மூனு - சஙகிலித் தொடர்

ரொம்ப வருசம் ஆச்சு இப்படி கேள்வி பதில் பதிவு போட்டு. முன்னொரு காலத்துல ஆறு, எட்டு, நாலுன்னு போயி இப்ப மூனுன்னு வந்திருக்கு. சிறுமுயற்சி முத்துக்கா ஒரு open invitation வெக்க, அட எழுதுவோமேன்னு தோணிச்சு. பார்த்திபன் சொல்றா மாதிரி கேள்வி கேட்குறது ரொம்ப புடிக்கும், ஆனா கேட்குறது நானா இருக்கனும்’ இதான் நம்ம கொளுகை(உனக்குமா?)





சரி ஆரம்பிப்போமா?

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பயணம். வகை தொகையில்லாம வண்டி ஓட்டுறது,அதுவும் தூரமா போயிட்டு வர்றது, காரணமே இல்லாம பயணிக்கிறது இப்படி. இதுக்காக கார், பைக்குன்னு நினைச்சிறாதீங்க. சைக்கிள்ல ஆரம்பிச்சு, சும்மானாச்சுக்கும் 3-5 மைல் வரைக்கும் நடக்குறது கூட எனக்கு புடிக்கும். ஆனா ஜிம்ல treadmilல நடக்கறது மட்டும் ஆவாது.

* பாட்டு கேட்குறது. திருச்சி, கோவை, இலங்கை வானொலியில ஆரம்பிச்ச பழக்கம்., இப்ப செல்பேசியில ஒரு FM விடாம கேட்டுகிட்டு இருக்கேன்.

* வாசிப்பது. புஸ்தகம், பதிவு, ட்விட், buzz, அட இவ்வளவு ஏங்க, மொக்கையா இருக்கிற நேரத்துல விளம்பரம், ஸ்பாம் மெயில் கூட விடறதில்லை.


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

* நண்பர்களை நம்பும் போது சரியா நம்மள ஏமாத்துறது. அது விளையாட்டா இருந்தாலும் எனக்கு புடிக்காது. நேத்து மாயவரத்தான் அப்படித்தான் செஞ்சாரு. இன்னிக்கு எலியும் பூனையுமா ஆக்கிட்டேன். சும்மா இருக்கேன், தொலைபேசி எண் குடுங்க மொக்கை போடலாம்னு ட்விட் ஒன்னு போட்டேன். சும்மா இருக்காம எவனோ வெளங்கா வெட்டி பேசுற தொலைக்காட்சி நிகழ்ச்சியோட எண்ணைத் தந்தாரு. நானும் யோசிக்காம பேசிட்டேன். மவனே, வந்துச்சே கோவம், பொதுவுல அப்படி யாரையுமே பேசினது இல்லே. வயசு மரியாதை இல்லாம கூட பேசிட்டேன். அப்புறமா யோசிச்சேன். சிறுபுள்ளைத்தனமா அந்தாளுதான் பண்றாருன்னா நாமளுமா, கொஞ்சம் பெரிய மனுசனாட்டம் இருக்கலாம்னு மன்னிப்பும் கேட்டுட்டேன். பெரியவர் இல்லையா வயசுக்காவது மரியாதை குடுத்திருக்கலாம். ப்ச்.

* திட்டு. திட்டுறது எனக்கு புடிக்கவே புடிக்காது. எங்கம்மா சின்னவயசுல (இன்னும் சின்ன வயசு தானேடா) என்னை நிறைய திட்டிட்டாங்க போல. அதான் புடிக்கிறது இல்லே. அன்பா சொன்னாவே நடந்துரும்ங்கிறது என்னோட எண்ணம்

* தமிழில் ஆங்கிலம். தமிழ் தெரியும் ஆனா பேசமாட்டாங்க. சும்மா கலாய்க்கவோ, தொழில் முறைக்கோ பேசிக்கலாம்,. வீட்ல கூடவா? நாம தமிழ்ல பேசினா பொடணிக்கு பின்னாடி போயி பெரிய இவன்னு பேசுறது. நீங்க என்னா ஆக்ஸ்போர்ட்க்கு பக்கத்துலயா பொறந்தீங்க? தமிழ்நாட்டுலதானேடா

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

*ப்ப்ப்ப்பாஆம்பு. பார்க்கக்கூட புடிக்காத ஒரு ஜந்து. ஐயோ. அடுத்த விசயத்துக்கு போயிருவோம்
*Snakes
*நாகராஜன்னு பேர் வெச்சிருந்தா கூட பயம்தான். ஆல் பயம் ஒன்லி பாம்ப்ரூஊ.நோமோர் பயம்ஸ்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* பெண்கள்
* Girls
* ladies
(மேலே இருக்கிறவங்க யாரையாவது ஒருத்தரை புரிஞ்சிகிட்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம். முத்தக்கா, இதை சாய்ஸ்ல வேற விட்டிருந்தாங்க :))

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

* இப்ப இருக்கிறது. கழுவாத தேநீர் குவளை(டீ கப்னு தமிழ்ல சொல்லுவாங்க)
* என்னோட செல்பேசி, அலுவலக தொ(ல்)லைபேசி
* கணினி(சோறு போடுற ஆத்தா)

6) உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
இப்போதைக்கு
*சிவகார்த்திகேயன்
*வடிவேலு
* கவுண்டர்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

* இந்த வருசம் 100 பதிவாவது போடனும்னு எல்லாத்தையும் Draftல போட்டுட்டிருக்கேன்

* ஒரு குறும்படம் (வரும் ஆனா வராது ஆனா வரும்)

* தவிர, சும்மாதான் இருக்கேன்னு ஒத்துகிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஓஹ் சீரியஸான கேள்வி,

* முதியோர்களுக்கான இல்லம்

* சொந்த வீட்ல குடியிருக்கிறது

* இசையமைக்கிறது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பல் விளக்குதல்

* குளித்தல்

* சாப்பிடுதல்

(இந்த மூன்றையுமே முடிக்க எத்தனை லட்சகணக்கான பேர் கஷ்டப்படறாங்க தெரியுங்களா? என்ன அவுங்களுக்கெல்லாம் வயசு 6க்குள்ள இருக்கும்)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

* இந்த மாசம் சம்பளம் இல்லே

* நீயெல்லாம் பதிவு போடலைன்னு யார் அழுதா?

* மத்தவங்க என்கிட்ட கடன்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* பதிவு போட்டவுடனே 100 பின்னூட்டம் வர மாதிரி எழுதறதுக்கு கத்துக்கனும்

* விசில் அடிக்க - சே, தொண்டை வறண்டு, தலை வலி வந்ததுதான் மிச்சம். அஸின் மாதிரி யாராவது சொல்லிகுடுக்க சொல்லி கேட்டா சீக்கிரமா கத்துக்குவேன்(நானென்னா விஜயான்னு கேட்க கூடாது)

* இந்த அமெரிக்கன் மாதிரி இங்கிலி பீசு பேசனும் (முனியப்பன் கோவில் மேல் பள்ளிகூடத்துல படிச்சதுக்கு இங்கிலீசுல பேசுறதே ஓவரு, இதுல அமெரிக்கன் மாதிரியா. கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ?)

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
* மனைவி சமைக்கிறது
* அம்மா சமைக்கிறது
*  வேற யாராவது சமைக்கிறது
(’யாரு சமைச்சாலும் ரவுண்டு கட்டுவேன்’ அப்படிங்கிறதைதான் இப்படி சொல்றேன். அன்லிமிட்டட் மீல்ஸ்னா ரெண்டே ரெண்டு மட்டும் சாப்பிடுவேன்)

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அது மாசம் மாசம் மாறுமே. இந்த மாசம்

* டூ படத்துல இருந்து நதியிலே

* 180- நீ கோரினால்

* யுவன் யுவதி - Oh my angel

14) அழைக்க விரும்பும் 3 பேர்
* புதுகை அப்துல்லா

* ஜாக்கி சேகர்

* இந்த வார நட்சத்திரம் சிபி செந்தில்குமார்

Comments

  1. \\வாசிப்பது. புஸ்தகம், பதிவு, ட்விட், buzz, அட இவ்வளவு ஏங்க, மொக்கையா இருக்கிற நேரத்துல விளம்பரம், ஸ்பாம் மெயில் கூட விடறதில்லை.// :))

    அழைப்பை ஏற்று எழுதியதுமில்லாம.. அந்தக்காலத்தை வேற நினைவூட்டிட்டீங்க.. ஆறு எட்டுல இருந்து .. மூணு ..என்ன கணக்கு இது.. கழுதை தேஞ்சு கட்டெரும்பாகிடுச்சோ..

    படித்து ரசித்தேன் நன்றி.:)

    ReplyDelete
  2. Rathnavel, பன்னிக்குட்டி ராம்சாமி--> நன்றி! நன்றி!

    ReplyDelete
  3. >>நக்கல் ஜாஸ்தி தெர்யுது பதிவில் ஹா ஹா

    தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. சீனியர் இருவரும் முடிக்கட்டும் .. நான் கமிங்க் செவ்வாய்

    ReplyDelete
  4. கோபி- நன்றி
    முத்தக்கா --> ஊருக்கு வந்துட்டு ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டீங்களே.
    சிபி-செந்தில் --> அண்ணாத்த பதிவு வரும்னு பார்த்துட்டு இருக்கேன்

    ReplyDelete

Post a Comment

Popular Posts