#tnfisherman a March தமிழ் மீனவர்களுக்காக TWITTERல் போராட்டம்

ஒரு நல்ல விசயத்துக்காக இதே trendingஅ நம்ம மக்கள் பண்ணிட்டு இருக்காங்க தெரியுங்களா? அது தான் #tnfisherman. கிட்டதட்ட எல்லா தமிழ் ட்விட்டர்களுமே சேர்ந்து இந்த trending கொண்டு வந்திருக்கோம். Trendingனா, அதாவது ஒரு இந்த நேரத்துல மக்கள் என்ன அதிகமா ட்விட் பண்றாங்க அப்படிங்கிறதுதான். நாம் இழந்து வர்ற தமிழ் மீனவர்களைக் காப்பாத்த, media வுக்கு நம் பிரச்சினயை கவனத்தில் கொண்டுவர்ற போராடிட்டு இருக்கோம். காசா பணமா, செயிச்சா உசுருங்கள காப்பாத்தலாமே. எல்லாச் செய்தி நிறுவனஙகளும் ட்விட்டர்ல உலாவிட்டு இருக்காங்க, எல்லா பிரபலங்களும் உலாவுறாங்க. யாராவது இதைப் பத்தி பேசி அரசுக்கு நம்மளோட சோகத்தை தெரிவிக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம்தான். இன்னைக்கு மூணாவது நாள்.

இதுலயும் ஒரு சைவ டிவிட்டர் வந்து - ‘ 1000 மீன்களை கொல்றாஙகளே, ரெண்டு மனுச உசுரு போனா என்ன?’ அப்படின்னு கேட்டாரு. மயிறு, தமிழனை கொல்றவன் தமிழ்ந்தாண்டாங்கிற உண்மையை நிரூப்பிச்சாரு. சரி, புல்லுருவிங்க இல்லாம தமிழ்நாடு இருக்குமா? எட்டப்பன் தமிழந்தானே. என்னமோங்க trend வந்திருச்சு. மூணு நாளா காப்பாத்திட்டே வரோம். எவ்ளோ நாள்/நேரம் இன்னும் இருக்கும்னு தெரியல. இதனால என்னத்தை பெறுவோம்னும் தெரியல. ஆனா கொஞ்சம் மக்களுக்கு நம்ம கஷ்டத்தை தெரிவிச்சாச்சு. இதுதான் நம்மாள செய்ய முடியுதுன்னு கவலைப்படாதீங்க. நாம் எறும்பா இருப்போம், அம்மியை கொஞ்சம் நகர்த்தி வெச்சாலும் சந்தோசம்தானே. ட்விட்டர்களின் சத்தம் விகடன் வரை கேட்டிருக்கு. சில தமிழ் பிரபலங்கள் ஆரம்பத்துலேயே குரல் குடுக்க மறுத்தாங்க, இன்னமும்தான். பழைய வன்மம் கூட காரணமா இருக்கலாம். 2006லே இருந்தே இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யுது. எல்லா செய்தி நிறுவங்களும் இதை கவனத்துக்கு எடுத்துகிட்டு ஏதாவது செஞ்சா கொஞ்சமாவது நல்லது நடக்கும்.

 ஏதாவது செய்யலாமே பாஸ், கணினிக்கு முன்னாடிதானே. வாங்க. ஆதரவு தாங்க.

தமிழ் ட்விட்டர்களுக்கு வந்தனங்கள்!

இணையத்தில் இணையுங்கள் http://www.savetnfisherman.org/

Comments

 1. சமூக வலைதளங்கள் , வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?
  சிங்கள ராணுவத்தின் கையில் செத்து மடியும் தமிழ் மீனவர்களுக்காக
  ஒன்றிணைவோம் .
  Post ur tweets with #tnfisherman at the end

  ReplyDelete
 2. நான் இதுக்காகவே ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டேன். முதல் ட்வீட்டும் அதே.. பார்க்கலாம், ஊடகங்களுக்கும் அரசுக்கும் உண்மைலயே மனசாட்சின்னு ஒன்னு இருக்கான்னு.

  ReplyDelete
 3. இதுலயும் ஒரு சைவ டிவிட்டர் வந்து - ‘ 1000 மீன்களை கொல்றாஙகளே, ரெண்டு மனுச உசுரு போனா என்ன?’//
  சைவம் சாப்பிடறது மட்டும் காருண்யம்னு நினைச்சிட்டான் போல இந்த பரதேசி

  ReplyDelete
 4. தேவையான பதிவு இந்த நேரத்தில். நன்றி!

  இதுவும் அங்கேதான் யாரோ சொன்னாங்க...

  awpoet Award winning Poet
  @
  @Prabha40 thegigatanji I follow dharma. hate Adharma. I do not wear #twibbon 4 #TNfisherman . if u ppl abuse Bharat Jawans & N Ramji I react

  ReplyDelete
 5. உங்களோடு நானும் இணைகிறேன் சகோதரா. காலத்திற்கேற்ற காத்திரமான செயல்.

  ReplyDelete
 6. "1000 மீன்"யாருங்க அந்த அறிவாளி. நான் பாக்காம போனேனே. வேற ஒருத்தர் இலங்கைத்தமிழர்ங்கற போர்வைல வந்தாரு வாங்குன வாங்குல ஓடிப்போயிட்டாரு. என்னா கூச்சம் பேரக்கூட சொல்ல வெக்கம் அவருக்கு ;-)) ஹாண்டில இங்க போட்டு பிரபலமாக்க கூடாது பாருங்க.

  ReplyDelete
 7. தேர்தல் நெருங்குவதால் - கொஞ்சம் அடக்கி வாசிக்க ஏற்பாடுகள் நடக்கும் - பிறகு கட்டவிழ்த்து விட்ட கதை தான்.

  ReplyDelete
 8. http://eksaar.blogspot.com/2011/01/save-tn-fisherman.html

  இதையும் படிக்கவும்.

  ReplyDelete
 9. தொடர்ந்து அதிரடிப்போம் தல

  ReplyDelete

Post a Comment

Popular Posts