Monday, January 30, 2012

அப்பாடக்கர் குறும்படம் - உருவான விதம் -1

மெரிக்காவில் வெளியிடங்களில் குறும்படம் எடுப்பது என்பது கொஞ்சம் என்ன, ரொம்பவே சிக்கலான அதே சமயம் அதிகப் பொருட்செலவு செய்ய வேண்டியிருக்குங்க.அது மட்டுமில்லீங்க, வெளியிடத்துல படம்புடிக்க கண்டிப்பா அனுமதி எல்லாம் வாங்கனும். அதனாலயே ஒரு அறைக்குள்ளேயோ, கட்டிடத்துக்குள்ளேயோ படப்பிடிப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களோட அடிநாதம்.

ப்படித்தாங்க ஆரம்பித்தது அப்பாடக்கர் என்னும் குறும்படம். அதிகப் பொருட்செலவு இருக்கக்கூடாது, கண்டிப்பாக கருத்துச் சொல்லக்கூடாது, சோகம் இருக்கக்கூடாது. இது எல்லாம் நாங்களே வைத்துக்கொண்ட அளவுகோல். ஒரு வழியாக நானும் ஸ்ரீராமும் ஒரு கதை தயார் செய்தோம். அதாவது Oneline. ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு கிராமத்தான், நகரத்தில் வசிக்கும் அதுவும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் அவனுடைய நண்பனான அறைக்கு வந்து அவனுக்கு கிடைக்க இருக்கும் வேலையப் பறித்துக்கொள்கிறான். இதுதான் நாங்கள் நினைத்து வைத்த கதை. வசனம் எழுத இந்தா அந்தா என்று கொஞ்சம் காலம் பிடிக்க இதே சாயலுடன் "பெங்களூரு" என்ற இன்னொரு குறும்படம் வெளியானது. மறுபடியும் நானும் ஸ்ரீராமும் பேசினோம் பேசினோம், பேசினோம். அப்படி உருவான கதைதான் அப்பாடக்கர் (கதையே இல்லைன்னுதான் கடைசி வரைக்கும் நம்பிட்டு இருந்தோம்) முதல் நாள், வெளிப்புற படப்பிடிப்பு போகும்போது, அதாங்க வீட்டுப்பக்கத்துலயே ஒரு குன்று இருந்துச்சு, ஒரு குளம் மாதிரி,. அதை வெச்சிதான் இந்தியான்னு நம்ப வெக்கனும் , ரொம்ப தூரம் எல்லாம் இல்லீங்க, வீட்ல இருந்து 300 மீட்டரில் இருந்தது வெளிப்புற படப்பிடிப்புத்தளம். போன பின்னாடிதான் தெரிஞ்சதும். காட்சி அமைப்பு மட்டும் வெச்சிகிட்டு On the Spot வசனம் முயற்சி பண்ணினோம், பல்ல இளிச்சிருச்சு.

அடுத்த நாள் வசனம், முழு கதைக்களம், வசனம் தயார் செய்து கேபிள் சங்கரிடம் கொடுத்து விவாதித்து, சரி செய்து கொண்டேன். அதாவது Bounded Script தயாராகிவிட்டது. ஆனா அது சத்தியமா Bounded Script  இல்லைன்னு அப்புறம்தாங்க தெரிஞ்சது.

ஸ்ரீராமும் நானும் அருகருகே குடியிருப்பதால் தினமும் ஏதோ சும்மானாச்சுக்கும் சந்தித்து இது பற்றி பேசிப் பேசியே எங்களையே உசுப்பேற்றிக்கொண்டோம். முதலில் படப்பிடிப்புக்கு கருவிகள் வேணுமே. அதாங்க, camera, Dolly editing tool, இத்யாதிகள். முதலில் ஒரு Dolly செய்தேன், அதுவும் நாங்களே கடைக்குப் போய், சின்ன விசயங்களையும் பார்த்து செய்தது. எப்படி செஞ்சோம்கிறதுக்கு இந்தப் படமே சாட்சி.


துல இன்னொரு சிக்கல் என்னன்னா கதை இந்தியாவுல நடக்கிற மாதிரி. ஒரு அறை வேண்டும், வாரிசோட அறையை மாற்றுவதாய் எண்ணம். படங்கள் தயார், இந்தியாவில் இருப்பது போன்ற பாய் வேண்டும், படுக்கை விரிப்பு வேண்டும், காரணம் American Carpet Floor. அதனால் தரையை முழுக்கவே மறைத்தாக வேண்டிய கட்டாயம். படங்கள் சுலபமாகக் கிடைத்தது, நன்றி இணையம். படுக்க விரிப்புகள் சமாளிக்கப்பட்டது. ஆனால் பாய், தேடியலைந்து ஓரிடத்தில் கிடைத்தது. பொம்மைகள் நிறைந்த வாரிசின் அறையை இந்திய அறையாக மாற்றம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும். படப்பிடிப்பு முடிந்தால் மீண்டும் மாற்ற மற்றொரு 45 நிமிடம் ஆகும். தொடர்ந்தும் படமெடுக்க முடியாத நிலை. வேறென்ன கால்ஷீட் பிரச்சினை. இவர் வந்தால் அவரில்லை. அவர் இருந்தால் இவரில்லை.

ப்படியோ முதல் நாள் உட்புற படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. நடிப்பதற்கு நூல் பிடித்துக்கொண்டார்கள் ராமும், ஜெயவேலனும். நடிப்பு வரும் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை. ஆனால் காட்சியமைப்போடு அட்டகாசமா ஒன்றிப் போனார்கள். ஒவ்வொரு முறை வசனம் பேசும் போதும் மெருகேற்றிக்கொண்டே இருந்தோம். முதல் நாளே திருப்தியாக முடிந்தது. நான்கு நாட்கள் வெளிப்புறத்திலும்(தலா 30 நிமிடங்கள்), 6 நாட்கள் உட்புறத்திலும் படம் எடுத்தாயிற்று. இடையே வாரிசு நடிக்கும் காட்சி சேர்க்கப்பட்டது. இந்த சமயத்தில் படத்தின் இன்னொரு நாயகனான ஜெயவேல் இந்தியாவிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.கதையை எப்படி முடிப்பது என்று நான் தெளிந்து வருவதற்குள் ஜெயவேலன் இந்தியா கிளம்பினார்.

பதிவு ரொம்ப நீளமா போவுது, அதனால படத்தைப் பார்க்கலைன்னு பார்த்துடுங்க. • இருக்கிறதே ரெண்டு பேரு, ஒருத்தர் இல்லாமையே எப்படி படம் முடிக்கிறது?
 • நாங்க படத்தை முடிச்ச நேரத்துல மங்காத்தாவுலயும் நாங்க வெச்ச காட்சி மாதிரியே ஒன்னு இருந்துச்சு. அதை மாத்த என்ன பண்ணினோம்..
அது எல்லாம் அடுத்த பாகத்தில்..
--
--
..

"தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !

மூலம் இங்கேயிருந்து சுட்டதுங்க: Facebook

'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...

”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..

‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?

‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’

‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!

‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’

“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”

“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”

“என்ன அதுக்குள்ளேயா?”

‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”

“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.

‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’

‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’

‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’

‘சார்..! அதில்ல சார்..!’

‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’

‘சார்… வந்து... அமெரிக்காவில்’

‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.

வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”

பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.

”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.

‘என்ன சார்..?”

‘அது போய்டுச்சுய்யா’

'சார்.. ..'

‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’

‘சார் .. எந்த Scene?’

‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’

‘அப்டியா சார்?’

‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.

‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.

அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..

‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’

‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’

’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’

............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!

அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…

’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’

எங்கும் அமைதி…!

1…..! 1..2..3..4..

‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.

'....... ...... ....'

'....... ...... ....'

I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.


அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..

‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.

‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.

‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.

போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."

இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்

அதன் காணொளி

Thursday, January 26, 2012

@Vivaji Updates - கார்க்கி Special

குண்டு எறிதல், சோடா பாட்டில் எறிதல் ஆகிவற்றில் ஏதேனும் ஒன்றில் முன் அனுபவமும், எறிந்தபின் ஒற்றைக்கால் காலணியுடன் நடந்து பழகிய ஆட்கள் தேவை. #ராகுல் மீது காலணி வீசப்பட்டது

--0~~~~~~0--


ஜெயாசெய்தியில்:: இரண்டு அமைச்சர்களை முதல்வர் #விடுவித்தார்.. #பணயக் கைதியாவா இருந்தாங்க விடுவிக்க?

--0~~~~~~0--

Passport இல்லாம Airport போலாம், ஆனா செத்துட்டா, Support இல்லாம சுடுகாட்டுக்குக் கூட போவ முடியாது #4பேர் வேணும்
 
--0~~~~~~0--

கும்மி அடிக்கிறதுங்கிறது இப்ப வெறும் வார்த்தையாலதான். இப்ப யாருக்கும் கும்மிப் பாட்டும் , கும்மி அடிக்கவும் தெரியாது #வெறும் உதார்
--0~~~~~~0--

குடியரசு, சுதந்திர தினங்களுக்குமட்டும் நம் மக்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் தேச பக்தி வாழ்க!

--0~~~~~~0--

தனுசு ஹிந்தியில படம் நடிக்கப்போறாராம். சிம்புத் தம்பி பொசுக்கு அரபி படத்துக்கு எல்லாம் கதை கேட்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கும்

--0~~~~~~0--

Farmville விளையாடுறது எப்படின்னா சர்க்கரைன்னு காகிதத்துல எழுதி ந**ற மாதிரி. இனிப்பா இருக்காது
--0~~~~~~0--

கெட்டதிலேயும் நல்லது உண்டு, உதாரணம், டாஸ்மாக் காசெல்லாம் தானே புயல் நிவாரண நிதியா உதவுதே.

--0~~~~~~0--

விமானத்திலிருந்து தேவதை தரையிறங்கினாள், காத்திருந்த நான் பறக்க ஆரம்பித்தேன்.


--0~~~~~~0--

கடைசியா தலைப்புக்கு வருவோம்.  அதென்ன கார்க்கி Specialன்னு கேட்கிறவங்களுக்கு

"நீ எனக்கு எப்பவுமே Special தானே கார்க்கி" - இது கார்க்கியோட தோழி

--------------------------------------------------------------------------------------

என்னை Twitterல் தொடர http://twitter.com/vivaji

Monday, January 23, 2012

விவாஜி Updates - விஜய் Special

இந்த உலகத்துல எல்லாருமே ஆடுற ஒரே ஆட்டம் - போங்காட்டம்

--00--

நல்ல தமிழ் பேசுகிறார்கள் என நம்பும் ஈழத்தமிழர்களின் அதிகப் பெயர்களில் சமஸ்கிரத எழுத்துக்கள் இருக்கின்றன #ஷ #ஹ #அவதானிப்பு
--00--

ஆங்கிலத்துல பாட்டெழுதி, அதுல ரெண்டு வார்த்தை தமிழை போட்டு தமிழையே தலை நிமிர வெச்சவர்யா தனுசு
--00--

கடவுளுக்கு ஆதரவாக ஆத்திகர்கள் என்னும் பெரும்பான்மையினரும், நாத்திகர்கள் என்னும் சிறுபான்மையினரும் என்றுமே உண்டு #இளையராஜா

--00--

விஜய் கார்னர்:
3Idiots &  நண்பன்: அமீர்கானை விஜயுடன் ஒப்பிட்டு அமீர்கானை கேவலப்படுத்தாதீர்கள். அசலுக்கு என்றுமே மதிப்புண்டு, நகல் நகல்தான்
 
* அசல்ங்கிற படத்துல அஜித் நடிச்சிட்டதாலும், அதிக remake படங்களில் நடிப்பதாலும் ஏன் "நகல்" என்ற படத்தில் விஜய் நடிக்கக்கூடாது?

* இந்த 6 வருசம் வெளியே தலைகாட்ட முடியலீங்க. நான் விஜய் ரசிகன்னு சொல்ல இந்த 6 வருசம் தேவைப்பட்டுச்சு.

* நண்பனில் நடிக்க ஷங்கர், விஜயை தேர்ந்தெடுக்கவில்லை. விஜய்தான் ஷங்கரைத் தேர்ந்தெடுத்தார் #நன்றிக்கடன் #SAC

* 2012 வருடம் அதிர்ச்சியோடத்தான் ஆரம்பிச்சிருக்கு. அட ஆமாங்க, விஜய் படம் நல்லா இருக்காமே


--00--

நினைப்பதெல்லாம் நடக்குமென்றால், ஆடு, மாடுகளைத்தான் நினைக்க வேண்டும் -

இதுக்கு கார்க்கி அடிச்ச பதில் -

ஏன் அல்டிமேட் ஸ்டாரைக் கூட நினைக்கலாமே

--00--


 இந்தத் தலைமுறையினருக்கு இன்னும் குடுத்து வைக்கவில்லை. எங்க தலைமுறையினருக்கு இளையராஜா என்று ஒருவர் இருந்தார்


--00--


தியேட்டர் எல்லாம் இடிச்சு கல்யாண மண்டபமாவும், Shopping complexஆவும் கட்டிட்டு இப்ப தியேட்டர் கிடைக்கலைன்னு சொன்னா கடுப்பாவாது?


--00--


முடி நேராக்குற பெண்கள் கொஞ்ச நாளாவது ஜடை போடாம இருங்க. ஜடை போடுற பெண்கள் முடியை நேராக்க செலவு பண்ணாதீங்க.
--00--


நம்மூருல சர்வாதிகார ஆட்சி இல்லையென்று சொன்னது யார்? #ஒவ்வோர் வீட்டுலேயும் மனைவி என்ற பெயரில் சர்வாதிகாரி  ஒருவர் உண்டு
--00--

செருப்பு வீசுறதைத்தான் உயர்ந்த பட்ச கேவலமா நினைச்சிட்டு இருந்தோம். இப்போ அதையும் கேவலப்படுத்திட்டாங்க. சே :( #ராகுல்
--00--

Wifiம் Wifeம் ஒரே மாதிரி. தூரத்துலதான் இருந்தாலும் நம்மளை அடக்கி வாசிக்க வெச்சிடறாங்க
--00--

* July 3 - கல்யாணம், ஜனவரி -19ல் குழந்தை- 7 மாசத்திலேவா? நீங்க ரெம்ப fast SlvaJi #ஆயிரத்தில் ஒருவன்

* அதிகமா வாய் பேசறவனை நம்பலாம், அமுக்கமா இருக்கிறவனை மட்டும் நம்பவே கூடாது #செல்வா #தனுஷ்

--00--


"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத" இப்படி யாராவது ஆரம்பிச்சாவே அது கருத்து சொல்றாங்கன்னுதான் அர்த்தம். உடனே எஸ் ஆகிடனும்
--00--

Thursday, January 12, 2012

Nanban Review

ஷங்கர் - விஜய் கூட்டணின்னு சொல்றதுதான் பொருந்தும். ஆனா விஜய் ரசிகர்களோ விஜய்-ஷங்கர் கூட்டணின்னு சொன்னாத்தான் ஒத்துக்குவாங்க.

3 Idiots- இந்தி சினிமா உலகையே புரட்டியெடுத்தப்படம். சேத்தன் பகத்தின் 5PointSomeOne என்ற நாவலைத் தழுவி எடுத்தார்கள். படம் தாறுமாறாய் ஓடியது.அதை அப்படியே தமிழில் பிரதி எடுத்திருக்கிறார்கள். ஷங்கருமா Remake செய்யறாரு என்று பட பூஜையன்றே நான் நினைத்தேன்.

3- Idiots கதை தெரியாதவங்க இங்கே படிச்சிக்குங்க. தமிழ்ல எந்த மாற்றமும் இல்லாம வந்திருக்கு.


கதை- உனக்கு எது பிடிக்குதோ அதைப் படி, அப்பா சொல்றாங்க ஆட்டுக்குட்டி சொல்றாங்கன்னும், வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் வற்புறுத்தலுக்காகவும் படிக்காதே, எல்லாம் நன்மைக்கே. இப்படி எல்லா ஒரே அறிவுரை சொல்ற படம். ஆனா கண்டிப்பா நம்ம கண்ணுக்கு முன்னாடி சொடக்கு போட்டோ, தொடை தட்டியோ சொல்றது இல்லீங்க.

கல்லூரி முடித்து பத்துவருடம் கழித்து, அமெரிக்காவில் வசதியாக வாழும் சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை அழைத்துக்கொண்டு விஜயை பார்க்க ஊட்டிக்குப் போகிறார். கல்லூரி காலத்தில் சத்யன் - விஜய் இடையே நடக்கும் சவால், இப்படித்தான் ஆரம்பிக்கிறது கதை, பிறகு Flashbackல் கல்லூரிக்காலம்.

நம்முடைய பாடத்திட்டம் தலை சுத்தி சாப்பிடுவதைப் போன்றது, அதை எளிமையாக சொல்லித்தர வேண்டும், மனப்பாடம் செய்யும் இந்தப் பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று நினைப்பவன், பெரிய கோடீஸ்வரனின் மகன், அப்பாவின் மாத வருமானம் 25 கோடி ரூபாய், இயந்திரங்களின் மீது தீராக்காதல் கொண்டவன்- இது பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்).  மிகவும் ஏழ்மையான குடும்பம், ஒரு கை, கால் விளங்காத அப்பா, எப்போதும் காசு கணக்குப் பார்க்கும் அம்மா, கல்யாணமாகாத அக்கா, ஏக சாமி பக்தி, என ஒரு செளகார்ஜானகியின் குடும்பத்திலிருந்து வரும் - செந்தில் சேவற்கொடியான்(ஜீவா). பிறந்தமுதல் நிமிடமே தன் மகன் ஒரு இஞ்சிஜியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்த, ஒரு Wild Life Photographer ஆக வேண்டும் என்று ஆசை கொண்ட- வெங்கட ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்), கலிப்போர்னியாவில் பிறந்து, உருப்போட்டே படிச்சு முதல் இடம் வாங்கும், பெரிய வேலை மட்டுமே லட்சியம் என இந்தியாவிற்கு படிக்க வரும் ஸ்ரீவத்சன்(சத்யன்), கண்டிப்பும் கறாரும்,கல்லூரியை முதலிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ள போராடும் -விருமாண்டி சந்தனம்- வைரஸ்(சத்யராஜ்), மருத்துவம் படிக்கும் அவருடைய மகள் ரியா(இலியானா), அவருடைய அக்கா(அனுயா-சிவா மனசுல சக்தி கதாநாயகி), ஜோடி நம்பர் புகழ் ரின்செண்ட்(மில்லி மீட்டர்), சொல்ல மறந்துட்டா கோச்சுக்குவாங்க  இராமசாமி, O4P புகஷ் வெங்கட் சுந்தர்.(குறும்பட Super Star ஆச்சே)

கல்லூரி விடுதியின் முதல் நாளிலேயே வன்பகடியில் (ragging) செய்யும் மூத்தவர்களுக்கு சூடு வைத்து பிரபலமாகிறார் விஜய் , அவர்களுடைய இரு அறைத்தோழர்கள்தான் ஜுவாவும், ஸ்ரீ காந்தும் நண்பர்களாகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே சத்யராஜுக்கும் இந்த மூவருக்கும் ஆகாமல் போகிறது. எளிமையாக பல இயந்திரங்களை உருவாக்குகிறார் விஜய், ஆனால் அதையெல்லாம் நிராகரித்துவிடுகிறார் சத்யராஜ் . இவர்கள் மூவரையும் பிரிக்க பலவாறு முயற்சி செய்கிறார் சத்யராஜ். முடியாமல் போகிறது, ஒரு நாள் இரவு குடித்துவிட்டு சத்யராஜ் வீட்டில் இந்த மூவரும் கலாட்டா செய்ய, ஆரம்பிக்கிறது கதை. ஜீவாவுக்கு Campus interviewல் வேலைகிடத்துவிட்டால் மீசை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விடுகிறார் சத்யராஜ். அதற்காக விஜயும், ஸ்ரீகாந்தும் கேள்வித்தாளை இலியானா உதவிகொண்டு திருட, சத்யராஜுக்குத் தெரிந்து அவர்களை கல்லூரி விடுதியிலிருந்து வெளியே அனுப்ப நினைக்கிறார். இந்த நேரத்தில் சத்யராஜின் மூத்த மகளுக்கு பிரசவ வலி வந்துவிடுகிறது. மருத்துவமனை கொண்டு செல்லாத இயலாத நிலையில் விஜய் கண்டுபிடித்த சாதனத்தின் உதவியோடும், Webcamல் இலியானாவின் அறிவுரைப்படியும் நண்பர்கள் அனைவருமே பிரசவம் பார்க்க சத்யராஜ் விஜயை தலை சிறந்த மாணவனாக ஒப்புக்கொள்கிறார்.


Flash back முடிந்தவுடந்தான் தெரிகிறது விஜய்யின் பெயரே பஞ்சவன் பாரிவேந்தன் இல்லையென்றும், SJ Suryaவின் பினாமியாகவே அவர் படித்திருக்கிறார் எனவும் தெரியவருகிறது, பிறகு இலியானாவும் விஜயும் எப்படி ஒன்று சேர்கிறார்கள், சத்யன் விஜய்யின் தோற்றாரா வெற்றி பெற்றாரா, விஜய் எப்படி புகழ் பெற்றவராக இருக்கிறார் எனபது இறுதிக்காட்சி.


இசை: ஹாரிஸ் ஜெயராஜ், ஏழாம் அறிவுல விட்டதை இங்கேப் புடிச்சுட்டாரு. Template பாடல்களை மாத்தினதும் இல்லாம படத்துக்கு சரியாப்பொருந்தி இசை அமைச்சிருக்காரு. இசை வந்துச்சா போச்சான்னு தெரியாதளவுக்கு பாந்தமாய் அமைச்சிருக்காரு. பாராட்டப்படவேண்டிய சில சமாச்சாராங்கள் நிறைய சின்னச் சின்னதாய் செஞ்சிருக்காரு.

மனோஜ் பரமஹம்சா: ஒளிப்பதிவு, ஈரம், VTVக்கு அப்புறமா ஷங்கர். தமிழ்சினிமாவுக்கு நல்லதொரு வரவு. எதை எப்படிக் கொடுத்தா சரியா காட்சியில உக்காரனும்னு தெளிவா செஞ்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா அஸ்கு லஸ்கா பாட்டைச் சொல்லலாம். ஷங்கர் சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்காரு.

வசனம்: மதன் கார்க்கி, "அரை மணியில ஃபீட்சா வந்துருது, ஆம்புலன்ஸ் வரமாட்டேங்குது", இப்படி ஒரு இந்திப்படத்தை ஒரு சரியான தமிழ்ப்படமா மாத்தினது இவரோட வசனங்கள்தான். சத்யனின் மேடைப்பேச்சுதான் இந்தியில் கலக்குச்சு, தமிழில் அதுக்குமேலே கலக்கல்.
திரையரங்கமே பத்து நிமிசமா அதிர அதிர சிரிச்சதுன்னா பார்த்துக்குங்களேன்ன். "காலொடிஞ்ச பின்னாடிதான் சார் எப்படி என் கால்ல நிக்கிறதுன்னே தெரிஞ்சது" இப்படி பல வசனங்கள் நச். படத்தை இன்னொரு படி மேலே கொண்டுபோக இவரோட வசனங்கள் உதவியிருக்கு.

இலியானா: கொஞ்சமா வராங்க. ஆடுறாங்க. பாடுறாங்க, சீன் காட்டுறாங்க, இடுப்பைக்காட்டுறாங்க, சரக்கடிக்கிறாங்க.

ஜீவா, கண்டிப்பாய், படம் முழுக்க நம்ம வியாபித்திருக்கிறவர் ஜீவாதான். சோகம், நகைச்சுவைன்னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்காரு, ஆச்சர்யப்படுத்தராரு. இந்தியில் ஷர்மான் ஜோஷி செய்ததைவிட சிறப்பா செஞ்சிருக்காரு. என்னைப் பொருத்தவரையில், ஜீவாதான் இந்தப் படத்துல One of the Best. அப்ப இன்னொருத்தர், அதுதாங்க சத்யன். கலக்கியிருக்காரு. இந்தப்படம் அவரோட சினிமா வாழ்க்கையின் மறுபிறப்புன்னே சொல்லலாம்- nice selection. ஸ்ரீகாந்த், குடுத்த கதாப்பாத்திரத்தை சரியா பண்ணியிருக்காரு, நக்கல் நையாண்டியாகட்டும், அப்பாகூட மன்றாடும்போதாகாட்டும், பட்டாசு கிளப்புறாரு.

ஷங்கர்: இந்தியிலிருந்து அப்படியே பிரதியெடுக்க ஷங்கர் வேணுமா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு, இதை ஷங்கரைத் தவிர வேற யார் எடுத்திருந்தாலும் சொதப்பியிருப்பாங்க. B & C க்காக இலியானா பாட்டு சேர்த்திருப்பது,வசங்களை மாற்றி அமைத்தது, தன்னுடைய பாடல்களையே Spoofஆக மாற்றி அஸ்க் லஸ்கா பாட்டில் கிண்டலடித்துக்கொள்வது, ரயிலுக்கு வண்ணமடிப்பது என ஷங்கர் டச் எல்லா இடத்திலேயும் உண்டு. தமிழில் குடுத்த படங்கள் எல்லாமே Block Buster (இந்தப் படம் உட்பட)என்பதைத் தவிர ஷங்கரிடம் சிறப்பாய் ஒன்றுமில்லை.

குறை: இலியானாப்பாட்டு. எதுக்குன்னே தெரியல, படமே ரொம்ப நீளம் இதுல இந்தப்பாட்டு வேற.  கடுப்பா இருந்துச்சு. பின்னாடி வந்த காட்சிகளின் வசனம்தான் நம்மை மீட்டெடுக்குது.


விஜய்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா இப்படி எல்லார்கிட்டேயும் ச்சும்மா சுத்தி சுத்தி அடிவாங்குறாரு. அடி மட்டுமா, மிதி மிதின்னு மிதிச்சாலும் வாங்கிக்கிறாரு. விஜய் மீண்டும் மென்மையாய், இளமையாய் இருப்பது இந்தப் படம்தான். கண்டிப்பாய் அமீர்கானுடன் ஒப்பிடுவது தப்புன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் குடுத்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாய் முடிச்சிக்கொடுத்துட்டாரு விஜய். இப்படி நடிச்சித் தொலைக்க வேண்டியதுதானே, கருமாந்திரம் எல்லாம் என்னாத்துக்குங்க விஜய் சார்? ஆனாலும் பாத்திரத்தை நிறைவாய் செய்துவிடுகிறார் விஜய். "பலே சார், நீங்களும் நடிப்பீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க, இனிமே பிக்காலிப்பசங்ககூட எல்லாம் சேராதீங்க." இப்படி அடக்கி வாசித்தது ஆச்சர்யமே ஆனாலும் அதுதான் படத்தோட வெற்றிக்கும் காரணம். விஜய் ரசிகர்களயும் தாண்டி கண்டிப்பாய் பலருக்கும் இந்தப்படம் புடிக்கும். சுருங்கச் சொன்னா, விஜய்க்கு 1996ல் விக்ரமின் பூவே உனக்காக கிடைச்சது, 2011 ஷங்கரின் நண்பன் கிடைச்சிருக்கு.

மொத்தத்துல அருமையான படம், கண்டிப்பாய் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.
(My Rating: 4/5)
.
.
.

Tuesday, January 10, 2012

சினிமா Quiz

சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.


1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?

பதில்: அமீஷா படேல்2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?

பதில்: Easha Deol [ஹேமாமாலினியின் மூத்த மகள்]

3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.

Ans: கன்னிகா(5 ஸ்டார் கதாநாயகி)

4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?

Ans: சித்தார்த்

5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?

Ans: மணிரத்னம்

6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.

Ans: வித்யா பாலன்(தந்தை ETC channelன் VP)

7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.

Ans: மாதவன்

8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

Ans: சுஜாதா [எழுத்தாளர்]
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?

Ans: அபிஷேக் பச்சன்
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?

Ans: விவேக் ஓபராய்


11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?

Ans: சூப்பர் ஸ்டார்
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?

Ans: வெங்கடேஷ்

Monday, January 9, 2012

ஆண்கள் இதைப் படிக்க வேணாம் - 18+

 • ஒரு ஆண் ஒரு பெண், ரெண்டு பேரு நிர்வாணமா அலைஞ்சிட்டு இருந்தாங்களாம். ரெண்டு பேரும் சந்திச்சிகிட்டா என்ன சொல்லிக்குவாங்க? [No 18+] - பதிலை பின்னூட்டத்துல சொல்லுங்க
          பதில் - Shame Pinch
 • என்னைக் கண்டா அடிக்கே வலிக்கும்டா- அதிகமா விஜய் படம் பார்க்கிறேன்னு பின்னூட்டம் போட்டா அழிச்சிருவேன்.

 • சரக்கடிக்கும் போதெல்லாம் ஞாபகத்தில் வந்துவிடுகிறாள் முன்னாள் காதலி!

 • காதலிக்கும்போது தெரிவதில்லை காதலியின் ராட்ச்சச மறுபக்கம் #முடியல

 • வீட்ல புரோட்டா மாஸ்டருக்கு என்ன பிரச்சினையோ? இப்படி பிச்சி உதறுராரு?
 • ச்சும்மா பிச்சி உதறிட்டாருய்யா #பரோட்டா_மாஸ்டர்

 • லிப் டூ லிப் முத்தக்காட்சிக்கு 10 டேக் வாங்கிய விமல்! #அட, அப்ரசண்டி, 30 டேக் வாங்கியிருக்கலாமே?

 • நமக்குப் புரியாது என்பதாலேயே மருத்துவர்கள் இன்றும் தெய்வமாக போற்றப்படுகிறார்கள். பின்னே தெய்வங்கள் பற்றி என்னைக்குப் புரிஞ்ச்சிருக்கு?


 • நான் தண்டால், கர்லா கட்டைனு வொர்க்-அவுட் பண்ணி, இயற்கையான முறையில சிக்ஸ் பேக் வெச்சேன் --> ஆதி - அரவான்- #ஓஹ் இதான் இயற்கையா?

  
 • பெண்ணிற்குத் தேவை கணவனிடமிருந்து சின்ன அங்கிகாரம். கிடைத்துவிட்டால் வானம் அவள் கையில்

 • பாதிக்கப்பட்டவங்க எல்லாருமே கொலைகாரர்களா மாறினா இந்தியாவுல ஒருத்தர் கூட உயிரோட இருக்க முடியாது

 • இணையத்தில், பெண்கள் ரவுடிகள் போலவும் ஆண்கள் பழம் போலும் காட்டிக்கொள்கிறார்கள். இந்த இருவரையுமே நம்பாதீங்க  

 •  பலம் இழக்கிறார் அன்னா ஹசாரே !// பின்னே 60 வருசத்துக்குமேல பழகி வந்த லஞ்ச லாவண்ய பாரம்பரியத்தை மாத்த நினைச்சா? விட்ருவோமா?

 • வடிவேலு இல்லாத குறை தெரிந்த ஆண்டு 2011 . இன்னும் அவர் இடம் நிரப்பப்படாமலே இருக்கு.

 • நான் இப்போதெல்லாம் கவிதை வாசிப்பதை விட்டுவிட்டேன். அவள் இருக்கையில் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

 • நம்மூருல சர்வாதிகார ஆட்சி இல்லையென்று சொன்னது யார்? #ஒவ்வோர் வீட்டுலேயும் மனைவி என்ற ஒருவர் உண்டு


 • கோபாலை எரிச்சதா நினைச்சுகிட்டு அம்மாவை எரிச்சுகிட்டு இருக்குங்க இந்த ரத்தங்கள்


----------------------------------------------

இது வரைக்கும் நீங்கள் படித்துக்கொண்டிருந்தது நான் ட்விட்டதின் மறுஒளிபரப்பு.
இனிமே கருத்து கந்தசாமி,...

ஆம்பிளைங்க எப்பவுமே சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாங்க. உதாரணமா இந்தப் பதிவையே எடுத்துக்குங்களேன். தலைப்புல என்ன சொல்லியிருக்கேன்??

Wednesday, January 4, 2012

RX100ம் நண்பனும்

[இது ஒரு மீள்பதிவுதான், புதுசா வந்தவங்க படிச்சிக்கோங்க, மூத்தப்பதிவர்கள் சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் X அமுக்கிட்டு கிளம்பிருங்க]


கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்ததும் தூங்கிப்போனேன்.

மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.

அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!

பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.

இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.

இன்னும் இருகியது எங்கள் நட்பு!

இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.

இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.

விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்

"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.

டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.

ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.

கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன்தான்.


பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.

எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.

எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.

பதிவுகள், செய்திகள், குறும்படங்களுக்கான புதிய திரட்டி, பதிவுகளை இணைத்துக்கொள்ளுங்கள்வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.


நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.

கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.

நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.

வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.

அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.

இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.

நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.

பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.


எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,
தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,
யாஹூ அட்ரஸ் புக்,
Facebook என
உன்னோட பிறந்த நாள்
ரிமைண்டர் வரும்போதும்,
இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.

Tuesday, January 3, 2012

டீக்கடை பெஞ்சு - 01-03-2012

கேபிளாரின் கொத்துப்பரோட்டா, ஜாக்கியின் சாண்ட்விச் மாதிரி நானும் ஆரம்பிச்சதுதான் மகசூல, இனிமே அது டீ கடை பெஞ்சு அப்படிங்கிற பேர்ல வரும்
(ஆமா, அப்படியே வந்துட்டாலும்...)
=====!00oo00!=====பெரும்பாலும் அரட்டைக் கச்சேரியாகவே மாறிவிட்ட ட்விட்டரில் ஒரு நாள் நடந்த கவிதை/பொருள் விளக்கக்கூட்டம் இது:

* Gokul R (@rgokul) Like பாரதி, our kavinjar has put together சு ரு தி and all? Amazing I say

*கார்க்கி (@iamkarki) i can decode it and find some music notes. Poet indirectly explained how this poem has to be sung.

* Gokul R (@rgokul) Kavinjar definitely has fully thought through a lot of stuff before coming up with this.

* கார்க்கி (@iamkarki) இடைவெளியின்றி ஓடும் வாழ்க்கையை குறிக்க நோ ஸ்பேஸ்> கவனித்தீர்களா?

* Parisalkaaran (@iParisal) நடுவில் சில எழுத்துகள் மட்டும் கேபிடல் லெட்டரில் எழுதிருக்கார் கவிஞர். ச்சான்ஸே இல்லை!

* Gokul R (@rgokul) Yup. And, there is some postmodernism also coming out of it. Excellent, I say.

* Parisalkaaran (@iParisal) Hazare பிரச்னை முடிஞ்சதுங்கறத H-க்கு அடுத்து கடைசி எழுத்தான Zஐப் போட்டு கவிஞர் சொல்லிருக்கார் கவனிச்சீங்களா?

* Gokul R (@rgokul) It is still not a Haiku; am a big fan of that format

* isr_selva (@isr_selva) இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா Hzkgjchx இந்த வார்த்தை பிரமாதம்.

இப்படியெல்லாம் பேசிக்கிட்டாங்களே, அது எந்தக் கவிதைக்கு தெரியுங்களா? லங்காஸ்ரீ விசயத்துக்கு கீழே இருக்கும் பாருங்க

=====!00oo00!=====


Twitter துணுக்குகள்:

தனக்கான மனைவியை, பஸ் ஸ்டாண்டுல தேடினது போய் கூகுள், facebook, twitterன்னு தேடறளவுக்கு மாறியிருச்சு சமுதாயம்.

In a Meeting, a Girl said " I am more bitchy than usual" . எங்க ஊர்ல இப்படி சொன்னா என்னா ஆவும் தெரியுமா?

=====!00oo00!=====

சில நேரத்துல சில வானொலிகளில பாட்டுக்கேட்க போறதும் உண்டுங்க. லங்காஸ்ரீல எனக்குப் பிடிச்ச RJ ஆகாஷ் நடத்துற நிகழ்ச்சி evening Drive.

அப்படி ஒரு நாள் பாட்டு கேட்க போன போது கேள்வி கேட்டாரு. அதுக்கான பதிலையும் கீழே குடுத்திருக்கேன்.
ஆகாஷ்: நிலவுக்கு போற மாதிரி இருந்தா யாரைக்கூட்டிட்டுப் போவீங்க.

நான்: தாத்தாவை.

ஆகாஷ்:  ஏன்?

நான்: ஏன்னா என் தாத்தாவுக்கு பாட்டி மேல ரொம்ப பிரியம் பாட்டி இறந்த பிறகு தாத்தா மனசு ஒடிஞ்சு போயிட்டாரு, அவர் நாள் முழுக்க அழுதிட்டே இருக்காரு.

ஆகாஷ்:  அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்

நான்:  நிலாவுக்கு கூட்டிட்டுப்போனா தாத்தா  சரியாகிடுவாரு.. ஏன்னா பாட்டி அங்கேதான் வடை சுட்டுகிட்டு இருக்காங்க.

=====!00oo00!=====அப்படியெல்லாம் பேசிக்கிட்டாங்களே, அது இந்தக் கவிதைக்குத்தாங்க.

(@vivaji) Ifslstksyksykzlyxj icicl lvkchmtkxmgkcjzmbhNfJXMYDPHPVXKPUDOludluduldulxluckvlcjckyskyskzirMhcsnrZlhzmfMgjz JC Hzkgjchx Zmjghxmgxxhhj


=====!00oo00!=====


படித்ததில் பிடித்தது:

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தி இந்திய உயிர்களைக் குடித்த ஜெனரல் டையர், இதுபோன்ற இறுமாப்புடன்தான் இருந்தான். சட்டம் அவனுக்கு எந்த தண்டனையும் தரவில்லை. 'பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காக சிறிதளவும் வருந்தவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் செய்ததை, வாய்ப்பு கிடைத்தால் ஆப்பிரிக்காவில் அரங்கேற்றவும் தயார்’ என்று மேடைகளில் பேசிவந்தான். 20 வருடங்கள் காத்திருந்து, 1940-ம் ஆண்டு இங்கிலாந்துக்குள் நுழைந்து, காத்திருந்து அவனை சுட்டுக் கொன்றார் இந்திய தீரர் உத்தம்சிங். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. அது யார் மூலம், எப்படி என்பதுதான் காலம் வைத்திருக்கும் கணக்கு!


=====!00oo00!=====


Tea Kadai Bench:


நமது பாரம்பரியத்தில் பொரணி பேசறதுக்கும், வெட்டி அரட்டை அடிக்கிறதுக்கும் இருந்த வசதியில திண்ணையை முற்றிலுமாக ஒழிச்சிட்டோம். பின்னே? அப்பார்ட்மெண்ட்ல  திண்ணைய  வெச்சி கட்ட முடியுங்களா? இன்னொனும் அதுல அழிஞ்சிட்டு வருது தெரியுங்களா? அதாங்க டீ கடை பெஞ்சு. அதனை மீட்டெடுக்க ஒரு போராட்டம் நடத்த இருக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கண்டிப்பா பதிவர்களான சிலர் கூட சேர்ந்து அதனை மீட்டெடுப்பாங்க.

=====!00oo00!=====


18+

கணவன் இல்லாத நேரமாப் பார்த்து, மனைவி கள்ளக்காதலனோட ஜல்சா பண்ணிட்டு இருந்தாள்.  அந்த நேரத்துல கணவன் வர்ற சத்தம் கேட்டவுடனே, கள்ளக்காதலன், பரண் மேல போய் ஒளிந்துகொண்டான்.  அங்கே அவளோட 9 வயது மகனும் ஒளிஞ்சிட்டு இருந்தான். இந்த நேரம் பார்த்து அந்தப் பொடியன்,

"இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை அங்கிள்?"

"ஆமாம்"

காத்தோட்டமே இல்லையில்லை?"

"ஆமாம்"

"அங்கிள்,ஆனா என்கிட்ட ஒரு கிரிக்கெட் பேட் இருக்கு. அதை வாங்கிக்குங்க, 5000 ரூபாய்தான்"

க.காதலனுக்கோ செம கோவம்.

"டேய், இதுக்கா 5000 ரூபாய், தரமுடியாது. எனக்கு இது தேவையுமில்லை"

அதுக்குப் பொடியன் "வாங்கலைன்னா விடுங்க அங்கிள்,  அப்பாகிட்ட போய் நீங்க இந்தப் பேட்டை வாங்கிக்கலைன்னு சொல்லிடறேன்"னு சொன்னான்.

கள்ளக்காதலனும் வேற வழியில்லாம 5000 ரூபாய் குடுத்து வாங்கிக்கிட்டான்.

இன்னொரு நாள். அதே மாதிரி, கணவன் வர, கள்ளக்காதலன் பரண் மேல ஏறிக்க, பொடியன் அங்கே இருக்க..

"இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை அங்கிள்?"


"ஆமாம்"

"காத்தோட்டமே இல்லையில்லை?"

"ஆமாம்"

"அங்கிள், ஆனா என்கிட்ட ஒரு கிரிக்கெட் பால் இருக்கு. அதை வாங்கிக்குங்க, 2000 ரூபாய்தான்"
 
இந்த முறை கள்ளக்காதலன் பேசாம காசைக்குடுத்து பந்தையும் வாங்கிட்டு போயிட்டார்.
 
ஒரு நாள், பொடியனோட அப்பா பொடியன் கிட்ட "பேட்டையும், பாலையும் எடுத்துட்டு வாடா கிரிக்கெட் விளையாடலாம்"னு கூப்பிட, பொடியன் "அப்பா, அதை ரெண்டையும் 7000 ரூபாய்கு வித்திட்டேன்" என்று சொன்னான்.  
 
அப்பாவுக்கோ செம கோவம் "பாவிப்பயலே, 500க்குக்கூட போவாத பேட்டையும் பாலையும் அநியாய விலைக்கு வித்திட்டேயாடா. வா மாதாகோவிலுக்குப் போலாம். அநியாய விலைக்கு வித்ததை பாவ மன்னிப்பு கேட்டு பாவத்தைக் கழிச்சுக்கோ"
 
மாதாகோவிலில், பாவ மன்னிப்புக் கூண்டுக்குள்ள போன பொடியன் சொன்னான்
 
இங்கே ரொம்ப இருட்டா இருக்கில்லை?"
 
பாதிரியார் சொன்னார், "டேய், மறுபடியும் ஆரம்பிக்காதே, என்கிட்ட சல்லிக்காசு கூட இல்லை"

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்