விவாஜி Updates - விஜய் Special

இந்த உலகத்துல எல்லாருமே ஆடுற ஒரே ஆட்டம் - போங்காட்டம்

--00--

நல்ல தமிழ் பேசுகிறார்கள் என நம்பும் ஈழத்தமிழர்களின் அதிகப் பெயர்களில் சமஸ்கிரத எழுத்துக்கள் இருக்கின்றன #ஷ #ஹ #அவதானிப்பு
--00--

ஆங்கிலத்துல பாட்டெழுதி, அதுல ரெண்டு வார்த்தை தமிழை போட்டு தமிழையே தலை நிமிர வெச்சவர்யா தனுசு
--00--

கடவுளுக்கு ஆதரவாக ஆத்திகர்கள் என்னும் பெரும்பான்மையினரும், நாத்திகர்கள் என்னும் சிறுபான்மையினரும் என்றுமே உண்டு #இளையராஜா

--00--

விஜய் கார்னர்:
3Idiots &  நண்பன்: அமீர்கானை விஜயுடன் ஒப்பிட்டு அமீர்கானை கேவலப்படுத்தாதீர்கள். அசலுக்கு என்றுமே மதிப்புண்டு, நகல் நகல்தான்
 
* அசல்ங்கிற படத்துல அஜித் நடிச்சிட்டதாலும், அதிக remake படங்களில் நடிப்பதாலும் ஏன் "நகல்" என்ற படத்தில் விஜய் நடிக்கக்கூடாது?

* இந்த 6 வருசம் வெளியே தலைகாட்ட முடியலீங்க. நான் விஜய் ரசிகன்னு சொல்ல இந்த 6 வருசம் தேவைப்பட்டுச்சு.

* நண்பனில் நடிக்க ஷங்கர், விஜயை தேர்ந்தெடுக்கவில்லை. விஜய்தான் ஷங்கரைத் தேர்ந்தெடுத்தார் #நன்றிக்கடன் #SAC

* 2012 வருடம் அதிர்ச்சியோடத்தான் ஆரம்பிச்சிருக்கு. அட ஆமாங்க, விஜய் படம் நல்லா இருக்காமே


--00--

நினைப்பதெல்லாம் நடக்குமென்றால், ஆடு, மாடுகளைத்தான் நினைக்க வேண்டும் -

இதுக்கு கார்க்கி அடிச்ச பதில் -

ஏன் அல்டிமேட் ஸ்டாரைக் கூட நினைக்கலாமே

--00--


 இந்தத் தலைமுறையினருக்கு இன்னும் குடுத்து வைக்கவில்லை. எங்க தலைமுறையினருக்கு இளையராஜா என்று ஒருவர் இருந்தார்


--00--


தியேட்டர் எல்லாம் இடிச்சு கல்யாண மண்டபமாவும், Shopping complexஆவும் கட்டிட்டு இப்ப தியேட்டர் கிடைக்கலைன்னு சொன்னா கடுப்பாவாது?


--00--


முடி நேராக்குற பெண்கள் கொஞ்ச நாளாவது ஜடை போடாம இருங்க. ஜடை போடுற பெண்கள் முடியை நேராக்க செலவு பண்ணாதீங்க.
--00--


நம்மூருல சர்வாதிகார ஆட்சி இல்லையென்று சொன்னது யார்? #ஒவ்வோர் வீட்டுலேயும் மனைவி என்ற பெயரில் சர்வாதிகாரி  ஒருவர் உண்டு
--00--

செருப்பு வீசுறதைத்தான் உயர்ந்த பட்ச கேவலமா நினைச்சிட்டு இருந்தோம். இப்போ அதையும் கேவலப்படுத்திட்டாங்க. சே :( #ராகுல்
--00--

Wifiம் Wifeம் ஒரே மாதிரி. தூரத்துலதான் இருந்தாலும் நம்மளை அடக்கி வாசிக்க வெச்சிடறாங்க
--00--

* July 3 - கல்யாணம், ஜனவரி -19ல் குழந்தை- 7 மாசத்திலேவா? நீங்க ரெம்ப fast SlvaJi #ஆயிரத்தில் ஒருவன்

* அதிகமா வாய் பேசறவனை நம்பலாம், அமுக்கமா இருக்கிறவனை மட்டும் நம்பவே கூடாது #செல்வா #தனுஷ்

--00--


"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத" இப்படி யாராவது ஆரம்பிச்சாவே அது கருத்து சொல்றாங்கன்னுதான் அர்த்தம். உடனே எஸ் ஆகிடனும்
--00--

Comments

 1. இளா,

  //* July 3 - கல்யாணம், ஜனவரி -19ல் குழந்தை- 7 மாசத்திலேவா? நீங்க ரெம்ப fast SlvaJi #ஆயிரத்தில் ஒருவன்//

  இதை நானும் யோசிச்சேன் , ஏன் இன்னும் நம்ம பதிவர்கள் தோண்டலைனு.நீங்க நான் இருக்கேன்லனு ஆஜராகிட்டிங்க :-))

  ஹி..ஹி ரொம்ப நேரம் டிஸ்கஸ் செய்து இருப்பாங்க போல , எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யனும்னு சொல்றட்து இதைத்தான் போல :-))

  // Shopping complexஆவும் கட்டிட்டு இப்ப தியேட்டர் கிடைக்கலைன்னு சொன்னா கடுப்பாவாது?//

  இப்போ தியேட்டர் எல்லாம் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்ல தானே இருக்கு, ஐனோக்ஸ், அபிராமி மெகா மால்,பிவிஆர் னு :-))

  -----------

  இதான் டைமிங்கில் பத்த வைக்குற பதிவுனு நீங்க சொன்னதா?

  ReplyDelete
 2. /பத்த வைக்குற பதிவுனு //
  அந்தப் பதிவு அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கும் Schedule பண்ணிட்டேங்க :) எல்லாம் ஒரு ஜாக்கிரதையா இருந்துக்கலாங்கிற உணர்வுதான் :)

  ReplyDelete
 3. மாமு

  எங்கேயோ போயிட்டே

  ReplyDelete
 4. //எங்கேயோ போயிட்டே//
  ஒரு படம் .. ஒரு வரி.. இதுக்கே இப்படியா?

  ReplyDelete
 5. என‌க்கு தெரிஞ்சு க‌ட‌ந்த‌ 10 வ‌ருஷ‌த்துல‌ சென்னைல‌ இடிக்க‌ப்ப‌ட்ட‌ தியேட்ட‌ர்ன்னா 10 இருக்க‌லாம். ஆன்ந்த், ராம், கெயிட்டி இப்ப‌டி. ஆனா புதுசா 25 ஸ்க்ரீன்ஸ் மேல‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டிருக்கு. என‌க்கென்ன‌வோ, இப்ப‌ சினிமா வியாபார‌ம் எவ்ளோ உய‌ர்ந்திருக்கு. இந்த‌ காளான் வ‌கை நாய‌க‌ர்க‌ள் & அறிவு ஜீவின்னு நினைச்சிட்டு இருக்கிர‌ இய‌க்குன‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ள்தான் ஊத்த‌ல். காஞ்ச‌னா ஒரு சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.

  ReplyDelete
 6. கார்க்கி - அது சென்னைக்கு மட்டும்தான் பொருந்தும். கோவையில இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க. 2001-2010 தமிழகத்திரையரங்கம் அழிவை நோக்கிதான் போய்ட்டு இருந்துச்சு. C Centerல இன்னும் மோசம்.

  ReplyDelete

Post a Comment

Popular Posts