இந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்

எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் வரி கட்டத் தேவையில்லாத ஒரே இடம் - மார்ச்சு”வரி

இசை ஞானம் உள்ள பேய் வே"தாளம்"

ஃபெவிக்”கால்”ன்னு பேர் வெச்சிருந்தாலும் அசையாமத்தான் இருக்க வெக்கனும் #epicFail

இந்து மதமா இல்லாட்டாலும் அவுங்க எல்லாரும் இத்”தாலி”காரங்கதான்

ஆணுக்கே ஆனாலும் அது தாடி’தான். ’தாடா’ இல்லை

மம்தா சாப்பிட்டாலும் அது பொங்கல்தான் பெங்கால் இல்லை.. #சொல்லியாச்சா


கிராம் கணக்குல இருக்கிற எறும்பு கடந்தாலும் அந்தத் தூரம் கிலோமீட்டர்தான்.

அது பொண்ணே ஆனாலும் கிளம்பும்போது ” டாடா”ன்னுதான் சொல்லியாகனும்

எவ்வளவுதான் மொக்கை போட்டாலும் அதை நம்மளால போட்டதை திரும்ப எடுக்கவே முடியாது

விடைபெறும் போது -> இருக்கும்போது நிறைய கேள்வி கேட்டிருப்பாங்களோ?

நட்டுன்னு பேர் வெச்சிருந்தாலும் கிழங்கை புடுங்கித்தான் சாப்பிடனும்

பே”ரன்” என்பதாலேயே அவர் நல்லா ஓடுவார்னு எதிர்பார்க்கக்கூடாது.

காசு வாங்கிட்டு ஓடிப்போனாலும் அவன் பேரு பேரன்’தான் #PayRun

சர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்


பேக்’கிங்’ எந்த நாட்டு ராஜா? சத்தியமா நம்ம நாட்டைப் பத்தி பேசலை

சே’சிங்’ பஞ்சாபில் தான் தோன்றி இருக்க வேண்டும்!

காலால உதைச்சாலும் அதுக்குப்பேரு பயங்”கர”வாதம்தான்

காட்டேரியாகவே இருந்தாலும் தூங்கினப்புறம் Cotஐ விட்டு இறங்கித்தான் ஆவனும் #Cot #ஏறி

OUT"doorல party வெச்சாலும் ”IN"viteதான் பண்ணனும்

விஜய் படம் பார்த்தாலும் வருவது என்னமோ தலை வலிதான்


------------------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் நேத்து நான் Twitterல் போட்ட மொக்கைகள்.


Photo Courtesy: http://photo-dictionary.com

Comments

  1. \\சர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்\\

    நல்ல கடிகள். யூஸ் பண்ணிக்கிறோம்

    ReplyDelete
  2. ராபின், முரளி நன்றி
    கோவி--> ஒருத்தனுக்கே இப்படின்னா ஒரு கும்பலா மொக்கையைப்போட்டேமே, எல்லாரும் பதிவு போட்டா என்ன ஆகும்?

    ReplyDelete

Post a Comment

Popular Posts