Aids Day- பதிவர்களின் பங்கு?

இன்னிக்கு உலக எயிட்ஸ் தினம்.


நண்பர்களே,


இது ஒரு ச்சும்மா முயற்சி. எயிட்ஸுக்காக நம்ம (பதிவர்கள் சார்பா) ஒரு வாக்கியம் ( Slogan) கொண்டுவரலாமா?. நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம்? அடுத்து யாராவது விளம்பர நிறுவனம் உங்களை கொத்திட்டு போயி பெரிய வேலை குடுக்கலாம்(இப்படியெல்லாம் கூட நடக்காலாமே..:)).





சங்கை நாம ஊத ஆரம்பிக்கலாம். நாட்டுக்கு நம்மாளான ஒரு தொண்டா இருக்கட்டுமே. சும்மா ‘நச்’னு மக்களுக்கு சுலபமா மண்டையில அடிச்சா மாதிரி இருக்கனும்.


சரி, என் பங்குக்கு


”மாட்டலைன்னா மாட்டிக்குவீங்க”

Comments

  1. Coverலைன்னா கவுந்துருவீங்க!

    ReplyDelete
  2. டிவிட்டர்ல மக்கள் வெளையாடுறாங்க. அதையெல்லாம் சேர்த்து பின்னூட்டமா போடனும்.. காத்திருங்கள். அதுல ஒன்னு (18+) “போடாம போடாதீங்க”

    ReplyDelete
  3. இரண்டுமே நல்லா இருக்கு.,.,

    ReplyDelete
  4. இளா
    ஜாக்கி இதுவரை உங்க பதிவுல ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கிறாரா?
    தலைப்பைப் பார்த்ததும் ஜொள்ளு விட்டுகிட்டு ஓடி வந்திருக்கிறார் பாருங்க.

    நம்ம பங்கு :
    உறையோட செய்யுறதே முறை

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  5. இன்னோன்னு

    முறையற்ற உறவிலே வேண்டாமே நாட்டம், அதிலும் உறையற்ற உறவு கண்டு எடுக்க வேண்டும் ஓட்டம்

    ReplyDelete
  6. //ஜாக்கி இதுவரை உங்க பதிவுல ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கிறாரா?//
    ஓஹ் உண்டே, ஒரு தடவை.. :)

    ReplyDelete
  7. மூடியற்ற சுகம் தருமே முடிவற்ற துன்பம்

    ReplyDelete
  8. //ஓஹ் உண்டே, ஒரு தடவை.. :)//

    நல்லா பாருங்க, அதுவும் ஏதாவது ஒரு ஜொள்ளு மேட்டருக்கு இருக்கும்

    ReplyDelete
  9. //நல்லா பாருங்க, அதுவும் ஏதாவது ஒரு ஜொள்ளு மேட்டருக்கு இருக்கும்//
    ஜாக்கி இஸ் அ குட் பாய் , not like you

    ReplyDelete
  10. ////நல்லா பாருங்க, அதுவும் ஏதாவது ஒரு ஜொள்ளு மேட்டருக்கு இருக்கும்//
    ஜாக்கி இஸ் அ குட் பாய் , not like you//

    ஜாக்கி குட் பாய், நான் பேட் பாயா?? நல்லா இருங்கடே..

    ReplyDelete
  11. மானம் காக்க உதவும் TANTEX
    உயிர் காக்க உதவும் Latex.

    ReplyDelete
  12. அடிச்சு ஆடுங்க ஸ்ரீராம்

    ReplyDelete
  13. காண்டமிருந்தால் கண்டமில்லை

    ReplyDelete
  14. //இரண்டுமே நல்லா இருக்கு.,//
    இதுக்கு என்னய்யா அர்த்தம்? எந்த ரெண்டும் நல்லா இருக்கு?

    ReplyDelete

Post a Comment

Popular Posts