விவாஜி Updates- Oct12

Vivaji ன்னா என்னான்னு தெரியாதவங்களுக்கு . Twitterல் என்னோட ID @vivaji http://twitter.com/vivaji

 • கோவிலுக்குப் போனேன். முருகன், விநாயகர், லஷ்மி, ஐயப்பன், பெருமாள் எல்லார் கூடவும் பேசினேன். அவுங்கதான் யாருமே என்கிட்ட பேசலை.

 • ஜொள் விடுவது தப்பில்லை. அது அடுத்தவர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்

 • அழகான பொம்மைகள் வைத்து ஆராதிப்பதுதான் கொலு என்றால், அவள் இருக்கும் என் வீட்டில் வருடம் முழுவதும் கொலுதான்

 • நான் எப்பொழுதும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் கம்பீரம் தொலையும் இடத்திலேயே, என்னையும் கொன்றுவிடு

 • சில பேரோடு கொண்டாடும்போது, கொண்டாட்டங்கள் கொண்dotங்களா மாறிவிடுகிறது. அப்புறம் அவர்களைப் பார்க்கவே பிடிப்பதில்லை

 • மணிக்கணக்குல நான் நல்லவன்னு பில்டப் குடுத்தாலும், நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சரியா கண்டுபுடிச்சிடறாங்க. கேர்ள்ஸ் ஆர் கிரேட்

 • அங்கிள்ஸ் அங்கிள்ஸாவே பேசிக்கிறாங்க. ஆனா இந்த auntiesதான் teenAgeல இருக்கிறா மாதிரி பேசிக்கிறாங்க.

 • பெண் தப்பாவே பாடினாலும் ரசிக்க முடிஞ்சது "என் இனிய பொன் இளாவே"

 • ஒவ்வொருவரின் வாழ்விலும் "சங்கீத ஸ்வரங்கள்"-அழகன் போன்றதொரு நிகழ்வு கண்டிப்பாய் நடந்தேறியிருக்கும். Atleast team conf call

 • வாடி போடின்னா திட்டுறாங்க. அம்மா'டி'ன்னேன் ஒன்னும் சொல்லலை(என்ன உலகம்டா இது?)

 • உலகில் இரண்டே வகையான பெண்கள்தான் உள்ளனர் 1)அழகாயிருக்கும் பெண்கள் 2)தான் அழகு என நினைக்கும் பெண்கள்

 • @paval குழுமம் -->பதிவுகள்  --> ஆர்குட் --> பேஸ்புக்   --> டிவிட்டர்   --> பஸ்  -->ப்ளஸ்    --> குழுமம்
#வாழ்க்கைஒருவட்டம்டா

 • இந்திய உணவை அனுப்புங்கள் இந்திய இங்கிலிஷை அனுப்பாதீர்கள் # தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :
 • @calgarysiva : ஆங்கிலத்தையும் கொன்று தமிழையும் இனி மெள்ள சாகடிக்கும் டமிளர்களுக்கு சவுக்கடி# தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் தாய் மொழியில் பேசுங்கள், ஆங்கிலத்தை நாங்கள் கற்று தருகிறோம். தமிழ் வளர்க்கும் கனேடிய வெள்ளைக்கார ஆசிரியைகள் @calgarysiva :

 • மீட்டிங்ல கொட்டாவி வராம தடுக்க ஏதாவது மருந்து மாத்திரை இருக்கா?

 • நாம சொல்றதுக்கெல்லாம் Rofl,LoL போடுறவங்க மூஞ்சியில சிறுபுன்னகை கூட வந்திருக்காது #onliners
கடைசியா கேபிள் சங்கருக்காக
நானும் யூத்துன்னு சொல்ற யாருமே யூத் இல்லே. யூத் எவனும் நான் யூத்துன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே....

Comments

 1. "என் இனிய பொன் இளாவே””

  ரசிக்க வைத்த வரி..

  ReplyDelete
 2. அமுதா--> இப்பவெல்லாம், நம்மளாவே பாடிக்கிட்டாதான் உண்டு போல(அது கல்லூரி காலம்ங்க)

  ReplyDelete
 3. )அழகாயிருக்கும் பெண்கள் 2)தான் அழகு என நினைக்கும் பெண்கள்
  /// super..and correct..:)

  ReplyDelete
 4. இளா,

  //நான் எப்பொழுதும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் கம்பீரம் தொலையும் இடத்திலேயே, என்னையும் கொன்றுவிடு//

  ஹி..ஹி இங்கே ஒரு சிறுத்த சிங்கிளா டிவிட்டுதுங்கோவ்!(டொக்டர் விசய் படத்துக்கு வசனம் எழுத ஆள் தேவையாம் ஜி)

  எதுக்கும் இத கலிஞருக்கு குறுஞ்செய்தியா அனுப்பி வைங்க, அவரும் ஒரு ஆண்டவர் தான்(தமிழ் நாட்ட ஆண்டவராம்ல\)

  ReplyDelete
 5. இளா,

  //நான் எப்பொழுதும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். என் கம்பீரம் தொலையும் இடத்திலேயே, என்னையும் கொன்றுவிடு//

  ஹி..ஹி இங்கே ஒரு சிறுத்த சிங்கிளா டிவிட்டுதுங்கோவ்!(டொக்டர் விசய் படத்துக்கு வசனம் எழுத ஆள் தேவையாம் ஜி)

  எதுக்கும் இத கலிஞருக்கு குறுஞ்செய்தியா அĪ5;ுப்பி வைங்க, அவரும் ஒரு ஆண்டவர் தான்(தமிழ் நாட்ட ஆண்டவராம்ல\)

  ReplyDelete

Post a Comment

Popular Posts