15/365 அமெரிக்காவின் ஹோலி

இப்போ http://thecolorrun.com அமெரிக்காவுல ரொம்ப பிரபலமாகிட்டு வர்ற ஓட்டம். மாராத்தானுக்கு எல்லாம் 3 மாசம் தவமிருக்கனும், இது அப்படியில்லை,  அதுவுமில்லாம.. இருங்க அதை கடைசியில சொல்றேன்.




துல என்ன பண்ணனும்.  மொத்தம் 5 கிமீ ஓடனும். (என்னடா இது அமெரிக்காவுல மைல் கணக்குத்தானே, கிமீ கிடையாதே) முதல் கிமீட்டருக்கு எல்லாரும் மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. அதாங்க. வண்ணத்தை பொடியிலும் Squirt Pipeலேயும், அவுங்களே குடுப்பாங்க. அதை வாங்கி நாம மத்தவங்க மேல அடிக்கனும். அதான் விளையாட்டே. (பொடி சாப்புடறளவுக்கும் இருக்காம்).  ரெண்டாவது கிமீ போனவுடனே பச்சை வண்ணம். மூனுல நீலம், நாலாவது ஊதாவும், கடைசி மற்றும் அஞ்சாவதுல இளஞ்சிவப்பும் குடுப்பாங்க. வண்ணத்தை எல்லாம் நம்ம ஊர்ல ஹோலி கொண்டாடும் போது என்ன பண்ணுவோமோ அதையேதான் செய்யனும்.




க மொத்தம் அஞ்சாவது கி.மீ முடிக்கையில வண்ணமயமா வரனும். இதான் இந்த விளையாட்டோட அடிப்படை. Fat Nation அப்படின்னு சொல்ற அமெரிக்காவுக்கு இது மாதிரி நிறைய ஓட்டங்கள் தேவைப்படுது. அதுவுமில்லாம இந்தியர்கள் அதிகம் பங்குபெறுகிற ஹோலியில இருந்து இதை உருட்டினதால வட-இந்தியர்களின் பங்கெடுப்பும் அதிகமா இருக்காம்.
இருக்காதா பின்னே?



ம்மூர்ல மஞ்சத்தண்ணி ஊத்துறது, அப்படின்னு ஒரு விளையாட்டு இருந்துச்சே தெரியுங்களா? நம்ம ஊர்ல இருந்த ஹோலியை, அமெரிக்காவுக்காக ஓட்டம்னு  மாத்தி கொண்ட்டாட்டமா மாத்தி ஓடறாங்க. நாம் தீவாளி, பொங்கல்னு இருக்கிற கொண்டாட்டத்தையே மறந்துட்டு , வெளியில கொண்டாடுவதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ள அடைய ஆரம்பிச்சிருக்கோம், அமெரிக்காவோ உள்ளேயிருந்து வெளியே வர முயற்சிக்கிறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உலகம் உருண்டைங்கிறதுதான்.



[படங்கள் and Info from : http://thecolorrun.com]

Comments

  1. தெரிய படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்லதொரு தகவல்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  3. நன்றி @ மனசாட்சி, சுரேஷ், தி.த

    ReplyDelete
  4. இங்கேயும் அப்படி மாறினால் நல்லது. இந்த டி.வியினை கட்டி கொண்டே அழுது தொலைய வேண்டி இருக்கு. வட இந்தியாவில் பரவாயில்லை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts