2/365 நான் பல்பு வாங்கின கதை

பல்பு வாங்குவதில் பல விதம் இருக்குங்க.
(பல்பு வாங்குறது என்னான்னு தெரியும்தானே? அதாங்க பன்னு வாங்குறது, அட அதுவும் தெரியலைன்னா அவமானப்படுறதுன்னு  இலக்கியத்துல சொல்லியிருக்காங்க)

முன்னாடியொரு காலத்துல  பல்பு வாங்கின கதை 

எங்க அலுவலகத்துல ஒரு சின்ன வயசுப்பொண்ணு(25-30 வயசுக்குள்ள இருக்கலாம்)  அடிக்கடி பக்கத்து அறைக்கு வந்துட்டுப் போவும். நான், இந்த அலுவலகத்துக்கு வந்து 3 மாசம்தான் ஆச்சு. அதுவும் 20 நாள் இந்தியா போயிட்டு வந்துட்டேன். இந்தப்பொண்ணை யாரும் அறிமுகம் பண்ணியும் வெக்கலை. அதனால அது மனிதவளத் துறையா(HR) இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். இது நம்ம ஊர்ல பழகினதோசம்னு வெச்சிக்கலாம், அழகா, நயமா உடை உடுத்தின 25-30 பெண்கள், அப்பப்ப வந்து கட்டளை போட்டுட்டு போற பெண்கள் HRஆத்தான் இருக்கனும். அப்படித்தான் இன்னிக்கு வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.

இன்னிக்கு மதியம் பக்கத்து Cubicleக்கு வந்த அந்தப் பொண்ணு, "பக்கத்து Cubicle ஆள் வந்தா நான் வந்துட்டு போனேன்"னு சொல்லிட்டுப் போயிருச்சு. "ஹலோ, உங்க பேர் என்னான்னு கேட்க நினைக்கிறதுக்குள்ளே 'மின்னல்' மாதிரி போயிருச்சு. சரி, நானும், HR பொண்ணுதானே, வந்தாச் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். பக்கத்து Cubicle ஆள் வந்தவுடனே, இப்படி HR அம்மணி வந்துட்டு போச்சுன்னு சொன்னேன். அவர், யாரு, அம்மணி எப்படி இருக்கும், எங்கே உக்காந்து இருக்கும்னு எல்லாம் கேட்டாரு. நானும் விலாவாரியாச் சொன்னவுடனே அவர் பயங்கரமா சிரிச்சாரு. அதுவுமில்லாம இன்னொரு பக்கத்து Cubicle ஆள்கிட்டேயும் அந்தப் பொண்ணைப் பத்தி நான் சொன்னதைச் சொன்னதும், அவரும் பயங்கரமா சிரிச்சாரு. சிரிக்கமாட்டாங்களா?

ஏன் சிரிச்சாங்களா? அந்த அம்மணிதான் எங்க Department Director ஆம்.

[Image Thanks: http://truthworks.org]

இதுலயிருந்து என்ன தெரியுது?
1) ஆளை வெச்சி பதவியை எடை போடக்கூடாது
2) யூகத்தின் அடிப்படையில் எடுக்கப்படுற முடிவுகள் தப்பாகலாம்
3) அறிமுகத்தப்பவே அவுங்க துறையயும் பதவியையும் ஒழுக்கமா தெரிஞ்சிக்கனும்
(கருத்து சொல்றாராம்)

Comments

 1. 365.25 பதிவா ?

  எத்தனை வாட்ஸ் பல்ப், 100 வாட்ஸ் எனில் 3 ஆக பிரித்து வாங்கவும் :-))

  ReplyDelete
 2. 365ல் ரெண்டாவது பதிவுங்க. ஆகஸ்ட் 25ம் தேதி :)

  தெரியல திங்கட்கிழமை அம்மணி காதுக்குப் போனதும் என்ன சொல்லும்னு

  ReplyDelete
 3. அடுத்த முறையாவது நல்ல பல்பா வாங்குங்க. :-)

  ReplyDelete
 4. நல்ல வேடிக்கை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  ReplyDelete

Post a Comment

Popular Posts