Wednesday, August 31, 2011

மங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review

”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவரு” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனா படமே வேற மாதிரிங்க.

பாஸ்டன்ல, முதல் நாளுக்கு ஒரே காட்சி, அதுவும் ராத்திரி 9:45க்கு, செவ்வாய்கிழமை, இன்னிக்கு எவன் வருவான், அதுவும் ஒரு வேலை நாளுல, அஜித் படத்துக்கு” அப்படின்னு நினைச்சுகிட்டு அரங்கத்துக்குப்போனா ஆச்சர்யம். என்னா கூட்டம் (இங்கேயெல்லாம் 60 பேரே பெரிய கூட்டம்தான்).

அஜித்திக்கு இத்தனை ரசிகர்களான்னு சந்தேகம்தான். வெங்கட்பிரபுவுக்காகவும் வந்திருக்கலாம். “சரக்கடிச்சா இளையராஜா பாட்டு கேட்கத்தோணுதுடா”, சரக்கடிச்சுட்டு அடுத்த நாள் காலையில் “இனிமே சரக்கே அடிக்கக்கூடாதுடா” இப்படி வர்ற வசனங்கள்தான் பலமே. கதையே இல்லாம காட்சி வெக்கிறது இவரோட சாமர்த்தியம். அதேதான் இந்தப் படத்திலேயும். எப்பவுமே ஒரு அணி வெச்சிருப்பாரு, காமெடிக்குனு பிரேம், வைபவ், அரவிந்த்(இப்படி சப்பை பசங்கன்னு இவரே சொல்லிக்கிடுவாரு, நாமளும் சிரிச்சிக்குவோம்).

கெட்டவங்களா, அஜித், வைபவ், மஹத், JP, அர்விந்த் ஆகாஷ், பிரேம், லட்சுமிராய், அஷ்வின். ஆமாங்க படத்தில் எல்லாருமே கெட்டவங்க. படத்தோட கதை, எதையாவது ஒளிச்சி வெச்சி தேடனும்.. அப்ப IPL சூதாட்டம்னு சேர்த்துக்கலாம்- இப்படித்தான் அமைஞ்சிருக்கும் கதை

நாயக சினிமா உலகத்தில் 50 வது படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஜித்தின் தைரியத்தையும் பாராட்டியே ஆவனும்.
”ஆமாங்க, எனக்கு நாப்பது வயசுதான்,வில்லந்தான். குடிச்சு குடிச்சு தொப்பை வந்துருச்சு, முடியெல்லாம் நரைச்சுப் போயிருச்சு, அதுக்காக பணமும் பொண்ணும் வேண்டாமா?” இதுதான் அஜித்தின் கதாபாத்திரம். இந்தா பார்த்துக்க இதுதான் என் தொப்பைன்னு சட்டையில்லாம நிக்கிறது, ரொம்பவே தைரியம்தான். அதுவும் Interval Block க்குன் முன்னாடி செஸ் போர்ட் வெச்சிருக்கு ஒரு திட்டம் போடுறது காட்சி அப்ளாஸ், வெங்கட் அஜித் மேல நம்பிக்கைக்கு அந்த ஒரு காட்சியே போதும். அதுவும் ரத்தமெல்லாம் பச்சை நிறமாய்..:)

நான் ஆக்சன் கிங்தான், நான் பிரேம்ஜி- காமெடியந்தான், நான் JP, வில்லன் - கதாநாயகியோட அப்பாதான், இப்படி நிறைய தான்கள்.

கதைக்கான களம் கிரிக்கெட்.. ஆமாம் மீண்டும் கிரிக்கெட். இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது போல இது Ocean11/12/13 எல்லாம் இல்லை(வேற எதனாச்சும் இருக்கலாம்) IPLல்கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது,(எப்படி விட்டார்கள் தணிக்கையில்?)அதற்கான பணத்தை ஒரு அணி கொள்ளையடிக்கிறது, அந்த அணியிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார்கள் இன்னொரு ’அணி’. அவனைப் போடு, இவனையும் போடு, எல்லாத்தையும் போடுறா, இதுக்கு நடுவுல காவல்துறையும் பணத்தையும் கொள்ளையர்களை தேடுகிறார்கள், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பல திருப்பங்களோடு ஆடுவதுதான் மங்காத்தா.

கதாப்பாத்திரங்களை விம்பார் போட்டு விளக்கவே தேவைப்படுது முதல் பாதி. இரண்டாம் பாதியோ, ஒவ்வொரு காட்சியிலும் திருப்பம். ஒவ்வொருத்தரும் தன் பாணியில் சொல்லி ”முடிக்கை”யில்
முடிந்து போகிறது படம். ஙொக்கா மக்கா, இரண்டாம் பாதியில இயக்குனர்தான் தெரியறாரு.  Example: இரண்டு குழுக்கள் அடிச்சுக்கும். வில்லன் கூட்டமும்,  இன்னொரு வில்லன் கூட்டமும்(அதான் நல்லவங்களே இல்லையே) அஜித் குழுவுல 3 பேரு. அவுங்களுக்கு உள்ளேயும் அடிச்சிக்குவாங்க, எதிர்த்த கும்பலையும் அடிப்பாங்க. எவன் எவனை அடிக்கிறான்னே தெரியாது. ஆனா தெளிவா புரியும்(Yuvan's Cliche RR- returns)- Director's Touch- Stunt Touch. Chasingல அஜித் கலக்கியிருக்காரு(இதெலென்னா ஆச்சர்யம்)

”எவந்தாண்டா நல்லவன்?” அப்படின்னு ரசிகர்கள் உச்சதாபியில் கத்தும் போது ”எவனுமே இல்லைடா” என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி அஜித்தின் அதகளம், வைபவ்வை நம்பி வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில் முதல் பாதி. ஒரு டூயட்டும் உண்டு. வாழ்கைடா வைபவ். அதுவும் அஞ்சலியொட டூயட்டுல. டேய் வாழ்வுதாண்டா. அஞ்சலி இந்தப் படத்தில் too Sexy. வைபவ், பீமா விக்ரம் மாதிரியே rough and tough. அப்புறம் அழுவாச்சி, அப்ரூவர். இப்படி நிறைய மாற்றம். நீ ஜெயிச்சிட்டடா வைபவ்.


மஹத், நடிக்க ரொம்ப சிரமப்பட்டிருக்கார்(வரலை). ஆனால் ஆட்டம் பாட்டத்தில் balance செஞ்சிக்கிறாரு உண்மையைச் சொல்லப் போனால், பாடல்களில் மஹத்தும், வைபவும்தான் தெரிகிறார்கள். குத்தாட்டத்துக்கு எது அஜித்னு முடிவு பண்ணியே ஆளை இறக்கிருக்காரு வெங்கட், ஊமைக் குசும்பன்யா நீயு) மஹத்திற்கு ஏன் இத்தனை ரசிகைகள்? திரையரங்கில் அவருக்கென தனி ஜொள் ஆறே ஓடுது. கேட்ட இசுமார்டா இருக்கானாம். நடிக்க வரலையேன்னு கேட்ட பொண்ணுங்க சொல்லுது அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம். அரவிந்த் ஆகாசுக்கு பெரிய கதாபாத்திரம், குடுத்த காசுக்கு சரியா கூவியிருக்காருபா. அஷ்வின், பரவாயில்லை ராசா, முன்னேறிடுவே, தனியா தேடுப்பா.

ஜெயப்பிரகாஷ், வழக்கம் போலதான் (ரகுவரன் இல்லையென்ற குறை தீர்ந்தது). திரிசா, வருகிறார், ஆடுகிறார், கொஞ்சுகிறா, அழுகிறார். அவ்வளவுதான். ஆண்டிரியாவுக்கோ அதிலும் பாதிதான்.லட்சுமிராய் ஆரம்பம் முதல் கடைசி வரை, ரொம்ப கொஞ்சம் துணியோட வந்து போறாங்க. ரெண்டு பாட்டுல செம ஆட்டம் (அம்மணி, தோணி ஏன் உங்கிட்ட Boldஆனாருன்னு இப்பத்தான் தெரியுது). சொல்லிக்கொள்ளும்படியான வேடம்தான்.  வழக்கம்போல பிரேம்ஜி நகைச்சுவைக்கு உத்தரவாதம். பல படங்களில் பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதாபாத்திரம்.வசனங்கள்(அடுத்தவங்களுதுதான்) பேசியே தப்பிச்சிக்கிறாரு.(பெரியப்பா பாட்டும், அடுத்தவங்க வசனமும்தான் பிரேம்ஜி.. போன படத்துல “கண்கள் இரண்டால்” இந்தப் படத்துல “நேத்து ராத்திரி அம்மா”)

குறைகள்: மொக்கையா ஒரு காவல்துறை அதிகாரி இறந்து போவது, அதுக்கு விளக்கம், அதைவிட மொக்கை. பம்பாயில் எல்லாருமே தமிழ் பேசுறது, ஒரே தெருவில் இருந்தாலும் காவல்துறை மெனக்கெட்டுத் தேடுவது, அஜித் என்பதால், காவல்துறை அதிகாரி என்றாலும் மொத்தமாக எல்லாரும் நம்புவது(நாமளும்தான்), பிரேம்ஜியின் Clicheகள்(போதும்யா சலிக்குது). மொக்கை சீனுக்கும், ரத்தத்துக்கும் திரை போட்டு ஏன் மறைக்கிறது.

இசை : யுவன் 30% (Cliche in some scenes from Goa, Saroja). யுவனில்லைன்னா நாறியிருக்கும். அத்தனை chasing, அத்தனை வசனம். fillup பண்ண வேணாமா?

ஒளிப்பதிவு: சக்தி சரவணன் 30% அதுவும் கடைசியா அர்ஜூனை காட்டும் போது ஒரு லோ ஆங்கில் வருமே. ஷ்ஹ். பின்னிட்டீங்க சார். ஏகப்பட்ட கட் ஷாட்ஸ், இல்லாட்டா ரிச்னெஸ் வராதுல்லை.

ரஜினி பாணியில் அஜித். ஆமாங்க, இப்படி இயக்குனரிடம் சரண்டர் ஆவறது நமக்குத்தான் நல்லது. விஜய் சார் கொஞ்சம் யோசிங்க.

அர்ஜூன், கிடைத்த இடத்தில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுவும் இறுதிக்காட்சியில். Welcome Back Action King. அர்ஜுன் அஜித்தை “தல” என அழைப்பதும், அஜித் அர்ஜூனை ”வாய்யா ஆக்சன் கிங்கு” என்று கிண்டலாவே கூப்பிட்டுக்கிறதும் ரசிக்க வைக்கிறது. விஜய் படம் கூட வருதுங்க. சந்தானம், ரஜினி, கமல், சாம் ஆண்டர்சன் என எல்லாவிடத்திலேயும் சொல்லியடித்திருக்கிறார்கள். கைத்தட்டல் அள்ளுகிறது. அஜித் திட்டமிடும் போது வீடு முழுக்க அஜித்களும், ”நீ நான்” பாடலில் வரும் Computer Graphicsம் அட போட வைக்கிறது.

அஜித்திற்கு தேவைப்பட்டது ஒரு ஹிட், 50 வது படமும் நல்ல படமா இருக்க வேண்டும். ரெண்டுக்கும் ஒரே டிக் மங்காத்தா.

என்னோட மதிப்பெண் 7.5/10

Pics: Thanks to India Glitz(Online media Partner)

Thursday, August 25, 2011

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் - தமிழ்மணம் என்ற திரட்டி

இந்தப் பேட்டி மறைந்த அண்ணன் சிந்தாநதி பதிவிலிருந்து மீள் செய்யப்படுகிறது. Blogspirit எந்தக் காலத்திலேயும் மூடப்பட்டும் என்ற நிலையுள்ளதால் அவருடைய இந்த வரலாற்று சிறப்புமிக்க பேட்டியை மீள் பதிவாக்குகிறேன்.
நன்றி: காசி

கே: தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (கீழே பார்க்கவும்)


கே: எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.


இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

கே: நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

கே: தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்க என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:

வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.

'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/

(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)

முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...


சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக தோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

---------------------------------------------------------------------------------

இந்தப் பதிவுக்கான காரணம், பலவுண்டு, அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என்று சொல்லி முற்றிலுமாக நாம் அழித்தது இப்போ இருக்கும் கட்டத்தைத்தான். இன்னொரு பதிவுல அதைப் பத்தி பேசலாம்.

2004ம் ஆண்டு Aug-24ல் முதல் பதிவு எழுதினேன். இன்றோடு 7 ஆண்டுகள் ஆகிறது.. தமிழ்மணம் இல்லாவிட்டால் இந்த நிலை எட்டியிருக்க இயலாது. அதனால்தான் தமிழ்மணத்தையும் அண்ணன் காசியையும் சிறப்பிக்க ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். காசி பேட்டி என்றால் வர மாட்டார். அதான் மறுபதிவு.

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். உங்களின் மேலான அன்புக்கு எனது நன்றிகள்!

Friday, August 19, 2011

கீச்சுகள் Aug-2011 சார், புதுசா ஒரு கதை சார்

வேலாயுதம் பற்றி ஜெயா TV பேட்டியில், இயக்குநர் ‘ஜெயம்’ ராஜா பேசுனதை பார்த்ததும் செம கோவமுங்.  பின்னே, opening song இல்லீங்க. வித்தியாசமா 3 காட்சி தள்ளி அந்தப் பாட்டை வெச்சிருக்கோம். - தங்கச்சி- அண்ணன் பாசம் புதுசா பண்ணிருக்கோம்னு விட்ட கதை negative promotionஆத்தான் ஆகிப்போச்சு.

தை வெச்சி நான் ஒரு tag ஆரம்பிச்சு வைக்க twitterல பட்டைய கிளப்பிருச்சு. அதுல நான் ட்விட்டதுல கொஞ்சம் இங்கே இருக்கு .. மீதியை இங்கே சொடுக்கிப் பார்த்துக்குங்க 
நான் 1 தடவை சொன்னா 100தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா. நீ ஒத்த பார்வை பார்த்தா போதும் 100 ஆயுதம் - வேலாயுதம் #StoryToVijay

Apple போட்டி சார். நீங்க 100கிமீ வேகத்துல ஓடுறீங்க சார். வில்லன் டேபிலைச் சுத்தி வந்து ஜெயிச்சுடறார் சார். Climax Sir #StoryToVijay

சார், புதுசா ஒரு கதை சார். ஒரு மெலடி தமிழ்நாட்டையே உலுக்குன ஒரு மெலடி பாட்டை நீங்க டப்பாங்குத்து ஆட்டம் ஆடி கெடுக்குறீங்க சார் #StoryToVijay

சார், புதுசா ஒரு கதை சார். டபுள் ஆக்ட் இல்லீங் சார். 140 ஆக்டிங் சார். படத்தோட பேர் twitterஆயுதம் சார் #StoryToVijay

சார், புதுசா ஒரு கதை சார். டைட்டிலை ஆரம்பத்திலும், கடைசியிலும் போடறோம் சார். இடையில் intervalம் வேற விடறோம் சார். #StoryToVijay
--------------------oo00oo--------------------

** சிக்கன் குருமா வசனம் பேசினால் : இதுவரைக்கும்தாண்டா நான் சைவம். இனிமேதான் அசைவம்டா (punch dialogue)

--------------------oo00oo--------------------

** புது சட்டசபை வளாகம் மருத்துவமனையாக மாற்றப்படும். அவுங்க கொஞ்சம் அடிச்சாங்க. இவுங்க கொஞ்சம் அடிக்க வேணாமா?

--------------------oo00oo--------------------
அரிதான ஒரு காணொளி- இந்தியா - சுதந்திரம் வாங்கியது


** Recession வந்திருச்சுடா மாப்ளே, பயமா இருக்குடா' என்று நண்பனிடம் சொன்னதுக்கு, recess 'வந்தா போயிட்டு வாடா'என்கிறான். Recessionக்கும் recess periodக்கும் வித்தியாசம் தெரியாதவனை வெச்சிகிட்டு என்ன பண்ண?

--------------------oo00oo--------------------

**  அன்னா அசாரேவால ராகுல் சோனிய கூட நல்லா இருப்பாங்க. ஆனா டர்ர்ர்ர்ர் ஆகுறது என்னமோ புதுசா திகாருக்குப் போய் இருக்கிற மக்கள்தான் #திமுக
--------------------oo00oo--------------------

**  பீர்பாலே இப்ப உயிரோட இருந்தாலும், எப்பவுமே பீரையும் பாலும் கலந்து குடிக்கமாட்டாரு

--------------------oo00oo--------------------

**  அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்? - விஜ்யகாந்த். #அதானே, நமக்குத்தான் பேச்சே இல்லையே. முதுகுலையே நாலு போடுறதுதானே
--------------------oo00oo--------------------

**   அம்மணி என்பது, எங்க ஊர் பக்கம் பெண்களை கெளரவமாக அழைக்கும் சொல் #கொங்கு
--------------------oo00oo--------------------

**  புலி பூனையானதை நீங்க பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். அவர் பெயர் விஜயகாந்த்.
--------------------oo00oo--------------------

**   சிறு விசயங்களுக்கு என்ன செய்வது என ஆணிடம் ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு, பெரிய முடிவுகள் எடுக்கும்போது மட்டும் ஆணின் நினைவே வருவதில்லை!
--------------------oo00oo--------------------

**  கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாய் தமிழ் எழுத்துக்களை வைப்பதல்ல கிரந்தம் தவிர்.அந்தச் சொல்லுக்கு இணையான சொல் பயன்படுத்துதல்தான் கிரந்தம்தவிர்.
--------------------oo00oo--------------------

**   உரிமையை எடுத்துக்கவும், குடுக்கவும் ஆர்வம் கொள்வதில்லை இந்தக்கால பெண்கள் #எனக்கென்ன #கவலையில்லை #தேவையில்லை

--------------------oo00oo--------------------

**  நியூட்டன் பெரிய காதல்மன்னனாய் இருந்திருக்கனும். மூன்றாம் விதியும் முத்த விதியும்
--------------------oo00oo--------------------

**   Wikipedia மட்டும் ஆணாயிருந்து கல்யாணம் பண்ணியிருந்தாலும், மனைவி கண்டிப்பா சொல்லியிருப்பாள் 'சும்மாயிருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது'
--------------------oo00oo--------------------

**  அவள் என்னை விட்டு போயிட்டாடா மச்சி... மனசே சரியில்லைடா
>மச்சி. link plz.
>***தா, link போயிருச்சுன்னுதாண்டா பொலம்புறேன் #இணையக் கொடுமைகள்
--------------------oo00oo--------------------

Tuesday, August 2, 2011

குறும்படங்கள் 02-Aug-2011


நான் பார்த்த குறும்படங்களைப் பத்தின விமர்சனம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கிறேன். ஒவ்வொரு வாரமும் தொடரலாம்னு இருக்கேன்.The Plot


ஒரு வாரத்துக்கு முன்னாடியே வெளியாகிருச்சு. கேபிள் கூட எழுதியிருந்தாரு. Makingல, இதுவரைக்கும் வந்ததுலேயே The Bestன்னு சொல்லலாம். நிறைய சின்னச் சின்ன காட்சி தொகுப்புகள்தான்(cut shots) படத்துக்கு மெருகூட்டியிருக்கு. ஒவ்வொரு கோணத்துக்கும் உழைத்த உழைப்பு அருமை. கதைக்களம் சின்னதுதான், இவ்வளவு தேவையான்னு ஒரு கேள்வி வருவதை தடுக்க முடியல. ஆனா, இது அற்புதமான தமிழ் குறும்படம்- வரிசையில வருது

===============0o0o0===============

கடவுளும் காதலும்Hindustan கல்லூரியின் Vis Comm மாணவர்களோட படைப்பு. VisCommன்னாவே எடுத்துக்கிற தலைப்பு காதல். நல்ல வேளை, இவுங்க வேற மாதிரி எடுத்திருக்காங்க. கடவுளே பூமிக்கு வந்து காதலை புரிஞ்சிக்கனும்னு நினைச்சா என்ன ஆகும். இதான் மையக்கரு(one line). காதல், பொண்ணுங்க ஏமாத்துறது, சரக்கடிக்கிறது, அடியாளை வெச்சி அப்பா தீர்த்து கட்டச் சொல்றது, அம்மணி பழகிட்டோம் பிரிஞ்சிருவோம் அப்படின்னே இன்னொருத்தர் கூட போறதுன்னு எல்லாமே கலந்து கட்டியிருக்காங்க. Titling Software இருக்குன்னு அதையே ஏகத்துக்கும் பண்ணிட்டாங்க.
===============0o0o0===============

ஏழுவின் காதல்ஏற்கனவே கார்க்கியின் புகழ் பெற்ற ஏழுவின் கதை. எழுத்தை படமாக்குற சிரமம் தெரியுது. ஏழுவா நடிச்சிருக்கிற அர்ஜூனின் நடிப்பு சொல்லிக்கிற படி இருக்கு. ஆனா Stranger படம் பண்ணினவங்களா இவுங்கன்னு சொல்ற அளவுக்கு மொக்கையா பண்ணிட்டாங்க. Better luck next time

===============0o0o0===============

Trailers/Teasers:

4 குறும்படத்துக்கு Trailer/Teaser வெளியிட்டிருக்காங்க. அதுல ஒன்னும் நம்மளதும் (மொக்கையாத்தான் இருக்கும், கண்டுக்கப்படாது சொல்லிட்டேன்)

Ouch வலி வலியது:

இந்தப் படத்தோட Trailer அருமை. படம் பார்க்கிற ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு.===============0o0o0===============
அப்பாடக்கர்:
இது நம்ம படம். தற்புகழ்ச்சி கூடாது. அதனால படத்தையும் இணைக்கலை. ஏற்கனவே ஜாக்கி சேகர் பதிவுல அங்கேயே பார்த்துக்குங்க.
 
===============0o0o0===============

Thriller Night
===============0o0o0===============

மசாலா
தலைப்பே கலக்குது இல்லே?Trailerம் செம கலக்கல்

Monday, August 1, 2011

ஈழத் தமிழர்களும் தமிழும்

கேள்வி: உண்மையான தமிழ் எங்கே இருக்கிறது?
பதில்: இந்தியாவிற்கு தெற்கே இருக்கிறது.

இது விகடனில் மதனிடம் கேட்ட கேள்விக்கு வந்த பதில்.

2003ல்- லண்டனில், hounslow West- Best Food மளிகை கடைக்குள்ள(அப்படின்னு நினைக்கிறேன், சரியா?) ஒரு video library இருக்கும், அங்கேதான் படங்களை வாடகைக்கு வாங்குறது வழக்கம். அங்கே ஒரு அண்ணாச்சி இருப்பாரு. படம் கேட்டா “குறுந்தகடுல வேணுமா, பெருந்தகடுல வேணுமா”?ன்னு கேட்பாரு. நானும் முதல் நாள் ஏதோ ஒன்னு குடுங்கண்ணே. அப்படின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் அதென்னண்ணே குறுந்தகடு, பெருந்தகடுன்னு கேட்க குறுந்தகடுன்னா VCD, பெருந்தகடுன்னா DVDன்னாரு. நீங்க தமிழ்நாடு இந்த வார்த்தைகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாரு(Blue Rayகு என்ன சொல்லுவாரு இப்போ? நீலகதிர் தகடுன்னா?).2010ல் Fetna நிகழ்ச்சி, பதின்ம வயதை ஒட்டி 10-15 பேர் ஆட்டம் பாட்டமா ஓடி விளையாடியும், சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தாங்க. யாரு இவுங்கன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அவுங்க எல்லாம் அக்னி இசைக் குழுவினர்னு. கனடாவுல இருந்து வந்தவங்களாம். ஆனா, நிகழ்ச்சி அப்ப, தமிழ்ல பட்டாசா பாடி இசை நிகழ்ச்சி பண்ணினது எனக்கு பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. காரணம் நம்ம ஆட்களோட குழந்தைக்கு தமிழ் கண்டிப்பா பேசவே வராது. அப்படி வளர்ப்போம் நாம. கேட்டா ”யதார்த்தம், பொழைக்கனும் இல்லே” அப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவாங்க.இதே போல பாரீசில், நம்மூர் ரோட்டுக்கடை மாதிரி தோசைக்கல்லை நமக்கு முன்னாடியே வெச்சி, தோசை மாதிரி(crepe) ஒன்னு சுட்டு அதுக்கு மேல சாக்லெட் தூவி குடுப்பாங்க. ஊர் சுத்துனதுல ரெண்டு நாளா சாப்பாடே சாப்பிடலை. pompidou பக்கதுல ஒரு சாப்பாட்டுக்கடை, அங்கே இந்த தோசயை பார்த்த பின்னாடி தோசை சாப்பிட ஆசை வந்திருச்சு. சுடறவரும் நம்மூரு மாதிரி இருந்தாரு. நமக்கு தெரிஞ்ச ஆங்கிலத்துல சாக்லெட் இல்லாம குடுங்கன்னு கேட்டப்ப சொன்னாரு “நானும் தமிழ்தான்”  அப்படின்னு சொல்லி, தோசைய வார்த்து அவருக்காக வெச்சிருந்த குழம்பும் ஊத்தி ஒரு பெரிய விருந்தோம்பலே நடத்தினாரு.  நன்றி அண்ணாச்சி.

இன்னிக்கு வெளிநாடுகள்ல வர்ர முக்கால்வாசி Online FMக்கள் இவுங்களால மட்டுமே நடத்தப்படுது. லங்காஸ்ரீ FMபத்தின சிறப்புப் பதிவை இன்னும் கொஞ்ச நாள்ல போடுறேன்.

இதெல்லாம் நான் சொல்ல காரணம் என்னன்னா உள்நாட்டு போரினால பல நாட்டுக்கு குடிபெயர்ந்தவங்க, இன்னும் ஒரு தலைமுறை தாண்டியும் கொஞ்சம் தமிழை மீதி வெச்சிருக்காங்க. பொதுவா ஒரு தலைமுறைக்கு அப்புறம் தன் மொழி மறந்து எந்த நாட்டுல வாழ்றாங்களோ அந்த நாட்டு மொழியை அடுத்தத் தலைமுறை கத்துகிட்டே ஆகவேண்டிய கட்டாயத்தினால தன்னோட மொழியை மறந்துடுவாங்க. அதுல ஈழத்தமிழர்கள் கொஞ்சம் விதிவிலக்கு. அப்படி ஒரு தமிழார்வம் இந்த ஈழத்தமிழர்களுக்கு உண்டுங்க. இன்னிக்கு உலகலாவிய அளவில் தமிழ் செழித்து(கொஞ்சமாச்சும்) வளருதுன்னா அதுக்கு இவுங்கதான் காரணம். வெளிநாட்டுல நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி பண்றதும் இவுங்க மட்டும்தான். சினிமா மேல இவுங்களுக்கு அதிக ஆர்வம் வரதுக்கும் இதுதான் காரணம்.

ஓப்பீட்டளவுல தமிழ்நாடு வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு தமிழர்களும் இவுங்க பேசுற மாதிரி தமிழை பேசறது கிடையாது. நம்ம அளவுக்கு ”அவுங்க தமிழ் நமக்குப் புரியாது” அப்படின்னு நாம தமிழை சுத்தமா மறக்கவே முயற்சி பண்றோம்.

ஈழத்தமிழர்களில், இந்தத் தலைமுறையும் தமிழை வெளிநாட்டுல காப்பாத்துவாங்களா?

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்