Monday, May 16, 2011

NRI கொசுத்தொல்லைகள்

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.
டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க
டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.


* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?
டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.


* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.


* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”
டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.


*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் அவுனுங்க சொல்ல மாட்டானுங்க. நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்திகனும். அதுவும் என்னமோ கடன்காரன் கடன் குடுக்கிறா மாதிரி "வந்திருச்சு, அதுக்கென்ன அப்படிம்பாங்க"
டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?

நாம இங்கே அரும்பாடுபட்டு நாயா பேயா கெஞ்சி 3 வாரம் லீவ் வாங்கிட்டு ஊருக்கு வந்தா "என்னடா வருசத்துக்கு ஒரு முறை வரே, ஒரு மாசமா இருக்கிறா மாதிரி லீப் போட்டு வர வேண்டியதுதான" அப்படிம்பாங்க. 

1/2 நாள் லீவ் போட்டுட்டு வாடா அப்படின்னா, லீவ் கிடைக்காது சொன்னவன்தானேடா நீயு .

இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் சான்பிரான்ஸிஸ்கோவுல இருப்பான். நியூயார்க்கும் சான் பிரான்ஸிஸ்க்கோவுக்கும் 3000+ மைல்கள்.இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் அங்கே இருப்பான். நான் நியூயார்க்ல இருப்பேன், அவரைப் போய் பார்த்துட்டு வாடாம்பான். போகலைன்னா, பெரிய பிகு பண்ணிக்கிறான். அமெரிக்காவுலதானே இருக்கான், போயிட்டு வாடான்னா வர மாட்டேங்கிறான், எல்லாம் திமிரும்பானுவ. அதாவது காஷ்மீர் தூரம், எதாச்சும் வாங்கனும்டா 30 கிமீ போடான்னு கேட்டுப்பாருங்க. தூரம், வெயிலு இப்படி சொல்லி சல்லியட்டிப்பானுவ.

அடேய் பதறு, நான் முக்கினாத்தான் வருமா? நீ முக்கினா வராதா?

நான் அன்னிக்கே சொன்னேன்ல


* ராம்ஜெத்மலானி கனிமொழியின் ஜாமீனுக்காக போராடுகிறார்.
ராம்ஜெத்மலானி ஒரு பிஜேபி ஆசாமிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விசயம். இது என்னய்யா திமுக காங்கிரஸோட கூட்டு வெச்சிட்டு இருக்கிற நேரத்துல பிஜேபிகாரர் திமுகவுக்காக வாதாடுறாரான்னு கேட்டா, தொழில் வேற கட்சி வேறைங்கிறாங்க. பெரிய மனுசனுங்கன்னா இப்படி ஒரு பக்காவா ஒரு கொள்கை வெச்சிக்கனும்.   தேர்தல் முடிஞ்சு விளைவுகள் நல்லா இல்லைன்னா இவுங்க, அவுங்களோட கூட்டு வெக்க இந்தத் தொழில்முறையே முன்னெடுப்பா இருக்கும். அப்ப கொள்கையும் தொழிலும் ஒன்னாகிரும்.  டேய்ய் நாங்காட்டி டென்சன் ஆனேன்

* கனிமொழியின் ஜாமீன் மனு மே14 க்கு ஒத்தி வெச்சிருக்காங்களாம். ஏன்? மே13 தேர்தல் முடிவுகள் வந்துரும். திமுக வெற்றியடைஞ்சுட்டா ஆட்சியில் பங்கு கேட்கலாம். பங்கு தராட்டா உள்ளே போட்டுருவேன்னு பூச்சாண்டி காட்டலாம். அட, எல்லாமே நீங்களேதானே முடிவு பண்றீங்கன்னு மக்கள் கேட்டா, “நீதி மன்ற முடிவுகள்ல நாங்க தலையிடுறது இல்லை”ன்னு சப்பைக் கட்டு வேற. நீங்களேதாண்டா முடிவுகளை அனுப்புறீங்க அப்புறம் என்ன?

* அப்ப திமுக தோத்துட்டா, காங்கிரஸ் அதிமுக கூட சேரலாம், கேப்டனுக்கு லம்பா அல்வா கிடைக்கலாம். அப்ப கனிமொழி, ராசா விவகாரம்? மெதுவா வழக்கு நடக்கும். எப்படியும் நாம சாவறதுக்குள்ள கோப்புகளை தொலைச்சுருவாங்க.

* தன் கையே தனக்குதவிங்கிறது பழசு. தன் கைதே தனக்குதவி இது புதுசு. இவரு ஒரு போராட்டாம் நடத்துவாராம், அதுல இவரே கைது ஆகி, டில்லி வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போவாங்களாம். இதுல ”ஓ காட் ஐ அம் நாட் பிரைவ்ட் ஓஃப் பார்ன் இன் இண்டியா”ன்னு புலம்புவாராம். ராகுல் ராசா இதெல்லாம் எங்க ஊர்ல 1970களிலேயே பண்ணியாச்சு. பனியாராம் வேவாது. வளருய்யா.

* வைகோ திமுகவோடு கை கோர்ப்பார். வழக்கம் போல இதயம் இனித்தது, கண்கள் பனித்ததுதான்.* அம்மா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி கொடைநாட்டுக்கே ரெஸ்ட் விட்டுருவாங்க. வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல இவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும்.

*தாத்தா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அம்மா கொடைநாட்டுக்கு ஓய்வு எடுக்கப் போயிருவாங்க, அஞ்சு வருசத்துக்கும். வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல அவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும். மல்லையா புலம்புவாரு.

 
 
நாளன்னிக்கு பதிவு போடும் போது என்னோட பதிவுக்கு நாலுபேராவது ‘லிங்க்’ குடுக்க மாட்டாங்க? ”ஆமா, அவன் அன்னிக்கே சொன்னான்லே” அப்படின்னு?

Thursday, May 5, 2011

Under the Same Moon - Spanish விமர்சனம்

மீண்டும் ஒரு சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை தாண்டும் படம். Maria Full of Graceக்குப் பிறகு நான் பார்க்கும் எசுபானிய படம். எசுபானியம்ன்னா என்னாவா? ஸ்பானிஷ்ங்க.
Rosario சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டி LAயில் சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சு, மெக்ஸிகோவுல இருக்கும் தன்னோட மகனுக்கு பணம் அனுப்புறா. மகனோ அம்மாவை 4 வருசமா பார்க்காத பையன். அதுவும் பையனுக்கு 9 வயசுதான் ஆவுது, உடம்பு சரியில்லாத பாட்டியோடதான் வாழ்க்கை.  அம்மா பாசத்துக்காக ஏங்க மாட்டானா? அப்பாவும் கிடையாது. அவனும் மெக்ஸிகோவுல சின்ன சின்ன வேலை செஞ்சு கொஞ்சம் காசு வெச்சிட்டு இருக்கிற பொறுப்பான, புத்திசாலித்தனமான, தைரியமான பையன். பாட்டியால வெறுக்கப்படுற சித்தப்பா,சித்தி வழியா அவனோட அப்பாவும் அமெரிக்காவுல Tucson அப்படிங்கிற ஊருல இருக்கிறத தெரிஞ்சிக்கிறான். இதுவரைக்கும் பார்த்தே இல்லாத அப்பா மேல அவனுக்கு பாசம் வரவே இல்லை. எல்லாமே அம்மாவைப் பார்க்கனும், அதுவும் சீக்கிரம் பார்க்கனும்னுதான் அவனுக்கு ஆசை.

அம்மாவும் மகனும் பொது தொலைபேசி வழியா ஒவ்வொரு வாரமும் பேசிக்கிறதுதான் கதையோட மைய ஓட்டமேன்னு சொன்னாலும், ஒரே  ஒரு காட்சிதான் வரும். அதுதான் ஒட்டு மொத்த படத்தோட ஒன் லைன், முடிவும்.  

தூக்கத்துலேயே பாட்டி இறந்து போனதும், அம்மாகிட்ட போய் சேர்ந்துடலாம்னு முடிவு செய்றான் கார்லிதோஸ்(சிறுவன்).  அதுவும் அவுங்க அம்மா அடுத்த முறை தொலைபேசியில பேசும் ஞாயிறுக்குள்ள அவுங்க அம்மாகிட்ட இவன் சேர்ந்தாகனும்ங்கிறதுதான் திட்டமே. இவன் வேலை செஞ்ச இடத்துல அமெரிக்கர்கள் ரெண்டு பேரு ஏதாவது குழந்தை/சிறுவனை எல்லைத்தாண்டி அனுப்பத் தயார்னு சொல்லி இருப்பாங்க. அவுங்க உதவியோட கார்ல எல்லையைத் தாண்டும் போது No parking டிக்கெட்டுக்காக மாட்டிக்குவாங்க. காருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருப்பான் கார்லிதோஸ், காரோட எடுத்துட்டு போயிருவாங்க காவல்துறை. கூட போவங்க ரெண்டு பேரும் இல்லாம..  அங்கே இருந்து தப்பிச்சு(இந்தக் காட்சி அப்ப எல்லாம் செம டென்சனப்பா) அவன், வேற இடத்துல இவனை மாதிரியே சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்களோட LA போக முயற்சி பண்றான். நடுவுல என்ரிக் அப்படிங்கிறவரோட சேர்ந்து பயணப்பட ஆரம்பிச்ச பின்னாடிதான் படமே புது பரிமாணத்துக்கு போவும். அதுவும் என்ரிக்குக்கு கார்லிதோஸோட பயணப்படறதே புடிக்காது.  .ஒரு சமயம் அவுங்க அப்பா இருக்கிறதா சொன்ன Tucsonக்கே வந்தவுடனே என்ரிக்கிட்டே தன்னோட அப்பா அங்கே இருக்கிறதா சொல்லும் போது, என்ரிக்தான் அப்பாவோ நினைக்க வெக்கும் திரைக்கதை. ஆனா அவுங்க அப்பாவையும் கண்டுபுடிச்ச பின்னாடிதான் கார்லிதோஸ்க்கு சோதனையே ஆரம்பிக்கும். ஆமாம், கார்லிதோஸோட அப்பா அவுங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராமலே போயிருவாரு. என்றிக்கும் அவனோட LA வந்து தேடோ தேடுன்னு தேடுவாங்க. கார்லிதோஸ் தன்னோட அம்மோ எழுதுன கடுதாசில வந்த முகவரி தேடிப்போன பின்னாடிதான் தெரியும், சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்கள் எல்லாமே வேற ஏதோ ஒரு முகவரி தந்து கடுதாசி போடுவாங்கன்னு.


தே சமயம் ரொசாரியோ, அவுங்க வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தரோட காதலும் இல்லாம, ஏதோ ஒரு வேகத்துல ஒருத்தரோட பழக ஆரம்பிக்கிறா. கல்யாணம்கூட முடிவாகிடுது, ஆனா ஏதோ ஒன்னு தடுக்க, மெக்ஸிகோவுல இருந்து அவளுக்குத் தொலைபேசி வருது, அப்பத்தான் அவளுக்கு தன்னோட அம்மா இறந்ததும், பையன் எல்லைத்தாண்டி தன்னைப்பார்க்க வர்றதும் தெரியும்.
முகவரி தப்பா இருந்தாலும் அம்மாகிட்ட பேசும் போது, அந்த பொதுத் தொலைபேசி பக்கத்துல எப்படி இருக்கும் கேட்டதை வெச்சி அதே இடத்தை ரெண்டு பேரும் தேட ஆரம்பிக்கிறாங்க. கஷ்டம்னு என்ரிக்குக்கு தெரிஞ்சாலும் கார்லிதோஸுக்காக பொறுத்துகிட்டு தேடறாங்க.  ஒரு சமயம் காவல்துறையில் மாட்டிக்க வேண்டியதாயிருது. என்ரிக் காவலர்களைத் தாக்கி, தான் மாட்டிகிட்டாலும் பையன் தப்பிச்சு போகனும்னு செய்ற இடம் மனசுல அந்தப் பாத்திரம் பச்சக்கு ஒட்டிக்க வெக்கும். காவலர்கள்கிட்ட தப்பிச்ச பையன் ஓடிப்போயி நின்ன இடம், அம்மா எப்பவுமே தொலைப் பேசியில பேசுற இடம், அதே நேரம் பையன் எப்படியும் இந்த இடத்தை கண்டுபுடிச்சு வந்திருவான்னு அம்மாவும் காத்திருக்க... இவன் சாலை இந்தப் பக்கம் , பையன் அந்தப் பக்கம்னு நின்னு.. சுபம்.

ம்மா மகன் பாசத்தை கதையின் கருவா வெச்சி, எல்லைத் தாண்டுறது, பையனோட புத்திசாலித்தனம், வேலை செய்யனும்னு இருக்கிற ஆவல்,வேலை செய்யும் போது ரசிச்சு செய்றதுன்னு நிறைய விசயங்கள் பலிச்சுன்னு சொல்லியிருக்காங்க. படத்துல பல லாஜிக்கான ஓட்டைகள் இருக்கு, உதாரணம், கார்ல இருந்து பையன் தப்பிச்சு வர்ற இடம். அதேமாதிரி அலைபேசி எண் இருந்தும் எடுத்துட்டு வராத பையன்.  படத்துக்கு ரெண்டு பலம், ஒன்னு இசை, இன்னொன்னு எந்த இடத்திலும் நெருடல் இல்லாத, கண்ணைக் கூசச் செய்யாத ஒளிப்பதிவு.  படம் 2007ம் ஆண்டு வெளி வந்தது.

கார்லிதோஸா நடிச்ச பையனோட நடிப்பு அட்டகாசம், ஒவ்வொரு frameலயும் அவனோட உழைப்பு தெரியுது. எப்படித்தான் இயக்குனர் இந்தப் பையன்கிட்ட வேலை வாங்கினாரோ தெரியல. கொஞ்ச நேரமே நடிப்புக்கு வாய்ப்பு இருந்தாலும் என்ரிகாக நடிச்ச Eugenio நடிப்பு, இறுதியில தன்னைக் காட்டி கொடுத்து பையன் காப்பாத்துற இடத்துலயும்.. நச். அதே மாதிரி பையனும், என்ரிக்கும் சேர்ந்து தேடும் போது ரொசாரியோ வேற பக்கம் திரும்பி உக்காந்திருப்பாங்க, அந்தக் காட்சியில் நாமே பையன்கிட்ட கூப்பிட்டு சொல்லத் தோணும். இப்படியாப்பட்ட சின்ன சின்ன விசயங்கள்ல இந்தப் படம் ஜெயிச்சிருது. அதுசரி, திரைக்கதைதானே படத்துக்கு பலம்.
Cast
 • Adrian Alonso as Carlos "Carlitos" Reyes
 • Kate Del Castillo as Rosario
 • Eugenio Derbez as Enrique
 • America Ferrera as Martha
 • Jesse Garcia as David
 • Maya Zapata as Alicia
 • Gabriel Porras as Paco
 • Sonya Smith as Mrs. Snyder 
 • Directed by Patricia Riggen
 • Produced by Ligiah Villalobos/Gerardo Barrera
 • Written by Ligiah Villalobos
 • Music by Carlo Sillioto/Los Tigres del Norte
 • Cinematography Checco Varese
 • Editing by Aleshka Ferrero
 • Running time 106 minutes
 • Gross revenue $23,311,391
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

Wednesday, May 4, 2011

ரண்டு மூனு ஒன்னு

ஈரோடு கதிரின் அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே


1)
ல்லா ஆண்களின் கனவுகளிலும்
யாரோ ஒருத்தியின் முகம்
மங்கலாய் வந்துபோகிறது
சிலசமயம் தெரிந்த பெண்ணாகவும்
பலசமயம் தெரியாத ஃபிகராகவும்


2)
காதலியோடு ஷாப்பிங்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
கிரெடிட் கார்ட் பில்லில் மட்டுமே
டவுசர் கழடுகிறது

3)
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் ஆண்களின் வாழ்க்கையிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது.
காதல் சக்சஸாகவோ,
பார்களில் ஃப்ளாட்டிகியோ,
திருமணமாகி மண்டை காய்ஞ்சோ,
காதல் பரத் மாதிரி
”ஙே..ஙே..ஙே..” என்று போவதோ
ஆண்களில் மட்டுமே!

Monday, May 2, 2011

கோவை- ராஜராஜேஸ்வரி டவர்ஸ்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”
“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997ல டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிர நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்கு போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சத்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டு போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுதிட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியில).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டா போதும், வர போற ஒன்னையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்க கவனிங்க” சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழேதான் நிப்பாடினாங்க.
கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரும், 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

இது ஒரு மீள்பதிவே: கோவைக்கு இந்த முறை போனபோது ராஜராஜேஸ்வரி டவர்ஸ் இருக்கிற இடத்துல வேற என்னமோ இருந்துச்சு. பல கனவுகளை மனசுல சுமந்துகிட்டு படிச்ச இடம் அது, இப்போ ஒரு ஜவுளிகடையை பார்க்கும் போது ஒரு வெறுமை வந்திருச்சு. அதான் மீள்பதிவு.

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்