Monday, June 28, 2010

சிபஎபா June 28-2010

பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!

என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே

என்னமா டார்டாய்ஸ் சுத்துறாரு கார்த்திகைப் பாண்டியன்.

***************************************

தமிழின் முதல் மொபைல் நூல்
இப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்

அடுத்த கட்டம் அடுத்த கட்டங்கிறாங்களே, அது இதுதான்னு காட்டியிருக்காரு சத்யராஜ்குமார். வாழ்த்துக்கள்! அதேபோல இதில் விருப்பம் இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி புரிந்து தமிழுலகுக்கு சேவையும் செய்யலாம். விருப்பமிருப்பவர்கள் பின்னூட்டமிடுங்களேன்!

*************************************************

நிதர்சன கதைகள்-17- Cable Sankar

குறிப்பிட்டு சொல்லும்படியாக கருத்து ஒன்றுமில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. நாமும் அவர் வண்டியினைத் தொடர்ந்தது போன்றதொரு உணர்வு. இப்படியாப்பட்ட பதிவுகள்தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம், சிறிதே கற்பனை கலந்தாலும் இவைகளை பத்திரிக்கையில் படிக்கவும் முடியாது, இந்த அனுபவத்தை பதிவுகளில் இப்படி சொல்வதுதான் சிறப்பும். இதைத்தான் என்.சொக்கன் சிறம்பட செய்து வருகிறார்.


00000000000000000000000000000000


அங்காடித் தெருவில் ஒளித்த இந்தப் பாடல், நம்மை எல்லாம் மெய்மறந்து கேட்க வைத்தது. அதுவும் காப்பியாம். எகொஇச!

******************************************

ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா -- dheva

Chitra ->...
தேனாய் இருக்கும் பலாச்சுளையில் ....... அந்த சிறுவனை போன்ற நிஜங்கள் படும் வேதனைகள் ....... நம் கையாலாகாத மனதில் தேளாய் கொட்டுகிறது.....

*******************************************
இளைய தளபதி


சரியா இளையதளபதியின் பிறந்தநாளை அன்னிக்கே சரியா பதிவ இறக்கிருக்காரு. விஜய் ரசிகரின் பார்வையில் ஒரு நல்ல பதிவு. எதிர் கேங்க் மக்களுக்கு ஹிஹி பதிவு


****************************************

ஈவது விலக்கேல் வடகரைவேலன்
கவிதை பாதிப்பை ஏற்படுத்துறத விட அந்தப் படம்.. அப்பப்பா.. யதார்த்தமான கவிதை

***********************************
ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்

அபிஅப்பா.. அடங்கவே மாட்டாரா? கொஞ்சம் கூட கூச்சப்படாத இவர் கொளுகைகளை என்ன பண்ண?

**********************************
பல்பு வாங்க மறக்காதீங்க..

எத்தனை முறை பல்பு வாங்கினாலும், ஹிஹி நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்ற இவரோட தகிரியத்தை என்னான்னு பாராட்ட. இதுக்கு இவரோட வாரிசை போஸ்ட்மேனாக்குறது, கொஞ்சம் கூட நல்லா இல்லை.
*************************************

பில்லியர்ட்ஸ்டுபுக்கு, ஆடிக்கு ஒன்னு போட்டாலும் சிக்ஸர்தான்.


தங்கமணி நம்ம கேப்டன் விஜயகாந்த் படத்துல எதிர் கட்சி ட்ரெயினிங் எடுத்தவர். திறந்தவெளி ஜீப்பில் ஏன் எதுக்குன்னு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெங்காயத்தை கடித்து வீசுகிற மாதிரி போகிற போக்கில் அலேக்காய் வெடிகுண்டை வீசி என் மானத்தை எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்கி கப்பலேற்றும் விற்பன்னர்..
***************************************************

இன்னுமொரு புதிய பதிவர்

இப்பவெல்லாம் அண்ணாச்சின்னாவே வில்லன் கருங்காலிங்கதான் ஞாபகத்துக்கு வர்ற இந்த நேரத்துல, நம்ம ஆசிப் அண்ணாச்சியோ பாக்யாராஜாட்டம் காமெடியா தெரிவாரு(நன்றி: லக்கி), ஒரு பேரை தலைமுறைக்கே வெச்சு.. ஷ் ஷ்

****************


கருந்தேள் கண்ணாயிரம் பின்னிட்டு இருக்காருன்னா இவர் பெடல் எடுக்கிறாரு. வாணி ஜெயராம் பற்றிய நல்லதொரு பதிவு.

********************குரங்குப்பெடல்ன்னா என்னான்னு கேட்குற தலைமுறை. சித்ரனின் அருமையான அனுபவம்.

******************************
பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...

ஜாக்கியின் இந்தப் பதிவு. ஒரு ஆச்சர்யமான சந்திப்புதான்னாலும், கொஞ்சம் விலாவாரியாவே இருந்துச்சு. அவசியம் படிக்க(பார்க்க) வேண்டிய பதிவு.

நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ஆணை. நமக்கு தேவையான விசயமும் இதுதானுங்களே. விருப்பமுள்ளவர்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.. அது உங்களோட எதிர்காலமாவும் இருக்கலாம்.

===================================உங்க கடமைய ஆத்துங்க-1

உங்க கடமைய ஆத்துங்க-2

ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?

Thursday, June 24, 2010

அமெரிக்காவில் 'ஓ பக்கங்கள்' ஞாநி

பாஸ்டன் வாசகர் வட்டம் சந்திப்பு
நாள்: சனி, ஜூன் 26
நேரம்: இரவு 7

நியு ஜெர்சி சந்திப்பு
நாள்: ஞாயிறு, ஜூலை 4 இரவு

மேலும் விவரங்கள் அறிய bsubra@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

ஞாநி குறித்த அறிமுகம்:
http://snapjudge.wordpress.com/2010/06/15/njaani-visit-to-us-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf/

Monday, June 21, 2010

சிபஎபா -ஜுன் 21

போனவாரம் இராவணன், Super Singer Junior வாரம்னே சொல்லலாம், இருந்தாலும் அதையும் தாண்டி பல பதிவுகள் வந்திருக்கு. இந்த வாரம் ஒரு பெரிய பதிவுகளோட பட்டியல். பொறுத்துக்குங்க மக்களே.

 • ஹாலிவுட்பாலாவின் Toystory3 விமர்சனம் - எதிர் பார்த்தது மாதிரியே பதிவ போட்டுட்டாரு பாலா.

  http://www.hollywoodbala.com/2010/06/toy-story-3d.html

 • சித்ரன் எழுதின அனுபவம், பல விசயங்களை சொல்லாமல் சொல்லியிக்கும் ஒரு பதிவு. மனிதர் மனதளவில் எவ்வளவு சிறுத்துப் போயிட்டாங்க.

  http://chithran.blogspot.com/2010/06/blog-post.html

 • அட்டகாசமான ஆரம்பம், இப்படியும் கேரளாவை வர்ணிக்க முடியுமான்னு அசத்துது இந்தப்பதிவு

  http://kaalapayani.blogspot.com/2010/06/blog-post_15.html
 • நாமெல்லாம் வெகு சீக்கிரத்துல நகர வாழ்க்கைக்கும், மறத்தலுக்கும் அடிமையாகும் போது, பல விசயங்களை மறந்துடறோம். அதுல முக்கியமான ஒன்னு தாத்தா பாட்டிங்க. அவுங்க இல்லாம நாம இல்லே. நாம் முதன் முறையா ஒன்னுக்கு ஆய் போவும்போது அம்மாக்கள் லைட்டா முகம் சுழிச்சிருப்பாங்க, அப்போ பாட்டிங்க துடைச்சி சுத்தபத்தமா அம்மா கையில நம்மள குடுத்திருப்பாங்க. எவ்வளவோ சொல்லலாம்.
  கதிரின் கடத்த முடியாத நினைவுகள்

  //செங்கமாமுனியப்பன் கோவில் /இந்த வார்த்தைய படிக்கும்போது பளீர்னு மனசுல மின்னல் அடிச்சது போல இருந்துச்சுங்க. ஏன்னு சொல்லவும் வேணுமா? அது எங்க ஊர் ஆச்சே :)
 • சட்னு ஆரம்பிச்சு பட்னு முடிக்கிறதுல இவர் ஒரு முன்மாதிரி பல பதிவுகள் 10 வரிக்குள்ள முடிஞ்சிடும், ஆனா பத்து நாளைக்கு நமக்குள்ள அந்தப் பதிவு சுத்தும். அதுல ஒரு இந்தப் பால பாடம், கே.ரவிஷங்கர்
  விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை

 • குசும்பனின் கல்லூரி கலாட்டா போட்டோஸ் , சொல்ல ஒன்னுமில்லை ஆனாலும் செம தகிரியம்பா.. அதுல ரெண்டு பின்னூட்டம் செம கல கட்டல் ..
  1) கவிதா Kavitha --> ப்ளாகரா இருக்கறது எங்க தப்பா?.... ஏன்ன்ன்ன் இப்படி.??!

  2) எம்.எம்.அப்துல்லா-->உங்களை பிளாக்கை நான் திறந்தப்ப பக்கத்துல நின்னு பாத்துகிட்டு இருந்த ரெண்டு பேருக்கு நின்ன இடத்துலேயே டயேரியா ஆயிருச்சு.மூணு பேரு மூக்குல ரெத்தம் வந்து மயக்க மாயிட்டாங்க.இன்னும் ஒருத்தன் கண்ணு அவிஞ்சு போச்சுங்குறான். டாக்டர் எங்கிட்ட இதுக்கெல்லாம் காரணமான அவன் யாரு?? நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி பிடிச்ச அவன் யாருன்னு கேக்குறாரு.
  நீங்க யாரு???
  சொல்லுங்க. துபாய்ல நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??
  சொல்லுங்க...சொல்லுங்க...சொல்லுங்க....
 • அவியல் 14.06.2010 வழக்கம்போல்தான்.. ஆனாலும் டாப்பு

  வாசகர் (சத்தியமாங்க. பெயர் - ஐன்ஸ்டீன், மதுரை) ஒருவர் எஸ்ஸெம்மெஸ்ஸினார்:“Is it parisalkaaran @ luckykrishna?"நான் பதில் சொன்னேன்:-"I'm parisalkaaran, I'm lucky and My name is Krishna. But I'm not luckykrishna"
 • ரொம்ப நாளைக்கப்புறம் வாத்தி ஜிவாஜி ஸ்டல்ல, முடி போறதுக்கெல்லாம் கவலைப்படாத ஆளுய்யா(பட்டுட்டாலும் முளைச்சிரவாப் போவுது). வாங்க வாத்தி! இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்
 • வினையூக்கியோட கதை, நல்லா இருக்கு, என்னமோ சொல்லுது. வர வர ஜெனிய விட இப்படி கலோக்கொயல கலக்குறீங்க வினையூக்கி தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா - சிறுகதை
 • இந்த வாரம் தொடருது ஆதியின் ஆதிக்கம், பதிவோட கதை கவுதம் கதை மாதிரி,.. ஆனாலும் கடைசி வரி நச்,. சூப்பரோ சூப்பர் http://www.aathi-thamira.com/2010/06/blog-post_17.html

 • விக்ரம் பத்தி சிலாகிச்சு கருந்தேள் கண்ணாயிரம் http://www.karundhel.com/2010/06/blog-post_16.html

 • கார்க்கியின் தேனிலவு நல்லாயிருக்கு http://www.karkibava.com/2010/06/blog-post_17.html.

 • கெளதம் மேனனின் காதல் சுரேஷ்கண்ணனின் ரெண்டாவது பதிவும் அருமை. எவ்வளவுதான் ரசிச்சி ரசிச்சு பார்த்திருக்காரு.

 • டீலா? நோ டீலா? பெரும்பாலும் பதிவர்களைப் பத்தி பதிவுல பேசுறத நிறுத்திட்டாரு லக்கி(பெரிய எழுத்தாளர் ஆகிட்டாருல்ல). ஆனாலும் கேபிளின் வரிக்கு வரிக்கு கிழிச்சு டீலான்னு கேட்டுபுட்டாரு. ஆமா லக்கி, உங்களுக்கு இந்த மாதிரி விசயகாந்து ஸ்டைலு விவரம் எங்கே கிடைக்குதுன்னு சொன்னா நல்லா இருக்குமே..

 • இது ஒரு நல்ல பதிவுகள்ல இதைச் சேர்த்துக்கலாம், அனுபவிச்சு படிங்க. சுகம் தெரியும் அரயத்தி மகன் - டி.அருள் எழிலன்

 • ஒருத்தரு கருத்தா கவிதைய எழுதினா இப்படி கலாய்ச்சும் சில பேர் கல்லா கட்டிட்டாங்க. ரொம்ப நாள் ஆச்சு, பதிவுலகத்துல இப்படி ஒரு விளையாட்டி நடந்து http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_18.html , http://maaruthal.blogspot.com/2010/06/blog-post_18.html , http://vivasaayi.blogspot.com/2010/06/blog-post_18.html

 • கொஞ்சம் outof box எழுதுறதுல மருதன் முன்னோடி, இதைப் பத்தி எப்பவாவது உருப்படியா பேசி இருக்கோமா? 'INDIAN ARMY RAPE US!'

 • பதிவுகள்னா இப்படித்தான் இருக்கனும்னு ஒரு இலக்கணத்தை இவர் கொண்டுவந்துருவாரு போலிருக்கு. இவரோட எல்லாப் பதிவுகளையுமே சேர்த்துவைக்கனும் போலிருக்கு சில்லறை

 • (பிற்சேர்க்கை)ஹ்ம்ம், என்னாத்த சொல்ல, இப்படியும் ஒரு பக்கம் ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள் http://mrsdoubt.blogspot.com/2010/06/blog-post_18.html
  தண்டகாரண்யமும் ராவண நீதிகளும்- ஒரு வித்தியாசமான பார்வை

 • இந்த மாதிரிப் பதிவுகள் நிறைய போடுங்க. எந்தக் காலத்துக்கும் படிச்சு தேறிக்கலாம், ரொம்ப அவசியமான பதிவு கூட்ட‌லும் க‌ழித்த‌லும் . செம கலக்கலா பின்றாங்க. நான் படிக்கிறேன்.

 • கடைசியா.. நானும் ராவணன் பார்த்துட்டேன். கிழிச்சு தொங்கப்போடப்பட்ட விமர்சனங்கள், பல சைடுகள்ல இருந்துப் பார்வைகள், திட்டினது, வாழ்த்தினது, இப்படி இராவண வாரத்துல நான் எழுதனும் நினைச்ச மாதிரி எழுதியது சுரேஷ்கண்ணன், ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்' - Same Pinch. வசனங்கள் வழ வழா கொழ கொழா. “நல்லவங்களை நல்லவங்களா காட்டு, கெட்டவங்களை கெட்டவங்களா காட்டு, ஆனா உண்மையா காட்டிராதேன்னு ஐஸ் ஊனமான சாமிக்கிட்ட கேட்கிற வசனம்(மட்டும்) டாப். நக்ஸல் பிரச்சினைய எடுத்துகிட்டாரோன்னு நினைச்சேன், பிரமிச்சேன், எப்படி சான்று கிடைக்கும்னு யோசிச்சேன். உப்பு சப்பில்லாம முடிஞ்சது, அதுவுமில்லாம படம் வரைஞ்சு பாகம் குறிக்கிற மாதிரி ”குரங்கு, மூக்கறுக்கட்டுமா”. ஷ் அப்பப்பா. கொடுமை.. விக்ரம், ஐசு, ஒளிப்பதிவு, அரங்கம், இசை, பபசுங்காரு, திரைகதைன்னு எல்லாம் நல்லா இருந்தும், கதை வசனத்தால இராவணன் 9தலைய இழந்துட்டான்.

ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?

Friday, June 18, 2010

அதுக்கென்ன?

விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக
------------------------

கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்

-----------------------------

எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு

பிற்சேர்க்கை:
எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது


---------------------------
மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை

---------------------------
இதன் எதிர்மறைகள் கதிர் இங்கே! பழமைபேசி இங்கே!

Monday, June 14, 2010

சிபஎபா - Jun 15

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்- ஈரோடு கதிர் எழுதிய இந்தப் பதிவு, என்னை ஒரு நிமிஷம் யோசிக்க வெச்சது. அத்தனை பேர் இருந்தும் நடுச் சாலையில ஒரு காவலர் இறந்ததை வேடிக்கைப் பார்த்துச்சே ஒரு கூட்டம் அதுல இருந்து இவர் வேறுபடுகிறார்னு காட்டுற இந்தப் பதிவுதான் சிபஎபா’ங்கிற தலைப்புக்கே முன்னோடி. கதிர் அண்ணாச்சி உங்களை வெச்சிதான் பிள்ளையார் சுழி போடுறேன்.0000000000000000000000000000000000000000000000000000ஆப்பிள் ஐ-போன் 4 - விரிவான அறிமுகம்
இப்போ நாம எல்லாருமே ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கிற ஒரு விசயம், அதை சரியான நேரத்துல சரியான விதமா தந்திருக்காரு ஒரு வார்த்தை. கலக்கலான தொழில்நுட்ப பதிவு.

0000000000000000000000000000000000000000000000000000000

ஆதி எழுதின புஸ்தகம் பத்தின இந்தப் பதிவு ஏன் புடிச்சதுன்னு சொல்லவும் வேணுமா?

ஒற்றைச் சொல் கவிதைகள்


000000000000000000000000000000000000000000000000000000

தலைப்பைப் பார்த்து ஏதோ பெரிய இலக்கியம் எழுதப் போவதாக நினைத்து ஏமாந்துவிட வேண்டாம். இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்.... இப்படி எள்ளலோட ஆரம்பிச்ச பதிவு கடைசியில வலி ஒன்னைத் தந்துட்டு போகும்.

பரிசல்காரனின் நிராகரித்தலின் வலி

0000000000000000000000000000000000000000000000000000000

சீவகன் கதை - " பினாத்தலின்" முதல் நாவல் ச.சங்கர் எழுதிய புத்தக விமர்சனம், அருமை. கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று

00000000000000000000000000000000000000000000000000000000000000

மாதவராஜின்
பிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும்!


ஆடுமாடு -->ஒரு பாட்டி, பல நாவல்களுக்கு சமம் என்பார் எங்கள் பேராசிரியர்.

நீங்கள் மங்கலாக காட்டிய சித்திரம், கண்களாக நிற்கிறது. அந்த கண்களில்
அடைபட்டு கொள்கிறது உள்ளுறங்கும் நினைவுகளும்,
அலை அலையாய் எழும் என் ஆச்சியின் ஞாபகங்களும்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
செந்தில் குமார் தங்கவேல் எழுதிய மனிதம் மிளிர்கிறது .இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?

அவர் எங்கேனும் படித்து அதை தமிழுக்கு மாற்றினாரான்னு தெரியல, ஆனாலும் நல்லா இருந்துச்சு

0000000000000000000000000000000000000000000000000000

“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்த்திய கதை.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்

Pradeep Said
இது..இது..இது..இதுதான் ஜனா. சிறப்பான ஒருபதிவு.ஒரு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூரியா ஒரு பத்திரிகை நிருபராக நடிப்பார் அப்போது வில்லன் நான் யார் என்று தெரியுமா என்றபோது, எஸ்.ஜே.சூரியா நீ என்ன நிக்ஸனை விடப்பெரிய ஆளா? அந்த நிக்ஸனையே கதிரையை விட்டு எழச்செய்தது பேனாக்காறங்கள்தான் என்பர். அன்றிலிருந்து இதை அறிய எனக்கு ஆவல் இருந்தது இப்போது

00000000000000000000000000000000000000000000000000000000000000

ரோஸ்விக் எழுதிய நான் மதுரை வியாபாரி

ஏதோ நாமும் அந்தக் கடைக்கு உள்ளேயே உக்காந்து இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். ஒரு வித்தியாசமான நடை.

அடடே! நீங்க வேற ஒக்காந்து என் வாழ்க்கையை பாத்துகிட்டு இருந்தீகளே! ஒன்னும் போரடிக்கலையே? ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது... இந்த மதுரையிலன்னு இல்லண்ணே எல்லா ஊர்லயும் இதான் நெலம... நீங்க வேண்ணா இன்னொரு டீ சாப்புடுரீகளா?


00000000000000000000000000000000000000000000000000000000000000000000

அடுத்த வாரம் பார்ப்போமா?

இதென்ன சிபஎபா?

இதென்ன சிபஎபா?

நான் படிச்சு, ரசிச்சு, புடிச்சிருந்தா. அதாங்க சிபஎபா -சிறந்தப் பதிவு என் பார்வையில்

அதெப்படி சிறந்த? அளவுகோல் உண்டா?

அதெல்லாம் இல்லீங்க. படிச்சது புடிச்சிருந்தா போதும். அதுக்காக மத்ததெல்லாம் புடிக்காத பதிவுகள்னு எல்லாம் இல்லே. புடிச்சதுல சிறந்ததுன்னு வெச்சுக்குங்களேன்.


வாரா வாரம் வருமா?


வரலாம்,சில வாரம் வேலை அதிகமிருந்தா வராமலும் போகலாம். இப்போதைக்கு இந்த வேலையில் பதிவுலகத்துக்கு அதிகமா வேலை பாருன்னு சொல்லிட்டாங்க.


எந்தப் பதிவெல்லாம் படிச்சு தேர்ந்தெடுக்கப்படுது?

தமிழ்மணம், தமிழிஷ், சங்கமம் மற்றும் என்னோட Google Reader மூலமா வரும் பதிவுகளை மட்டுமே படிக்கிறேன். அதுல வரும் பதிவுகள் அனைத்தையும் முடியாட்டாலும், கண் பார்வைக்கு வரும் எல்லாப் பதிவுகளையும் படிச்சுதான் தேர்ந்தெடுக்கப்படுது. சொந்த அனுபவங்கள், கதை, கவிதை, தொழில்நுட்பம் ஆகிய இடுகைகளுக்கு முன்னுரிமை உண்டு.


ஏன் இந்த வேலை?


சங்கமம்’ல அழியாத கோலங்கள்னு ஒரு பிரிவு உண்டு. அங்கே இதுவரைக்கும் (2004- to till date) நல்ல பதிவுகள்னு நினைச்சு சேர்த்து வெச்சிட்டு வந்திருந்தோம். பதிவு போட வேற மேட்டர் இல்லைன்னதும் , இதையும் ஒரு பதிவாப் போடலாம்னு ஒரு எண்ணம். கணக்குக்கு கணக்கும் ஆச்சு, சேர்ப்புக்கு சேர்ப்பும் ஆச்சு.

அப்புறம்?

நீங்க URLஐ மடல் போட்டாக்கூட படிப்பேன், நல்லா இருந்தா வரும். செவ்வாய் கிழமை அன்னிக்கு வரலாம். எல்லாம் ஆணிகளைப் பொறுத்தே.

Tuesday, June 8, 2010

மெளனமாய்.. காதல்

ஒரு இருக்கைத் தள்ளி காதலி,
இரண்டு நாளாய் ஊடல்,
இடையில் மெளனமாய்
அமர்ந்திருந்தது காதல்!


-----------------------------------------------


பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்கு
நான் வைத்தப் பெயர்
’காதலி’- இப்படி
எனக்கும் அவள் பெயர் வைத்திருப்பாளோ?

------------------------------------------------

இந்தியாவுல எல்லா நதிகளுக்கும் பெண்கள் பேருதான் வெச்சிருக்காங்க. காவேரி, கங்கா, யாமுனா.. அதனாலதான் தண்ணி வத்தி வத்தி போயிருதாம். புதரகத்துல ஆம்பிளைங்க பேரு வெச்சிருக்காங்களாம். ஹட்சன், சார்லஸ் அப்படின்னு. அதான் ஆம்பிளைங்க மாதிரியே தண்ணி லெவல் குறையாம ஓடிட்டு இருக்காம்.

00000000000000000000000000000000000000000000

தாலிகட்டும் நேரம்,
மணவறையில் மணமகளாய் என் காதலி,
கனத்த மனம் கழண்டு விழும்முன் கிளம்பினேன்,
என்னைப் பார்த்தபடி தோழியிடம்
ஏதோ கிசுகிசுத்தாள்,
கதவருகே வருகையில் தோழி ஓடி வந்து சொன்னாள்
“சாப்பிட்டுப் போகச் சொல்றா”

-------------------------------------------------


மடியை முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது கன்றுக் குட்டி
வேடிக்கை காட்டி குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டினாள் அம்மா!


000000000000000000000000000000000000000000000000

மனதில் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு ஒரு பிரபல பதிவரிடம் ”மேட்டர் தெரியுமா?” என்று ஆரம்பித்தேன். “மேட்டர் எனக்கு 15 வயசுல இருந்தே தெரியும். தெரியாமலா ரெண்டை பெத்து இருக்கோம்?” அப்படின்னு கேட்டார். கேட்க வந்த விசயம் மறந்தே போயிருச்சு.
00000000000000000000000000000000000000000000000

Tuesday, June 1, 2010

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 பதிவு எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதினாத்தா பிரபலம் ஆவோம்னு இவனுக்கும் தெரியல. Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும். . சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், எல்லாத்திரட்டிகளின் பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வரலை. அப்படியே வந்தாலும் ஜப்பான்காரி குச்சி எழுத்தை மடிச்சு வெச்சிட்டுப் போவாள். அன்னிக்குன்னு பார்த்து ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, அதுவும் அனானியாய்.

”உங்கள் கவிதையை ரசித்தேன்”.
அட, ஆச்சர்யமா இருந்துச்சு.நமக்கும் பின்னூட்டம் வருதேன்னு. ஹ்ம்ம், இருக்கட்டுமேன்னு ”உங்க பின்னூட்டத்துக்கு நன்றி”ன்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my id so that we can chat in this weekend. "***@********.com".

அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!


Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங்க, வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா... வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு, தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு. • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பாகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே, உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.

 • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.

 • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.

இப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.

ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.

"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil பதிவு எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”

”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.


“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”

“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”

“அடச்சொல்லுங்க”


“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”

இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, சுறா, சிங்கம், ராவணன் பாடல்கள்னு ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு ’பேசினாள். டா போட்டுட்டா பசங்க அங்கேயே முடிவு பண்ணிற மாட்டாங்க? ‘ போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ** போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”

”அப்போ என்னோடது எல்லாம் கவிதைங்கிறியா?””பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?””சொல்றேன், சொல்றேன்”
”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.
“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”


“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”

“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”

“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்