முதல் முத்தம் @vivaji update-22-Aug-2012

 • "_____ இருந்திருந்தா படிச்சு டாக்டர் ஆகி இருப்பேன். அப்படின்னு மத்தவங்க சொல்லும்போது, இப்ப டாக்டராயிருக்கிறவங்க என்ன சொல்லுவாங்க? 

--00--
 • கல்யாண ஆல்பங்களில் அவுட்- ஆஃப் ஃபோகஸில் இருக்கும் பெண்களுக்குத்தான் உண்மையில் அதிக ஃபோகஸ் இருந்திருக்கும்
--00--

 • இன்று, பலரின் உறவுகளை, செல்ஃபோன் நெட்வொர்க்குகளே தீர்மானிக்கின்றன #Reachable and Not reachable
--00--

 • நீ என்னை விட்டு விலகியதைப் போல பெய்துவிட்டுப் போனது இடி, மின்னல், சத்தம் எதுவுமில்லாமல் பெய்துவிட்டுப் போகும் மழை
--00--
 • ரோஜாப்பூக்களை வருடுகையில் ஞாபகம் வருகிறது, “முதல் முத்தம்”
--00--

 • வண்ணத்திரை நடுப்பக்கம் போல் ஆனவுடன் கிழிந்துவிடுகிறது, காதல்.
--00--

 • பல கண்ணாடிகள் பொய் சொல்கிறது போலும்.மொக்கை ஃபிகரெல்லாம் சமந்தா ரேஞ்சுக்கு பில்ட்அப் குடுக்குதுங்க.
--00--
 • முதல்ல "நான் ஈ" வந்துச்சு, அப்புறம் "நான்" வந்துச்சு, ஏன் தெரியுமா? கூட்டம் அதிகம் வந்ததால ஈ பறந்ந்ந்து போயிடுச்சு
--00--
 • ஆண்கள் சுயநலமாகவும் பெண்கள் பொதுநலமாகவும் கவலை கொள்கிறார்கள்.#ஆண்கள் பக்கத்துவீட்டு ஆண் வாங்கியதைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை
--00--
 • லூசுத்தனமான நாயகிக்கு ரெளடித்தனமான கதாநாயகனே காதலனாக அமைவது சினிமாவில் மட்டுமே. ரெளடியின் மனைவியும் 75% ரெளடியாக இருப்பதே நிஜம்
--00--
 • மஞ்சளுக்கும், பச்சைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது, தமிழகம் #வறுமையின்_நிறம்_சிகப்பு
--00--
 • கூடவே சுத்தும் செவ்வாழைகள் அதிகம் கொண்டவை இணையம்.
--00--
 • வாரமலர் மூலம்தான் சாருநிவேதிதா என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியவந்தது #கிராமம்
--00--

"ஒரு ஜான் வயித்துக்காக" அப்படின்னு இனிமே சொல்ல முடியாது. தொப்பையை அளந்தா ரெண்டு, ரெண்டறை ஜான் கூட வருது

Comments

 1. =)))))). எல்லாம் ஒரு மார்க்கமாத்தாம்யா ஜிந்திக்கிறீங்க

  ReplyDelete
 2. இளா,

  //ரோஜாப்பூக்களை வருடுகையில் ஞாபகம் வருகிறது, “முதல் முத்தம்” --00-- //

  ரத்தம் வர்ர அளவுக்க முத்தம் கொடுத்தீங்க- ரோஜாவில்(காம்பில்) முள் இருக்கும்.

  //வண்ணத்திரை நடுப்பக்கம் போல் ஆனவுடன் கிழிந்துவிடுகிறது, காதல்.//

  "காரியம்" மிஸ்ஸானது தற்செயலா?

  //முதல்ல "நான் ஈ" வந்துச்சு, அப்புறம் "நான்" வந்துச்சு, ஏன் தெரியுமா? கூட்டம் அதிகம் வந்ததால ஈ பறந்ந்ந்து போயிடுச்சு -//

  இப்போ நான் ஓடிப்போச்சு ஏன் தெரியுமா கூட்டம் அதிகம் வராததாலே :-))

  //ஒரு ஜான் வயித்துக்காக" அப்படின்னு இனிமே சொல்ல முடியாது. தொப்பையை அளந்தா ரெண்டு, ரெண்டறை ஜான் கூட வருது//

  ஜான் என்ற ஒருவரின் வயிற்றுக்காக என சொல்லப்பட்டிருக்குமோ?

  ReplyDelete
 3. நல்லா இருக்கு மாம்ஸ், தலைப்பு தான் ஹிஹி

  ReplyDelete
 4. பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular Posts