Wednesday, August 25, 2010

பதிவுலகில் நான் : 6 ம் ஆண்டு

என்னாத்துக்கு இந்தப் பதிவு போடறேன்னு கேட்காதீங்க. இந்தத் தொடர்ல என்னை யாருமே எழுத கூப்பிடலை அப்படின்னு ஒரு பெரிய வருத்தம் எனக்கு. (நீயெல்லாம் பதிவு எழுதறேங்கிறதே நீ சொல்லித்தானேடா தெரியும் வெண்ணை’ன்னு யார்பா கொரலு உடறது). கூப்பிடலைன்னா விட்டுருவோமா? நாங்க எல்லாம் ரெளடின்னு சொல்லிகிட்டே ஜீப்புல ஏறுன ஆளுங்க ஆச்சே. ஏன்னா??? அதுக்கான பதில் கடைசி பாராவுல..

000000000000000000000000000000000
இந்தப் பதிவுலகத்துல என்னாத்த கண்ட?

ஒன்னுமே இல்லீங்க. வேலை வெட்டி இல்லாம நெறைய நேரம் இருக்கோம், எத்தையாவது படிக்கலைன்னா மண்டை வெடிச்சுரும் அப்படிங்கிற ஆளு நான். அதான் எழுதறது, எப்பவாவது.

000000000000000000000000000000000

கிடைத்தது:
நண்பர்கள்: நெறைய. நெறையன்னா நெறயவேதான். இப்போ இருக்கிற எடத்துல இருக்கிற எல்லாம் நண்பர்களுமே(90%) பதிவு/ட்விட்டர்கள் வட்டம் சேர்ந்தவங்கதான். ஒலகத்துல கால எங்கே வெச்சாலும் முதல்ல அந்த ஊர் பதிவர்ங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்கன்னா பார்த்துக்குங்களேன்.
000000000000000000000000000000000

எந்த அளவுக்கு இந்த நட்புகளை நம்பறீங்க?
எல்லாருமே நண்பர்கள்தான். ஆனா என்னோட நெருங்கிய வட்டத்துக்குள்ள வந்தவங்க ரொம்பச் சிலரே, மத்தவங்க எல்லாம் மூக்கு வரைக்கும்தான். சுருங்கச் சொல்லனும்னா நேருல பார்க்கிற வரைக்கும் யாரையுமே நான் நம்பறது இல்லே. பதிவுகள்ல நான் பின்னூட்டம் போடறதை விட அலைபேசியில பேசினது நிறைய இருக்கும். அதனாலயே பதிவுக்கு அப்பால அந்தப் பதிவர்களின் நெருக்கம் ரொம்ப ஆகிருச்சு. இதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா நம்ம ’கருப்புத் தளபதி’ நசரேயனைச் சொல்லலாம், அப்புறமா ட்விட்டர் வகிமாவைச் சொல்லலாம். அட சொல்ல மறந்துட்டேன், இப்போ நான் வேலையே பதிவுலகத்தால கிடைச்சதுதான். அப்புறம் நட்புகளைத் தாண்டி சங்கம் மக்கள், அதெல்லாம் நெருக்கம், நெருக்கம் ரொம்ப, குடும்ப பிரச்சினைகூட பேசுற அளவுக்கு. சங்கம் மக்கள் நட்பு வளையத்துல வர மாட்டாங்க, அவுங்க அதுக்கு மேல.

இந்தியா/சிங்கை சிலர்கிட்ட நல்ல நண்பனா இருக்கேன், சிலர் எனக்கு நல்ல நண்பர்களா இருக்காங்க. அதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா மாம்ஸ் பாலபாரதி, ’தடாலடி’கெளதம், எம் எம் அப்துல்லா, ’பொதிகைச் சாரல்’ ஜே கே, தேவ், கைப்பு, சிபி, கப்பி, தஞ்சாவூரான், கார்க்கி, ஜிரா, இளவஞ்சி, கொங்கு ராசா, சந்தோஷ், நந்து அப்பா(இந்த மனுசன் இந்த லிஸ்டலையே வரக்கூடாது, இருந்தாலும் 4 பதிவு போட்டிருக்காரேன்னு சேர்த்திருக்கேன்),வால்பையன்,T.V.ராதாகிருஷ்ணன் ஐயா, கோவி, குழலி, செல்லா, செந்தழல் ரவி(இவன்(ர்) எந்த ஊர்ல இருக்கா(ர்)ன்னே தெரியல, அப்படி பறக்கிறான்(ர்)), ஜீவ்ஸ், ஜி,RaamCM

ஐரோப்பாவுல ’ஓமப்பொடி’சுதர்சன், டுபுக்கு, வினையூக்கி
அமீரகத்துல ஆயில்யன், பினாத்தல், புலி(சூடான்),அபி அப்பா,சென்ஷி.
புதரகத்துல பாஸ்டன் ஸ்ரீராம்/பாலா,வகிமா கேங்(வட கிழக்கு மாஃபியா), KRS, வெட்டிப்பயல், என்னைக்குமே மதிக்கும் சத்யராஜ்குமார், பழமைப்பேசி, வழிப்போக்கன் - யோகேஷ், நசரேயன், மருதநாயகம், ச்சின்னப்பையன், சீமாச்சு, மோகன் கந்தசாமி, சங்கரபாண்டி, தமிழ் சசி, சொந்தக்கார சுகந்தி, வயசானாலும் இளமையா இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸ் ‘ராம்’,Udhaykumar.

ஈழத்து பகீ, கானா பிரபா(கானாவை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கேன். சந்திச்சதும் பாட்டெல்லாம் சுட்டுட்டு வரனும்)

இவுங்ககிட்ட எல்லாம் வாங்கப் பழகலாம்னு கூப்பிட்டு பேசலாம்னு நினைப்பேன், ஏதோ காரணத்தினால முடியல, இனிமே முடியாமலும் போகலாம் - செல்வராஜ், லக்கி, அதிசா, முரளிகண்ணன், நர்சிம், பரிசல்காரன், வெயிலான், ஜாக்கி சேகர், தாமிரா(ஆதி),ஈரோடு கதிர்(இவரை இங்கே வெச்சிருக்கிறது சரியான்னு தெரியல, ஆனாலும் சந்திச்சக்கனும்),சஞ்சய் காந்தி, அண்ணாச்சி ஆசிஃப்,குசும்பன்,செல்வேந்திரன், Badri, காசி.

இசையை பத்தி போட்ட பதிவுக்கு திரையிசை நண்பர்கள் கிட்ட வாங்கி கட்டினது(ஸ்பெசல்)

000000000000000000000000000000000

எதுக்கு இத்தனைப் பேர் இங்கே?
அட, இவுங்க ஒவ்வொருத்தரும் ஒரு பின்னூட்டமாவதா போடமாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்.

000000000000000000000000000000000

பெண் நட்புகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்களே, உண்மையா?
பொய். கவிதாயினி காயத்திரி, மை ஃபிரண்டு, அனுசுயா, இம்சை அரசி இப்படி வெகுசிலர் கிட்ட மட்டுமே பேசி இருக்கேன். மீதி எல்லாம் அரட்டையோட சரி. மேல சொன்ன நாலு பேருமே, என் குடும்பத்துல பொறக்கலையேன்னு கோவப்படுற அளவுக்கு பாசம் அதிகம். இவுங்க எல்லாம் உடன் பிறவா சகோதரிகள் கேட்டகரியில வந்துருவாங்க(செலவு மட்டும் நிறைய வெக்க மாட்டாங்க, ரொம்ப நல்ல புள்ளைங்க. ஆமா இவுங்க எல்லாம் எங்கே இருக்காங்க?). மத்தபடி பெண்களுக்கு பதிவுலகம் கஷ்டத்தைதான் தருது, பசங்கதான் குரூப்பா சேர்ந்து சுத்தறதுன்னு நல்லா இருக்காங்க. துளசி டீச்சர், கண்மணி அக்கா, பத்மா, பொன்ஸ், விக்னேஷ்வரி, சந்திரவதனா,சின்ன அம்மிணி, ramachandranusha(உஷா), இவுங்க மேல எல்லாம் நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.


000000000000000000000000000000000

நேரம் எப்படி கிடைக்குது?
அலுவலகத்துல ஜல்லியடிச்சா பரவாயில்லைங்க, அதுவே வீட்டுக்குப் போவுதும்தான் சிக்கலே. அடி, உதை, கிள்ளு, மிதி இப்படி நிறைய வாங்கியிருக்கேன். அதனால வீட்டுல இப்போவெல்லாம் பதிவு படிக்கிறதே இல்லே.ஒன்லி ஆபிஸ், அங்கே அதுதானே வேலை.

000000000000000000000000000000000

மூக்குடைப்பட்டது?

வேற என்ன ஒரு முறை அவார்ட் தரேன்னு சொல்லப்போயி, தருமத்துக்கு வாங்கி கட்டினேன். மோகன் தாஸ்கிட்ட அதே சமயத்துல வேற காரணத்துக்காக பொதுவுல மன்னிப்பும் கேட்டேன், அது ஒன்னுதான்னு நினைக்கிறேன். சில நேரங்கள்ல நாட்டாமை பண்ணப்போயி சொம்பு நசுங்கனதும் உண்டு, வெளியே நம்ம பேரு வர்றதில்லங்கிறதால அது எல்லாம் மூக்குடைஞ்சதுல வராதே. அப்புறம் BlogOGraphy ரெண்டே ரெண்டு பதிவுகள்தாங்க போட்டேன் ஒவ்வொரு பதிவும் பதிவுலகத்தை நாறடிச்சுருச்சு. தமிழ்மணத்துல சூடான இடுகையெல்லாம் தூக்க வெச்சிருச்சு, அப்படி ஒரு பவர் அதுக்கு.

000000000000000000000000000000000

காசு சம்பாரிச்சது உண்டா?

ஹே ஹே, நிறைய செலவு பண்ணினது உண்டு. சம்பாரிச்சதும் உண்டு, இன்னும் வந்துட்டே இருக்கு அது பதிவுலகம் சார்ந்த தொழில்முறை. பதிவுலகத்தாலும் சம்பாரிக்க முடியும் :)

000000000000000000000000000000000

டிஸ்கி: சிலர் பேரை எழுதாம விட்டுருப்பேன், அவுஙக எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க, ஏன்னா நீங்க இப்போ தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்கீங்க, நெஜமாலுமே சிலரை மறந்திருப்பேன், அவுங்க என்னை மன்னிச்சிருங்க, பின்னூட்டத்துல என்னை திட்டிருங்க(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி, ஏன்னா அத்தனை உதவிகள் பதிவுலகத்தால கிடைச்சிருக்கு

000000000000000000000000000000000

கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதையிது பதிவுலகத்துக்கு டேப்பரா ஒத்துவரும்.

உருமாற்றம்
கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.
பிற்சேர்க்கை:
//வகிமா வகிமா-னு சொல்லிட்டு, ரொம்பக் கவனமா பெயரேப் போடாம தவிர்த்திட்டீஙக்ளே. அவ்ளோ பயங்கரமான மாஃபியா கும்பலா அது //
இப்படி ஒரு வகிமா கேட்க, பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கே. பேரைச் சொல்லி நான் எதாவது விட்டுட்டேனா போட்டு வாங்கலாம்ல அதுக்கான எண்ணம்தான். வகிமா’ன்னா- வடகிழக்கு அமெரிக்கா மாஃபியா, இது ட்விட்டர் கும்பல். @dynobuoy @orupakkam @elavasam @ivansivan @snapjudge @njganesh @padmaa இன்னும் இது வளர்ந்துட்டே இருக்குங்க.

முதல் பாராவுக்கு பதில்:தமிழ்ப் பதிவுலத்துல நான் தடுக்கி வுழுந்த நாள் ஆகஸ்டு- 24-2005, அதாவது ஆறாவது வருசமாம் இது. இனிமேலாவது நல்ல, நல்ல பதிவா எழுதலாம்னு ஆசைப்படறேன் (வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்).

Monday, August 23, 2010

சிபஎபா- என்னாச்சு மகசூல் 08/23/10

ண்ணன் வீரபாகு மாதிரி படிச்சுக்குங்க. மொதல்லை கொஞ்சம் தொண்டை வறட்சிதாங்க இருந்துச்சு. சரி, இத்தோட போயிரும்னு பார்த்தா, இந்த இருமல் யாருக்கோ போனைப் போட்டு, மச்சான் இங்கே வசமா ஒருத்தன் சிக்கி இருக்கான், மாத்திரை திங்கமாட்டேன்னு திமிர் பேசுறான். அனுப்பி விட்டுருமான்னு கேட்டு ஒரு மீன்பாடி வண்டில போட்டு சளி, காய்ச்சல் ஆபிசுக்கு அனுப்ப, அவுங்க ஒரு 10 நாளைக்குங்க, சும்மா திமிர திமிர நோவடிச்சாங்க. சரி, அடிச்சுட்டு போங்கடா, நானெல்லாம் ரொம்ப நல்லவன்னு சொல்லி விட்டுட்டேன். விட்டாங்களா அவுங்க? அப்புறம் ஆசுபத்திரி சந்து, எமர்ஜென்ஸி, குலுக்கோசு, ஊசி, செக்கப்பு, மேக்கப்புன்னு சும்மா கதற கதற அடிச்சுதான் விட்டாங்க. இந்த நிலைமையில எங்கேன்னு பதிவ படிக்க? அதான் மக்களே கொஞ்சம் மன்னிச்சுக்குங்க, அடுத்த வாரத்துல இருந்து சிபஎபா’வை கலக்கிரலாம்.

ஆஹா எஃப்.எம்மில மத்தியானம் 2-4 மணிக்கு வர்ற அப்படிப்போடு ரோகினிக்கு பெரிய ரசிகரா ஃபார்ம் ஆகிட்டேன். நாமதான் அப்படின்னா வகிமாவும்(ட்விட்டர் வடகிழக்கு மாஃபியா) பெரிய ரசிகர்களா மாறிட்டாங்க. 2 மணியாச்சுன்னா போதும் எல்லாரும் நிகழ்ச்சிய கேட்குறது அப்புறமா அதைப் பத்தி பேசறதுமாவே பொழுது போவுது. கூடிய சீக்கிரம், எழுத்தாளர்கள் அமெரிக்கா வர்ற மாதிரி ரோகினி வட அமெரிக்கா வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை. சென்னையில ரோகினிக்கு ரசிகர்கள் எப்படி? அதிகமோ?

ஆபிசுல கணினி இல்லாம, தொலைபேசி இல்லாம ஒரு நாள் இருந்து பாருங்க? ச்சும்மா இருக்கிறது ரொம்ப கஷ்டம்னு வடிவேல் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. எவ்ளோ கஷ்டம்? ஒரு ரெண்டு நாள் இருந்துப் பாருங்க புரியும்.

ரெண்டு வாரமாவே நான் மகான் அல்ல இறகைப் போல பாட்டு அலைபேசியில பாடிட்டே இருக்கு. ரயில், வீடு, வண்டி, அலுவலகம்னு எங்கேயும் இதேப்பாட்டுதான், என்னமோ இந்தப் பாட்டுக்கு இவ்வளவு காந்தமான்னு தெரியல. அதுவும் யுவனுக்கு ஏற்கனவே காந்தக் குரல், இதுல இசையும் கம்மிவேற. இந்த வருசம் இசையில யுவன் சங்கர் ராஜாங்கம் தான். தொடர்ச்சியா பின்றாரு. இதுக்கு முன்னாடி களவாணி “ஒரு முறை இருமுறை” பாட்டுதான் பாடிட்டு இருந்துச்சு. நடுவால ஒரு 3 நாளைக்கு மட்டும் எந்திரன் வந்துட்டுப் போச்சுங்கிறது இந்தப் பதிவுக்கு தேவை இல்லாதது.

எந்திரன் பாடல்கள்,தொழில் நுட்பத்துல ரகுமானுக்கு அடுத்தப் படின்னே சொல்ற அளவுக்கு வேலை செஞ்சிருக்காரு. மதன் கார்க்கியின் சில வரிகள் மனசுல செம நச் (உதா- “ஒருவனின் காதலில் பிறந்தவனோ?, கூகிள்கள் காணாத தேடல்கள் என்னோடு”) வைரமுத்துவைப் பத்தி சொல்லவே வேணாம்- ‘தந்தை மொழி தமிழல்லவா’. technoல ரெக்கார்ட் பண்ணி, குரல் சேர்த்த விதம், தலை சுத்துது.

கெளதம் மேனன் போன வாரம் ஒரு பேட்டி குடுத்தாலும் குடுத்தாரு அஜித் ரசிகர்கள் துள்ளோ துள்ளோன்னு துள்றாங்க. கெளதம் ஆங்கிலப் படத்தைக் காப்பியடிச்சுதான் படம் எடுக்கிறாராம். மங்காத்தா Bookies தமிழாக்கம்தானே? இப்ப எங்கே போயி மூஞ்ச வெச்சிக்குவாங்க? சும்மா குதிக்க வேண்டியது.

கல்லூரியில என்கூட படிச்ச பொண்ணு எப்படியோ என் அலைபேசி எண்ணைக் கணடுபுடிச்சு ‘நீ என்னைக் காதலிச்சிருக்கலாம்டா’ அப்படின்னு சொல்லிட்டு வெச்சிட்டா. என்ன கரும்மனே புரியல. என்ன சொல்ல, ’இப்ப நான் என்ன பண்ண?’னு தம்பி மாதவன் மாதிரி நானே பாத்ரூம்ல என்ன பார்த்தே கேட்டுகிட்டேன்.

முத்தம் குடுத்துக்கொண்டே இருந்தேன்
உனக்கு சலிக்கவே இல்லையாடா? என்றாள்
வாங்கி கட்டிக் கொண்டவள்,
சலிச்சு சலிச்சுதானே நல்ல
முத்தங்கள் தர்றேன் என்றபடியே அடுத்த
இச்....இச்....இச்....

Wednesday, August 18, 2010

ரிங்க ரிங்கா தமிழில்

விஜயும் விட்டுட்டாரு, சூர்யாவும் விட்டுட்டாரு, தெலுங்குல போன வருசம் பட்டை லவங்கம் எல்லாத்தையும் சேர்த்து கலக்கினப் பாட்டு, இப்போ நீங்க தமிழில் கேளுங்க.அசல்(தல இல்லீங்க) பாட்டு ஆட்டத்துடன், எப்பத்தான் தமிழ்ல இதுக்கு குத்தாட்டம் போடப்போறாங்களே தெரியல

Sunday, August 15, 2010

ஐயோ ’அதைக்’ காணோமே

அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு ஒரு வருடமாக காதல். அவகிட்ட காதலைச் சொல்லலாம்னு முடிவு பண்ணினான். சரி எத்தனை வருசம்தான் காத்துட்டு இருப்பான் அவனும். சரியா ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தான், இடம், ஒரு அழகிய கடற்கரை, அதுவும் பசும்புல் போர்த்திய ஒரு இடத்துக்கு அப்புறம் உள்ள கடற்கரை. கற்பனை பண்ணிப்பாருங்க, ரெண்டு மைலுக்கு அடர்ந்த காட்டுல வண்டியோட்டிட்டுப் போறோம், மனிதர்களின் நடமாட்டமே அங்கே இல்லை. காட்டோட முடிவுல சின்ன மேடு, அப்புறம் அரை மையிலுக்கு பச்சைப் பசும் புல்வெளி, அப்புறம் கடல். அதுவும், அலை கொஞ்சம் கூட இல்லே,தண்ணியோ தெள்ளத் தெளிவா கண்ணாடி மாதிரி இருக்கு. மக்கள் நடமாட்டமோ, ரொம்ப ரொம்ப கம்மி. இந்த மாதிரி இடத்தைத்தான் அவன் முடிவு பண்ணி கூட்டிட்டு வந்தான்.

அந்தப் பெண்ணுக்கோ அந்தக் கடற்கரையை பார்த்தவுடனே சந்தோசம்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம். ”டேய், இப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லே. இயற்கைதான் எவ்வளவு அழகு. எனக்கு இயற்கை புடிக்கும்னு தெரிஞ்சே என்னை சரியான இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேடா.நன்றிடா!” என்றபடியே அவன் நெத்தியில முத்தம் குடுத்துட்டு கடலை நோக்கிப் போனாள். வழக்கம் போல கடல்ல குளிக்கிறதும், பின்னாடி வந்து சூரிய வெளிச்சத்துல காயுறதுமாவே பகல் நேரத்தை செலவு பண்ணினாங்க, சாயங்காலம் ஆச்சு. இருட்டினா கடற்கரைய பூட்டிருவாங்க. அதனால காதலை சட்டுபுட்டுன்னு சொல்லிடலாம்னு நினைக்கும் போதே அவ எந்திரிச்சு கடற்கரையில நடக்க ஆரம்பிச்சா. இவனும் அவளுக்குத் தெரியாம மோதிரத்தை பொட்டியில இருந்து எடுத்தான். அவளுக்காகவே ஆசை ஆசையா அவனும் அவனோட அம்மாவும் கடை, கடையா ஏறி இறங்கி வாங்கின மோதிரமது. 18 கேரட் தங்கம், உச்சியில விலை உசத்தியான வைரம். சூரிய வெளிச்சத்துல பளிர்னு மின்னுச்சு. ஆமாங்க, அதனோட வெலை .... பின்குறிப்புல இருக்கும், ஹல்லோ அப்புறமா பாருங்க. மோதிரத்தை பத்திரமா கையில எடுத்துகிட்டு அவ பின்னாடியே நடந்தான், கையை இருக்கமா மூடிகிட்டான்.ஒரு ஆச்சர்யத்தை குடுக்குனமில்லை, அதான்.

ரெண்டு பேரு தோளுக்குத் தோளா கொஞ்சம் தூரம் நடந்தாங்க. சடார்னு அவளுக்கு முன்னாடி முட்டிப்போட்டு உக்காந்து ”நான் உன்னைக் காதலிக்கிறேன், என்னைக் கண்ணாலம் பண்ணிப்பியா?”ன்னு கேட்டு மோதிரத்.. ஆ மோதிரத்தைக் காணோம். அவளுக்கோ அவன் காதலைச் சொன்னவுடன் என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறா, ஆனா அவன் மோதிரத்தை தேடுறான். சரின்னு அவன் மோதிரத்தை தேடுறதை பார்த்துட்டு இவளும் தேட ஆரம்பிச்சா. சுமார் ரெண்டு மணி நேரமா தேடுறாங்க, கிடைக்கவே இல்லை, இதைக் கேள்விப்பட்ட மத்த மக்களும் அவங்களோட சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டாங்க. அங்கே இருந்த காவலர்களும் சேர்ந்து தேட.. ஒரு கூட்டமாவே, தேடோ தேடுன்னு தேடுறாங்க. ஹ்ம்ம்ஹ்ம்ம் கிடைக்கவேயில்ல. இருட்ட ஆரம்பிச்சதும், மக்கள் மன்னிச்சுக்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இருட்ட ஆரம்பிக்க, இனிமே தேடுறதுல புண்ணியமில்லைன்னு, அவனும் அவளும் கிளம்பிட்டாங்க.

பின் குறிப்பு:
1. வீட்டுக்குப் போற வழியில அவனோட காதலை ஏத்துக்கிட்டு கண்ணாலத்துக்கு சரி சொல்லிருச்சு அம்மணி
2. மோதிரத்துக்கு காப்பீடு பண்ணிருந்தாங்க அவனோட அம்மா.
3. அந்த மோதிரம் இன்னும் அந்தக் கடற்கரையில இருக்கலாம்.
4. அந்த மோதிரத்தோட விலை ரொம்ப கம்மிங்க. $9000 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்புல 4லட்சத்துக்கு பக்கம்.

நல்லா சொல்றாங்கடா காதலை!

செய்தித்தாள்ல வந்த சேதி, நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கேன்.
மூலம்:http://www.thebostonchannel.com/news/24597272/detail.html

Saturday, August 14, 2010

ஆன்சைட்டும் ஆகஸ்டு 15ம்

விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு

வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எழுதி, பதிஞ்சதுங்க. ஒரு மீள்பதிவு

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்