விவாஜியிஸம் - 01

கடவுள் என்முன் தோன்றி ”ஏன் என்னைப் பார்க்க வரவில்லை” என்று கேட்டார். ”முயன்றேன் இன்னும் முடியவில்லை” என்று கூறி அனுப்பிவைத்தேன்

என்னுடைய கவிதைகளைப் படித்தபடியே உறங்கிப் போய்விடுகிறது என் காதல். அது விழிக்குமுன் இன்னொரு கவிதை எழுதிவிட வேண்டும்.


காதலுக்கும் எனக்கு ஒரே சண்டை, தோற்றுக்கொண்டேயிருந்தேன். பஞ்சாயத்திற்காக என் காதலியை அழைத்துவிட்டு, அவளுக்காக காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு பதிவுலும் மொக்கை வருமாறு முயற்சிக்கிறேன். ஆனால் அதை வரவிடாமல் ஏதோ ஒரு மொக்கை வந்து அதை வென்று விடுகிறது.

தனிமை என்னைக் கொன்றுக்கொண்டிருந்தது, தனியாய் இருக்கேன் என்றேன்.”இல்லையே! கூடவே நானும் இருக்கேனே” என்றது தனிமை.

மனைவிக்கும் எனக்கும் சண்டை. தோற்றுப் போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை மனைவி.

Babysitting செய்கிறேன் ”குழந்தையுடன் என்னையும்” என்று வந்தமர்ந்து விளையாடும் மனைவியை என்ன செய்ய?

நான் அவசரமாய் பயணித்துக்கொண்டிருந்தேன். பாவம் அவைகளுக்கு என்ன அவசரமோ? அதே வேகத்தில பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன மரங்கள்.

நான் வேகமாக உண்டு முடித்தபின் பசியோடு அமர்ந்திருந்தன, தட்டில் சில பருக்கைகள்

கோவிலுக்குப் போகும்போதெல்லாம் அடம்பிடித்து கூடவே வந்துவிடும் பக்தி.போகும் வழியில் அதை எங்காவது தொலைத்துவிடுவது என் வாடிக்கையாகிவிட்டது

பிற்காலத்துக்கு உதவுமென ஒரு இடம் வாங்கிப் போட்டேன். பிற்காலத்துக்கு தேவைப்படுமென எனக்காக 6*4 இடத்தை ஒதுக்கி வைத்திருந்தது, இடம்.

சாமியைக் கும்பிட கோவிலுக்குப் போனேன். சாமியோ, அவர் சாமியைக் கும்பிடப் போயிருப்பார் போல.

கவிதைகளை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்துக்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டன, பாவம்.


புத்தர் ஆசையே படவேண்டாமென ஆசைப்பட்டாராம். நானோ, எனக்கு நிறைய ஆசைகள் வேண்டும் என ஆசைப்படாமல் இருக்கிறேன்.

இணையத்தில் புதுசா என்னமோ சண்டை போடுக்கொண்டிருக்கிறார்களாம். என் கொள்ளுத்தாத்தாவிடம், எள்ளுத்தாத்தா சொன்ன அதே காரணமாகத்தான் இருக்கும்

Comments

 1. நேத்து அடிச்ச சரக்கு சரியில்லை ...(.நான் எனக்கு சொன்னேன்)

  ReplyDelete
 2. சரக்குப் பத்தி இன்னொரு பதிவே வருதுங்க :)

  ReplyDelete
 3. உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ளுவது Babysitting அல்ல! ஒருவேளை பக்கத்தூட்டு குழந்தைய Babysitting பண்ணுனீங்களோ? அப்ப மனைவி? :-)

  ReplyDelete
 4. பக்கதூட்டு குழந்தை என் மனைவி- இப்ப சரியா வருதுங்களா நந்தவனத்தான்?

  ReplyDelete
 5. மச்சக்காரராக இருப்பீங்களோன்னு நினைச்சேன். சரி விடுங்க.

  ReplyDelete
 6. @நந்தவனத்தான் ம்க்கும், அந்தளவுக்கு நம்ம வல்லு இருந்தா நாம ஏன் இப்படி இருக்கோம்?

  ReplyDelete

Post a Comment

Popular Posts