Tuesday, October 19, 2010

சிபஎபா - Oct 19

அவாளோட ராவுகள் -3 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (a) LA Ram எழுதும் நவராத்திரி கொலு பத்தின தொடர், ச்சும்மா கலக்கலோ கலக்கல். மிஸ் பண்ணாதீங்க.. சொல்லிட்டேன் ஆமா..


பட உதவி ரிவிட் ஆயில்ஸ்,, சே சே ரீட்வீட் புகழ் ஆயில்ஸ்----00oo00----

கொத்தனார் எழுதும் கோனார், கண்டிப்பா படிங்க.. தொடர் அருமையா வருதுங்க. எங்கெங்கே தப்பு பண்றோம்னு புரியும், கண்டிப்பா பதிவுலகத்துக்கு இது தேவை.http://www.tamilpaper.net/?p=580----00oo00----


என்ன இது ரெண்டும் தொடரா தொடர்ந்து குடுத்துட்டு வர்றேன்னு கோச்சுக்காதீங்க.

கடும் பகை by பழமைபேசி
இதெல்லாம் கிராமத்தானுங்க பாசைங், சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாதுங்.

----00oo00----

சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் by Sai Ram

சாய் ராமின் இந்தப் பதிவு, ஒரு கதைபோல, சினிமாபோல நம்ம கண்ணு முன்னாலயே அந்தக் காட்சிகள் வருது. இதைவிட அருமையான பதிவு சிலி-சுரங்கத்தைப் பத்திவரலீங்க.

----00oo00----

ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் by Deepa
தன்னோட குழந்தையோட முதல் நாள் பள்ளி அனுபவத்தை யாரும் மறக்க மாட்டாங்க.(அதுவும் குறிப்பா அம்மாக்கள், ஏன்னா அவுங்கதன் கிட்டக்க இருந்து பார்த்துப்பாங்க. அப்பாக்கள் வழக்கம் போல பப்பரக்காதான்). உண்மையாவே இந்தப் பதிவை படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. ஏன்னா சில பேர் தொலைபேசியிலேயே பள்ளியில் இடம் வாங்கி, அப்புறமா மனைவிகிட்டே சொல்லிருவாங்க. அவுங்க மனைவியே விண்ணப்பங்கள் பணம் எல்லாம், நேரம் எல்லாம் முடிச்சுருவாங்க. ரெண்டு மாசம் ஆச்சு இதுவரைக்கும் பள்ளியிலேயே கொண்டுபோய் விட்டதும் இல்லீங்க. யார்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா பின்னூட்டத்துல)
----00oo00----

போஸ்ட் பாக்ஸ் by என். சொக்கன்
சொக்கனோட பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கும். 90% பதிவுகள் அழியாத கோலங்களுக்குப் போயிருக்கு, இதுவும் அப்படியாப்பட்ட பதிவுதான். இவரோட பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லியே சலிச்சுருச்சுங்க. வேற எப்படிச் சொல்லலாம்?


----00oo00----


சூ மந்திரத் தக்காளி by சேட்டைக்காரன்
மொக்கைப் போடறதுக்கு கூட மருத்துவர் ஆலோசனை புடிக்கிறாங்கப்பா. தக்காளி! என்னமா திங்க் பண்ணிருக்கான் இந்தப் பயபுள்ளை

----00oo00----


கிஷோர் குமார் - சல்தே சல்தே by கருந்தேள் கண்ணாயிரம்
இந்தி பாடகர் கிஷோர்குமார் பத்தின அருமையான பதிவுங்க. பாஸ், அப்படியே கொஞ்சமா மாத்தி விக்கியில போட்டுருங்களேன்?


இதேமாதிரியான பதிவு ஒன்னு.. தமிழோவியத்துல கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வந்துச்சுங்க. அதுவும் இங்கே


----00oo00----

சிலம்பம் by Gowtham
நமக்கு சிலம்பம்னா பாக்யராஜ், பொறுமையா கண்ணாடி, கடிகாரம் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு போடுற சண்டைதான் தெரியும்ங்கிறதால, பதிவு முழுசாவுமே ஏதோ புதுசா படிக்கிறாப்லதான் படிச்சேன்(அப்பாடி, எவ்ளோ பெரிய வாக்கியம்). விக்கில யாராவது இந்தப் பதிவை சேர்த்திருங்கப்பா


----00oo00----

சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை by உண்மைத் தமிழன்(15270788164745573644)

ஒரு மனுசனை இப்படியா அலைய விடுவாங்க. சித்தப்பூ, இந்தப் படம் எந்தளவுக்கு விமர்சனம் வந்திச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். தலையிலடிச்சுக்கிட்டேன்.


----00oo00----

பெரிய மனுஷன் ஆயிட்டேனே by கார்க்கி
ஒரு சைட் டிஷே இப்படி எழுதினா மெயின் டிஷ் எவ்ளோ எழுதுவாங்க?


----00oo00----
அழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் :

அரைபிளேடு எழுதிய .

Thursday, October 14, 2010

சிபஎபா Oct-14

ரெண்டு வாரமா எந்திரன் எந்திரன்னு பதிவு வந்ததால, போன வாரம் எந்திரன் வார விடுமுறை விட்டாச்சுங்க.

----00oo00----


தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ by யுவகிருஷ்ணா
லக்கி.. சாரி சாரி யுவகிருஷ்ணா இந்த மாதிரி எழுதி நாளாச்சி வருசமாச்சு. வேலைப் பளுவினால இதுமாதிரி எழுதலைன்னாலும், எப்பவாவது அத்தி பூத்தா மாதிரி இப்படிச் சில பதிவுகள் வரத்தான் செய்யுது.


----00oo00----


சார் டிஃபன்f by triplicani
இப்பவெல்லாம் அவனவன், ஒரு டீயோ காபியோ, இல்லாட்டி கொஞ்சமா கார்ன்ஃப்லாக்ஸோ சாப்பிட்டுபோற இந்தக் காலத்துல இப்படி ஒரு பதிவு.. கொஞ்சம் பெரிசுதான், அனுபவிச்சு படிச்சா ,, ஷ்ஹ்ம்ம்ம் சுவையோ சுவை

----00oo00----


இந்த NRI அம்மாக்களோட அலப்பற இருக்கே கொஞ்சம் நஞ்சம் இல்லே, பட்டவஙகளுத்தான் தெரியும் கஷ்டமே

----00oo00----


புகைப்படங்களில் வாழ்பவர்கள் by தேனம்மை லெக்ஷ்மணன்
வெளிநாட்டுல வாழ்றவங்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் இந்தக் கவிதைபுடிக்கும்/புரியும். மத்தவங்களுக்கு இது இன்னொரு கவிதைமாதிரிதான் தெரியும்.

----00oo00----


வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை by கிரி
திராவிடமா ஆத்திகமான்னு நடக்கிற விவாதம் மாதிரிதான் இதுவும், என்னிக்குமே நிக்காதுங்க. Blogspot Vs Wordpress. ஆனா இவர் கொடுத்திருக்கிற தகவல் எல்லாமே தெரிஞ்சதுதான்னாலும் தமிழ்ல மீண்டும் படிக்கையில் நல்லாத்தான் இருக்கு

----00oo00----


தந்தி மரம் by ☼ வெயிலான்

இந்தப் பதிவை தொழில்நுட்ப பதிவுன்னு எடுத்துகிறதா இல்லை அனுபவமான்னு தெரியல. ஆனா நான் ரசிச்ச பதிவு.

----00oo00----


இவர்கள் அங்கு எதை புடுங்குகிறார்கள்? by திரவிய நடராஜன்

இப்படி நிறைய பேர் புடுங்காம இருக்கிறதுதான் பிரச்சினையே.----00oo00----


சுண்ணாம்பும் வெண்ணையும் by அஹமது இர்ஷாத்

சமீபமா இந்த மாதிரி குட்டிக்கதைக்கள்ல மனசு விழுந்துருதுங்க. (குட்டின்னா ’அந்த’ குட்டி இல்லீங்கோவ்) சட்னு புடிச்சிருச்சு.----00oo00----


ஒபாமா+அமெரிக்காவுக்கு எதிராக போர்by LOSHAN

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிருச்சு. சரியான பதிவுதான் போங்க..----00oo00----


சென்னை நகர பெண்களே உஷார் by மங்குனி அமைசர்

இதை நல்லப் பதிவுன்னு சொல்றத விட, பொண்ணுங்க படிச்சு, புரிஞ்சு

நடந்துகிட்டா நல்லது.

----00oo00----இதுக்கு நான் என்ன எழுதறதுன்னே தெரியலைங்க. ரொம்ப ஃபீலிங்கஸாகிட்டேன்.

----00oo00----காமக் கடுங்கொலைகள் By Narsim

நல்ல விசயம்தான், ஆனா கலவிக்கல்வியப் பத்தி வர்றதுனால இது கொஞ்சம் கஷ்டம்தானுங்க.

----00oo00----


அழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் செந்தழல் ரவி எழுதின இந்தப் பதிவு, கொஞ்சமாவது சிரிக்க முடியுங்க, கியாரண்டி


தேங்காய் பொறுக்கி : செந்தழல் ரவி

Tuesday, October 12, 2010

காவலன் - Kavalan Songs

ராமராஜன் உச்சத்தில் இருந்த சமயம் அது. காவலன் அப்படிங்கிற படம் 1992ல் வெளியிடுவதாய் இருந்தது, பிறகு கைவிடப்பட்டது. காரணம் அந்தப் படத்தில் வந்திருந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே. அப்படி ஒரு கில்மா பாட்டு அது. அந்தப் பாட்டு B & C பகுதிகளில் வெளியான உடனே மிகப் பிரபலமடைஞ்சிருச்சு (நம்ம மக்கள் ரசனையைப் பாருங்களேன், ஆனா இந்த இடுகையை எழுதக் காரணமான பாட்டும் அதுதான். ஏன்னா அந்தப் பாட்டைத் தேடித்தான் இந்தப் பதிவே போடுறேன்). கதாநாயகி - ரூபிணி(என நினைக்கிறேன்). அந்தப் பாட்டைத் தூக்கினாத்தான் ராமராஜன் படத்தில் நடிப்பேன்னு சொல்ல, படம் எடுக்காமையே விட்டுட்டாங்க.(அப்படித்தான் நினைக்கிறேன்) ஆனா வரலாறு அந்தப் பாட்டை மட்டும் மறக்கல பாருங்க. அப்படி ஒரு ராசி இருக்கிற தலைப்பை ஏன் விஜய் தேர்ந்தெடுத்தாரு/ஒத்துகிட்டாரு’ ன்னு தெரியலை.


சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுல இருக்குன்னு கேட்கனும்னு நினைச்சீங்கன்னா, தனியா கேளுங்க. Song removed from Blog, listen from காவலன் பாடல்களைக் கேட்க

Friday, October 1, 2010

Endhiran Review- FDFS

எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு. கண்டிப்பாக இது வழக்கமான ரஜினி படமில்லை, ஆறிமுகப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசனங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லை இல்லை. எதுவுமே இல்லாம இது எல்லாம் தமிழ் சினிமாவான்னு துப்பாதீங்க, ஆனா இதெல்லாமல் வந்தததுதான் இந்தத் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா?

விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு Danny Denzongpaவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில், ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் ரஜினி போன்ற சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.

ஷங்கர் தன் வாழ்நாள் சாதனைப் படமாக சொன்னது எந்திரனைத்தான். அதற்காக அவர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றே கதாப்பாத்திரங்கள், 2 1/2 மணிநேரத்துக்கும் மேலான படம், ஆனாலும் விறுவிறுப்பில் பஞ்சமில்லை. அதுவும் இறுதிக்காட்சிகள், கண்டிப்பாக ஹாலிவுட்டிற்கு நிகரேதான். முதல் பாதி காதல், அறிவியல் என்று செல்கையில் இரண்டாம் பாதி அதிரடிக்காட்சிகள், ஒரு கட்டிடம் முழுக்க ரஜினி, ஆம் அத்துனையும் ரஜினிகள். பிரமிக்க வைக்கும் காட்சிகள் அவை, அதிலும் வில்லனாக ரஜினியே வர திரையரங்கள் விசில்கள் பறக்கின்றன.


இரும்பிலே ஒரு இதயம் காட்சியினூடாகவே செல்கிறது, பூம் பூம் ரோபாடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,அதிலும் மைக்கேல் ஜாக்சன் போன்றே ரஜினி ஆடும் காட்சிகள் வாவ். கிளிமஞ்சாரோ பாடலில்தான் இயல்பாக நாம் பார்த்த ரஜினியை பார்க்க முடிகிறது, மீதியெல்லாம் இயக்குனரின் நடிகராகவே வந்து போகிறார். காதல் அணுக்கள் பாடலில் வரும் இடம், புதிது, ஐந்து மணிநேரம் பயணம் செய்தே அந்த இடத்தை அடைந்தார்களாம். அழகு அழகு அழகு. அரிமா அரிமா மைக்கேல்/ஜேனட் ஜாக்சன் இருவரும் இணைந்த Screamஐ ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை: ஐஸ்வர்வாவை படம் பிடித்திருக்கும் அழகும், அவரின் நடனப் பாங்கும், ரஜினியும் ஒத்துழைத்திருக்கிறார், ஆனாலும் ஐஸ்வர்யாவின் அழகு ரஜினியின் ஆட்டத்தை குறைவாகவே காட்டுகிறது. fashion Show பூனை நடை, நடனங்களில் நளினம், அவர் பிறந்தநாள் காட்சிகள் எல்லாம் இருவர் ஐஸ்வர்யா போலவே இருக்கிறார்.


படத்திற்கு ஒரு தூண் ஒளிப்பதிவென்றால், ஆஸ்கார் நாயகன் மற்றுமொரு மிகப் பெரிய தூண். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். வசனம்: சுஜாதா, ஷங்கர், கார்க்கி.

இதுவரை ஷங்கரின் எண்ணத்தை பேச வைத்தவர் சுஜாதா. இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள். அதிவும் அத்துனை அறிவியல் வார்த்தைகளையும் தமிழாக்கி, புரியும்படி செய்திருப்பதற்கும் அறிவியலை நடைமொழிக்கு மொழி பெயர்த்திருப்பதற்கும் ஒரு பெரிய சல்யூட். நக்கலா- இல்லை நிக்கல், காதலிச்சா நட்டு எல்லாம் கழண்டுருமாம், என்றபடியே நட்டை கழட்டும் இடம், சீன் போடாத சீதாபிராட்டி, Dot; இப்படி சின்னச் சின்ன வசனஙகளுக்காக திரையரங்கத்தில் விசில் பறக்கிறது.

படத்தின் குறைகளாக சிலவற்றைச் சொல்லலாம், கொசு பிடிக்கும் காட்சி, வில்லன் தயாரித்த ரோபோவை வெளிநாட்டு மக்களுக்கு விற்க முனைவது, விஞ்ஞானி என்றால், காதல் மறந்த, சோப்ளாங்கியாகவே காட்டுவது, சந்தானம், கருணாஸ் கதாபாத்திரங்கள். இப்படி வெகு சில மட்டுமே.

படத்தின் நாயகன் ரஜினி, வில்லனும் ரஜினியே. ரஜினியை வில்லனாக பார்க்க ஆசைப் பட்ட மக்களுக்கு இந்தப் படம் செம தீனி. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், மூன்று முகம் வரிசையில் ரஜினிக்கு நடிப்பில் எல்லைத் தொட்ட படம். எந்திரன் ரஜினிக்கு ஒப்பனை செய்ததை விஞ்ஞானி ரஜினிக்கும் செய்திருக்கலாம்.அழுதால்தான் நடிப்பு என்று நம்பியிருக்கும் நம் மக்களுக்கு ரஜினியின் உழைப்பு தெரியுமா என்பதுதான் சந்தேகமே.நான் இப்படி நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கழுத்தருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எப்படி நடித்தாலும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிரூபித்து சாட்டையால் விளாசியிருக்கிறார் ரஜினி.

படத்திற்கான செலவு அதிகம், மீண்டும் இப்படி ஒரு முயற்சி தமிழில் வர இன்னும் சிலகாலம் ஆகலாம். குறைந்த பட்சம் இந்த மாதிரியான முயற்சிகள் இந்தியாவை தாண்டிச் செல்லும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம், இது அனைவருக்குமான படம். எப்படியோ சன் பிக்ஸர்ஸ் தயாரித்த முதல் படமே மாபெரும் வெற்றி.ரஜினிக்காகவே ஷங்கர் எடுத்தப் படம் சிவாஜி, இந்தப் படம் ஷங்கருக்காக ரஜினி நடித்துக் கொடுத்திருக்கிறார், அதுவும் ஒரு இயக்குனரின் நடிகராகவே. முதல்வன் பார்த்த போது ‘சே ரஜினி இந்தப் படத்தில நடிக்காம விட்டுட்டாரே’ன்னு கவலைப்பட்டேன். ஆனால் இதுல எல்லாத்தையும் சேர்த்து புடிச்சுட்டாரு. Shankar, Rajni, Randy, ARR, Sujatha/Karki- Made a history in Indian Film Industry.

இறுதியாக, கமல் ஷாருக்கான் தவற விட்ட படங்களின் பட்டியலில் எந்திரன் முதல் இடத்தைப் பிடிப்பான்.

எந்திரன், ரஜினியின் ஷங்கரன்.
தமிழோவியத்துக்காக எழுதியதில் இருந்து கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்