ரித்தீஸ்க்கு பிறகுதான் பவர் ஸ்டார் - Twit Update 12-30

 • ரித்தீஸ்க்கு பிறகுதான் பவர் ஸ்டார் என்று கூறும் ரித்திஸ் ரசிகர்களே, " குரோதம்" புகழ் பிரேம்முக்குப் பிற்பாடுதான் ரித்தீஸே என்பதையும் அறிக.
 • TV/radio பேட்டில பொண்ணுங்களும், சரக்குல பசங்களும் இங்கிலீசுதான் பேசுவாங்க. #தமிழேண்டா
 • சிம்பு STRஆ பேரை மாத்திகிட்டாராம். யாராவது அவர்கிட்ட போய் சொலுங்கப்பா பேர் ஆசை பெருநஷ்டம்னு

 • சாதாரணமான மனிதன் புத்தகத்தை கடையில் வாங்குவான்.. அசாதாரணமானவன் அந்த புத்தகத்தை ஓசியில் வாங்குவான்
 • தமிழனுக்கு தமிழனும் எதிரி அடுத்தவனும் எதிரி. உதாரணம், ஈழம், கூடங்குளம்.
 • தமிழ் அறிந்த பெரும்பாலானோர் தம் மக்களுக்கு தமிழ் கற்பிப்பதில்லை. உதா: கமல்- ஸ்ருதி


விளம்பர இடைவேளை: • நல்ல பாடல்களைத்தர 80 களில் இளையராஜாவும், 90 களில் ரகுமானும் இருந்தார்கள். 11 வருடமாச்சி, யாருமே வரவில்லை. காத்திருக்கிறோம்.
 • கேட்டு வாங்குறது பிச்சைன்னா, Appraisal meeting எதுக்கு?
 • அவர்களை யாராவது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்துக்கொள்கிறார்கள் பெண்கள். சட்டென பார்க்கும் கண்களை திரும்பி பார்க்கிறார்களே.


 • இந்தியாவுல நூறு, நூத்தம்பது அணைகள் நல்லா இருக்கு. ஒத்த அணையை கேரளாவுல கட்டிட்டு நாம படற கஷ்டம் இருக்கே ஐய்யய்யயோ
 • இதிலிருந்து என்ன தெரியுது. தமிழன் தமிழ்நாட்டுல வாழ்ந்தாதான் கெளரவம். அதைத்தான்யா MGR அப்பவே பாடினாரு "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" - கேரளா, கர்நாடகா, மலேசியாவில் அடிவாங்கும தமிழர்களுக்காக.
 • மூன்றாம் உலகப்போர் என்பது தண்ணீருக்காக வருவது. தமிழ்நாட்டுல ஆரம்பிச்சாச்சு. கர்நாடம், கேரளா, ஆந்திரான்னு சுத்தி அடிவாங்கிட்டே இருக்கோம்ல.

Comments

Post a Comment

Popular Posts