5/365 பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு..

ன்னோட பள்ளிக்கூடத்து முதல்நாள் எப்படி இருந்துச்சுன்னு இன்னிக்குத் தெரியல(நாளைக்குள்ள எப்படியும் வீட்டுல கேட்டுருவேன்னு வைங்க). ஆனா, பல பொடுசுங்களைப் பார்த்திருக்கேன், முதல் நாள் பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குப் பெரிய போரே நடக்கும். அம்மாவும் அப்பாவும் பள்ளிக்கூடம் வரைக்கு கூட்டிட்டுப் போய் விட்டுட்டு, அப்புறமா வாசல்லையே நின்னு கொஞ்சம் நேரம் பார்த்துட்டு இருப்பாங்க. ஆசிரியர் வந்து "நீங்க போங்க, அப்பத்தான் பசங்க அடம் புடிக்காம இருப்பாங்க" அப்படின்னு சொல்ல அப்பா சோகமாவும், அம்மா கண்ணை கசக்கிட்டுப் போவாங்க. இந்தக் காட்சியை பள்ளிக்கூடத்து முதல் நாளுல தவறாம பார்க்கலாம்.   
மெரிக்காவுல, இது பள்ளிதொடங்கும் நேரம். பொதுவா Labour Day(செப்-4-2012) முடிஞ்சோ, இல்லைன்னா ஒன்னு ரெண்டு நாள் முன்னாடியோ ஆரம்பிக்கும். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பசங்களை வரவழைக்க இப்படி ஒரு வழி செஞ்சிருக்காங்க செல்சி வில்லியம்ஸ் பள்ளிக்கூடத்துக்காரங்க(இது அரசு பள்ளிதான், தனியார் இல்லை).அதுக்குப் பேரு Back-toSchool Celebration. 
காசுக்கு? விளம்பரதாரர்களைப் பிடிச்சிருக்காங்க. செம கூட்டம் வேற. கொஞ்சம் கறித்துண்டு, நொறுக்கு (Grill, Snacks) விளையாட்டு, போட்டிகள்னு நம்ம ஊர் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் மாதிரியே செஞ்சிருந்தாங்க. அருமையான யோசனை இல்லீங்களா?. பசங்களும், பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு வந்துட்டு பார்த்தாப்ல இருக்கும், "விடுமுறை முடிஞ்சிருச்சி கண்ணுங்களா சீக்கிரம் வாங்க" அப்படின்னு அழைக்கிறாப்லயும் இருக்கும், புதுசா வர குழந்தைகளுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினாப்லயும் இருக்கும். ஒரே கல்லுல ரெண்டு/மூனு மாங்கா.

 • ஆமா, நம்ம ஊர்ல மாதிரி முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற "காட்சிகள்"  அமெரிக்காவுல பார்க்க முடிவதில்லையே, ஏன்?

அப்புறம், பொடுசுங்க பாடுறாப்ல இருக்கவேண்டிய "பள்ளிக்கூடம் போகலாமா?" பாட்டை கேப்டன், கனகாவோட சேர்ந்து எப்படி கெடுத்துவெச்சிருக்காரு பாருங்க.. சே :(
(காணொளி எங்கேயா? இது குழந்தைகள் நிகழ்ச்சிங்க, மிட்நைட் மசாலா இல்லை)

Comments

 1. நல்ல பகிர்வு.

  நம்மூர்ல இது மாதிரி காசு செலவு செய்து பிள்ளைகளை வரவழிக்க சான்சே இல்லை. பெற்றோரிடமிருந்து எவ்ளோ முடியுமோ அவ்ளோ காசை வாங்கத்தான் பார்ப்பாங்க.

  நீங்க சொல்றாப்ல இப்ப பெற்றோர் கண்ணைக் கசக்கிட்டு வரது புள்ளைக்காக இல்லை.. பள்ளிக்கு கட்டின ஃபீஸை நினைச்சித்தான்.

  அதே சமயம் தரத்தின் அடிப்படையில் அரசு பள்ளியில் யாரும் குழந்தையை சேர்க்க விரும்புவதும் இல்லை. :((


  ReplyDelete
 2. இளா,

  பேக் டு ஸ்கூல்னு பேட்டா ஷீ விளம்பரம் தான் இங்கே ஓடுது ;-))

  அரசுப்பள்ளியில் தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள், ஆனால் தனியார் பள்ளிகள் அதிகம் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

  தனியார் பள்ளியில் கட்டமைப்பு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் திறமையாக சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் இருப்பதில்லை.

  அரசுப்பள்ளியில் கட்டமைப்பு இல்லை என்றாலும் சிறப்பான ஆசிரியர்கள் இருக்கிறார்கள், என்ன அவர்களை சரியாக கண்காணிக்கவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக அலட்சியமாகி பின்னர் பாடம் எடுக்காமலே காலம் தள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.

  நான் படித்தப்போது எங்கள் தமிழாசிரியர், கெமிஸ்ட்ரி ஆசிரியருக்கு இணையாக அப்போ சுற்று வட்டாரத்தில் எந்த தனியார்ப்பள்ளியிலும் ஆசிரியர்கள் இல்லை, ஏன் எனில் நாங்க மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு போகும், இவங்க அவரு ஸ்டூடண்ட் ஆச்சே அதான் இப்படின்னு எங்க முன்னாடியே பேசுவாங்க.

  இப்போ அது போல பேரு சொன்னா தெரியுறாப்போல எந்த ஆசிரியரும் உருவாவதில்லை என்பது வருத்தமான ஒன்றே.

  ReplyDelete
 3. நல்லதொரு அலசலுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. கவிதா, ப்ரசாத், தி.த --> நன்றி!

  ReplyDelete
 5. //சொன்னா தெரியுறாப்போல எந்த ஆசிரியரும் உருவாவதில்லை//

  அப்ப உவப்பத் தலைகூடி உள்ளப்பிரிதலே இன்னுமே இருக்காதுங்களா?

  ReplyDelete

Post a Comment

Popular Posts