. சபாஷ் சரியான போட்டி !

  நான் தான் நூறாவது.பாராட்டு(ங்)க்கள்

  ReplyDelete
 4. ஹஹாஹா.. இது சூப்பரா இருக்கே..

  ReplyDelete
 5. பரிசல், எனக்கு இது ஏமாற்றமே. எப்பவாவது இப்படி எதிர்வினை போட்டா ஒரு 5 பதிவாவது பின்னாடியே வரும். இந்த முறை ஒன்னும் லேது. கார்க்கிக்கு அவ்வளவுதான் புகழ் போல

  கார்க்கி- இதெல்லாம் ஆணவச் சிரிப்புங்க. வேணாம்.

  சரவணன் நன்றி, உங்கள் மாதிரி 1 கோடி பேர் இருந்தாப் போதும், 2011 நமக்குத்தான். ஆரம்பிச்சுருவமா?


  நாய்குட்டி மனசு, சுசி. வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க. சாப்பிட்டு போலாங்க..

  தெய்வசுகந்தி- என்ன இடம் மாறிட்டீங்களா? சொல்லவே இல்லே :)

  ReplyDelete
 6. எதிர் ட்விட்டுகள்.? நல்லாருக்குது பாஸ்.. :-))

  ReplyDelete

Post a Comment

Popular Posts