6/365 அபியின் அப்பாவும் அம்முவின் அம்மாவும்

நாம் காதலித்தோம்,
ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
நாமே செய்துகொண்ட
கற்பனையில் பிறந்த குழந்தைகள் வளர்ந்திருக்குமா?
பள்ளிக்கூடம் சென்றிருக்குமா?
அவை,
நமக்காக முதல் நாளில் ஏங்கியிருக்குமா?
தம்பியோ, தங்கையோ வேண்டுமென கேட்டிருக்குமோ?
....
....
தெரியவில்லை...
னால் இன்று,
என் குழந்தைகளும், உன் குழந்தைகளும்
ஒன்றாகத்தான் விளையாடுகின்றன!
அவர்களால் அப்பா, அம்மா என்று விளிக்கப்படவேண்டிய
நாம்தான்,
அபி அப்பா என்றும்,
அம்மு அம்மா என்றும் தனித்தே அழைக்கப்படுகிறோம்,
சில நேரங்களில்
"மாமா" என்று உன் மகள் அழைக்கும்போதுதான்
தெறித்துவிடுகிறது மிச்சமிருந்த காதலும்!

Comments

 1. வரிகள் எனது பல நினைவுகளை மீட்டுவதென்பதோ உண்மை... நன்றி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. இளா,

  ஆட்டோகிராப் கவிதையா :-))

  உங்க கவிதை திண்டுக்கல் தனபாலனையே டிரேட்மார்க் மாற வச்சிடுச்சே ...கவிஞரே தான் நீங்க :-))

  ReplyDelete
 3. செம்ம்ம!!

  கடைசி நச்ச்!!  ReplyDelete
 4. @வவ்ஸ் --> ஆட்டோகிரஃபா? ஊட்டம்மணி பிச்சிபுடுவாங்க பிச்சி, என்னையத்தான்..

  நன்றி -> தி.த, சுசி

  ReplyDelete

Post a Comment

Popular Posts