28/365 என்ன இங்க சண்டை

கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம். 


கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?


மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.

கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே

மனைவி :  இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?

கணவன்: கவனிக்கலைம்மா.

மனைவி :  அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?

கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை

மனைவி :  நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?

கணவன்: சரி, விடு நான் கேட்கலை.

மனைவி :  அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?

கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?

மனைவி :  அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.

கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?

மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?

கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.

மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?

கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம்  ....

[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]

Comments

  1. நான் இந்த விளையாட்டிற்கு வரலே...

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா..

    பல வீடுகளில் இன்று இப்படித்தான் நடக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts