Thursday, June 21, 2012

'மாம்ஸ்' பாலபாரதி-1

கார்ட்டூனிஸ்ட் பாலா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்தது. அவருடைய அனுமதியுடன், பா. க.ச மக்களுக்காக இங்கே பகிர்கிறேன். 


`பாலபாரதி’ என்ற அந்த மனிதனை நான் சந்தித்த அந்த தினம் என் வாழ்வை இப்படி திசை திருப்பிவிடும் என்று நான் அப்போது நினைத்திருக்க வில்லை.

அப்போது மும்பையில் `சார்ட்டர்ட் அக்கவுண்டனிடம்’ உதவியாளனாக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். மும்பையிலிருந்து வெளிவந்த `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் கதைகள், கட்டுரைகள், அவற்றிற்கு நானே ஓவியங்கள் என்ற பெயரில் நான் செய்து கொண்டிருந்த காமெடிகளைப் பார்த்து பாலபாரதி கடுப்பாகியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது அலுவலக எண்ணை கண்டுபிடித்து பேசி ஒரு ஞாயிறன்று `பஞ்சாயத்துக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது.

மாட்டுங்காவில் இருக்கும் மகேஸ்வரி பூங்கா தான் மீட்டிங்க் ஸ்பாட். அப்போதெல்லாம் எந்த அரசியல் பார்வையும் எனக்கு கிடையாது (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. :)) . சுபா-வின் `நரேன் - வைஜெயந்தி’யிடமும், ராஜேஸ்குமாரின் `விவேக் - ரூபாலா’விடமும் கிறங்கிப்போய் கிடந்தேன். அந்த பாதிப்பில் இந்தியாவின் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து உயிரைக்கொடுத்தாவது இந்த தேசத்தை காப்பாற்றியாக( :)) வேண்டும் என்று படு கோயிந்தாக சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் அவை.மகேஸ்வரி பூங்கா வாசலில் காத்துக்கொண்டிருந்தேன். பாலபாரதி வந்தார். உடன் மதியழகன் சுப்பையா, நாசர் அலி, ராஜா முகமது, ராஜாசாமி என்று ஒரு படையும் வந்தது. . என்னை அடையாளம் கண்டவுடன் நீண்ட நாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல் தோள் மீது கை போட்டு ஒரு அணைப்புடன் பேச ஆரம்பித்தார்.
உயரமும், தாடியும் பார்க்க ஒரு நக்சலைட் ( எல்லாம் தமிழ் சினிமா பண்ற வேலை தான் ) போலிருந்தார். கூட ஒரு குருப்பு வேறயா.. எனக்கு கொஞ்சம் சந்தேகமும் கூட.. `ஒருவேள தீவிரவாத குருப்பா இருப்பானுவலோ..’ என்று முப்படை மூளை யோசித்தது.

``எல்லாரும் பாக்க தீவிரவாதிங்க மாதிரியே இருக்கீங்க” என்று அதை நேராக அவரிடம் சொல்லியும் விட்டேன்.. பூங்கா அதிர சிரித்தவர் அதன் பிறகு பேசப்பேச பிடித்துப்போனது. `உங்கள் ஜூனியர்’ மாதிரி நாவல்கள் படித்தவனுக்கு அப்போது அவர் பேசும் சித்தாந்த கருத்துகள் பெரிய புரட்சியாக தெரிந்தது.

ஓவியங்கள் என்ற பெயரில் நான் கிறுக்கியிருந்த நோட்டுப்புத்தகம் ஒன்றை கொண்டுப் போயிருந்தேன். பார்த்துவிட்டு ``உனக்கு ஓவியமே வரையத்தெரியலையே’’ என்றவரை குழப்பத்துடன் பார்த்தேன். ``நீ பேசாம கார்ட்டூனிஸ்ட் ஆகிரு. உன் கோடு அதுக்கு தான் செட் ஆகுது. அரசியல் கார்ட்டூன் போடுற ஆளுக இன்னைக்கு இந்தியால ரொம்ப குறைவு. நீ முயற்சி செஞ்சேனா கார்ட்டூனிஸ்ட் ஆகிரலாம்’’ என்று பாலபாரதி சொல்ல சொல்ல நான் கார்ட்டூனிஸ்ட் ஆகிக்கொண்டிருந்தேன்.
அன்று இரவு தூங்குவதற்கு முன் முடிவு செய்தேன் ``நாம கார்ட்டூனிஸ்ட் ஆகுறோம்டா..” என்று.

அதன் பிறகு எல்லோருமே என் கண்ணுக்கு கார்ட்டூன்களாகவே தெரிய ஆரம்பித்தார்கள். விசுவின் `அரட்டை அரங்கம்’ பார்க்கும் கோயிந்தாக இருந்தவன் எப்போதும் செய்தி சேனல் பார்க்க ஆரம்பித்தேன். வரைய வரைய கோடுகள் கொஞ்சம் வசப்படுவது போலிருந்தது. ஆனால் பாலபாரதியும் மதியழகன் சுப்பையாவும் எப்போதும் எனது கார்ட்டூனை விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். அப்போது கடுப்பாகத்தான் இருக்கும். அந்த கோபத்தில் வீட்டுக்குப்போய் கோடுகளிடம் சண்டைப் போடுவேன்.. ( இன்னும் கோடுகளை வசப்படுத்த சண்டைப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். )


சென்னைக்கு நான் முதலில் வந்தேன். பின்னாடியே அவரும் வந்தார். எனது குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லாம் அறிந்தவர். என் திருமணம் வரை சென்னையில் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தோம். இயல்பாக யாருடனும் உடனடியாக நண்பராகும் திறமை கொண்டவர். அதிகமாக பேசுவார். சிபிஎம் கட்சி ஆதரவு நிலையில் இயங்கியவர் என்பதால் அந்த கட்சிக்கேயுரிய சித்தாந்த காமெடி குழப்பங்களும் இருந்ததுண்டு. பிற்பாடு இருவரது வாசிப்புத்தளமும் மாற ஆரம்பித்தப் பிறகு முன்பு இருவரும் எவ்வளவு கோயிந்தாக இருந்திருக்கிறோம் என்பதை பேசி வயிறுவலிக்க சிரித்திருக்கிறோம்.

இருவருக்குமிடையில் கருத்தியல் ரீதியான மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்.. இந்த கோடுகளை எனக்கு சொந்தமாக்கி கொடுத்ததற்கு நன்றி சொல்லி முடிக்க மாட்டேன் பாலபாரதி.. :)மூலம்/நன்றி : 'கார்ட்டூனிஸ்ட்' பாலா https://www.facebook.com/#!/photo.php?fbid=3330670231910&set=p.3330670231910&type=1

Wednesday, June 20, 2012

நிஜக்காதலன் என்றால் என்ன செய்யனும்? @vivaji

 • நல்ல காலங்களில் கவனிப்பாரற்று கிடக்கும், கஷ்டம் காலம் வந்தவுடனே தூசி தட்டி எடுத்துவிடுகிறோம் - ஜாதங்களை

 • நீங்க பிடிக்கும் சிகரெட், உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு #சுட்டது

 • Twitterல எப்பவுமே இருக்கிறவங்க ரொம்ப நேரமா இல்லைன்னா, காரணம் 1) Chat 2) Phone 3) DM  4) பூரிக்கட்டையால் அடி வாங்கியிருப்பாங்க

 • விலையில்லா’வுக்கும், இலவசத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா? ஆட்சிதான்


அடுத்தவர்களின் உணர்வுகளை எப்படி விற்பதென நன்றாக அறிந்து வைத்திருக்கிறது விஜய் டிவி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக. • நித்தியானந்தாவின் ஆண்டு சம்பாத்தியம் ரூ.90 கோடி #நான் அப்பவே சொன்னேன், எங்கப்பாதான் கேட்காம எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு

 • என்ன விலையேத்தினாலும் போராடத் திராணியில்லாத ஒரே கூட்டம், குடிகார கூட்டம்தான் #பீர் விலை சுமார் பத்து ரூபாய் வரை உயர்வு

 • மன்மதன் கடவுளாக போற்றப்படவேயில்லை. அதனால அவர் விட்ட சாபம்தாண்டா நீங்க எல்லாம் இப்படி அலையறீங்க.

 • பெண்களைப் போல, ஆண்களால் காதலிக்க முடியாது. அதே போல ஆண்களைப் போல, பெண்களால் நட்பு பாராட்டமுடியாது

 • புகையை விடமாட்டேன் என பிடிவா- ’தம்’ பிடிக்காதீர்கள் - இரண்டு வாக்கியங்கள் - ஒரே அர்த்தம்

 • காதல், கல்யாணத்துக்கு முன் அது கவிதை, பிறகு கட்டுரை. சிலருக்கோ, முடிவுரை.

 • தன் தந்தையை, கணவனிடம் எதிர்பார்ப்பது அறிவிலி மனைவிகள் செய்யும் முதல் வேலை

100வது முறையாக காதலி சொல்லும் சம்பவத்தை, முதன்முறை கேட்பது போல் ஆச்சர்யத்துடன் கண்களின் விரித்து கேட்பவனே நிஜக்காதலன்

[தலைப்புக்கு வந்துட்டோமா?]

 • Cinema இண்டஸ்ரியில் “சார்” என்று அழைக்கும் மரபு மாறி வருகிறது. இப்பவெல்லாம் ”Bro” :)

 • கோழி என்னதான் பெரிய படிப்பாளியாய் இருந்தாலும், முட்டைதான் போடும். (100/100) எல்லாம் போடாது


மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க, இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்

Monday, June 4, 2012

தரம் கெட்ட சி.பி. செந்தில்குமார்

கொஞ்சம் பெரிய பதிவு, வேலையிருந்தா போய் அதைப் பாருங்க.இதைப் படிக்க ரொம்ம்ம்ப நேரம் ஆகலாம். 

2008ல், BlogOGraphy பதிவுகளின் மூலம் சுமாராக 3 மாதம் காலம் கொந்தளித்தது பதிவுலகம். அந்த நிம்மதியைக் கெடுத்தப் பழி என்மீதுதான் இருந்தது. அப்ப செய்த முடிவுதான் இனிமே பதிவுலகம் சார்ந்து எழுதுவது இல்லையென முடிவெடுத்தேன், இதுவரை கடைபிடித்தும் வருகிறேன். சரி, விசயத்துக்கு வருவோம்.

2010-11லியே எழுதவேண்டிய பதிவு ஒன்னு இருந்துச்சு. அதை சுருக்கமா  சொல்லிடறேன். பத்திரிக்கைகளில் சில பக்கங்களைப் படித்துவிட்டு சிலரை கண்டிப்பா சந்திக்க வேண்டும் என்று நினைக்கிற சிலரை பட்டியலில் வெச்சிருந்தேன். அது 1) விகடன் - மூங்கில் மூச்சு - சுகா 2) விகடன் - ஓவியர் - இளையராஜா 3) துணுக்கு எழுத்தாளர் சி.பி. செந்தில்குமார்.

முதல் இருக்கிற ரெண்டுபேரைப் பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம், சி.பி. செந்தில்குமாரை (இனிமே சி.பி) பத்தி மட்டும் இப்போ. பல பத்திரிக்கை நகைச்சுவைத்துணுக்குகள் படிச்சவுடனே சிரிச்சிருக்கேன். யாரு எழுதினதுன்னு பார்த்தா அது சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்று இருக்கும். அவரை சந்திக்கனும் முகவரி வேணும் அப்படின்னு சில பத்திரிக்கைகளுக்கு கடுதாசி போட்டுமிருக்கேன். [பதில் வரலைங்கிறது வேற விசயம்]

அப்புறமா பதிவுலகுல அவரைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டு பின்னூட்டம் எல்லாம் கூட போட்டேன். அப்போ அவர் அலைபேசி எண்ணை எல்லாம் பதிவுல போடலை. நாமளும் தூரமா இருந்ததால ஊருக்குப் போவும்போது பார்த்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.  ஆரம்பத்துல இப்படியில்லை,  கொஞ்சம் நாகரிகமான படங்களையே ரெண்டு மாசமா போட்டுகிட்டிருந்தாரு. உதாரணத்துக்கு ஒன்னு ரெண்டு இங்கே..

[ 1 ]

[ 2 ]

என்னுடைய (அடுத்த) குறும்படத்துக்கு வசனம் எழுத பேச்சு வந்தபோது பாஸ்டன் ஸ்ரீராமிடம் நான் பரிந்துரைத்த முதல் ஆள் இந்த சி.பி. தான். வ.வா.சங்கத்துல அட்லாஸா கூப்பிடலாமெனவும் சி.பி. செந்திலை ஒரு மரியாதையுடன் வைத்திருந்தேன்.

அப்புறமா அண்ணன் அடிச்சாரு ஒரு U turn. தொப்புளையும், மாரையும் இருக்கிற படங்களை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து பத்திரிக்கைகள் நிராகரிச்ச அத்தனை துணுக்குகளையும் போட ஆரம்பிச்சாரு. தரம் குறைஞ்சதாலதான் பத்திரிக்கைகள் நிராகரிக்குது, அதை பதிவுல போட்டு ஹிட் கணக்கை ஏத்த ஆரம்பிச்சாரு. அப்புறமா என்னடா மானசீகமா புடிச்சவரு இப்படி பண்றாரேன்னு மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவருடைய பதிவுகளை படிக்கிறதை நிறுத்திட்டேன். அவரோட வாசகர் வட்டம் வேற பெரிய லெவல்ல இருந்தாங்க. சரி, அவரோட கும்பல் பெரிய இலக்கியவாதிங்க, அப்படின்னு அவர் பதிவுகளை பார்க்கிறதையே விட்டுட்டேன். அதுக்கான ஒரு சின்ன உதாரணம் இது. இவரு பழுத்த மரமாம் அடிக்கிறாங்களாம், இவுங்க வாசகர்கள் கும்முறாங்க. நன்றி, வாசகர்களே, பழுத்த மரம் மட்டுமில்லை புழுத்த மரம்கூட அடிதான் வாங்க செய்யும்.

அதுவுமில்லாம ஈரோடு சங்கமம் குழுவுக்கும் இவருக்கும் ஆகலை. சரி, இவரு எதுக்கு சரிப்பட மாட்டாருன்னு முடிவு அதாவது உண்மையான குழுவா இருக்க இவருக்கு விருப்பமில்லை, புகழ்ச்சிக்கு மயங்குற ஆள்னு அப்பவே தெரிஞ்சிபோச்சு. 2010ல இந்தியாவுக்குப் போனபோதும், 2011ல் போன போதும் நான் அவரை கூப்பிடவுமில்லை, விருப்பமுமில்லை.

டிவிட்டர்ல, சி.பி. யோட நடவடிக்கைகள் வேற மாதிரி, அதாவது  கொஞ்சம் நாகரிகமாகவும் இருந்துச்சு. சரின்னு அவரை தொடர ஆரம்பித்தேன். நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்பத்தான் சென்னை TNMegaTweetup ஆரம்பிச்சது, நடந்துச்சு, முடிஞ்சது. அதுவரைக்கும் எனக்கும் அவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. பிறகு அவர் ஒரு ட்விட்டர் பெண்ணோட படத்தை அவருடைய பதிவுல இணைச்சிக்கிறதுக்காக கேட்டிருக்காரு. அந்தப் பெண் சொன்னது “ஒரு குறிப்பிட்ட”, அதாவது ஒரே ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் எடுத்து உபயோகிக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பெண் சென்னை ட்விட் சந்திப்புக்கு எல்லாம் வரலை, இதுதான் உண்மை.

சி.பி. செந்தில்குமார், அந்தப் பெண்ணின் படங்களை எடுத்து பதிவு முழுக்க ரொப்பிட்டாரு. சரி, தொடையும், தொப்புளும் இருக்கிற படங்களா இணையத்துல தேடி எடுத்துட்டு வருகிறவருக்கு, ஒரு இடத்துல இருந்து படங்கள் கிடைச்சா சும்மா விடுவாரா? படங்களை எடுத்து தன்னோட பதிவுக்கு இஷ்டம் போல பயன்படுத்திக்கிட்டாரு. இதைப் பார்த்த அந்தப் பெண்ணோட நண்பர்,(நானும் அவுங்க குடும்ப உறுப்பினர் என்கிறது வேற கதை)  அவுங்க வீட்டுக்குச் சொல்ல, அது என் காதுக்கு வந்ததும், முதலில் படங்களை அந்தப் பெண்ணை விட்டே எடுக்கச் சொன்னேன், சி.பி. செந்தில்குமாரும், முதல்ல ரெண்டு படங்களை எடுத்தாரு, பிறகு எல்லாப் படங்களையும் எடுத்துட்டாரு. சரி, சொன்னதும் எடுத்துட்டாரேன்னு அவருக்கு நன்றி சொல்லி ஒரு ட்விட் கூட போட்டேன். பதில் மரியாதை செய்யனும்னு கூட அண்ணனுக்குத் தெரியலை. சரி, அவருக்குத் தெரிந்த மரியாதை அவ்வளவுதான்னு நினைச்சிட்டு விட்டுடேன்.

அடுத்த நாள்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்குமான சண்டை ட்விட்டர்ல நடந்துச்சு. (எங்களுக்கு இடையேயான சண்டையில் இவருடைய பதிவுகளைப் பத்தியதாக மட்டுமே இருந்ததே ஒழிய, இவரை எந்த இடத்திலும் கேள்வி கேட்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை). http://www.adrasaka.com/2012/05/6.html இதுல முதல் 5 , எனக்கும் அந்தப் பெண்ணுக்குமான உரையாடல். நாங்க பேசிக்கிட்டதை எடுத்துப்போட உனக்கு யாருய்யா உரிமை குடுத்தது?(ஒருமைக்கு மன்னிக்கவும்) நான் எடுத்துக்கச் சொன்னேனா?


மேலே இருக்கும் படத்துல, உரையாடலை உங்கப் பதிவுல சேர்த்துக்க நான் ஒப்புதல் தரவே இல்லை. 


அதுவுமில்லாம என்னைக் கேள்வி கேட்குறாராம். நீ யாரு எங்களுக்கு நடந்த உரையாடல்ல கேள்வி கேட்குறது? ட்விட்டுல பேசினா அங்கேயே பேசிக்க வேண்டியதுதானே? அது பதிவுக்கு எதுக்கு வருது? உங்களுக்கு பதிவு வேணுமின்னா வேற எதையாவது செஞ்சிக்குங்க. அங்கே நடக்கிறதை, இங்கே சொல்ற பழக்க தரமானதா? உங்க மரியாதை அங்கேயே கெட்டுருச்சு.

789 பதிவுல அவரோட குடும்பத்து படம் போட்டாராம், 1000 பதிவுல அவுங்க அம்மா படம் போட்டாராம், நடுவுல இருந்த 200 பதிவுகள்ல நடிகைங்கதானே மாரையும் தொப்புளையும் காட்டிகிட்டு இருந்தாங்க, சரி, விடுங்க அவரோட பதிவு, கந்தசஷ்டி பதிவுதான் நாம கேள்வி கேட்கக்கூடாது, சாமி கண்ணைக் குத்திருமில்லை? 

சி.பி. செந்தில்குமார், எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைத்தான் தன்னுடைய பதிவுகள்ல போட்டுக்கிட்டாரு. அதுவும் எப்படி இருண்ட பக்கங்களாம்? நீங்க வந்து பார்த்தீங்களா சார்? பொதுவா பேசிக்கிட்டிருக்கிறதை இவர் சொல்றாரு, இருண்ட பக்கங்களாம். இவரு, ட்விட்டர்ல இருக்கிற பெண்களையே ஃபிகருன்னுதான் மருவாதையா சொல்லுவாரு. அப்படிப்பட்டவரு, எங்களோட இருண்ட பக்கங்களை பார்த்தாராம். கேள்வி கேட்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

அவரு என்னைக் கேள்வி கேட்கிறாரு, அக்கா, தங்கை படங்களைப் போட்டிருந்தா இப்படி கேள்வி கேட்பீங்களான்னு. நான் கேட்கிறேன். உங்களோட குடும்பத்துல இருக்கிறவஙக் படத்தை அப்படி அலங்காரம் பண்ணுவீங்களா? இந்தக் கோவத்தை எல்லாம் மனசுல வெச்சிக்கிட்டுதான் மரியாதையா படத்தை எடுக்கவும் சொன்னேன். எடுத்ததுக்கு நன்றியும் சொன்னேன்.

இவரு பண்ணினதுக்கு போன் பண்ணி பேசனுமாம்? அந்தளவுக்கான மரியாதை எல்லாம் இப்ப இல்லை, என்னிக்கு ட்விட்டர்ல பேசிக்கிட்டதை பதிவா போட்டு 4 பேருக்கு தெரியனும்னு நினைச்சிங்களோ அன்னிக்கே உங்க தரம் தாழ்ந்து போயிடுச்சு. விகடன் பத்திர்க்கையையும் உங்கப் பதிவையும்  ஒப்பீடு பண்ணிக்காதீங்க, விகடன் இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அளவுக்கு வரலை.

உரையாடலில் நீங்க சம்பந்தப்பட்டுத்தான் இருக்கீங்க. ஆனா, அதுல வந்த கேள்விகள் எல்லாம் உங்களைக்கேட்டது இல்லை. நம்மூர்ல சொல்ற மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகாதீங்க. அப்புறம் பதிவு போட்டு என்னிடத்தில் கேள்வி கேட்குறது , பதில் சொல்றது எல்லாம் இதோட நிறுத்திக்கொள்வது நலம். அந்தக் கட்டத்தை எல்லாம் நான் எப்பவோ கடந்துட்டேன்.

உங்களுக்குன்னு ஒரு தரமிருக்கு செந்தில் சார், அதை இன்னும் கெடுத்துக்காதீங்க....

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்