பேப்பருல வந்த என் போட்டா

(inspired by காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு by இராமசாமி)
நான் வீட்டை விட்டு ஓடிவந்து
பல மாசம் ஆகிப்போச்சு
குடிச்சுப்புட்டு அப்பா அடிச்சானேன்னு
கட்டையெடுத்து நொங்கிப்போட்டு
திருட்டு ரயிலேறி இங்க வந்தேன்
நானிருக்கும் ஊரில்
என்னைத் தெரிஞ்சவங்க யாருமில்லை
எனக்குத் தெரிஞ்சவங்களும் யாருமில்லை
ஊர்திரும்பிப் போகவும் ஆசைதான் எனக்கு!

எச்ச எலை எடுத்தாலும் கூப்பிடாம போவ
பாலாப் போன கெளரவம் தடுக்குது.
மாட்டுத் தரகன் சித்தப்பா இந்த ஊருக்கு
அடிக்கடி சந்தைக்கு வருவாராம்
சந்தையன்னைக்கு நானும் போய்பார்த்துகிட்டுதானிருக்கேன்


லாரி கிளீனர் தங்கராசுவாச்சும் வருவான்னு
பாத்துகிடக்கேன், பாவி மவன்
இந்த ஊருக்கு எப்ப வருவானோ தெரியல.
யாராவது என்னைப் பார்த்து ஊரில்
என்னைப் பத்தி சொன்னால் கோவத்தோட அப்பாவோ,
கண்ணீரோட அம்மாவோ வருவாங்கன்னு பார்த்தேன்.

அறிஞ்சவரும் ஆருமில்லை, தெரிஞ்சவங்களும் ஆருமில்லை
கண்டவனெல்லாம் ஏசறாங்க இங்கே
இதுக்கு அப்பன்கிட்ட படிக்காததுக்கு மிதி வாங்கி சாவலாம்.
துரைக் கடையில படிய வாருன தலையோட, திருநீறு வெச்சி
எடுத்தப் போட்டா கண்ணாடி மூலையில சொறுகியிருக்கும்
பேப்பருல காணாம போன பக்கத்துல
அந்தப் போட்டோ வருமான்னு தெனமும் பார்ப்பேன்..

அந்தா நாளும் வந்திச்சு அப்பன் செல்போன் கூட போட்டிருந்துச்சு
பாவி மவன் ஒருத்தன் பஜ்ஜி எண்ணெயெடுக்க அதையும் கிழிச்சுபுட்டான்.
அப்பனுக்கு நானே போன் பண்ணி சொல்லிபுட்டேன்,
வந்த அப்பன் நேரா மொதலாளிகிட்ட போனான்
“சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு
என் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.
தீவாளிக்கு வீட்டுக்கு வரச் சொன்னான் வக்காளி,
மொதல்ல அந்தப் போட்டாவை கிழிச்சுப் போடனும்..

Comments

 1. கவிதை அருமையா இருக்குங்க.

  ReplyDelete
 2. “சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு
  என் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.


  .....பாவம்ங்க......

  ReplyDelete
 3. கவிதை அருமை. பாவம் அவன்..:((

  ReplyDelete
 4. anna arumai na.. payan romba pavam..

  ---
  http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_09.html

  please read this whenever you are getting time...

  ReplyDelete
 5. //
  சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு
  என் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்
  //
  adappavame........

  ReplyDelete
 6. வக்காளி, அவனெல்லாம் ஒரு அப்பனா?

  ReplyDelete
 7. தஞ்சாவூரான் சொன்னதே தான்..

  வக்காளி, அவனெல்லாம் ஒரு அப்பனா?

  ReplyDelete
 8. நன்றி அன்பரசன்
  நன்றி Chitra
  நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
  நன்றி இராமசாமி
  நன்றி T.V.ரா ஐயா
  நன்றி யோகேஷ்
  நன்றி bandhu
  நன்றி அமுதா கிருஷ்ணா
  நன்றி ராஜவம்சம்

  ReplyDelete
 9. //தஞ்சாவூரான் said...
  வெறும்பய said...
  வக்காளி, அவனெல்லாம் ஒரு அப்பனா?//
  பெத்துட்டா மட்டும் அப்பன்னு சொல்லிக்கிற கொடுமைதானுங்க இது.

  வெறுமை-->வருகைக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular Posts