Tuesday, July 31, 2012

தேனடை - சுட்டதா? பெற்றதா @Vivaji Updates

மழைக்குப் பயந்து வீட்டுக்குள்ள பத்திரமா, ஏன் சாரல் கூட படாம இருக்கிறவங்க ட்விட்/Fb Status மட்டும் மழைப்பாட்டா போடுவாங்க. #கொடுமைடா

==o00o==
Sport Quota வுல, எந்தக் கல்லூரியில படிச்சா நல்ல வேலை கிடைக்கும்? #புதியதலைமுறை_கல்வி #வேலைக்குப் போக எதுக்கு விளையாட்டு? 

==o00o==

நல்ல Figure இருக்துங்கிறதுக்காக Excel fileஐ சைட் அடிக்க முடியாது #எண்_கணக்கு


==o00o==

ஆமாம், புரட்சி ரொம்ப பாதுகாப்பானதுதான், எதிரி நம்ம மடக்கிட்டா மூடிட்டுப் போயிடலாம் FB, Twitterஐ. அவனால ஒன்னும் பண்ணிடமுடியாது


==o00o==

பிரதிபா பட்டேல் எத்தனை ஊருக்கு போயிட்டு வந்தாங்க, நாம ஒன்னும் சொல்லை, Olympicsக்கு வீரர்கள் போயிட்டு வந்தா செலவாவுதாம், என்னாங்கடா?


==o00o==

துபாய்க்கு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு, யாரையும் வெறுங்கையோட அனுப்பக்கூடாதுன்னு எல்லாருக்கும் விருது குடுத்துட்டாங்க போல


==o00o==

விகடனில் வரும் நானே கேள்வி- நானே பதில் பகுதிக்கு "Inspiration" கலைஞராத்தான் இருந்திருக்கனும்

==o00o==


ராஜா ரசிகர்களுக்காக பாட்டு டெடிகேட் பண்றோம்” இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்” #ஒலிம்பிக்ஸ்


==o00o==

"நாம பிரிஞ்சாலும் நம்ம காதல் வாழும்" - #ஙொய்யால, எவன்டா இந்த வசனத்தை எழுதினது.. நீ உன் மனைவியோட இருப்பே காதலியோட காதல் வாழுமாம்.


==o00o==

இனிமேல எவனும் மீனாட்சியை சைட் அடிக்க மாட்டாங்க. #பிறன்மனைநோக்காமை

(ஙொய்யால, ஒரு நாடகத்துத்தான் ட்விட்டர்ல எத்தனை ரசிகர்கள்(கவனிங்க ரசிகர்கள்))


பொறுப்பான, நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியை ஈரோட்டில் சந்தித்தேன். #சல்யூட் சார்

பத்தாயிரம் முடி கறுகறுன்னு இருந்தாலும், வெள்ளையாய் போன அந்த ஒற்றை முடிக்கு கவலைப்படுறவன்தான் மனுசன்

"அம்மா, டயட்ல இருக்கேன்மா” என்றேன். ”ஓஹ், சரி” என்றபடி இன்னும் ரெண்டு தோசை வைத்துவிட்டு போனாங்க. #அம்மாடா

அந்த தையல்காரர் ரொம்ப புடிச்சா மாதிரி வேலை பார்க்கிறாரு. அவர் தைச்ச சட்டை செம “டைட்”ஆங்கிலேயர்கள் மனைவியை “ஹனி” என்று அழைப்பதிலிருந்து வந்திருக்குமோ,.... சந்தானம் சொன்ன “தேனடை”???
-----------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, July 30, 2012

அஜித் நடிக்க மறுத்த படம்

  • கடைசி நேரத்துல நியூ படத்தில் நடிக்க முடியாதென ஜகா அஜித் வாங்கியதால் SJ Surya நடித்தார். 

மேலே இருக்கும் படத்தைப் பாருங்க. இதுதான் பட பூஜை அன்னிக்கு சென்னையில ஒட்டப்பட்ட சுவரொட்டி. தெலுங்குல மகேஷ் பாபு நடிக்கிறதாகவும் ஒப்பந்தமாகிட்டாரு. அஜித், என்ன நினைச்சாரே தெரியல, படத்தை விட்டு விலக ஜோதிகாவும் விலகிட்டாங்க. இப்போ தமிழ்ல ஒரு பெரிய ஆள் பலம் தேவைங்கிறதுக்காக ரகுமானை ஒப்பந்தம் பண்ணினார் SJ சூர்யா.  அதுவும் ரகுமான்,  அப்போ ரொம்ப மும்முரமா இருந்த சமயம். அவரை SJ சூர்யாவினால பார்க்கவே முடியவில்லை. அதனால ரகுமான், விமானத்துல போற நேரத்துல சூர்யா பக்கத்து இருக்கைக்காரரை, கெஞ்சி கூத்தாடி  இடம் புடிச்சி, கதை சொல்லி, ஒப்புக்க வெச்சிட்டாரு.

நடிகர்கள் பலரையும் கேட்டு முடியாதுன்னு சொல்லிட்டதால, தானே நடிப்பதா  முடிவு பண்ணி, உடற்பயிற்சி (?!) எல்லாம் செஞ்சு கதாநாயகனா தானே உருவானார் SJ சூர்யா.

2001ல் ஆரம்பிச்ச வேலை, படம் முடியும் போது 2004 ஆகிடுச்சி.
தமிழில்  படம்  சுமாரா போச்சு, ஆந்திராவுலையோ செம மட்டை :(. மகேஷ் பாவுக்கு செம அடி விழுந்த படம் அது.

பின் குறிப்பு: நியூவில் நடிக்க மறுத்த அஜித், அதே கால்ஷீட்டுல நடிச்சு வெளிவந்த படம் "ரெட்".

Thursday, July 26, 2012

பண்ணையம் 07-25-2012

தாம்பரம் Zion பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ருதி சேது மாதவன்.  இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். 25 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது  பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து இறந்து போனார்.  

ற்கனவே இருந்த ஓட்டையின் மேல ஒரு சின்ன பலகையைப் போட்டு வெச்சிருக்காங்க. பேருந்து சாலையிலிருந்த ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பலகை விலகிட, குழந்தை அந்த ஓட்டையின் வழியே தவறி கீழே விழுந்துடுச்சு. இதுல  என்ன கொடுமைன்னா, "இது ஒப்பந்ததாரர் வண்டி,  அதனால எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை" அப்படின்னு சொல்லி தப்பிச்சிக்கிடுச்சு பள்ளி நிர்வாகம்.

இதுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் வண்டிக்கு FC நடந்துச்சாம். இந்த நாட்டுல அலட்சியம், லஞ்சம் இதுக எல்லாம் தலைவிரிச்சி ஆடுது.

அதுசரி, 2004-Jul-16ல் நடந்த கும்பகோணம்  பள்ளி தீவிபத்துக்கே இன்னும் விசாரணதானே நடத்திட்டு இருக்கோம்.


=================================================================

"விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடனும்" -அப்படின்னு என்னோட தலைமுறையில சொன்னாங்க.

ஆனா நாம நம்ம புள்ளைங்களுக்கு என்ன சொல்றோம்? "விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீடியோ கேம்ஸை அணைச்சிட்டு படிக்க உட்காந்திடனும்".

எவ்ளோ வித்தியாசம் பாருங்க? ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா? இல்லை திண்ணைகள் ஒழிஞ்சதா?

இது எங்கே போய் முடியுமோ தெரியல

=================================================================ந்த வாரம் கார்டூனிஸ்ட் பாலாவின் படம் சொல்லும் விசயம்தான் நிறைய யோசிக்க வைக்குது. தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சிகளும் நம் மக்களோட குடிப்பழக்கத்துக்கு தூண்டுகோலாகாவே இருக்காங்க. லாட்டரியை  ஒழிச்சா மாதிரி இதையும் ஒரு நாள் ஒழிப்பாங்கன்னு நம்புவோம். இப்பவெல்லாம் "நான் குடிக்கிறதில்லைங்க" அப்படின்னு சொல்ற ஒருத்தரை ஆச்சர்யமாத்தான் பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம்.


நன்றி பாலா. அவரது Facebook முகவரி

=================================================================


ட்டிடம் கட்டும்போது சாரம்னு ஒன்னு கட்டுவாங்களே தெரியுங்களா? அதுக்கான இணையான ஆங்கில வார்த்தை என்னான்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிடேன்.Scaffolding சாரம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் Scaffolding.
=================================================================
ங்கே பார்த்தாலும் இளையராஜா ரகுமான் சண்டைதான். அவுங்களுக்காகதான் இந்தப் படம்.

=================================================================
பின்குறிப்பு: 
படம் உதவி: விக்கி, கூகிள், இந்தியன் எக்ஸ்பிரஸ், கார்ட்டூனிஸ்ட் பாலா, நன்றி!

Monday, July 23, 2012

இளையராஜா - வைரமுத்து - என்ன நடந்தது?

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.

உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.


கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---
திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.
---
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
---
அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.
---
எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
---
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
---
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்;
நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

---
 

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்திலிருந்து:


ஆனந்த விகடனில் தாமிரா எழுதிய கதையை இங்கே நினைவு கூர்கிறேன்.  இவர்களுக்குள் எழும் தவறான புரிதல்களோ, அல்லது திரிக்கப்பட்ட பொய்களோ என்னைப் போன்ற கோடிகணக்கான இசை ரசிகர்களை அல்லவா பாதிக்கிறது. வைரமுத்து தன்னிடம் இருந்ததை கொட்டிவிட்டார். 

நன்றி வைரமுத்து ஐயா அவர்களே!


இளையராஜாவுடனிருந்து பிரிந்தவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது வைரமுத்து, பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், வைரமுத்து ஆகியோர். 

ஹ்ம்ம், இதுவும் கடந்து போகும், முத்துவுடன் ராஜா இசையமைக்காமலே போகலாம், ஆனால் யுவனுடன் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றும் காலம் வரும் என எண்ணி காத்திருக்கிறேன். 


ஆடுகள் பகை கொள்ளும்வேளையில் குட்டிகள் உறவு கொண்டாடுவதை குதூகலத்துடன் பார்த்திருக்கும் ஒரு பட்டியாளன் போல் காத்திருக்கிறேன்.

Thanks to https://www.facebook.com/pages/ILLAYARAJA-KING-OF-MUSIC/271188690679

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்