Friday, February 24, 2012

கிராமத்தானின் ஒரு நாள்

கிராமத்துல ஒரு அட்டவணையைப் போட்டு வாழ்றதில்லைன்னு ஆராச்சும் சொன்னாங்கன்னா நம்பாதீங்க. எங்கூர்ல சத்தியமா ஒரு அட்டவணையாட்டம்தாங்க இருக்கும் வாழ்க்கை. எம்பட ஐயன் படிச்சு பட்டணத்துக்குப் போயி வேற அட்டவணையை போட்டு வாழ்ந்தாலும், எம்பட தாத்தா/பாட்டி/அப்பிச்சி/அம்மாயி வாழ்க்கை வேற மாதரதாங்க இருந்துச்சு. இப்ப நானிருக்குற நிலைமைக்கும் அவிங்களுக்கும் சம்பந்தமேயில்லீங்க. பேன் போட்டா கரண்டு சாஸ்தியாயிரும்னு போன வருசம் சொன்னாருங்க அப்பிச்சு. ஆனா, அதுக்கு மின்னாடியெல்லாம் ஃபேனே அங்கே இல்லீங். நானெல்லாம் வளர்ந்த காலத்துல ஃபேன், டிவி, ரேடியோ எல்லாம் இல்லீங். சரி, நாம விசயத்துக்கு வருவோமுங்.


காலை, வெள்ளைனைய எழுந்திருச்சி(4:45-5:00) மாடு,எருமை பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்ல இருக்கறப்பவே சொஸைட்டிக்கு போயி பாலை ஊத்தியாவனும். நம்பூட்டும் சொஸைட்டிக்கும் ஒரு ஒன்ற மைல் இருக்கும்னு நினைக்கிறேன். பால் எடுத்துட்டுப் போவ பால் லாரி வரதுக்கு முன்னாடியே போயாவனும்.

சொஸைட்டியில் ரீடிங் பார்த்து புஸ்தவுத்துவத்துல குறிச்சிட்டு கிளம்புனா விடியறாப்ல மசமசன்னு இருக்கும்போதே வீட்டு வந்துரனும். அப்புறம் பாட்டி வெக்கிற காப்பிய குடிச்சிட்டு கிளம்பிரோனும். வருசையா தேங்காய் மரத்துல இருந்து உழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கி ஒன்னா இரு கூட்டானா சேர்த்துட்டு அப்படியே “2” போயிட்டு வந்துரனும். வரும்போதே பல்குச்சியில பல்லு விளக்கிட்டே திரும்ப வந்து, சாப்பிட தயாராயிரோனும். இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரைய கூட்டியிருக்கும், தயிர கடைஞ்சு மோராக்கியிருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உரில போட்டும் வெச்சிருக்கும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோரும் ஊத்தி குடுச்சிபுட்டா மணி 8 ஆயிருக்கும். காட்டுல வேல இருந்தா அப்படி பார்க்க வேண்டியதுதான். என்னவேலைன்னு கேட்குறீங்களா? தண்ணி கட்டுறது, பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம்போடுறது இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.


இதெல்லாம் காலை நேரத்துல மத்தியானம் சோறுங்கிறது 12-12:30க்குள்ள முடிஞ்சிரும். பெரும்பாலும் நேத்து வெச்ச குளம்புதான் சோத்தோட திங்கனும். மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிபுட்டா கண்ணை சொக்கிரும்.தென்ன மரமோ, புங்க மரத்தடியிலோ, இல்ல வேப்ப மரமோ ஒவ்வொரு ஊட்டுக்கு மின்னாடியும் இருக்கும், அப்படியே தூங்கிர வேண்டியதுதான். 2 மணிக்காட்டம் எந்திருச்சு ஆட்டையும், மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிரும். 4-4:30ரக்கு ஊட்டு திரும்ப வந்து ஆட்டை எல்லாம் பட்டியில அடைச்சிபுடனும். மறுபடியும் பால் பீச்சினதும் காப்பி வெச்சுரும் பாட்டி. குடிச்சிட்டு பாலை எடுத்துட்டு சொஸைட்டிக்குப் போயிருவோம். அங்கே கதையடிக்கிறது, பொரணி பேசறதெல்லாம் அப்பத்தான் நடக்கும்.
[ஒலக்கச்சின்னானூர்- கோட்டான்கல் கரடு]

இந்த நேரத்துல பாட்டி சோறு பண்ணி வெச்சிருக்கும். சொஸைட்டியில இருந்து திரும்ப வந்ததும் அண்டாவுல தண்ணியூத்தி சூடு பண்ண வேண்டியதுதான். அதுக்குன்னே தேங்காய் மட்டை உரிச்சி அடுக்கி வெச்சிருப்போம். தேங்காய் உரிக்கிறதைப் பத்தி இன்னொருக்கா சொல்றேங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிர வேண்டியதுதான்.
[ஒலக்கச்சின்னானூர்- அப்பச்சி வீட்டுல இருக்கும் குளியலறை]

சனிக்கிழமைன்னக்கே பால் சொஸைட்டியில அந்த வாரத்துக்குண்டான பால் காசு வந்துரும். சனியன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை, ஆடு விக்க வாங்க வேலை இருந்தாப் போவலாம், காய் போட போவோம். அதுக்கு வெள்ளிக்கிழமையன்னிக்கே காயேல்லாம் பொறிச்சு சாக்குப்பையில கட்டி வெச்சிருவொம். மொதல்ல சைக்கிள்லதா போயிட்டு இருந்தோம். இப்போ டிவிஎஸ் 50 வந்ததிலிருந்து 4-5 மூட்டை அடிக்கி எடுத்துட்டு போயிரலாம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒன்னு கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான்.

அதுவுமில்லா நாங்க பங்காளிங்க அல்லாரும் ஒன்னாப் போனாவே அவனுக்கு 407 அளவுக்கு வந்துரும்ல. அவனுக்கும் ஒரே வேளையாப் போயிரும். சனியன்னிக்கு கொங்கணாபுரம் போவற வேலையில்லைன்னா ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) போயிருவோம். அன்னிக்குத்தான் சங்ககிரியில் சந்தை. அன்னிக்குத்தான் பலசரக்கு சாமான் வாங்குறதெல்லாம். கோழிபுடிக்கிறது எல்லான் ஞாயித்துக்கிழமைதான்.

அப்புறம் சினிமாவுல காட்டுறாப்ல பஞ்சாயத்தையெல்லாம் என் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லீங். எங்க ஐயனும் பார்த்தது இல்லியாம். இட்லி தோசை எல்லாம் தீவாளுக்கும், ஆடி அமாவாசைக்கும்தான் கிடைக்கும் இல்லாட்டினா சந்தைக்குப் போறப்ப சாப்புட்டுவந்தாதான் ஆச்சு. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங்.

இந்த வாழ்க்கை முறை, 1990 களில் என் பள்ளிப் பருவத்தை அடிப்படையா வெச்சி எழுதுனதுங்க. 2000கள்ல டிவி வந்துச்சு, நாடகம், போன் எல்லாம் வந்துருச்சு. அதைப் பத்தி இன்னொரு நாள்ல எழுதறேனுங்.

Wednesday, February 22, 2012

இந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்

எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் வரி கட்டத் தேவையில்லாத ஒரே இடம் - மார்ச்சு”வரி

இசை ஞானம் உள்ள பேய் வே"தாளம்"

ஃபெவிக்”கால்”ன்னு பேர் வெச்சிருந்தாலும் அசையாமத்தான் இருக்க வெக்கனும் #epicFail

இந்து மதமா இல்லாட்டாலும் அவுங்க எல்லாரும் இத்”தாலி”காரங்கதான்

ஆணுக்கே ஆனாலும் அது தாடி’தான். ’தாடா’ இல்லை

மம்தா சாப்பிட்டாலும் அது பொங்கல்தான் பெங்கால் இல்லை.. #சொல்லியாச்சா


கிராம் கணக்குல இருக்கிற எறும்பு கடந்தாலும் அந்தத் தூரம் கிலோமீட்டர்தான்.

அது பொண்ணே ஆனாலும் கிளம்பும்போது ” டாடா”ன்னுதான் சொல்லியாகனும்

எவ்வளவுதான் மொக்கை போட்டாலும் அதை நம்மளால போட்டதை திரும்ப எடுக்கவே முடியாது

விடைபெறும் போது -> இருக்கும்போது நிறைய கேள்வி கேட்டிருப்பாங்களோ?

நட்டுன்னு பேர் வெச்சிருந்தாலும் கிழங்கை புடுங்கித்தான் சாப்பிடனும்

பே”ரன்” என்பதாலேயே அவர் நல்லா ஓடுவார்னு எதிர்பார்க்கக்கூடாது.

காசு வாங்கிட்டு ஓடிப்போனாலும் அவன் பேரு பேரன்’தான் #PayRun

சர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்


பேக்’கிங்’ எந்த நாட்டு ராஜா? சத்தியமா நம்ம நாட்டைப் பத்தி பேசலை

சே’சிங்’ பஞ்சாபில் தான் தோன்றி இருக்க வேண்டும்!

காலால உதைச்சாலும் அதுக்குப்பேரு பயங்”கர”வாதம்தான்

காட்டேரியாகவே இருந்தாலும் தூங்கினப்புறம் Cotஐ விட்டு இறங்கித்தான் ஆவனும் #Cot #ஏறி

OUT"doorல party வெச்சாலும் ”IN"viteதான் பண்ணனும்

விஜய் படம் பார்த்தாலும் வருவது என்னமோ தலை வலிதான்


------------------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் நேத்து நான் Twitterல் போட்ட மொக்கைகள்.


Photo Courtesy: http://photo-dictionary.com

Wednesday, February 8, 2012

22 பேரைக் கொன்ற மக்கனாவை காப்பாற்றிய Dr. கே.அசோகன்- வாருங்கள் பாராட்டலாம்

நாம் மறந்து வரும் விசயங்களில் ஒன்று பாராட்டுதல், அங்கீகரித்தல். சச்சினுக்கு பாரதரத்னா கிடைக்குமான்னு ஏங்குற நம்ம மக்கள், வீதியில கிடக்கிற குப்பையை சுத்தம் செய்யும் ஊழியர்களை அருவெருப்பா பார்க்கிற உலகம் இது. கொஞ்சம் நாமளும் பாராட்டலாமே, நாலு பேருக்கு இந்த விசயத்தை கொண்டு செல்லலாமே அப்படிங்கிற எண்ணதுலதான் தினமணியில் வந்த செய்தியை கீழே குடுத்திருக்கேன். 

கொஞ்சம் பாராட்டினாதான் கொறைஞ்சா போயிருவீங்க பாஸூ?

நன்றி: தினமணி(மூலம்)  -எம்.ஆனந்த்

========================================
கோவை, வ.உ.சி. மாநகராட்சி உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள தனது அறையில் இரவு, பகல் என அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் வலைதளத்தில் விலங்குகளுக்கான சிகிச்சை மற்றும் தேவையான தகவல்களை அவர் சேகரித்துக் கொண்டிருப்பார். பூங்காவில் உள்ள முதலைக்கு கீழ் தாடை உடைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும், பாம்புக்கு புற்றுநோய் கட்டியுள்ளது அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...

- இப்படி 'எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும்' தாயுமானவரின் வரிகளுக்கு இலக்கணமாக இருப்பவர், கோவை வஉசி மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் மற்றும் மருத்துவரான கே.அசோகன். அவரிடம் நாம் பேசியதிலிருந்து....

''சென்னையில் உள்ள கால்நடை கல்லூரியில் 1989-ல் எனது படிப்பை முடித்து 1996-ல் சின்ன சேலத்தில் உள்ள அரசுக் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தேன். 22 ஆண்டுகள் பணியில் 12 முறை இடமாற்றங்கள்... இதுதான் என் பணிக்குக் கிடைத்த பரிசு
.

நான் முதுமலையில் பணிபுரிந்த போது, அடிக்கடி யானைகள் இறந்தன. யானைகளின் திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டேன். யானைகளுக்குத் தொண்டையடைப்பான் நோய் வருவதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து, மற்ற யானைகளுக்குப் பரவாமல் தடுத்தேன்.

அதேபோல் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் வாழ்நாள் குறைந்திருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தேன். யானைகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள்தான் இதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தேன். அதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன்.

அதேபோல் காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்களில் பலா பழத்தில் வெடிகுண்டை ஒளித்துவைத்து யானைகளைக் கொல்வது, அதன் வழித்தடத்தில் ஆணி பொறிகளை வைப்பது, தந்தங்களுக்காக யானைகள் சுடப்படுவது போன்ற காரணங்களைக் கண்டறிந்தேன். தாயால் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள், தோல் நோய் போன்ற மற்ற காரணங்களையும் கண்டுபிடித்து அவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். ஏறக்குறைய 55 யானைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்து பல விஷயங்களைக் கண்டறிந்தேன்.

வயநாடு (கேரளா) - முதுமலை இடையே அவ்வப்போது ஓடி ஒளிந்துகொண்டு 22 பேரைக் கொன்ற மக்கனா (கொம்பில்லா ஆண் யானை). இந்த வகை யானைகள் ஆசியாவிலேயே 5விழுக்காடுதான் உள்ளன. அதனால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பல குழுக்கள் அமைத்து அதைப்பிடித்தேன். அப்போதுதான் அதன் உடலில் இருந்த பல துப்பாக்கி குண்டுகளைப் பார்த்தேன். பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், பல லட்சம் செலவு செய்து தினமும் 3 மணி நேரம் சுமார் ஓர் ஆண்டு சிகிச்சை கொடுத்து அதன் காயங்களைக் குணமாக்கி அதை நடமாடச் செய்து இன்னும் அது உயிருடன் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்.

1998-99 வாக்கில் சிறுமுகை வனப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறக்கும் நிலையில் இருந்த யானைக்கு, எங்களின் மருத்துவக் குழுவுடன் தொடர் சிகிச்சை கொடுத்து அதைப் பிழைக்க வைத்தோம்.

2000-ஆம் ஆண்டில், குன்னுரில் விஷம் தடவிய மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு கோமா நிலைக்குச் சென்ற சிறுத்தைக் குட்டியை பிழைக்கவைத்தோம். அண்மையில் கோவை வஉசி பூங்காவில் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட பாம்புக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து அது நல்ல நிலையில் உள்ளது.

நாகை மாவட்டத்தில் 2004-ஆம் ஆண்டு கால்நடை மருத்துவராக இருந்தபோது படகு வலையில் சிக்கி ஆயிரக்கான ஆமைகள் இறப்பது வழக்கமாக இருந்தது. அப்போது கடற் கரையில் செயற்கையாக ஆமைகள் முட்டைகளைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றை எடுத்துச் சென்று ஆழ்கடலில் விட்டு ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியையும் செய்திருக்கிறேன். மீனவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் மூலம் ஆமைகள் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறோம்.

மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த 2008-ஆம் ஆண்டு அங்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றேன்'' என்றார்.

- இவர் முதுமலையில் இருந்தபோது, இவரின் தன்னலமற்ற பணிக்காக 'அண்ணா' விருதுக்கு இவரின் பெயரை பரிந்துரை செய்தனர் அந்தப் பகுதியில் இருந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். ஆனாலும் விருது கிடைக்கவில்லை. சுயநலமில்லாமல் சூழலுக்கு உழைப்பவர்களுக்கு அரசு விருது தந்து கௌரவிக்க வேண்டும் என்பது பல சுற்றுச் சூழல் ஆர்வளர்களின் ஏக்கம்.

Monday, February 6, 2012

@Vivaji Updates - ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட பாடல்

* என்னதான் பெண்ணுரிமை பேசுற பெண்ணே உபயோகப்படுத்தினாலும், அதுக்குப் பேர் ஆண்’ட்ராய்டுதான்

* விஜய்க்கு எத்தனைப் படம் ஓடினாலும் ’தல’ மேல வெச்சி கொண்டாட முடியாது

* அவர்: கும்புடு வெச்சிக்கிறேங்க.

நான்: நீங்களே வெச்சிக்கப்போற கும்புடுக்கு என்கிட்ட ஏன் சொல்லனும்?

* பழசா இருந்தாலும் அதுக்குப்பேரு ”சொலவடை”தான். சொலவடைகறி இல்லை


* ஆண்களுக்குப் பிடிக்காத ஒரே வாக்கியம் "டாப்-அப் பண்ணிடுடா,, பேலன்ஸ் இல்லே"

* இன்று தியாகிகள் தினம் #கணவர்களும் தியாகி பட்டியலில் வருவாங்கதானே? சியர்ஸ்

* தலை கால் புரியாம ஆடக்கூடாது #தலை என்பது இங்கே அஜித் எனக் கொள்க

* உலகப்படங்களை தமிழ்ல காப்பி அடிக்கிறோமா? நாம கேட்ட முதல் கதையே பாட்டி வடை 'சுட்ட' கதைதானே சார்?

* காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா #bra_section

* மங்காத்தாவில் லஷ்மிராய் கதாபாத்திரத்தின் பெயர் - சோனா #ஏதேச்சை

* கார்க்கி எப்போ போலீஸ்காரர் ஆவாரு? அவர் “ர்” விடும்போது #காக்கி

* ஒரு புள்ளி சேர்த்திருந்தால் ஆச்சர்யகுறியும் ஆண்தான்.

* ரெண்டாவதா வந்தாலும், கஷ்டம்னா இந்த எழுத்தைத்தான் சொல்றோம் #பி பாஸிட்டிவ்.  என்னதான் கோவம் தப்பே ஆனாலும்  முதல் எழுத்தைத் சொல்றோம் #ஏஏஏஏ(A)

* அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்” ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட பாடல் போல
....

Wednesday, February 1, 2012

ஜெ - கேப்டன் மோதல் - Videos

விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்ஹொய்ய்ய்ய்ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்


நன்றி- நக்கீரன்

My Twits:

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டமாம். இப்ப ரெண்டு கூத்தாடிங்க அடிச்சிக்கிறாங்க. ஊரு கொண்டாட்டமா வேடிக்கைப் பார்க்குது

ஒரு நடிகையை முதலமைச்சராகவும், ஒரு நடிகரை எதிர்கட்சித் தலைவராகவும் உருவாக்கி அழகு பார்க்கும் இனமே தமிழினம்தான்

மேடைப் பேச்சுக்கும், சட்டசபை விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைத்தான் அங்கே அமர்த்தியிருக்கிறோம் #@சபாஷ் தமிழா

--
..
..

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்